புதன், 12 ஜனவரி, 2022

தமிழகப் பயணம் - பேருந்து - பயண ஸ்வாரஸ்யங்கள்


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பயணங்கள் முடிவதில்லை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

YOUR GREATEST TEST WILL BE HOW YOU HANDLE PEOPLE WHO HAVE MISHANDLED YOU.

 

******

 

செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு வந்தது பற்றி இதுவரை வெளியிட்ட பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே. 

 

ஓசியில் வேர்க்கடலை தருகிறார்களோ

 

Gகுரு Bபாயின் தங்கச் சங்கிலி

 

சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு - ஜன் ஷதாப்தியில்

 

மீன் செத்தா கருவாடு

 

பொண்ணு மாப்பிள்ளை லேட் எண்ட்ரி

 

தரங்கம்பாடி எனும் Tranquebar

 

திருக்கடையூர் கோவில்

 

திருக்கடையூர் - கல்யாண விசேஷங்கள்

 

பயணங்கள் முடிவதில்லை

 

ஒவ்வொரு பயணத்திலும், காதைத் தீட்டி வைத்துக் கொண்டால், ஸ்வாரஸ்யமான விஷயங்கள் காதில் தானாகவே கேட்கும்! அலைபேசியில் மூழ்கிவிட்டால் பல விஷயங்கள் நமக்குக் கேட்காது! கல்லணை வந்து சேர்ந்த பிறகு சத்திரம் பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் இரண்டாம் எண் பேருந்திற்காக காத்திருந்த போது பல விஷயங்களைக் கேட்கவும் பார்க்கவும் முடிந்தது.  அப்படி பார்த்த, கேட்ட சில விஷயங்கள் கீழே!  பேருந்து வந்ததும் ஏறி உட்கார்ந்து கொண்டேன். சில நிமிடங்களில் பேருந்து புறப்பட்டது!.  கல்லணை (தோகூர்) - சத்திரம் பேருந்து நிலையம் சாலையில் பயணம் - பேருந்தில் வந்தால் பிரசவத்துக்கு இலவசம்..... குலுக்குகிற குலுக்கலில் தானாகவே கர்ப்பிணிகளுக்கு பிரசவம் சம்பவிக்கலாம்.....சாலையின் நிலமை அப்படி........

 

*****

 

"அடியே, வெள்ளச்சி..... அங்கிட்டு போகாதடி...... நாய் இருக்கு, கடிச்சிப்புடும், நாம அப்படிக்கா போவோம் வாடி....."

 

கிராமத்துப் பெண்மணி, அவரது நாலு கால் செல்லத்திடம் பேசியபடி அழைத்துச் சென்றார். வெள்ளச்சி அவரைப் பொறுத்த வரை நாயில்லை.......

 

*****

 

ஏம்மா, இப்படி பொறுமையா வந்தா எப்படி? உனக்காகவே பஸ் காத்திருக்கணுமா?  கொஞ்சம் வெரசா வரலாம்ல! இலவச பயணச் சீட்டைக் கொடுத்தபடியே கேட்ட நடத்துனர்.... 

 

பஸ் சத்தமே இல்லாம வந்தா? எப்படிக் கேட்கும்? எப்படி வாரது?”  (இத்தனைக்கும் அந்த அரசுப் பேருந்து ஒரு லொடா லொடான்னு சத்தம் போடற பழைய டவுன் பஸ்!”  பதில் சொன்ன மூதாட்டி! 

 

ம்ம்ம்ம்ம், பொறுமையா வாரது, கேட்டா, சத்தம் வரலைன்னு சொல்ல வேண்டியது, உன் காதுல சங்கு தான் ஊதணும், இல்லைன்னா பஸ் வருது பஸ் வருது லௌட் ஸ்பீக்கர்- அலௌன்ஸ் பண்ணனும் போல!” 

 

கம்பியைப் பிடிச்சு வந்து, அப்படி சீட்ல உட்காரு! கீழே விழுந்தா, அதுக்கும் நான் தான் பதில் சொல்லணும்!”  

 

பேருந்துப் பயணத்தில்....  கல்லணையிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் செய்யும் வேளையில்....

