வெள்ளி, 14 ஜனவரி, 2022

தமிழகப் பயணம் - பிரம்மா கோவில் - வங்கிகளில் தமிழாக்கம்


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

NEVER REGRET BEING A GOOD PERSON TO THE WRONG PEOPLE. YOUR BEHAVIOUR SAYS EVERYTHING ABOUT YOU AND THEIR BEHAVIOUR SAYS ENOUGH ABOUT THEM.

 

******

 

செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு வந்தது பற்றி இதுவரை வெளியிட்ட பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே. 

 

ஓசியில் வேர்க்கடலை தருகிறார்களோ

 

Gகுரு Bபாயின் தங்கச் சங்கிலி

 

சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு - ஜன் ஷதாப்தியில்

 

மீன் செத்தா கருவாடு

 

பொண்ணு மாப்பிள்ளை லேட் எண்ட்ரி

 

தரங்கம்பாடி எனும் Tranquebar

 

திருக்கடையூர் கோவில்

 

திருக்கடையூர் - கல்யாண விசேஷங்கள்

 

பயணங்கள் முடிவதில்லை

 

பயண ஸ்வாரஸ்யங்கள்


திருப்பட்டூர் பிரம்மா கோவில் - ஒரு விசிட்:


 

தலையெழுத்தை மாற்றி அமைக்கக் கூடிய கோவில் என இந்தக் கோவிலைச் சொல்கிறார்கள்.  எந்தக் கோவில்?  திருச்சி பெரம்பலூர் சாலையில் இருக்கும் சிறுகனூர் என்ற ஊரின் அருகே இருக்கும் திருப்பட்டூர் என்ற ஊரில் இருக்கும் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் தான்.  மிகவும் சிறப்பான கோவில்! பல முறை திருச்சி வந்தாலும், ஏனோ இந்தக் கோவிலுக்கு இது வரை சென்றதில்லை.   சென்ற பயணத்தில், இருந்த பல வேலைகளுக்கு இடையே, குடும்பத்துடன் செல்ல இயலவில்லை என்றாலும் நான் மட்டுமாவது சென்று வரலாம் என முடிவு செய்தேன். 

 

ஒரு நாள் காலை திருப்பட்டூர் வரை சென்று, அருள்மிகு பிரம்ம சம்பத் கௌரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர், பிரம்மா என சிறப்பான தரிசனம்.  குரு பரிகார ஸ்தலம் என்பதால், அன்றைய வியாழன் அன்று அதிக எண்ணிக்கையில் மக்கள் கோவிலுக்கு வந்திருந்தார்கள்.  ஆனாலும் நின்று நிதானித்து தரிசனம் செய்ய முடிந்தது.  

 

கோவில் குறித்த தகவல்கள் மற்ற விஷயங்களை வலையில் நிறையவே காண முடியும் என்பதால் இந்தத் தகவல் மட்டும் - கோவிலுக்கு வந்த பலர் தங்கள் ஜாதகங்களை கையில் கொண்டு வந்து பிரம்மனிடம் தங்களது தலையெழுத்தை மாற்ற வேண்டிக் கொண்டிருந்தார்கள்.  நல்லதே நடக்கட்டும் என சின்னதாக ஒரு வேண்டுகோளை வைத்து விட்டு வந்தேன்!  நல்லதே நடக்கட்டும்!

 

ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் காவேரி/கொள்ளிடக் கரையோரம் இருக்கும் கோவில்களுக்குச் சென்று இறைதரிசனம் கண்டு, முடிந்தால் சில படங்களும் எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். ஆனால் வரும் சில நாட்களில் இது போன்ற ஆசைகள் நிறைவேறுவதே இல்லை.  அதுவும் திருச்சி, தஞ்சை, கும்பகோணம் என பல ஊர்களில் இருக்கும் புராதனமான கோவில்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை நெடு நாட்களாகவே உண்டு.  கோவில்களுக்குச் செல்வதற்கு ஆசை எதற்கு எனில் முக்கியமாக சிற்பங்களைக் கண்டு படம் எடுக்க! அப்படியே சில தகவல்களும் சேகரிக்க!  எப்போது இப்படியான வாய்ப்புகள் அமையும் என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.  



