அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நேரம் தவறாமை எனும் கருவியை உபயோகிப்பவன், எப்போதுமே கதாநாயகன் தான் - காமராஜர்.
******
மூங்ஃபலி (ch)சிக்கி:
மூங்ஃபலி என்றால் வேர்க்கடலை! அந்த வேர்க்கடலையை பயன்படுத்தி இணையத்தில் பார்த்து மிட்டாய் அல்லது பர்ஃபி இன்று செய்து பார்த்தேன். நன்றாகவே வந்துள்ளது. வெல்லம் தான் சேர்த்திருப்பதால் நம்ம வீட்டு பெரியவர்களுக்கும் கொடுக்கலாமே என்று செய்துள்ளேன்.
வேர்க்கடலை கொஞ்சம் வீட்டில் இருக்கவே..வத்தக்குழம்பு, பிட்லை, அரிசி உப்புமா, சட்னி, கூட்டு, தக்காளி தொக்கு என்று எல்லாவற்றிலும் போட்டு உபயோகம் செய்தாச்சு...:) இனி கடலையை எடுத்தா பிச்சுப்புடுவேன் என்று மிரட்டாத குறையாக மகள் முறைக்கவே 'சிக்கி' செய்து காலி பண்ணியிருக்கேன்...:) செய்முறை பார்க்க விருப்பமிருந்தால் இந்தக் காணொளியில் பார்க்கலாம்!
******
ரோஷ்ணி கார்னர் - ஓரியோ பிஸ்கெட் கேக்:
மகளுக்கு ஓரியோ பிஸ்கெட் சாப்பிடப் பிடிக்கும். அந்த ஓரியோ பிஸ்கெட் பயன்படுத்தி சமீபத்தில் செய்த கேக் உங்கள் பார்வைக்கு!
******
சிறுதானிய பிடிகொழுக்கட்டை:
Adhi's kitchen சேனலில் இந்த வாரம் உடலுக்கு நன்மைத் தரும் சிறுதானியங்களை பயன்படுத்தி பிடி கொழக்கட்டை செய்து காண்பித்துள்ளேன். பாருங்களேன்.
******
ரோஷ்ணி கார்னர் - சுண்டைக்காய்:
ஏம்மா! நா தெரியாமத் தான் கேக்கறேன்!!! சின்ன வயசுல இருந்து என்ன மட்டும் சுண்டக்காய் நல்லதுன்னு சாப்பிட வெச்சீங்களே! நானும் பார்க்கறேன். நீயும் சரி! அப்பாவும் சரி! வத்தக்குழம்புல போட்ட சுண்டக்காயெல்லாம் தூக்கி தான் போடறீங்க! என்னம்மா இது நியாயம்???
நீ ஹெல்தியா எப்பவும் இருக்கணும்னு தான் கண்ணா..:)
ஹேய்ய்ய்ய்ய்ய்...:) சும்மா எதையாவது அடிச்சி உடாதம்மா..:))
******
குரங்காரும் மாம்பழமும்:
மாமியார் வீட்டில் தான் இருந்தேன். அங்கே பின்புறமுள்ள கோவில் மதில் சுவரில் நம் முன்னோர் பட்டாளம்..:) மாலை தேநீர் போட்டு எடுத்து வந்து குடிக்கையில் 'எனக்கும் கொஞ்சம் தரீங்களா?' என்று தோரனையில் எட்டி பார்த்த குரங்கார். பால்கனியில் வைத்திருந்த பொருட்களையெல்லாம் உருட்டி அமர்க்களம்.
மதில் சுவரில் அமர்ந்திருந்த ஒரு குரங்காரை படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, மகள் என்னிடம் 'இரு! இரு! உன் ஃபோனை பிடுங்கிண்டு போகப் போறது' என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்...:) ஆனாலும் விடுவோமா..:)
அந்த பட்டாளத்தில் இருந்த குரங்கார் ஒருவர், யார் வீட்டிலிருந்தோ எடுத்து வந்த மாம்பழத்தை ருசிக்கிறார் பாருங்கள்..:) தூரத்தில் தெரிந்த குரங்காரை மொபைல் வழி ஜூம் செய்து காணொளியாக எடுத்திருக்கிறேன்...:) வீட்டில் ஒலித்த சஷ்டி கவசம் பின்னனியில்!
******
கேழ்வரகு புட்டு!:
சமீபத்தில் ஒரு நாளின் காலை உணவாக..!
******
நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த வாரம் எல்லாமே சாப்பாடு விஷயமாகவே அமைந்திருக்கிறது! மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...
நட்புடன்
ஆதி வெங்கட்
கவர்கிறது கடலை மிட்டாய் பர்பி! கேக் நன்றாக வந்திருக்கிறது போல.. அதென்ன, நீங்களும், வெங்கட்டும் சுண்டைக்காயைத் தூக்கிப் போட்டு விடுவீர்களா? என்ன அநியாயம்?!! குரங்காரின் காணொளி ரசித்தேன்.