 

*****

 

என்ன புருஷன் அவன்....  பொண்டாட்டி மேலே இண்ட்ரஸ்ட் இல்லாம!”  - அலைபேசி வழியே யாருடனோ பேசிக் கொண்டிருந்த பெண்மணி! 

 

நான் திரும்பிப் பார்த்த அதே வேளையில் பேருந்தினை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுனரும் திரும்பி யார்ரா அது? அமுத வாக்கு சொன்னதுன்னு பார்த்தார்!  அதுவும் திருவானைக்காவிலிருந்து திருவரங்கம் செல்ல இரயில்வே பாலம் ஏறும்போது!  

 

இதெல்லாம் கேட்டு பயந்தா எப்படி? நீங்க ரோட்ட பார்த்து ஓட்டுங்க தோஸ்த்!” என்ற அர்த்தத்தில் அவரை நான் பார்க்க, அவர் என்னைப் பார்க்க....  🙂

 

*****
 

முக்கொம்பு - என்னதான்யா அங்கே இருக்கு?  சோடி சோடியா காதல் சோடி இப்படி படையெடுக்குதே?

 

இன்று சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பெட்டவாய்த்தலை செல்லும் பேருந்தில் பயணித்த போது, முன் சீட் பெருசு ஒன்று பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள்....

 

அவர் காதலித்தாரா, இல்லையா என்று யோசித்துக் கொண்டிருந்தேன் நான்!  பெரியவரின் பக்கத்து இருக்கையில் இருந்த அவரின் இல்லத்தரசி, முழங்கையால் அவரை ஒரு இடி இடித்து உனக்கேன்யா பொறாமை? அவங்க சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டுமே! நீயும் வேணா இப்ப என்னைக் கூட்டிட்டு அங்க போய் காதல் பண்ணலாம்லே? அத உட்டுட்டு ஏன் புலம்பற? என்றார். 

 

பெரியவர் பார்த்த பார்வை - அர்த்தபுஷ்டியுடன் இருந்ததாக எனக்குத் தோன்றியது - அவங்க காதலியோட போறாங்க, என்னை மட்டும் கட்டின பொண்டாட்டிய கூட்டிட்டு போகச் சொல்றியே? என்று நினைத்திருப்பாரோ? 


போகற போக்குல இப்படி ஒரு திரிய கொளுத்திப் போட்டுப் போவோம்! ஹாஹா... 

 

மேலதிகச் செய்தி - முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் தீநுண்மி காலத்தில் நிறைய பராமரிப்புப் பணிகள் செய்திருக்கிறார்கள் என்று கேள்வி!  

 

சென்று வரலாம் என்றால் என் இல்லத்தரசி சொன்னது - உங்களுக்கு வேற வேலை இல்லை!

 

******

 

நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம், பயனுள்ளதாகவும் இருக்கலாம்! பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து

 

28 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 2. காலை வணக்கம் வெங்கட்ஜி!

  ஒவ்வொரு பயணத்திலும், காதைத் தீட்டி வைத்துக் கொண்டால், ஸ்வாரஸ்யமான விஷயங்கள் காதில் தானாகவே கேட்கும்! அலைபேசியில் மூழ்கிவிட்டால் பல விஷயங்கள் நமக்குக் கேட்காது!//

  ஹாஹாஹா.

  பல குரல்கள் சுற்றிலும் இருந்தால் என் மூன்றாவது காது சரியாகப் ஃபில்டர் செய்யாது!!!!!!! அதனால் மிஸ் ஆகும். சில சமயம் நல்ல விஷயங்கள் கூட!!!!

  பேருந்தில் வந்தால் பிரசவத்துக்கு இலவசம்..... குலுக்குகிற குலுக்கலில் தானாகவே கர்ப்பிணிகளுக்கு பிரசவம் சம்பவிக்கலாம்.....சாலையின் நிலமை அப்படி........//

  ஆமாம். எங்கள் ஊரிலும் சமீபத்தில் மழையினால் அப்படி ஆகியிருந்தது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ஜி...

   பயணங்களில் இப்படி சில விஷயங்கள் சுவாரசியம் தான். பல சமயங்களில் நான் கூட எதையும் கவனிக்காமல் இயற்கையை ரசித்தபடி வருவதுண்டு....

