செவ்வாய், 18 ஜனவரி, 2022

வாசிப்பனுபவம் - நேசமுள்ள வான்சுடரே - புவனா சந்திரசேகரன் 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

EXPECT MORE FROM YOURSELF THAN FROM OTHERS.  BECAUSE EXPECTATIONS FROM OTHERS HURT A LOT, WHILE EXPECTATIONS FROM YOURSELF INSPIRE A LOT…  THAT’S LIFE!

 

******சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, கடந்த ஏப்ரல் மாதத்தில் நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் புவனா சந்திரசேகரன் அவர்கள் எழுதிய நேசமுள்ள வான்சுடரே எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

விலை: ரூபாய் 200/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

நேசமுள்ள வான்சுடரே! (நாவல்) (Tamil Edition) eBook : Puvana, C: Amazon.in: Kindle Store

 

******* 

 

புவனா சந்திரசேகரன் எனும் இந்த நூலின் ஆசிரியர் எங்கள் ஊர்க்காரர் - ஆமாங்க - தலைநகர் தில்லியில் வசிப்பவர்.  இதற்கு முன்னரும் இவரது ஒரு நூலை நான் வாசித்து, வாசிப்பு அனுபவத்தினை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  இப்போது அவரது நூல்களில் இரண்டாவது வாசிப்பனுபவம் ஒன்றுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

நேசமுள்ள வான்சுடரே - இதே தலைப்பில் ரமணி சந்திரன் அவர்களுடைய நாவல் ஒன்றும் இருக்கிறது - தலைப்பு ஒன்று என்பதால் குழப்பம் கொள்ள வேண்டாம். நேசமுள்ள வான்சுடரே என்ற இந்த நாவல் உண்மையான நட்பு, உண்மையான காதல், அம்மா-மகள் பாசம், பணத்திற்காக எதையும் செய்ய நினைக்கும், செய்யும் சிலரைப் பற்றி இந்த நாவல் வழி பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஆசிரியர்.  உண்மையான நட்பு என நினைத்துப் பழகினாலும் நட்பைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதை இந்த நாவல் வழி நாமும் புரிந்து கொள்ளும் விதமாக எழுதி இருக்கிறார்கள்.  

 

நாவல் படிக்கும்போதே இப்படியான மனிதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதை உணரவும் முடிகிறது - அது ஆசிரியருக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும்.  கதையை மிகச் சிறப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் நூலாசிரியர்!  அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலை நமக்குள்ளும் வந்து எட்டிப் பார்க்கிறது. என்னதான் நட்பில் இருக்கும் அந்தப் பெண்மணி, தனக்கு கெடுதலே செய்கிறார் என்றாலும் அதனைப் புரிந்து கொள்ளாமல் - நட்பின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையால் - தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருக்கிறார் கதையின் பிரதான பாத்திரமாக இருக்கும் பெண்மணி.  நட்பில் இருப்பவர் முதுகில் குத்தவும் கூடும் என்பதை புரிந்து கொள்வது சிரமம் தானே.   

 

எப்படியெல்லாம் இந்த மனிதர்கள் - பேராசை பிடித்த மனிதர்கள் நடக்கக் கூடும் என்பதற்கு இந்தக் கதை ஒரு எடுத்துக் காட்டு.  முப்பது அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவலைப் படிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவு தான் - ஆனால் படித்த பிறகு உங்களுக்கும் சில விஷயங்கள் தெரிந்து கொண்ட உணர்வு நிச்சயம் இருக்கும்.  படித்துப் பாருங்களேன். மின்னூலை தரவிறக்கம் செய்து படிக்க இருக்கும் உங்களுக்கும், கதாசிரியருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் வாசிப்பு.  வாசிப்பை ஸ்வாசிப்போம்!

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

18 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   நீக்கு
 2. உங்களின் பிரயாண அனுபவங்கள் மின்புத்தகங்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாகேந்திர பாரதி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. நேற்றைய (சொல்ல விட்டுப் போச்சு) வாசகமும் இன்றைய வாசகமும் நல்ல வாசகங்கள்.

  புவனா சந்திரசேகரன் எழுதிய புத்தகம் வேறொன்று நீங்கள் முன்னரே இங்கு விமர்சனம் பகிர்ந்த நினைவு இருக்கிறது.

  பதிவு முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 6. விமர்சனம் நன்று. ஆனால் எனக்குத்தான் நீங்கள் சொல்லும் புத்தகங்களில் சஹானாவில் இருந்தால் வாசித்துவிடுகிறேன் மற்றவை அமேசானில் அன்லிமிட்டெட் கணக்கு நான் இன்னும் அது எடுக்காததால் வாசிக்க முடிவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது எடுக்க வேண்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமேசான் தளத்தில் தினம் தினம் சில புத்தகங்கள் இலவசமாக கொடுக்கிறார்கள். அந்தச் சமயத்தில் தரவிரக்கம் செய்து வைத்தால் முடிந்தபோது வாசிக்கலாம் கீதா ஜி.

   பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 7. நல்லதொரு அறிமுகம்.  மனதைக்கவரும் தலைப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....