அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
“SPREAD LOVE EVERYWHERE YOU GO. LET NO ONE EVER COME TO YOU WITHOUT
LEAVING HAPPIER.” —MOTHER TERESA.
*****
ராஜா காது கழுதைக் காது - துணி தோய்க்க சொல்லிட்டாடா :
லால்குடி இரயில்வே மேம்பாலம் அருகே இளநீர் குடித்துக்
கொண்டு இருந்தபோது…….
TVS 50 ஒட்டியபடி, கழுத்தைச் சாய்த்து அலைபேசியை
காதால் தோளில் அழுத்திப் பிடித்தபடி, யாரிடமோ பேசியது…… "எங்கடா சீக்கிரம் வர்றது…… வெளியே போறதுக்கு
முன்னாடி, துணியெல்லாம் தோச்சுப் போட்டுட்டுப் போ" ன்னு பொண்டாட்டி
சொல்லிட்டா…… இப்பதான் துணி எல்லாம் தோச்சு முடிச்சு, உன்கிட்ட பேசிட்டே வெளில
புறப்படறேன்…".
******
பழைய நினைப்புடா பேராண்டி : BALD
AND THE BEAUTIFUL
2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - BALD AND THE BEAUTIFUL - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
வழுக்கை என்பது நிறைய ஆண்களுக்கு
பிரச்சனை தரும் விஷயம். இதனை மறைக்கத்தான் எத்தனை பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது?
இதைப் பற்றி எழுதக் காரணம் அலுவலகத்தில் நான் தினமும் பார்க்கும் ஒரு நபர்.
மொத்தமாய் 100-150 முடிதான் தலையில் [உட்கார்ந்து எண்ணியது யார்னு எசகு பிசகா
கேள்வி கேட்டா விஜயகாந்த் பிரச்சார வேனில் அவர் பக்கத்தில் நிக்க வச்சுடுவேன்!]
அதை வைத்து முழுத் தலையையும் மறைக்க அவர் படும் பாடு... அப்பப்பா! சொல்லி மாள ஒரு
பதிவு போதாது.
இருக்கும் முடியை கொஞ்சமும்
வெட்டாமல் நீளமாக வளர்த்து, நிறைய எண்ணை தடவி சுருள் சுருளாய் தலை மீது ஒட்ட
வைத்து பின் பக்கத்திலிருந்து முன் பக்கம் வரை கொண்டு வந்து முழுத்தலையையும்
மறைத்துவிடும் சாமர்த்தியத்தை அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
சர்தார்ஜிகள் தங்களுடைய நீண்ட
தாடியை முகத்துடன் ஒட்டியபடி அழகாய் வைத்துக்கொள்ள சிம்கோ ஹேர்ஃபிக்சர் என்ற
பொருளைப் பயன்படுத்துவார்கள். தினமும் காலையில் தாடியை நன்கு சீவி அதில்
ஹேர்ஃபிக்சரைத் தடவி, முகத்தில் படியவைத்து அதன் மேல் ஒரு துணி வைத்து பகடியுடன்
கட்டி விடுவார்கள். ஒன்றிரண்டு மணி நேரம் பொறுத்து அந்த துணியை அகற்றிவிட்டால்
அப்படியே படிந்து இருக்கும் அவர்களது தாடி – ”தாடி நீண்ட தாத்தா” என்று யாரும்
கிண்டல் செய்ய முடியாது.
அது போலவே மேலே குறிப்பிட்ட நமது
நண்பர் காலையிலேயே தலைமுடிக்கு ஹேர்ஃபிக்சர் போட்டு பின்னிருந்து முன்பக்கம் வரை
செட் செய்து விடுவாராம். இப்படிச் செய்ய தினமும் எடுத்துக்கொள்வது ஒன்றிலிருந்து
ஒன்றரை மணி நேரம்!!! இதெல்லாம் எதற்கு என்று கேட்டால், சுற்றியுள்ள மக்களையே
காரணம் காட்டுகிறார்.
