வியாழன், 9 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி ஐந்து

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிஇந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்

 

TOLERANCE IS THE HIGHEST DEGREE OF OUR STRENGTH; AND DESIRE TO TAKE REVENGE IS THE FIRST SIGN OF WEAKNESS.

 

******அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு

 

சென்ற பகுதியில் மாப்பிள்ளை அழைப்பு, காசி யாத்திரை, ஊஞ்சல், மாலை மாற்றுதல் போன்ற திருமணச் சடங்குகளில் அவரும் நானும் பங்கேற்றதைப் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன். இந்தப் பகுதியில் முக்கிய நிகழ்வான மாங்கல்ய தாரணம், புகுந்த வீட்டுக்கு செல்வது பற்றிப் பார்க்கலாம்.

 

வேத மந்திரங்கள் முழங்க அப்பாவின் மடியில் அமர்ந்து  தாரை வார்க்கப்பட்டு அவரின் கையில் ஒப்படைக்கப்பட்டேன். பின்பு அவரை நமஸ்கரித்து திருமணத்திற்காக வாங்கிய ஒன்பது கஜ கூரைப்புடவையை பெற்றுக் கொண்டு உடுத்தி வந்தேன். அதன் பின்பு அப்பா மடியில் அமர்ந்து கொண்டு உறவுகளும், நட்புகளும் சூழ எல்லோரின் ஆசிகளோடு, அட்சதை தூவப்பட்டு என் 'அவர்' கையால் தாலி கட்டிக் கொண்டேன்.

 

இனி! நான் அவரின் சொத்து! அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னியை வலம் வந்து என் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் உரிமை பெற்றவராக ஆனார். நான் அவரின் சரி பாதியாக ஆனேன்! இனி! என் வாழ்வு அவரோடு தான்!

 

மாலை நலுங்கு வைபவத்தில் தேங்காய் உருட்டி, அப்பளம் உடைத்து, நான் அவருக்கு தலைவாரி விட்டு, நலுங்கு வைத்து விட, அவர் எனக்கு பூ வைத்து விட்டு, காலில் நலுங்கும் வைத்து விட்டார்..🙂 ஒரு பாட்டு பாடேன்! என்று எல்லோரும் கேட்க, நான் அமைதியாகத் தான் இருந்தேன்! உறவினர்கள் சிலர் பாடிட, பின்பு  அவர் ஒரு அழகான பாடல் பாடினார்..🙂

 

பாசிப் படர்ந்த மலை முருகா!

பங்குனித் தேரோடும் மலை!

என்ற முருகனின் காவடிச் சிந்து!

 

இப்படியாக எங்கள் கல்யாண வைபவங்கள் இனிதே நடைபெற்றது. மறுநாள் காலை நான் அவருடன் புகுந்த வீட்டுக்கு கிளம்பி விட்டேன். அப்பா, அம்மாவை விட்டு கிளம்பியதில் கலங்கிக் கொண்டிருந்தேன். என்னருகில் அமர்ந்திருந்த 'அவர்' என்னை சமாதானம் செய்து விட்டு, 'முதன்முதலா உனக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கித் தரலாம்னு நினைக்கிறேன்' என்றார்.

 

கொலுசு வாங்கித் தரட்டுமா! வாட்ச் வாங்கிக்கறியா! இல்ல புடவையா! உனக்கு என்ன வேணும்னு சொல்லு! என்றார். எனக்கு எதுவும் வேண்டாம்! எல்லாமே எங்கப்பாவே வாங்கிக் கொடுத்துருக்கார்! என்றேன்..🙂 

 

அப்படியா! சரி! நாம டெல்லிக்கு போறதுக்குள்ள பொறுமையா யோசிச்சு சொல்லு! வாங்கித் தரேன்! என்றார். அப்போது தான் நமக்காக ஒரு மனிதர் அருகில் இருக்கிறார். ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பது எனக்குள்  தோன்றியது. புதியதோர் உலகுக்கு பயணப்பட போகிறேன்! மனதில் பட்டாம்பூச்சி பறக்க, புது வாழ்க்கையில் ஏற்படப் போகும் குட்டி குட்டி சுவாரசியங்களுக்காக காத்திருக்கத் துவங்கினேன்.

