அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
RICHNESS IS NOT ONLY MEASURED BY MONEY;
YOU CAN ALSO BE RICH BY YOUR HABITS, VALUES, VISION AND DISCIPLINE.
******
அவரும் நானும் - பகுதி ஒன்று பகுதி இரண்டு பகுதி மூன்று
பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு
பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று
பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு
பகுதி பதினைந்து பகுதி பதினாறு பகுதி பதினேழு
பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது பகுதி இருபது
பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு
பகுதி இருபத்தி மூன்று பகுதி இருபத்தி நான்கு
சென்ற பகுதியில் புரிதலும், நம்பிக்கையும் கொண்ட இருவரால் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி உதாரணங்களுடன் சொல்லியிருந்தேன்.
அன்றாட நாட்களை எந்திரம் போன்று கடத்துவதும் , அவர் இங்கு வரும் நாட்களுக்காக காத்துக் கொண்டு இருப்பதும், எங்களோடு இருக்கும் நாட்களில் இனிமையாக பொழுதுகளை செலவிடுவதும் தான் எங்களின் வாடிக்கையாக மாறிப் போனது..🙂
வருடங்கள் கடந்து செல்வதைப் போல எங்களின் வயதும் தான் கடந்து செல்கிறது. மனதுக்கு என்றும் முதிர்வு என்பது இல்லை. கடமைகளும், பொறுப்புகளும் கண்முன்னே நின்றாலும், எந்திரம் போன்ற வாழ்க்கையிலும் எங்கள் இருவருக்குமிடையே உள்ள அன்னியோன்யமும், அன்பும், புரிதலும், நம்பிக்கை இவை எதுவும் மாறவில்லை.
தாடையை பிடித்துக் கொண்டு அவருக்கு தலைமுடியும், மீசையும் வாரி விடுவதில் கிடைக்கும் அந்த மகிழ்ச்சி! கால் வலிக்குதுன்னா என் மேல போட்டுக்கோம்மா! நான் பிடிச்சு விடறேன்! என்று அவர் பிடித்து விடுவதில் இருக்கும் அன்பு! இவை எவற்றுக்கும் எந்த வரையறையும் யாரும் வகுத்து வைக்கவில்லை! அவர் என்னுடையவர்! நான் அவருடையவள்! இது மட்டுமே உண்மை!
பொதுவாக பயந்த சுபாவம் கொண்ட நான் இந்த பத்து ஆண்டுகளில் இங்கு துணிவுடன் தனித்து செயல்பட்டு எல்லா விஷயங்களையும் கடந்து வருகிறேன். என்னை நானே மேம்படுத்திக் கொண்டு, குழந்தையையும் வளர்த்துக் கொண்டு, வயதானவர்களையும் கவனித்துக் கொள்கிறேன்.
எல்லா விஷயங்களிலும் உற்ற துணையாகவும், வழிகாட்டியாகவும் என் 'அவர்' உடனிருக்கிறார். குடும்பச் சிக்கல்களில் மாட்டிக் கொண்டு திணரும் போது ஆபத்பாந்தவனாக என்னைக் காத்து ரட்சிப்பார்! எனக்காக மட்டும் பரிந்து பேசாமல், என் தவறுகளை எடுத்துச் சொல்லி நியாயமாக பேசுவார். அன்றாடம் எல்லா விஷயத்தையும் அவரிடம் பகிர்ந்து கொள்வேன். அவரும் அது போல தான்!
இந்தத் தொடரை எழுதலாம் என்று நினைத்து துவங்கியது முதல் ஒவ்வொரு நாளும் என் மனநிலையில் பலவித மாற்றங்கள். எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் அன்றைய சூழலுக்கும், நேரத்திற்கும் ஏற்றாற் போல் எழுதி வந்திருக்கிறேன். அதிகாலையில் சமையல் மேடை மீது உட்கார்ந்து கொண்டு எழுதி பதிவிட்டிருக்கிறேன். அல்லது இரவுநேரத்தில் எழுதுவேன். உண்மையில் பசுமையான நினைவுகளை அசைபோட்டு பார்ப்பதில் மனதுக்கும் இதமாக இருந்தது! அதனால் தான் இத்தனை பகுதிகளும் சாத்தியமானது!
