வெள்ளி, 17 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி பன்னிரெண்டு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

WHEN YOU DO SOMETHING BEAUTIFUL AND NOBODY NOTICED, DO NOT BE SAD. EVERY MORNING THE SUN IS A BEAUTIFUL SPECTACLE AND YET, MOST OF THE AUDIENCE STILL SLEEPS.

 

******

 

அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு

பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று
சென்ற பகுதியில் என் அப்பாவித்தனத்தால் நான் செய்த கலாட்டாக்களைப் பற்றியும், இல்லற வாழ்வில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்கு கிடைத்த பரிசு பற்றியும் எழுதியிருந்தேன். இந்தப் பகுதியில் அதைத் தொடர்ந்து சில கதைகளை பார்க்கலாம்.

 

ஐந்தாம் மாதம் வரை என்னால் எதுவும் சாப்பிட முடியலை. அதன் பிறகு தான் குமட்டல் சற்றே குறைந்தது. என் வேலைகளை அவர் உதவியின்றி செய்து கொள்ள முடிந்தது. இரவில் பசிக்கிறது என்று அழுதிருக்கிறேன்! அம்மாவின் அருகாமை கிடைக்காமல் அதை நினைத்துக் கொண்டு நிறைய நாள் அழுதிருக்கிறேன்! அவர் தான் என்னை சமாதானம் செய்து பாடல்கள் பாடி தூங்க வைப்பார்.

 

தாழம்பூவே வாசம் வீசு!

தாயின் தாயே கொஞ்சிப் பேசு!

 

சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பூவிழியே!

 

என் வலிகளையும், வேதனைகளையும் புரிந்து கொள்ள அவரால் முடிந்தது. முதல் மூன்று மாதங்களில் அவ்வப்போது அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு கவனித்துக் கொண்டார். அப்போதெல்லாம் கேரம் போர்ட், கார்ட்ஸ் என்று விளையாடி பொழுதைக் கழிப்போம்.

 

ஏழாம் மாதம் முடிந்ததும் சீமந்தத்திற்காக திருச்சிக்கு வந்தோம். டெல்லியிலிருந்து. வரும் போது ரயில் பயணத்தில் மிகவும் கவனமாக அழைத்து வந்தார். உற்றார் உறவினர் சூழ வளைகாப்பும், வேத மந்திரங்களோடு சீமந்தமும் சிறப்பாக நடைபெற்றது. சீமந்தம் முடிந்ததும் அம்மா இல்லாததால் அங்கு செல்ல முடியாமல்  புகுந்த வீட்டிலேயே இருந்து விட்டேன்.

 

நிறைய அறிவுரைகள் சொல்லி என்னை இங்கு விட்டுவிட்டுச் சென்றார். அவரின் மனம் முழுவதும் இங்கே தான் இருந்திருக்கும். அப்போது புகுந்த வீட்டில் தொலைபேசி இருந்தாலும் தனிப்பட்ட முறையில் என்னால் பேசிக் கொள்ள முடியலை..🙂 நிறைமாத கர்ப்பிணியாக  இருந்ததால் என்னாலும் வெளியே செல்ல முடியலை!

 

ஒன்பதாம் மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு அவர் இங்கு வந்துவிட்டார். ஐந்தாம் மாதத்திற்குப் பிறகு கோவில் கொடிமரத்தை தாண்டி உள்ளே செல்லக்கூடாது என்பதால் கோவில் வெளிப் பிரகாரத்தை சுற்றி வருவதும், அதே போல் நடைப்பயிற்சியாக சிறிது தூரமும் அழைத்தும் செல்வார்.

 

குழந்தையின் தலை இறங்கி விட்ட நிலையில் ஒருநாள் நடைபயிற்சியாக வெளியே சென்ற என்னால் மேற்கொண்டு நடக்கவே முடியலை. அவர் தான் ஆங்காங்கே சிலர் வீட்டு திண்ணைகளில் அமர்ந்து வரச் சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்தார். அதன் பின்பு அடுத்த நாள் முதல் மொட்டை மாடியிலேயே நடக்க ஆரம்பித்தேன். 

