வெள்ளி, 24 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி பதினாறு

 

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட மாசுத் தொல்லை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

மனம் தளராமல் முயற்சி செய், வென்ற பின் அனைத்தும் மாறும். ஒதுக்கிச் சென்றவன் தேடி வருவான். குறை சொன்ன வாய்கள் நிறைகள் சொல்லும். உலகமே உன்னை உதாரணமாக்கும்.

 

******அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு

பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று

பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு

பகுதி பதினைந்து

 

சென்ற பகுதியில் அவருக்கு பயணத்தின் மீதுள்ள தீராக் காதலைப் பற்றியும், எங்களின் புரிதலைப் பற்றியும் சற்று பகிர்ந்து கொண்டிருந்தேன். வாழ்வில் உற்ற துணைவனிடம் கற்றுக் கொள்ள வேண்டியதும்  இருக்கிறது! உற்ற துணை நமக்கு ஆசானாகவும் ஆகலாம்! இந்தப் பகுதியில் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் பற்றி சற்றே பார்க்கலாம்.

 

அவ்வப்போது நட்புவட்டத்தில் உள்ளவர்களை வீட்டிற்குச் சாப்பிட அழைத்து விருந்தோம்பல் செய்வது அவரின் வழக்கம். அதற்கு தேவையானவற்றை வாங்கி வந்து தருவதும், எனக்கும் கூடமாட உதவியும் செய்து தருவார். இப்படி சமைத்து தான் நானும் பழகிக் கொண்டேன். அதன் பின் எட்டு, பத்து பேருக்கு என்றாலும் திட்டமாக சமைக்க முடிந்தது.

 

இன்னைக்கு 'சத்பால்' நீ பண்ணித் தந்த சப்ஜி அவா பண்ற மாதிரியே இருந்ததுன்னு சொன்னான். 'கபூர்' சார், Bபாபிஜி பண்ண 'சோலே' பஞ்சாபீஸ் பண்றா மாதிரி இருந்ததுன்னு சொன்னார்.  இன்னைக்கு என்ன சமைக்கப் போற! பருப்புசிலியா! கொஞ்சமா டப்பால போட்டுக் குடு! சுரேந்தருக்கும், சென்குப்தாவுக்கும் குடுக்கிறேன்! என்று எடுத்து செல்வார்.

 

இப்ப இருக்கற செக்ஷன்ல மாசம் ஒருதரம் அவங்கவங்க ஸ்டேட் சாப்பாட எல்லாருக்கும் எடுத்து வரணும்னு முடிவு பண்ணியிருக்கா! இந்த மாசம் என்னோட டெர்ன்! நீ ஒண்ணும் பண்ண வேண்டாம்!  இழுத்து விட்டுக்காத!  குழந்தை வேற இருக்கா! நா வெளியில ஆர்டர் குடுத்துடறேன்! என்று சொன்னார். 

 

பரவாயில்ல! நா பண்ணித் தரேன்! எத்தனை பேருக்கு வேணும்?? 10 பேரா!  சரி! சரி! பண்ணிடலாம்! ஸ்வீட் மட்டும் முதல் நாளே பண்ணிடறேன்! அப்புறம் புளிக்காச்சலும்! அப்ப தான் காலைல ஈஸியா இருக்கும்! அன்றைய நாள் புளியோதரை, கொத்தமல்லி சாதம், லெமன் சாதம், தயிர்சாதம், தொட்டுக்கையாக உருளைக்கிழங்கு ரோஸ்ட், அப்பளம், வெங்காய தயிர்ப்பச்சடி, ஊறுகாய் மற்றும் ஸ்வீட்டுக்காக கடலைப்பருப்பு போளியும் பண்ணித் தந்தேன்...🙂 எல்லாரும் நன்னா இருந்ததுன்னு சாப்பிட்டா! என் ஃப்ரெண்ட் சரிதா Bபாபிஜிகிட்ட குடுங்கன்னு சொல்லி இந்த ஸ்வீட் பாக்ஸ குடுத்து விட்டா! 

 

அவருக்கு பாராட்டவும் தெரியாது..அதேசமயம் குறை சொல்லவும் தெரியாது..🙂 எப்படியிருக்கு?? ஓகேவா?? என்று கேட்டால் 'ஓஓகே' என்று சற்று இழுத்தால், போறும்! இனிமே பண்ணாத! என்று அர்த்தமாக்கிக் கொண்டேன்..🙂 எப்படியிருக்கு?? என்று கேட்கும் போது ம்ம்ம்! என்று சொன்னால் 'நன்னாயிருக்கு! ஆனா இத நான் சொல்ல மாட்டேன்! புரிஞ்சுக்கோ! என்பதாக எடுத்துக் கொண்டேன்..🙂 இந்தப் புரிதல் போறாதா..:))

 

பொடிப்பொடியாக கத்தியில் காய்கறிகளை நறுக்க, ஃபுல்கா ரொட்டி செய்ய, பொதுவான சில சப்ஜிகள் செய்ய அவரிடத்தில் தான் தெரிந்து கொண்டேன். அப்பப்போ முடியும் போதெல்லாம் பாத்திரத்த தேய்ச்சிடணும்! சிங்க்ல போட்டு வெக்காத! என்று அட்வைஸ்களும் கிடைக்கும்..🙂

 