 

இந்த உயர்ந்த மனிதர் தன் நீண்ட கைகளை என் தோளின் மீது போட்டுக் கொண்டு வந்தார். உனக்கு தூக்கம் வந்தா என் மேல சாஞ்சுக்கோ! இல்லன்னா மடியில் படுத்துக்கோ! எங்க அக்கா ட்ராவல்ல என் மடியில தான் படுத்துண்டு வருவா! என்றார்

 

வாழ்வில் நிகழும் தருணங்களை நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது! நேற்று வரை இவர் யாரோ ஒருவர்! இன்றிலிருந்து இவர் தான் எனக்கு எல்லாம் என்று எல்லோரும் சொல்லி வழியனுப்பி வைத்தார்கள். உண்மையில் அவரின் அரவணைப்பில் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். இது எப்போதும் எனக்கு கிடைக்கணும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு புகுந்த வீட்டுக்குச் சென்றேன்.

 

திருச்சிக்கு வந்ததும் அன்று மாலை மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்று தனிமையில் என்னிடம் பேச ஆரம்பித்தார். முதலில் அம்மாவைப் பற்றி! பின்பு டெல்லி வாழ்க்கை, வீடு, அக்கம் பக்கத்தவர்கள் என்று பேச்சு எங்கெங்கோ சென்றது. நான் அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். தன்னைப் பற்றிய புரிதலை உருவாக்க நினைக்கிறார். இருவரும் புரிந்து கொண்ட பிறகு தானே வாழ்க்கையை இனிமையாகத் துவக்க முடியும்இடையிடையே கல்யாணத்தை விசாரிக்க வந்தவர்களையும் பார்த்து பேசி விட்டு மீண்டும் மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்றார்..🙂

 

அடுத்த நாள் என்னை முதன்முதலாக வெளியில் ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றார். என்ன இடம்?? அது பற்றிய கதைகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

26 கருத்துகள்:

 1. திருமணத்துக்குப் பின்னான உணர்வுகளை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். வெங்கட் பாடிய பாடல் என்ன பாடல் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கேட்டதில்லை. வெங்கட் ப்ளீஸ்.. அதை இப்போது பாடி அனுப்பவும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! ஏற்கனவே ரெண்டு நேயர் வந்தாச்சா!! அப்ப +3. கீழ நானும் கேட்டிருக்கிறேன்.

   வெங்கட்ஜி நேயர் விருப்பம் கூடுது பாருங்க. நோட் பண்ணிக்கோங்க. நீங்க பாடிப் பதியாம விட மாட்டோம்ல!!

   கீதா

   நீக்கு
  2. போராடுவோம்.. போராடுவோம்... வெங்கட் பாடும்வரை போராடுவோம்...!

   ஹிஹிஹி.. டெல்லின்னாலே பொராட்டதுக்குக் குறைவு இருக்காது பாருங்க...!

   நீக்கு
  3. இங்கே வெளியிடும் பதிவுகளுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை வெகு குறைவு. பாட்டுப் பாடி அதனை வெளியிட்டு இங்கே வரும் நபர்களின் எண்ணிக்கையை நான் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  4. வழிமொழி செய்ய வந்தாச்சு சரியான நபர்! ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரங்கராஜன் ஜி.