கோவில்களுக்குச் செல்கிறேனோ இல்லையோ, ஒவ்வொரு முறை வரும்போதும், வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய வேலை நிச்சயம் இருக்கும் - அப்பா, அம்மா, பெரியம்மா என அனைவரும் அவர்களது வங்கி வேலைகளை எனக்காக, என் வருகைக்காக ஒதுக்கி வைத்திருப்பார்கள்! அதையெல்லாம் செய்து முடிக்க வேண்டியிருக்கும்.  அதுவும் இந்த தீநுண்மி நாட்களில் பல வங்கிகளுக்குச் செல்லும்போது சரியான பதிலே கிடைப்பதில்லை.  பல கிளைகளில் சேமிப்புக் கணக்கு வைத்துக் கொண்டு இருப்பவர்கள் பாடு திண்டாட்டம் - பாஸ் புக் எண்ட்ரி போடவே ஒவ்வொரு வங்கியாக சென்று வந்ததுண்டு! ஹாஹா…  

 

இந்தப் பயணத்திலும் வங்கிக்கு ஒரு வேலையாகச் செல்ல வேண்டியிருந்தது.  அப்படியே Pass Book-ல் Entry போட்டுக் கொண்டு வந்து விடலாம் என அதற்கான இயந்திரத்தின் முன் நிற்க, வரிசையாக சிலர் என்னிடம் அவர்களது சேமிப்புக் கணக்கின் Pass Book கொடுத்து, அவர்களுக்கும் Entry போட்டுத் தரும்படி கேட்டார்கள்.  பலருக்கும் இந்த விஷயம் புரியாததாகவே இருக்கிறது. படித்தவர்கள் கூட இந்த இயந்திரத்தினைப் பயன்படுத்த தயங்குவதையும், தடுமாறுவதையும் கவனிக்க முடிந்தது.  சில வங்கிகளில் இந்த மாதிரி இயந்திரம் இருந்தாலும் வேலை செய்வதில்லை, சரி பணியாளர்களிடம் Entry போட்டுக் கொடுப்பார்களா என்றால் பதில் இல்லை, நேரம் இல்லைங்க, அப்புறம் வாங்க! மெஷின் வேலை செய்யலை! போன்ற மறுப்பு மொழிகள் தான்.  

 

நான்கு, ஐந்து முதியவர்களுக்கு Entry போடுவதற்கு உதவி செய்ய வேண்டியிருந்தது.  ஒரு மூதாட்டி, தம்பி கணக்குல எவ்வளவு ஏறி இருக்கு, எவ்வளவு பணம் இருக்குன்னு பார்த்து சொல்லு! என்றார்.  அவர் கேள்விகளுக்கு பதில் சொன்ன போது, உடனடியாக அதில் கொஞ்சம் பணம் எடுக்க வேண்டும் என Withdrawal Slip எழுதித் தரச் சொன்னார்.  எழுதி முடித்து, கையெழுத்து போடுவீங்களா? என்று கேட்டபோது, அது தெரிஞ்சா நான் ஏன் இப்படி இருக்கேன், கை நாட்டு தான் போ! என்று நகர்ந்தார்.  

 

இயந்திரம் வைத்து விட்டால் தங்களது கடமை முடிந்து விட்டதாக வங்கிகள் நினைக்கின்றன.  அது வேலை செய்கிறதா இல்லையா என்பதைக் கூட கவனிப்பதே இல்லை.  அதுவும் கடந்த ஓன்றிரண்டு வருடங்களாக, தீநுண்மி காரணமாக பல வங்கிகள் Pass Book-ல் Entry போட்டுத் தருவதே இல்லை. வேண்டுமானால் எவ்வளவு தொகை இருக்கிறது என்று மட்டும் சொல்கிறோம் என்று சொல்கிறார்கள்.  இல்லை என்றால் ATM-Machine-இல் மினி ஸ்டேட்மெண்ட் எடுத்துக் கொள்ளலாமே என வாடிக்கையாளர்களுக்கே வேலை கொடுக்கிறார்கள்.  இயந்திரங்களை கையாளுவது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமல்ல என்பதை எப்போது வங்கி நிர்வாகம் புரிந்து கொள்ளுமோ.... ஒரு வேளை எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களுக்கு மட்டுமே வங்கி என நினைக்கிறார்களோ?  