சொந்தமாக மூன்றடி நிலம் கூட
இல்லாத அவரைப் பார்த்து ”என்ன சார், நிறைய கிரவுண்ட் வாங்கிப் போட்டு
இருக்கீங்களே?”, “தலைக்கு மேல ஒண்ணும் இல்ல, உள்ளேயும் அப்படித்தானா?”, “உங்க
எதிர்ல வரணும்னா ஒரு கூலிங் கிளாஸ் போட வேண்டியிருக்கு, சூரிய ஒளி உங்க தலையில
பட்டு ரிஃப்ளெக்ட் ஆகுது!” ”தலையைக் கொஞ்சம் மூடிவையுங்க, கண்ணு கூசுது”
இப்படியெல்லாம் கிண்டல் செய்தால் பின்னே அவர் என்னதான் செய்வார் பாவம்.
முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!
******
இந்த வாரத்தின் ரசித்த காணொளி:
NEE HIMAMAZHAYAYI
இந்த வாரத்தின் ரசித்த பாடலாக வருவதும் ஒரு மலையாள
மொழிப் பாடல் தான். கேட்டுப் பாருங்களேன்.
மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை எனில் கீழே
உள்ள சுட்டி வழி பார்க்கலாம்.
*****
இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம் - முதுமை
:
******
இந்த வாரத்தின் ரசித்த Meme - Instagram
Vs Kilogram :
உண்மையா இருக்குமோ? 😀
******
இந்த வாரத்தின் ரசித்த கதை
- இரண்டணா :
சுஜாதா - அவர் எழுத்தை ராசிக்காதார் யார்? அவரது இரண்டணா கதை சமீபத்தில் படித்தேன். உங்களுக்கும் படிக்க ஆசை இருந்தால் கீழே உள்ள சுட்டி
வழி படிக்கலாம்.
அவரது இன்னும் சில கதைகளும் இப்பக்கத்தில் உண்டு.
Irandana Sujatha | இரண்டணா சுஜாதா |
இரண்டணா-சிறுகதை | Sujatha-Short story (valaitamil.com)
******
இந்த வாரத்தின் ஓவியம் - நடனம் :
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த
தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து…
வேலைகளை பகிர்ந்து செய்வதால் தப்பில்லை என்று அந்த இளைஞர் உணர்ந்து விட்டார் போல...
பதிலளிநீக்குவழுக்கையை மறைக்கும் ,முயற்சி - எனக்கும் அப்படி ஓரிருவரைத் தெரியும்.
பாடலைவிட லொகேஷன்கள் அருமை.
முதுமை படம்.. "நீங்க ஏதாவது வழி கண்டுபிடிப்பீங்கங்கற நம்பிக்கை எனக்கிருக்கு..."
சுஜாதா கதை ரசித்திருக்கிறேன்.
ஓவியம் - கிருஷ்ண லீலா தரங்கிணி!
இந்த வாரம் வித்தியாசமாக இருந்தது.
பதிலளிநீக்குபலர் மெனெக்கெட்டு வழுக்கையை மறைக்கிறேன் என்று அசிங்கமாக்கிக்கொள்கிறார்கள். அவரவர் கவலை அவரவருக்குத்தானே தெரியும்.
சாலையில் செல்போன் பேசியே தலை சாய்ந்தவர்கள் நிறைய உண்டு.
பதிலளிநீக்குகாணொளி கண்டேன் சிறப்பு.
கடந்த இருபது ஆண்டுகளில் தலை வழுக்கையாவது பெருகி விட்டது.
பாடல் இனிமை...
பதிலளிநீக்குமற்ற பகுதிகளும் அருமை...
அருமை
பதிலளிநீக்குஇனிமையான பாடல்..
பதிலளிநீக்குஅந்த முதியவர் படம் நிதர்சனம்..
பதிவு அருமை..
வாழ்க நலம்..
அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குபாடல் நன்றாக இருக்கிறது
"முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை கூட வரும்" பாடல் நினைவுக்கு வருகிறது.
பாடலுடன் பதிவும் இரசிக்க வைத்தது.
பதிலளிநீக்கு