ஞாயிறு, 9 ஜனவரி, 2022

வாசிப்பனுபவம் - வெண்ணிலா - ரெஜோவாசன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


இந்த உலகில் யாருடனும் உங்களை ஒப்பிடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், அது உங்களை நீங்களே இழிவுபடுத்திக் கொள்வதற்கு சமம்.


******





சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, கடந்த ஏப்ரல் மாதத்தில் நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் ரெஜோவாசன் அவர்கள் எழுதிய “வெண்ணிலா” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 75

விலை: ரூபாய் 49/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


வெண்ணிலா: Vennila (Tamil Edition) eBook : Rejovasan, ரெஜோவாசன்: Amazon.in: Kindle Store


******* 


இன்றைய நாளின் வாசிப்பனுபவமாக ரெஜோவாசன் அவர்கள் எழுதி இருக்கும் ஒரு குறுநாவல் பற்றிய பகிர்வு.  காதலுக்கென்றே இருக்கும் சின்னச்சின்ன சிணுங்கல்கள், ஊடல்கள், சில்மிஷங்கள் இல்லாமலா? சில வாசகங்கள் ரசிக்க முடிகிறது.  வெண்ணிலா எனும் பெண்ணைக் காதலிக்கிறார் கதாநாயகன். பல காதலர்கள் செய்யும் தவறை இவரும் செய்கிறார்.  அந்தத்தவறு - காதலியிடம், தன் முன்னாள் காதலி பற்றியும், அவளிடம் இருந்த தனது காதல் பற்றியும் சொல்வது தான்!  அதனால் உண்டான பலன் - இப்போது கிடைத்த காதலும், காதலியும் பிரிய நேர்வது. 


முன்னாள்  காதலியைப் பற்றி சொல்ல, இந்நாள் காதலி, முந்தைய காதலிக்கு, இவன் உருகி உருகி எழுதிய கடிதங்களை அனுப்பி வைக்கிறாள் - மின்னஞ்சல் வாயிலாக.  கதாநாயகனுக்கு முன்னாள் காதலியுடன் திருமணம் நிச்சயம் ஆகிறது.  ஆனாலும், கதாநாயகனுக்கு இந்நாள் காதலியை மட்டுமே தான் அதிகம் நேசிப்பது புரிகிறது.  அதனால் திருமணம் வேண்டாம் என மறுத்து விடுகிறான்.  இரயிலில் தனது காதலியைத் தேடிப் பயணிக்கிறான்.  தனது கதையை இரயிலில் உடன் வந்த சக பயணியர் குடும்பத்திற்குச் சொல்கிறான்.      அவனுக்கு அவனுடைய காதலி கிடைத்தாளா இல்லையா என்பதை கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்!  


கதை வாசிக்கும்போது, இப்படியெல்லாம் கூட இருப்பார்களா என்ற சில எண்ணங்கள் வருவதைத் தடுக்க முடியவில்லை.  ஏன் இதைச் சொல்கிறேன் என்பதை நீங்கள் படிக்கும் போது உணரலாம்.  படித்துப் பாருங்களேன்!


மின்னூலை தரவிறக்கம் செய்து படிக்க இருக்கும் உங்களுக்கும், கதாசிரியருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் வாசிப்பு.  வாசிப்பை ஸ்வாசிப்போம்!


*******


எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...


மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


14 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு. ஏகப்பட்ட வேலைகள் காத்திருக்க, அதில் மனம் செல்லாமல் நேற்று 'அத்ரங்கி ரே' என்கிற ஹிந்திப் படம் பார்த்தேன். தனுஷ் நடித்தது. அக்ஷய் குமாரும் உண்டு. அது இதே கதைதான் - கொஞ்சம் உளவியல் பிரச்னை கலந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Atrangi Re படத்தின் ஒரு பாடல் பலராலும் விரும்பப்படுகிறது. அப்பாடலை வைத்து நிறைய காணொளிகளும் வருகிறது. படம் பார்க்க எனக்கு வாய்ப்பு இல்லை.

      இன்றைய பதிவு குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வித்தியாசமான காதலாக இருக்கிறது.
    விமர்சனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று வெளியிட்ட நூல் விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நீங்கள் எழுதியதை பார்த்தால் கதை சுவாரசியமாக இருக்கும்போல் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை சுவாரசியமாகவே இருந்தது மாதேவி. முடிந்தபோது படித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. // கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்...//

    ஆவல் உண்டாகுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இந்த நூலை படிக்கும் ஆவல் உண்டானது அறிந்து மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கதையை படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை படிக்கும் ஆர்வம் உங்களுக்கும் உண்டானது அறிந்து மகிழ்ச்சி நிர்மலா ரங்கராஜன். முடிந்தபோது வாசித்துப்பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வித்தியாசமாகத்தான் இருக்கிறது கதை.

    //தனது கதையை இரயிலில் உடன் வந்த சக பயணியர் குடும்பத்திற்குச் சொல்கிறான். அவனுக்கு அவனுடைய காதலி கிடைத்தாளா இல்லையா என்பதை கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்!//

    இதில் ஏதோ இருப்பது போலப்படுகிறது. சக பயணியர் குடும்பம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான கதைதான் கீதா ஜி. சக பயணிக்கு சொல்வது போல கதை அமைந்திருப்பது நல்ல யுக்தி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. சுவாரசியமான காதல் கதையாக தோன்றுகிறது சார்.
    நூல் அறிமுகத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதொரு காதல் கதைதான் அரவிந்த். முடிந்தால் வாசித்துப்பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....