 

கூடுதலாக ஒரு விஷயமும் கவனித்தேன்.  மொழித் தேர்வு செய்யும் போது, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகள் வந்தது.  தமிழ் எனத் தேர்வு செய்த போது அதில் வந்த மொழி தமிழே இல்லையோ என்று தோன்றியது.  ஆங்கில வாக்கியங்களை Google Translate மூலம் மொழியாக்கம் செய்து இருப்பார்கள் போலும்...  நிறைய பிழைகள்! எழுத்துப் பிழைகள் உட்பட!  வங்கிகளுக்கான Software தயாரிக்கும்போது இதைக் கூடவா கவனிக்க மாட்டார்கள்!  மொழியாக்கம் சரியாக இருக்கிறதா என்பதைக் கவனிப்பதே இல்லை என்று தோன்றுகிறது. 

 

தமிழகப் பயணம் குறித்த இன்னும் சில விஷயங்கள் உண்டு. அவை அடுத்த பகுதியில்! 

 

******

 

நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம், பயனுள்ளதாகவும் இருக்கலாம்! பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து

 

28 கருத்துகள்:

  1. வங்கி குறித்து சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை.  எல்லா வங்கிகளும் அப்படிதான்.  என் பாஸ் புக் நீண்ட நாட்களாக என்ட்ரி போடாமல் இருந்ததைப் பார்த்து என்ட்ரி போடப்போன பணியாளர் அதிர்ந்து போனார்.  கடைசிப் பத்து நாட்கள் மட்டும் என்ட்ரி போடுகிறேன் என்றார்.  சிறு சிறு செலவுகளுக்கும் ஜிபே செய்திருந்ததில் என்ட்ரி போட்டால் குயர் குயராக பேப்பர் தேவைப்பட்டிருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குயர் குயராக பேப்பர் தேவைப்பட்டிருக்கும்.... ஹாஹா.... பொதுவாக கூகுள் பே வைத்திருப்பவர்கள் பல செலவுகளுக்கும் இதையே பயன்படுத்துகிறார்கள் என்பதால் இப்படித்தான் ஆகும்... நான் அதனால் பாஸ் புக் வைத்துக்கொள்வது இல்லை. மின்னஞ்சல் வழி ஸ்டேட்மெண்ட் வந்துவிடுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைத்திங்கள் திருநாளின் நல்வாழ்த்துகள். நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வாழ்த்தியமைக்கு நன்றி. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  3. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஜி.

    வங்கிகளில் பெரும்பாலும் இயந்திரங்கள் வேலை செய்யாமல் தான் இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள் கில்லர்ஜி.

      பல வங்கிகளில் தானியங்கி எந்திரங்கள் வேலை செய்வதில்லை என்பது கண்கூடு.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. இந்த டிஜிட்டல் பண மாற்று முறை வந்ததால் சின்ன சின்ன செலவுகளுக்கும் UPI போன்ற செயலிகளை உபயோகிக்கிறார்கள். அதனால் பாஸ் புக் பதிவு நிறைய நேரம் எடுக்கிறது. இதுவே வங்கிகளில் பணியாளர் பனிச்சுமை கூடுவதற்குக் காரணம். 

    உங்கள் முகத்தைப் பார்த்தாலே உதவி செய்பவர் என்று எல்லோருக்கும் நம்பிக்கை வருகிறது போலும். அப்பாவி அண்ணா. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவி அண்ணா... ஹா ஹா நல்ல பெயர்!

