புதன், 29 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி பத்தொன்பது

 

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நம் அன்பு யாருக்கு பலமோ, நம் வார்த்தை யாருக்கு மகிழ்ச்சியோ, நம் புன்னகை யாருக்கு வேண்டுதலோ, நம் நினைவு யாருக்கு பொக்கிஷமோ, நம் பிரிவு யாருக்கு பலவீனமோ, அவரே நமக்கான உறவென கொள்வோம். 

 

****** 

அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு

பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று

பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு

பகுதி பதினைந்து பகுதி பதினாறு பகுதி பதினேழு பகுதி பதினெட்டு

 

சென்ற பகுதியில் எங்களுக்குள் ஏற்பட்ட பிரிவைப் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன். காலத்தின் கட்டாயத்தால் ஆளுக்கொருபுறமாக இருந்தாலும் எங்கள் இருவரின் எண்ணங்கள் எப்போதும் ஒன்று போலவே தான் இருந்தன. ஒருவர் மீது மற்றவர் கொண்ட நம்பிக்கையும், புரிதலும், அன்பும், அக்கறையும் தான் இதுநாள் வரை உந்து சக்திகளாக எங்களை இயக்குகின்றன.  

 

திருமணமான பிறகு எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் என்னை அப்படியே ஏற்றுக் கொள்ள அவரால் முடிந்தது. அதே போன்று என்னால் முடிந்ததா!! நான் அவரிடம் எதிர்பார்த்தது என்ன!! மனத்திரையில் காணும் காட்சிகள் எல்லாம் நிஜத்திலும் நடக்கும் என்று நான் நினைக்கலாமா!! இந்தப் பகுதியில் அந்த விஷயங்களை சற்று பார்க்கலாம்.

 

திருமணம் செய்து கொண்ட போது அது பற்றிய எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் இருந்தாலும், அவ்வப்போது பரிசுகள் வாங்கித் தருவதும், உன்னை பிடிச்சிருக்கு! என்று வெளிப்படையாக சொல்வதும் தான் அன்பின் வெளிப்பாடு என்று காலம் காலமாக திரையில் பார்த்த காட்சிகளால் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்..🙂  ஆனால்! அதையெல்லாம் நிஜத்தில் எதிர்பார்த்தால்..!!!

 

பணத்தின் மீதோ, நகைகளின் மீதோ எப்போதுமே எனக்கு பற்று இருந்ததில்லை..! அவர் இன்னும் சம்பாதிக்கணும் என்று கூட நான் என்றுமே நினைத்ததில்லை! இருப்பது போதும் என்று தான் நினைப்பேன்! என்னுடைய தேவைகளும் மிகவும் குறைவு. இப்படியிருக்கும் போது என்னை இந்த மனிதர் எதுக்காகவாவது பாராட்ட மாட்டாரா! பிடிச்சிருக்குன்னு சொல்ல மாட்டாரா! என்றெல்லாம் தான் சிறுபிள்ளைத்தனமாக யோசிப்பேன்..🙂

 

அவருக்கு அன்பை வெளிப்படுத்தவே தெரியாதா! என்று யோசித்துக் கொண்டே புடவை உடுத்தும் போது சட்டென்று கீழே அமர்ந்து, இரு! இரு! நான் சரி பண்ணி விடறேன்! என்று புடவை pleatsகளை நீவி விடும் அந்தத் தருணம் அவரின் அன்பு அந்தக் கண்களில் வெளிபட்டு சிதறியது என் கண்களுக்குத் தெரிந்தது..🙂

 

அதே போல் வெளியே போகும் போது கைப்பிடித்து என்னை அழைத்துச் செல்வதும், என்னுடைய பாதுகாப்பில் அக்கறை காண்பிப்பதும், என் மீது கொண்ட நம்பிக்கையும் கூட ஒரு வித அன்பின் வெளிப்பாடுகள் தான் இந்த பேதைக்கு மெல்லப் புரிந்தது..🙂

 

இதுபோன்று அவரவரின் அன்பு என்பது  சின்னச் சின்ன விஷயங்களில் அவ்வப்போது வெளிப்படும். எதிர்பார்ப்பு இல்லா மனதில் தான் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும்! இன்னும் எங்களைப் பற்றி சொல்ல வேண்டிய கதைகள் வரும் பதிவுகளில்..!!!

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

16 கருத்துகள்:

 1. அக்கறைகள் மூலம் தானாய் வெளிப்படும் அன்பு.  இது உறுதியானது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 2. ஒருவர் மீது மற்றவர் கொண்ட நம்பிக்கையும், புரிதலும், அன்பும், அக்கறையும் தான் இதுநாள் வரை உந்து சக்திகளாக எங்களை இயக்குகின்றன. //

  நல்ல விஷயம் ஆதி! இதுதான் குடும்பத்தின் ஆணிவேர். வாழ்த்துகள்! காட் ப்ளெஸ்!

  தலைக்கு மிஞ்சிய கோபமே வந்தாலும் கூட இதை உடைக்கும் விதமான வார்த்தைகள் நாவில் வரக் கூடாது என்பதுதான் நான் என் பள்ளி சமயத்தில் YSM (young student movement) டீச்சர் மேரிலீலா அவர்கள் சொல்லித் தந்தது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் ஆசிரியர் மேரி லீலா அவர்கள் சொல்லித்தந்த விஷயம் மிகவும் சிறப்பானது கீதா ஜி. தங்களது வருகைக்கும் பதிவு குறித்த கருத்து பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 3. திருமணமான பிறகு எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் //

  இது இது வும் மிக முக்கியம். எதிலுமே...

  அன்பும் அக்கறையும் இருந்தால் செயல்களில் வெளிப்பட்டுவிடும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பும் அக்கறையும் இருந்துவிட்டால் எல்லாம் நலமே. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கீதா ஜி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. அவரும் நானும் பகுதியில் இதுவரையிலும் ஊடல் பற்றி ஒன்றுமே சொல்லலை. ஊடுதல் இல்லாமலா காதல்? வள்ளுவரே கடைசி குறளில் கூறியிருக்கிறார். அத்தகைய தருணங்களை எழுதுவீர்களா? வாசகர்களுக்கும் சுவாரசியமாக இருக்கும். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   நீக்கு
 6. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்! வார்த்தைகளில்தான் வர வேண்டுமா என்ன? வேறு வழியில் எந்தவிதத்திலேனும் வெளிப்பட்டுவிடும். உங்கள் இருவரின் அன்பும் புரிதலும் பசுமை. வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பும் புரிதலும் இருந்துவிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரி

  வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது. அன்பின் சிறப்பை அழகாக சொல்லியுள்ளீர்கள். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவின் வழி பகிர்ந்துகொண்ட வாசகமும் மற்ற விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 8. அன்பும் புரிதலும்தான் இனிய வாழ்க்கை அது கிட்டியுள்ளது வேறு என்ன வேண்டும்.

  பரிசு பொருட்களை எதிர்பார்ப்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ளதுதான்.

  எனது கணவரும் இதை எல்லாம் நினைக்கவேமாட்டார். பொதுவான நாட்களில் கடைக்கு அழைத்துச் சென்று விரும்பியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்பார்.பின்பு வேலை நிமித்தம் பெரும்பாலும் கடைக்கு வருவதே இல்லை நானே சென்று அனைவருக்கும் வாங்கிக் கொள்கிறேன் இதுவும் ஒருவகையில் சரியே.

  முதல் திருமண நாள் பிறந்த நாளுக்கு வாங்கி கொடுத்திருந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி உங்களது அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....