சனி, 1 ஜனவரி, 2022

நல்லதே நடக்கட்டும் - புத்தாண்டு - வாழ்த்துகள்

 


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

A FOOL THINKS HE KNOWS EVERYTHING. BUT A WISE PERSON UNDERSTANDS THERE’S SOMETHING TO LEARN FROM EVERYONE. 

 

******


 

அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடந்த இரண்டு வருடங்களாக தீநுண்மியின் தொல்லைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களை கலவரப்படுத்தி வந்திருக்கிறது.  மீண்டும் அதன் கோர முகத்தினை வெளிப்படுத்தும் நிலையை நாம் கண்டு வருகிறோம்.  புதிது புதிதாக பெயர் வைத்து, தீநுண்மியின் தீவிரத்தினை மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  பயமும், அலட்சியமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது.  மீண்டும் தீநுண்மி தலைதூக்க மக்கள்  பயம் கொள்கிறார்கள்.  எத்தனை எத்தனை இழப்புகள் கடந்த வருடத்தில்…  நான் அறிந்த பலருடைய வீட்டில் தீநுண்மி பாதித்தவர்கள் இல்லாமல் இல்லை - பல வீடுகளில் உயிரிழப்பும் இருந்தது. என்னுடைய நெருங்கிய சில நண்பர்களை தீநுண்மியின் இரண்டாம் அலையில் இழந்திருக்கிறேன். சில இழப்புகளை இன்னமும் ஜீரணிக்க இயலவில்லை.  நல்ல நட்புகளை இப்படி இழப்பது மிகவும் சோகமான விஷயம் - மாண்டார் திரும்பி வருவதில்லை என்பதை அறிந்தே இருந்தாலும் மனது ஒப்புக்கொள்வதில்லை.  இன்று புதிதாய் பிறக்கும் இந்த 2022-ஆம் வருடம் அனைவருக்கும் நல்லதையே தர வேண்டும், நல்லதே நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொள்வோம். 

 

இது ஒரு புறம் இருக்கட்டும், வலைப்பதிவு ஆரம்பித்து பத்து வருடங்களுக்கு மேலாக ஆனாலும் வருடத்தின் எல்லா நாட்களிலும் பதிவுகள் எழுதியதில்லை.  இருப்பதிலேயே இந்த வருடம் தான் அதிக பதிவுகளை (362) எழுதி இருக்கிறேன் - வருடத்தின் எல்லா நாட்களிலும்  பதிவுகள் எழுத நினைத்திருந்தேன் - ஆனாலும் இந்த வருடத்தின் 7 நாட்கள் இப்பக்கத்தில் பதிவுகள் வெளியிடவில்லை.  சில நாட்கள் (4) இரண்டு பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன் - ஆக மொத்தத்தில் இந்த வருடம் இப்பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள் எண்ணிக்கை 362! வலைப்பக்கம் எழுத ஆரம்பித்ததிலிருந்து ஒரே வருடத்தில் இத்தனை பதிவுகள் எழுதியதில்லை.  இருப்பதிலேயே அதிகம் இந்த வருடம் தான்! இதற்கு முன்னர் 2018-ஆம் வருடம் மொத்தமாக 297 பதிவுகள் எழுதியது தான் அதிக பட்சம். பதிவுகள் தவிர இந்த வருடம் வெளியிட்ட மின்னூல்களின் எண்ணிக்கை ஆறு மட்டும்! பணிச்சூழல், பயணங்கள் என ஒரு புறம் இருக்க இத்தனை பதிவுகள் எழுதியது எனக்கே வியப்பு தான். நவம்பர், டிசம்பர் மாதங்களிலிருந்து இப்போது வரை நண்பர்களின் பதிவுகளை படிக்கவோ, எனது பதிவுகளுக்கு வந்த கருத்துரைகளுக்கு பதில் அளிக்கவோ இயலவில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டு.  வரும் வருடம் பதிவுகள் எழுத முடியவேண்டும், வலைப்பதிவுகளில் உலா வருவதற்கு முடியவேண்டும் என்ற எண்ணமுண்டு. நல்லதே நடக்க வேண்டும் - நல்லதே நடக்கட்டும்!