   நீக்கு
  5. எத்தனை பேர் வந்தாலும் பாடி இங்கே வெளியிடப் போவதில்லை ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

   நீக்கு
  6. /டெல்லி என்றாலே போராட்டத்திற்கு குறைவில்லை/ ஹாஹா... உண்மை தான் ஸ்ரீராம். போராட்டங்கள் அவ்வப்போது நடந்து கொண்டே இருக்கின்றன.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. வணக்கம் சகோதரி

  உங்கள் திருமண அனுபவங்களை மிக ரசனையுடன் சுவாரஸ்யமாக எங்களுடன் பகிர்ந்து வருகிறீர்கள். ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு பின் தன் வாழ்வுடன் பங்கேற்று துணையாக வரும் தன் கணவரின் மனநிலையையும். அதே சமயத்தில் தன்னை வளர்த்து,படிக்க வைத்து கண் நிறைந்த ஒரு நல்லவருடன் திருமணம் செய்து தந்தும்,தன் பிரிவால் மனம் வருந்தும் பெற்றோர்களை விட்டு பிரிவதும் எவ்வளவு வேதனை என்ற நிலையினையும் திருமணத்திற்கு பிறகு சந்திப்பது ஒரு சோதனையான காலகட்டமே..! அந்த நேரத்தை நீங்கள் விளக்கியதும், ஒரு பெண்ணாக அவ்வருத்தத்தை என்னாலும் உணர முடிந்தது. அந்த பிரிவுதான் எத்தனை வருடங்கள் மனதை அழுத்தும் பாரங்களாகி உள்ளது. அருமையாக எழுதி வருகிறீர்கள். அடுத்தப் பகுதிக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது மேலான எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 4. இனி! நான் அவரின் சொத்து! அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னியை வலம் வந்து என் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் உரிமை பெற்றவராக ஆனார். நான் அவரின் சரி பாதியாக ஆனேன்! இனி! என் வாழ்வு அவரோடு தான்!//

  வாவ் ஆதி!! என்ன ஒரு உணர்வூர்வமான வரிகள்!

  ரொம்பவே உணர்வு பூர்வமாகச் சொல்லுகின்றீர்கள் இப்பகுதியை அதாவது திருமணத்திற்குப் பின்னானதை. மிகவும் ரசித்து அனுபவப்பட்டது என்று தெரிகிறது.

  //இந்த உயர்ந்த மனிதர் தன் நீண்ட கைகளை என் தோளின் மீது போட்டுக் கொண்டு வந்தார். உனக்கு தூக்கம் வந்தா என் மேல சாஞ்சுக்கோ! இல்லன்னா மடியில் படுத்துக்கோ! //

  ஸோ ஸ்வீட்!!! பெரும்பான்மையான பெண்கள் விரும்புவது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வரும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

   நீக்கு
 5. அட!! வெங்கட்ஜீ ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஎ நீங்க பாடினீங்களா!!! ஓ மை...இங்க பாருங்க ஆதி அடுத்த பதிவுல வெங்கட்ஜி பாடி அதுவும் இதே பாடலைப் பாடி பதிங்கு இங்க ஷேர் செய்யறீங்க ஓகேவா....வெங்கட்ஜி கைன்ட்லி நோட் திஸ்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாட்டு பாடவா! ஹாஹா... ஒரே ஓட்டமா ஓடிடுவீங்க கீதா ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. உண்மையில் அவரின் அரவணைப்பில் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். இது எப்போதும் எனக்கு கிடைக்கணும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு புகுந்த வீட்டுக்குச் சென்றேன்.//

  ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. கண்டிபபகக் கிடைக்கும் ஆதி! இறைவனின் ஆசிகள் உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாகக் கிடைக்கும். God Bless!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. மிகவும் அருமையான பதிவு. உங்கள் திருமண நிகழ்வுகளை நேரில் பார்த்தது போல் உணர்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 8. வாசகம் அருமை.

  உங்கள் மலரும் நினைவுகள் அருமை.
  நலுங்கில் வெங்கட் பாடிய காவடி சிந்து பாடல் கேட்க ஆசை.


  //உண்மையில் அவரின் அரவணைப்பில் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். இது எப்போதும் எனக்கு கிடைக்கணும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு புகுந்த வீட்டுக்குச் சென்றேன்.//

  அருமை. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் உணர்வை மிகவும் அருமையாக சொல்லியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 10. அழகான இனிமையான என்றென்றும் பொக்கிஷமாய்ப் பாதுகாக்கும் நினைவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....