 

பத்தாம் மாதம் துவங்கிய ஒருநாள் காலை மெல்ல வலியெடுக்கத் துவங்கியதும் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டேன். கொடுத்திருந்த தேதியெல்லாம் முடிந்து விட்டபடியால் குறைந்த அளவில் இருந்த வலியை அதிகப்படுத்த ஊசியும், மாத்திரையும் பின்பு ஜெல்லும் வைக்கப்பட்டதில் மாலை முதல் இருப்பு கொள்ளாத வலி துவங்கியது.

 

எனக்கு வலியெடுக்கத் துவங்கி முனகத் தொடங்கவும் அதைப் பார்க்க இயலாமல் அவர் அறைக்கு வெளியே சென்று விட்டார்! சுகப்பிரசவத்தில் இரவு 9:30 மணிக்கு எங்களுக்கு ஒரு அழகான ரோஜா மலர் ஒன்று குழந்தையாக கிடைத்தது. இரவு நேரம் மருத்துவமனைக்கு உள்ளே ஆண்கள் அனுமதி இல்லாததால் வெளியே நின்று கொண்டு ஜன்னல் வழியே குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

இப்படியாக சீமந்தமும், பிள்ளை பேறும் நல்லபடியாக நடந்தது. அதன் பிறகு மெல்ல அவருக்கும் எனக்குமான தனிப்பட்ட நேரங்கள் குறையவும் தொடங்கியது. தொடர்ந்து சில கதைகள் அடுத்த பகுதியில்

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

18 கருத்துகள்:

 1. நெகிழ்வூட்டும் நினைவலைகள்.  மனைவிக்கு தாலாட்டுப் பாடி தூங்க வைக்கும் கணவர்..   ஆஹா..  கொடுத்து வைத்தவர் நீங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. அவர் தான் என்னை சமாதானம் செய்து பாடல்கள் பாடி தூங்க வைப்பார்.  தாழம்பூவே வாசம் வீசு!

  தாயின் தாயே கொஞ்சிப் பேசு!  சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பூவிழியே!  என் வலிகளையும், வேதனைகளையும் புரிந்து கொள்ள அவரால் முடிந்தது. முதல் மூன்று மாதங்களில் அவ்வப்போது அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு கவனித்துக் கொண்டார். அப்போதெல்லாம் கேரம் போர்ட், கார்ட்ஸ் என்று விளையாடி பொழுதைக் கழிப்போம்.//

  GOD BLESS!!!

  சொல்லிட வேறு வார்த்தைகள் இல்லை எந்த அகராதியிலும்! ஈடு இணையற்றவர் வெங்கட்ஜி!

  ரசித்து வாசித்தேன் ஆதி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. உங்களை நடைப்பயிற்சி எல்லாம் அழைத்துச் சென்று மிகவும் கவனமாகக் கையாண்டவிதம் எல்லாம் செம...என்றால் //இரவு நேரம் மருத்துவமனைக்கு உள்ளே ஆண்கள் அனுமதி இல்லாததால் வெளியே நின்று கொண்டு ஜன்னல் வழியே குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.//

  மனம் நெகிழ்ந்து கண்ணில் சிறிதாக நீரும்!

  BLESSED AND GOD BLESS!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துரை கண்டு நெகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. ஆதர்ச தம்பதிகள் இப்படித்தான் இருக்கணும்... வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. நீங்கள் சொல்லி வருவதை படிக்கும் போது மனம் நெகிழ்ந்து கண்ணீர் துளிர்க்கிறது.
  உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  வெங்கட் உருவத்தில் மட்டும் உயர்ந்தவர் இல்லை உள்ளத்திலும் உயர்ந்தவர்.
  ரோஜா மலருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா. வாழ்த்தியமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....