பதிலளிநீக்குபொதுவாக சுண்டைக்காய் தூக்கிப் போடுவதில்லை ஸ்ரீராம். அதிகமாக வந்துவிட்டால் ஒதுக்குவதுண்டு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம், அருமை. முகநூலில் பார்த்தேன்.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அருமை.ரோஷ்ணியின் பேச்சு அருமை.
சிக்கி நன்றாக வந்து இருக்கிறது.
கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குமுகநூலில் பகிர்ந்தவை இங்கேயும் சேமிப்பாக.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குவேர்கடலை ரசம் பண்ணுங்க.. விடாதிங்க.
பதிலளிநீக்குவிடாதீங்க! ஹாஹா... ஐடியா கொடுத்தது நீங்கன்னு என்னுடைய பெண்ணுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.
கதம்பம் வழக்கம்போல் அருமை.
பதிலளிநீக்கு//மகளுக்கு ஓரியோ பிஸ்கெட் சாப்பிடப் பிடிக்கும்//
சகோ இதை சாப்பிட விடாதீர்கள் இதில் எலியின் தோலும் சேர்க்கப்படுகிறதாம்.
அரபு நாடுகளில் இதற்கு தடை விதித்து இருக்கிறார்கள்.
மேலதிகத் தகவலுக்கு நன்றி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
இன்றைக்கு உணவுப் பதிவுகள் வித விதமாய்.
பதிலளிநீக்குசுண்டைக்காய் மகளுக்கு மட்டும்... ஹாஹாஹா. கருவேப்பிலை பசங்க தூரப்போடுவாங்க. அது கூடாதுன்னு சொல்லி நான் தினமும் சாப்பிடுகிறேன்.
பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம் அருமை...
பதிலளிநீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுவையோ சுவை. நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி.
நீக்குவணக்கம் நன்பர்களே.
பதிலளிநீக்குகதம்பம் அருமை.
சுண்டைக்காய் பற்றி வாசிக்கும்போது சுவாமி ஓம்காரநந்தா அவர்களின் பண்ணிரு ராசி நூல்கள் படித்த ஞாபகம் வருகிறது.
அதில் ரிஷப ராசிக்காரர்களின் குணங்களை சொல்லி அவர்கள் உடல் வாகுக்கு ஏற்ற உணவாக சுண்டைக்காயை கசப்பு நீக்கி சுவையான துவையலாய் செய்யும் முறையை எழுதியிருக்கிறார்.
அது தோசை, இட்டிலி, சப்பாத்தி உட்பட்ட அணைத்திற்கும் சுவையாக இருக்கும் என தோன்றுகிறது.
அதன் செய்முறையை தங்கள் வாட்ஸ்ஸாப்பிற்கு அணுப்புகிறேன் வெங்கட் சார்.
சுண்டைக்காய் குறித்த மேலதிகத் தகவலுக்கு நன்றி. அனுப்புங்கள் அரவிந்த்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது.
வேர்கடலை பர்பி அவ்வளவு நன்றாக உள்ளது. முன்பு சிறுவயதில் அம்மாவீட்டிலிருக்கும் போது, இதை கடைகளில் "இடிபர்பி" என்ற பெயரோடு "இரண்டு பைசாவுக்கு ஒன்று" என வாங்கி சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது. இப்போது அந்த 2 பைசாவிற்கு மதிப்பே கிடையாது.:)
பிஸ்கட் கேக் அருமையாக வந்திருக்கிறது. அழகாக செய்த உங்கள் மகளுக்கு பாராட்டுக்கள்.
சிறுதான்ய கொழுக்கட்டையும், கேள்வரகு புட்டும் செய்முறைகள் அழகாகவும், அருமையாகவும் உள்ளது. சகோதரிக்கு வாழ்த்துகள்.
சுண்டைக்காய் பற்றிய பேச்சுக்கள், கலகலப்பாக இருந்தது. வெறுமனே வறுத்த சுண்டைக்காய்களை பொடித்து சாதத்தில் நெய் விட்டு கலந்து சாப்பிடலாம். நன்றாக ருசியாக இருக்கும். வத்தக்குழம்பில் சுண்டைக்காய்களை நிறைய சாப்பிட முடியாது.
முன்னோர்களின் காணொளியும் அருமை. இன்றைய கதம்ப பகிர்வினுக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகமும் பதிவின் பகுதிகளும் உஙளுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுவைக்கத் தூண்டுகிறது மூங்ஃபலி சிக்கி. கதம்பம் நன்று. ஃபேஸ்புக்கிலும் தொடருகிறேன்.
பதிலளிநீக்குமூங்ஃபலி சிக்கி - சுவையானது. குளிர் நாட்களில் இங்கே அதிகமாகக் கிடைக்கும் ராமலக்ஷ்மி. அடிக்கடி சுவைத்ததுண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகமும், காணொளிகளும் மிக அருமை.
பதிலளிநீக்குசுண்டைக்காய் பற்றி திரு அரவிந்தன் சொல்லி இருப்பதும் நன்மை.
வேர்க்கடலை காண்டி நினைத்தாலே இனிக்கும்.
ஆதிக்கும் ரோஷ்ணிக்கும் வாழ்த்துகள்.
வாசகமும் பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.