      சின்ன சின்ன செலவுகளுக்கு கூட அலைபேசி வழி பணம் செலுத்தும் செயலிகள் வந்ததால் பாஸ் புக் பக்கங்கள் அதிகம் தேவை என்று சொன்னாலும், இப்படியானவர்கள் பாஸ்புக் வைத்துக்கொள்வதில்லை என்றே தோன்றுகிறது.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  5. கோவில்களுக்குச் செல்வதற்கு ஆசை எதற்கு எனில் முக்கியமாக சிற்பங்களைக் கண்டு படம் எடுக்க! அப்படியே சில தகவல்களும் சேகரிக்க! //

    ஹைஃபைவ் வெங்கட்ஜி!!!!

    வெகு சில கோயில்களில் மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்கிறது! எங்கள் ஊர்க் கோயிலில் கூட எடுக்க அனுமதி இல்லை. இம்முறை போயிருந்தப்ப கேட்டப்ப கூடாது என்று சொல்லிவிட்டார் போத்தி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகுசில கோவில்களில் மட்டுமே படம் எடுக்க அனுமதிக்கிறார்கள் என்பது கொஞ்சம் வருத்தம் தான் எனக்கும் கீதா ஜி. சிற்பங்களையும் ஓவியங்களையும் மட்டுமாவது படமெடுக்க அனுமதிக்கலாம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. வங்கி பற்றி சொன்னது அனைத்தும் டிட்டோ. தமிழ் என்று அடித்தால் அந்தத் தமிழ் புரிவதே இல்லை ஜி. ஆங்கிலம் கூடச் சில ஏடிஎம் களில் புரிவதில்லை. அதாவது அதன் பொருள். வங்கிகளின் சேவை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப படு மோசம். அதிலும் தனியார் வங்கிகள், எங்கள் சேவையை மேம்படுத்திக் கொள்ள உங்களிடம் பேச வேண்டும் எப்போது நீங்கள் ஃப்ரீ என்றோ அல்லது ஃபார் அனுப்பறோம் ஃபில் செய்து கொடுக்க முடியயுமா என்று குறுன்செய்தி அனுப்புவதிலோ அல்லது கூப்பிட்டுப் பேசுவதிலோ ஒன்றும் குறைச்சலில்லை. ஆனால் அப்படி ஃபீட் பேக்கொடுத்தும் இதுவரை என்னப் பயனும் இல்லை அப்புறம் எதற்கு இந்த கேள்விகளோ??!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வங்கிகளின் சேவை, அதிலும் குறிப்பாக அரசு வங்கிகளின் சேவை மிகவும் மோசம் தான் கீதா ஜி. சில தனியார் வங்கிகளின் சேவையும் நன்றாக இல்லை. அதீத தொல்லையும் தருகிறார்கள் தனியார் வங்கி நிர்வாகத்தினர்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. ஹாஹாஹா உங்களிடம் கேட்பது போலவே என்னிடமும் சென்னையில் இருக்கும் போது வங்கி அல்லது தபால் நிலையம் சென்றால் கேட்பதுண்டு நானும் செய்து கொடுப்பதுண்டு அல்லது ஏடிம் என்றால் சொல்லிக் கொடுத்ததுண்டு.

    இங்கும் தபால் நிலையம் சென்ற போது நிறைய பென்ஷன் வாங்கும் வரும் முதியவர்கள் என்னிடம் எழுதித் தரச் சொல்லுவார்கள் அல்லது என்ன செய்ய வேண்டும் என்று கேட்பார்கள். ஆங்கிலத்தில் எழுதுவது என்றால் செய்து கொடுக்கிறேன். பாவமாக இருக்கிறது இவர்களை எல்லாம் பார்க்கும் போது. மெஷினும் அவர்களுக்குப் புரிவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களிடமும் உதவி கேட்கிறார்கள் என்று தெரிந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. பல இடங்களில் இப்படி உதவி செய்ய வேண்டியிருக்கிறது. தானியங்கி இயந்திரங்களில் வரும் தமிழும் கொடுமை ஆகவே இருக்கிறது.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  9. உங்களின் வங்கி அனுபவம் எங்களின் அனுபவமும்தான்.
    பொங்கல் வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வங்கியில் பலருக்கும் இந்த அனுபவம்தான் நாகேந்திர பாரதி ஜி.

