ஞாயிறு, 2 ஜனவரி, 2022

வாசிப்பனுபவம் - இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும் - பிரதீபா சந்திரமோகன்


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட நல்லதே நடக்கட்டும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

BETWEEN YESTERDAY’S MISTAKES AND TOMORROW’S HOPE, THERE IS A FANTASTIC OPPORTUNITY CALLED “TODAY” - LIVE IT!! LOVE IT!! THE DAY IS YOURS!!

 

******



சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, கடந்த ஏப்ரல் மாதத்தில் நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் பிரதீபா சந்திரமோகன் அவர்கள் எழுதிய இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும் எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 177

விலை: ரூபாய் 49/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்: வரலாற்றை மாற்றிய காதல் கதை (Tamil Edition) eBook : Chandramohan, Pratheba: Amazon.in: Kindle Store

 

******* 

 

தீநுண்மியின் கோரத் தாண்டவத்திலிருந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.  முடிந்த வரை வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம்.  இனி இந்திர நீலமும் இமைக்கா  இரவுகளும் - வரலாற்றை மாற்றிய காதல் கதை குறித்து பார்க்கலாம்.

 

மணிமேகலை கதை நீங்கள் அறிந்ததே.  பழங்கால பண்பாட்டினை ஆய்வு செய்யும் ஒரு மாணவியாக கதாநாயகி அனன்யா.  அவளுக்கு உதவியாக வரும் நாயகன் மற்றும் நாயகனின் நண்பன்  மற்றும் சில கதாபாத்திரங்கள்.  ஆராய்ச்சியின் போது எதிர்பாராத விதத்தில் அவர்கள் கடந்த காலத்துக்குச் சென்று விடுகிறார்கள்.  Time Machine என்ற இயந்திரம் கொண்டு முன்காலத்திற்கும், வரப்போகும் காலங்களுக்கும் சென்று வருவது போல அமைக்கப்படட ஆங்கிலக் கதைகள் நிறைய உண்டு.  தமிழிலும் அப்படியான ஒரு சில கதைகள் உண்டு.  இந்த மாதிரி கதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை.  இன்றைக்கு நாம் பார்க்கும், பிரதீபா சந்திரமோகன் அவர்களின் நூலும் மிகவும் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார்.  கதாசிரியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.  

 

மன்னர் மேல் ஆசை கொண்டிருந்தாலும், சூழல் காரணமாக துறவியாக மாறி விடும் மணிமேகலை கதாபாத்திரம் - அவர்களை அனன்யாவும் மற்றவர்களும் சந்திக்கிறார்கள்.  இரண்டு இந்திர நீலா கற்கள் முன் காலத்திற்குச் செல்ல அவர்களுக்கு உதவியாக இருக்கிறது.  அந்த கற்களைக் கொண்டு பல விஷயங்கள் செய்யலாம் என்பதால் அதனைக் கைப்பற்ற பலரும் போட்டி போடுகிறார்கள் - அதுவும் பல நூற்றாண்டுகளாக. இந்திரா நீல கற்கள் பாதுகாப்பாக இருக்கிறதா, விரோதிகள் கைகளில் சிக்கிக் கொண்டதா, தெரிந்த கதையை மாற்றி அமைக்க முடிந்ததா என்பதை கற்பனை கலந்து சிறப்பாக எழுதி இருக்கிறார் பிரதீபா.

 

கதையின் முடிவில் வைத்த திருப்பம் - திருமணத்தின் போது எடுத்த காணொளியில் பார்க்கக் கிடைத்த நீல் கதாபாத்திரம் - கதைக்கு ஒரு Sequel எழுத வாய்ப்பாக இருக்கிறது.  ஆசிரியர் முயற்சி செய்யலாம்! 

 

மின்னூலை தரவிறக்கம் செய்து படிக்க இருக்கும் உங்களுக்கும், கதாசிரியருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் வாசிப்பு.  வாசிப்பை ஸ்வாசிப்போம்!

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

18 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமானதொரு நூல் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதொரு மின் நூல் ஸ்ரீராம். முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. கதை சுவாரசியமாக இருக்கும் போல் தெரிகிறதே. இதே போன்று தமிழில் சினிமாக்களும் வந்திருக்கு என்று நினைக்கிறேன்.

    சுட்டி எரர் வருகிறது ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரசியமான கதைதான் கீதா ஜி. முடிந்தால் வாசியுங்கள்.

      தவறான சுட்டி - தகவலுக்கு நன்றி. சரிபார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. அருமையான வாசகத்திற்கும் சுவாரசியமான் நூல் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி சார்.
    நூலை விரைவில் வாசிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் நூல் அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. இவ்வாறான பொருண்மையில் சில நூல்களே வருகின்றன. அவ்வகையில் ஆசிரியருக்கு பாராட்டுகள், பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அறிமுகம் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....