 

இந்த வருடத்திலும், சென்ற வருடத்திலும் உல்லாசப் பயணங்கள் செய்ய முடியவில்லை என்ற வருத்தமும் உண்டு.  நண்பர் பத்மநாபனுடன் ஹரித்வார் சென்று வந்தது தவிர வேறெங்குமே செல்ல இயலவில்லை.  சில பயணத் திட்டங்கள் ஏற்பாடு செய்தாலும் தீநுண்மியின் தீவிரம் குறித்த கவலைகள், பயம் இருந்ததால் எல்லா திட்டங்களும் திட்ட அளவிலேயே நின்று விட்டன.  வரும் வருடத்திலாவது ஏதாவது பயணம் செய்ய இயல வேண்டும் என்ற ஆசை மனதில் உண்டு.  நிகழவும் வேண்டும் - பார்க்கலாம் இந்த வருடம் ஆசைகள் நிறைவேறுமா நிறைவேறாதா என்று.  

 

வாழ்க்கைப் பயணத்திலும் நிறைய மாற்றங்கள்…  வரும் நாட்கள் நல்லதாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை இப்போதெல்லாம் அதிகமாக செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது.  நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.  நம்பிக்கை தானே வாழ்க்கை!  உங்கள் அனைவருடைய வாழ்விலும் நல்லதே நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளும்!   

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை புத்தாண்டு நல்வாழ்த்துகள் - என் சார்பிலும், மனைவி மற்றும் மகள் சார்பிலும்!  தொடர்ந்து சந்திப்போம்!

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

24 கருத்துகள்:

 1. வலைப்பணி தொடரட்டும்.  நவம்பர் டிசம்பர் மாதங்களில் ஏதோ சொந்த வேலையில், கவலையில் இருக்கிறீர்கள் என்கிற அளவில் புரிந்தது.  மெதுவாய் அவற்றிலிருந்து மீண்டு வாருங்கள்.  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  அன்பின் நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 3. இப்புத்தாண்டும் இனி வரும் ஆண்டுகளும் எல்லோருக்கும் இனிய நினைவுகளை வழங்கி நல்ல ஆரோக்கியத்தை வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்திட இறைவனிடம் பிரார்த்தனைகளோடு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 4. வெங்கட்ஜி அண்ட் ஆதி உங்கள் பதிவுகள் தொடரட்டும்.

  உங்கள் கவலைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவற்றிலிருந்து மீண்டு வந்திடவும் இந்த வருடமும் அடுத்த வருடங்களும் இனியவையாக மாறிட உங்கள் பயணமும் ஈடேற உங்களுக்கும் ஆதிக்கும் ரோஷிணிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ஜி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

   நீக்கு
 5. தொடர்ந்து எழுதுங்கள் ஜி.

  அனைவருக்கும் இனிய 2022 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 6. நல்லதே நடக்கட்டும்... நடக்கும்...

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்க்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி முருகானந்தம் ஐயா.

   நீக்கு
 8. 362 நாட்கள் பதிந்தது பாராட்டுக்குரியது. தொடருங்கள்.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 9. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

  தொடரட்டும் உங்கள் பணி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

   நீக்கு
 10. 2021 ஆம் ஆண்டில் நீங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமான மனிதர். வாழ்த்துகள். நலம் பெறுக. வளம் பெறுக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜோதிஜி.

   நீக்கு
 11. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வெங்கட் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமசாமி ஜி.

   நீக்கு
 12. வீடுகளில் உயிரிழப்பும் இருந்தது. என்னுடைய நெருங்கிய சில நண்பர்களை தீநுண்மியின் இரண்டாம் அலையில் இழந்திருக்கிறேன். சில இழப்புகளை இன்னமும் ஜீரணிக்க இயலவில்லை."

  மிக வருந்துகிறேன் வெங்கட்.
  இந்தியாவில் குடும்ப உறுப்பினர்கள் அனியாயமாகப் பலியாகி
  இருக்கிறார்கள். இரு வருடம் பூர்த்தியாகிறது.  ''வாழ்க்கைப் பயணத்திலும் நிறைய மாற்றங்கள்… வரும் நாட்கள் நல்லதாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை இப்போதெல்லாம் அதிகமாக செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. ''

  எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்.
  மன உறுதி தளராமல் குடும்பத்தாருடன் நல் வாழ்க்கை தொடர வேண்டும்.
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி வல்லிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....