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் வெங்கட் ஜி. வங்கிகள் பற்றிய அணைத்து தகவல்களும் உண்மை. பாஸ் புக் இயந்திரம் நிறைய வங்கிகளில் பழுதாகத்தான் இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமசாமி ஜி. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  12. இனிய பொங்கல் வாழ்த்துகள் அன்பு வெங்கட்.
    பயணங்கள் தொடரட்டும்.
    குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும்
    நிறைய வேண்டும்.
    குழந்தைக்கும் ஆதிக்கும் என் அன்பு வாழ்த்துகள்.உங்கள் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி வல்லிம்மா.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. வணக்கம் சார்.
    வங்கி அணுபவங்கள் உன்மையே.
    ஒரு வங்கிப் பணியாளராக நேரில் இதைக் காண்கிறேன்.
    தற்போது அரசு வங்கிகளிலும், மக்களை கடன் வாங்குமாறு அழைக்கும்படி தினமும் மிகப்பெரிய அழுத்தம் தரப்படுகிறது.
    எனவே, அவர்களும் மக்களை தினமும் தொல்லை கொடுக்கும் நாள் வந்துவிட்டது.
    தினமும் மக்களை மொவைல் வேங்க்கிங் உபையோகிக்க வைப்பதைப் பொருத்து பணியாட்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன.
    அதுபோலவே, கிரெடிட் கார்ட் விர்ப்பணை, காப்பீடு விர்ப்பனை என ஒவ்வொரு பணியோடும் பணியாளரின் மதிப்பெண் இனைக்கப்பட்டுள்ளது.
    எனவே, தங்களுக்கு எது முதலில் தேவை என்பதை வாடிக்கையாளரே விழிப்போடு உணர்ந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
    கையில் இல்லாத பணம் கொண்டு பொருட்களை வாங்கும் பழக்கம் தீரா பிரச்சனைகளுக்கு இட்டுச்செல்லும்.
    எதையும் வாங்குவது எளிது, திருப்பிச் செலுத்துவதோ, சேவையை ரத்து செய்வதோ மிகக் கடினம்.
    பாஸ்புக் மேஶீன், கேஶ் ரிசைக்கிளர் போன்ற டிஜிட்டல் நுட்பங்கள் வரப்பிரசாதங்கள் எனினும் முழுப் பொருப்பும் வாடிக்கையாளர் தலையில் விழுகிறது என்பதை உணர்ந்தே அதை உபையோகிக்கவேண்டும்.
    அவர்கள் பணத்திற்கு அவர்களே பொருப்பு எனவே, பணம் மாட்டிக்கொண்டால், அதை மீட்க வங்கிகள் வைத்திருக்கும் "Complaint redressal" இணையவழி முறை குறித்து தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.
    தங்கள் அலைப்பேசியையும் கணினியையும் ஹேக்கிங் போன்ற வைரஸ்கள் அணுகாவண்ணம் பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டும், அவசியமற்ற செயலிகளை அணுமதிக்கக் கூடாது.
    தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்கும் கலையைக் கற்கவேண்டும்.
    வங்கியின் நம்பத்தகுந்தவர்கள் எண்களை சேமித்துவைத்து அவர்கள் அழைப்புகளை மட்டுமே அணுமதிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அர்விந்த்..    பயனுள்ள நீண்ட விளக்கம்.  இவை யாவும் உபயோகிப்பாளர்களும் தெரிந்தே வைத்திருக்கின்றனர் என்பதுதான் ஆச்சர்யம்.  தெரிந்தே வலையில் விழுவார்கள்.  நாங்கள் கணக்கு வைத்திருக்கும் அரசு வங்கியிலிருந்து என் மகனுக்கு கட்டாயமாக க்ரெடிட் கார்ட் ஒன்றை வழங்கி விட்டார்கள்.  எனக்கு கொடுத்தவ்ப்போது நான் வேண்டவே வேண்டாம் என்று மறுத்திருந்தேன்.  மகன் மறுத்தும் தலையில் கட்டி உள்ளார்கள்.

      நீக்கு
    2. பதிவில் சொன்ன விஷயங்கள் குறித்த தங்களது கருத்துக்களை விரிவாக எடுத்து சொன்னதற்கு மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....