திசைக்கொரு புறமாக இருக்கும் நாட்கள் விரைவில் மாறி அவரின் அரவணைப்பில் இருக்கும் நாட்கள் கூடிய சீக்கிரம் வரும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொடரை இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன். இதுவரை இந்தத் தொடரை தொடர்ந்து வாசித்து ஊக்கமும், உற்சாகமும் தந்த அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
******
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
இனிமையான தொடர். உண்மையான உணர்வுகளை வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள். சீக்கிரம் இதற்கொரு நல்ல தீர்வு ஏற்பட பிரார்த்தனைகள். இந்தக் கட்டுரைக்கு வெங்கட் என்ன சொன்னார் என்றும் அறிய ஆவல்.
பதிலளிநீக்குஅவர் எதையும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார் என்பது இந்தத் தொடர் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள்..:) நான் என்னுடைய உணர்வுகளை மன நிறைவுடனும், மகிழ்வுடனும் பகிர்ந்து கொண்டு வந்தேன்..:) எழுது! எழுது! என்று மட்டுமே சொல்லிக் கொண்டு வந்தார்..:) இதையெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் இருபது வருடத்தை கழித்திருக்க முடியாது..:)
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
இந்தக் கட்டுரைக்கு வெங்கட் என்ன சொன்னார் என்றும் அறிய ஆவல்.//
நீக்குஹாஹாஹாஹா ஸ்ரீராம்! வெங்கட்ஜிய பத்தி பதிவுகளிலேயே தெரிந்ததுதானே! எதுவும் வெளியில் சொல்லமாட்டார்!!! இது என் யூகமும் கூட. ஆதியும் சொல்லியிருக்காங்க. ஆதி சொல்லியிருப்பது போல் நிறைய ஊக்கப்படுத்துவார். இதுவும் பதிவுகளின் வழி அறிந்ததே!!!!!! அதுவே பெரிய நல்ல விஷயம்தானே ஸ்ரீராம். இல்லை என்றால் இவ்வளவும் ஆதி எழுதியிருக்க முடியாதுதானே
கீதா
என்னைப் பற்றி பல விஷயங்கள் இங்கே பலருக்கும் தெரிந்தது தானே கீதா ஜி. ஹாஹா...
நீக்குமுடிந்த வரை எல்லோரயும் ஊக்கப்படுத்துவது என் வழக்கம். நல்லதே நினைப்போம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அருமையான தொடர். நன்றி
பதிலளிநீக்குதொடர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
சரளமான எழுத்தோட்டம். ஆர்வமாய் படிக்க வைத்தது. உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தின் சக்தியைப் புலப்படுத்தியது
பதிலளிநீக்குஊக்கம் தரும் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை எங்களுக்கு மகிழ்ச்சியும் ஆனந்தமும் ரிஷபன் ஜி. தொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
உள்ளத்து உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஆதர்ச தம்பதிகளுக்கே இவைகள் சாத்தியமாகும் வாழ்க வளமுடன்...
பதிவு குறித்த தங்களது கருத்துரை மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
தொடரைத் தொடர்ந்து படித்துவந்தேன்....
பதிலளிநீக்குநினைத்ததெல்லாம் வாழ்க்கையில் நடந்துவிடுகிறதா? இடையில் ஏதேனும் பிரிவு வரத்தான் செய்கிறது.
விரைவில் எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியோடு இனிமையாக வாழ வாழ்த்துகள்.
தொடர் நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்.
நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் என்ற பாடல் தான் எனக்கும் நினைவுக்கு வருகிறது நெல்லைத் தமிழன். தொடர் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஆதி இனிமையான அழகான வார்த்தைகளில் உணர்வுபூர்வமாக வெளிப்பட்ட உங்கள் தொடர் இனிதே நிறைவுற்றது. வாழ்த்துகள்! காட் ப்ளெஸ்!
பதிலளிநீக்கு//திசைக்கொரு புறமாக இருக்கும் நாட்கள் விரைவில் மாறி அவரின் அரவணைப்பில் இருக்கும் நாட்கள் கூடிய சீக்கிரம் வரும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொடரை இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன். //
கண்டிப்பாக நடக்கும் ஆதி! விரைவில்!
மீண்டும் உங்களுக்கு, வெங்கட்ஜிக்கு, ரோஷிணிக்கு உங்கள் மூவருக்கும் வாழ்த்துகள்! காட் ப்ளெஸ்!
கீதா
பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி. தங்களது வாழ்த்து மனதுக்கு நிறைவளித்தது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇதுவரை பதிவில் ஒவ்வொரு நாளும் தங்கள் மனதிலுள்ளதை அழகாக எழுதியுள்ளீர்கள். விரைவில் உங்களிருவரின் பிரிவு வாழ்க்கை நிறைவுற்று இனி வரும் காலங்களில் பிரிவே இல்லாது பல்லாண்டு காலம் சேர்ந்திருந்து தங்களுக்கான பல கடமைகளை செவ்வனே செய்து இனிதாக வாழ இறைவன் துணையிருப்பார். நானும் அவ்வண்ணமே இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவு வழி சொன்ன விஷயங்கள் குறித்தும், தொடர் குறித்தும் தங்களது எண்ணங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த/வரும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
உங்கள் மணவாழ்க்கைப்பயண நினைவுகளின் எல்லா பகுதிகளையும் தொடர்ந்து படித்தேன். கணவனும் மனைவியும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக வெவ்வேறு இடங்களில் வசித்தல் என்பது வலிமிகுந்ததாகும். அந்த உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது கஷ்டமே. ஆனால் உங்கள் நினைவுகளையும் உணர்வுகளையும் எழுத்துக்களில் வெளிப்படுத்திய விதம் அருமை. நீங்கள் இருவரும் ஆதர்ஷ தம்பதிக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூடிய விரைவில் நீங்கள் இருவரும் ஓரிடத்தில் இணைந்து வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குவாழ்க்கை குறித்த தங்கள் எண்ணங்களைச் சொன்னதோடு எங்களையும் வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி இணைய திண்ணை நண்பரே.
நீக்குஅருமையான நினைவுகள். நீங்கள் இருவரும் விரைவில் இணைய வேண்டும் என்று இறைவனை பிராத்திகின்றோம்.
பதிலளிநீக்குநினைவலைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
தொடர்ந்து ஃபேஸ்புக்கில் வாசித்து வந்தேன். ஆத்மார்த்தமான பதிவுகள். அருமையான எழுத்து நடை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குமுகநூலிலும் இங்கேயும் தொடர்ந்து வாசித்து ஆதரவு அளித்ததோடு பதிவுகளை பாராட்டியதற்கும், கருத்தினை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குவிரைவில் மகிழ்ந்திருக்க வேண்டுகிறோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.
நீக்குஇனிமையான தொடர்.
பதிலளிநீக்குதொடர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அருமையான தொடர், நல்ல எழுத்து நடை இனிதாக நிறைவுக்கு வந்துவிட்டது. உங்கள் இருவரின் புரிதலும், அன்பும் என்றென்றும் நிலைத்திருக்கவும் இருவரும் விரைவில் சேர்ந்திடவும் வாழ்த்துவதோடு மனதாரப் பிராத்தனைகளும்.
பதிலளிநீக்குதுளசிதரன்
தொடர் குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துளசிதரன் ஜி. வாழ்த்தியதற்கும் நெஞ்சார்ந்த நன்றி.
நீக்கு