தையற்கலையில் என் ஆசானும் அவர் தான்! அவரே ஒருநாள் மெஷினை வாங்கி வந்து, அதில் தைத்து பார்த்து, எனக்கும் கற்றுக் கொடுத்தார். ஹோம்வொர்க்கும் கொடுத்து விட்டு அலுவலகம் செல்வார். மாலைக்குள் அதை முடித்து வைக்க வேண்டும். 'மெஷினை ஒண்ணும் எடுக்கறதில்ல போலிருக்கு!' எனும் போதே நாம தைக்கறதே இல்லையேன்னு எடுப்பேன்..🙂

 

யார் மனதையும் காயப்படுத்தாத குணம், உதவும் மனப்பான்மை, விட்டுக் கொடுத்து போவது இவை அவரிடம் இருக்கும் சிறப்பான குணங்கள். சில வருட இல்லற வாழ்வில் அவரின் பார்வைக்கும், கண் ஜாடைக்கும், ஒற்றை வார்த்தை பதிலுக்கும் என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொண்டேன்..🙂 இந்த விஷயத்திற்கு என்ன பதில் சொல்வார்! என்று யூகிக்கவும் முடிந்தது..🙂

 

மீதிக்கதைகள் அடுத்த பகுதியில்...

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

20 கருத்துகள்:

 1. படிப்படியாக காய்களை நறுக்குவது ஆண்களின் ஸ்பெஷாலிட்டியோ!! நானும் ஸிங்க்குல போட்டு வைக்கும் அவ்வப்போது தேய்த்துவிட பாஸிடம் சொல்வேன், செய்தும் காட்டுவேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொடிப்பொடியாக என்று படிக்கவும்!

   நீக்கு
  2. பொடிப்பொடியாக காய்களை நறுக்குவது ஆண்களின் ஸ்பெஷாலிட்டியோ!!//

   ஹலோ ஸ்ரீராம்!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதென்னா ஆண்கள் ஸ்பெஷாலிட்டி!! நானும் பொடிப் பொடியாக நறுக்குவேனாக்கும்!!!! அக்காஸ், அம்மா யாரும் வரலை வந்திருந்தா சொல்லிருப்பாங்க பெண்கள் சப்போர்ட்டா!!! ஹாஹாஹாஹா...அதுவும் மலையாளநாட்டு இரும்புக் கத்தி செமையா நறுக்கும்!!!

   கீதா

   நீக்கு
  3. வணக்கம் கீதாரெங்கன் சகோதரி

   உங்களுக்கு சப்போர்ட்டாக நான் வந்து விட்டேன்.ஹா.ஹா.
   நானும் அரிவாள்மனையிலேயே காய்கறிகளை பொடியாக நறுக்குவேன். என்ன..!! இதில் நறுக்கும் போது கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். பழகி விட்டால் இயல்பான வேகம் வந்து விடும். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. ஹி... ஹி.. ஹி.. ரேர் கேஸை எல்லாம் கணக்கில் எடுக்கக் கூடாது!!

   நீக்கு
  5. பொடிப் பொடியாக காய்கறிகளை நறுக்குவது சிலருக்கு மட்டுமே கைவந்த கலை - ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்.... :) பாத்திரம் விழவிழ தேய்த்து வைத்துவிடுவது எனது வழக்கம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  6. ஹா ஹா ஹா! பொடிப்பொடியாக என்றே படித்தேன் ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
  7. மலையாள நாட்டு இரும்பு கத்தி.... :) சில நாட்கள் செராமிக் கத்தி வைத்து நறுக்கி இருக்கிறேன். மிகவும் கூராக இருக்கும். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

   நீக்கு
  8. அரிவாள் மனையில் கூட சின்னச் சின்னதாக நறுக்க முடியும். வீட்டில் அம்மா, அத்தைப் பாட்டி போன்றவர்கள் இப்படி செய்ததை பார்த்ததுண்டு கமலா ஹரிஹரன் ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
  9. ஆணும் பெண்ணும் இருவரிலும் தனித் திறமைகளோடு நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் ஸ்ரீராம், தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 2. எப்படியொல்லாம் பேசி புரிய வைக்கிறார்...! (வேலை வாங்குகிறார்...!) புரிதல் அருமை...

  // பாராட்டவும் தெரியாது... அதேசமயம் குறை சொல்லவும் தெரியாது...//

  குழந்தையிடம் அப்படி இருக்காதே...?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. நினைவலைகள் அற்புதம் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 4. வெங்கட்ஜி சூப்பர்!

  நல்ல விஷயங்கள் ஆதி!

  தொடர்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கீதா ஜி.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரி

  வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது அழகாக விவரித்து சொல்கிறீர்கள்.

  /யார் மனதையும் காயப்படுத்தாத குணம், உதவும் மனப்பான்மை, விட்டுக் கொடுத்து போவது இவை அவரிடம் இருக்கும் சிறப்பான குணங்கள்/

  கணவரின் குணநலன்களை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப நடப்பது ஒரு நல்ல மனைவிக்கு அழகு. அந்த வகையில் நீங்கள் ஒரு நல்ல இல்லத்தரசி. உங்களுக்கு என் அன்பான வாழ்த்துகளும் பாராட்டுகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 6. நல்ல குணமுள்ளவராக புரிதல் உள்ள வெங்கட் அவர்களை சிறப்பாக வளர்த்த அவரின் பெற்றோரை இந்நேரம் வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துரைக்கும் உளங்கனிந்த நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....