   உங்கள் ஊரிலும் மழையினால் சாலைகள் பழுது - வேதனைதான். விரைவில் சரியானால் நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 3. செல்லத்திடம் பேசியதை ரசித்தேன். மூதாட்டி பாவம்! செவி கேட்கலையோ அல்லது வயதானதால் வேகம் இல்லையோ...

  ஃபோன் டயலாக்....ஹாஹாஹா குடும்ப/சுற்று வட்ட விஷயங்கள் எல்லாம் வெளியில்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்லங்கள் உங்களுக்கு பிடித்தவை ஆயிற்று. அதனால் இந்தப் பகுதி உங்களுக்கு பிடிக்கும் என நானும் நினைத்தேன்.

   மூதாட்டிக்கு வயது காரணமாக காது கேட்காமல் இருக்கலாம் கீதா ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 4. முக்கொம்பு - டயலாக்ஸ் மற்றும் உங்கள் கற்பனை சிரிக்க வைத்துவிட்டது!!!

  //முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் தீநுண்மி காலத்தில் நிறைய பராமரிப்புப் பணிகள் செய்திருக்கிறார்கள் என்று கேள்வி!  சென்று வரலாம் என்றால் என் இல்லத்தரசி சொன்னது - “உங்களுக்கு வேற வேலை இல்லை!”//

  ஆதி.....என்ன நீங்க? இதெல்லாம் கிடைத்தற்கரிய தருணங்கள் இல்லையா...மிஸ் பண்ணக் கூடாது!!!! அதுவும் ஜி கூப்பிடும் போது!!! ஹாஹாஹா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முக்கொம்பு குறித்த உங்கள் எண்ணங்கள் நன்று. பல முறை அங்கே சென்று விட்டதால் ஒரு அலுப்பு வந்திருக்கிறது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

   நீக்கு
 5. ஆஹா. ரசனை ரசனை. இன்னோரு முறை கேட்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 6. முப்பது வருடங்களுக்கு முன்பு நான் போனபோதே முக்கொம்பின் நிலை இதுதான்.

  இன்றைய நிலை ???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முக்கொம்பு நிறைய மாற்றங்கள் கண்டுவிட்டது கில்லர்ஜி. பராமரிப்பு சரியில்லை என்பது வேதனைதான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 7. பயணங்களில் இப்படித்தான் நம்மைச் சுற்றி சுவாரஸ்யமான நிகழ்வுகள் எப்போதுமே தொடர்ந்து கொண்டிருக்கும்! அவற்றை அழகாய் எழுதியிருக்கிறீர்கள் வெங்கட்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்தது அறிந்து மகிழ்ச்சி மனோம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. பயண உரையாடல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 10. அழகான பயணத் தொகுப்பு..

  பற்பல காரணங்களினால் தங்களது தளத்திற்கு தொடர்ந்து வருவதற்கு இயலவில்லை..

  வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணத் தொகுப்பு தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

   பணிச்சூழல்கள், வேலைகள், விருப்பங்கள் என அனைவருமே இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறோம். முடிந்தபோது வாசிப்பதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. பயணத்தின் போது காதில் விழுந்தவை என பகிர்ந்த விஷயங்கள் ரசனையாக உள்ளது.

  செல்லத்துடன் அவர் நடந்து சென்ற போது கேட்ட உரையாடல் அருமை.

  /வெள்ளச்சி அவரைப் பொறுத்த வரை நாயில்லை......./

  ஹா.ஹா.ஹா. அந்த செல்லத்தின் பெயர் நன்றாக உள்ளது. வளர்ப்பவர்களுக்கு அது ஒரு நட்பு அல்லவா..!

  பேருந்தில் எல்லா பேச்சுகளுமே சுவாரஸ்யமாக இருந்தது ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   பதிவு வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 12. பயண உரையாடல்களை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயண உரையாடல்களை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி ராமசாமி ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 13. பயணத்தின் ஊடாக நடைபெறும் உரையாடல்கள் வித்தியாசமானவை. உங்கள் பாணியில் சிறப்பு. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடிக்கும் விதத்தில் இருந்ததில் எனக்கும் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....