அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
“ANYONE WHO STOPS LEARNING IS OLD, WHETHER AT TWENTY OR EIGHTY. ANYONE
WHO KEEPS LEARNING STAYS YOUNG. THE GREATEST THING IN LIFE IS TO KEEP YOUR MIND
YOUNG.” - HENRY FORD.
******
பயணங்கள் இனிமையானவை. தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர்
உங்களுக்கும் பயன்படலாம்.
இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.
பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.
பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள்.
பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.
பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி.
பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட்.
பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு.
பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட்.
பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும்
ராமேஷ்வர் dhதாம்.
பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.
பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.
பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.
பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி
பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்
பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா
பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்
பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…
பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…
பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்
பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்
பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்
பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி
பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்
பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு
பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர்
பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை
பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை
பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்
பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா
பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி
பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்
பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்
பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்
பகுதி முப்பத்தி நான்கு - வாரணாசி - துள்சி மானஸ் மந்திர்
பகுதி முப்பத்தி ஐந்து - தென்னிந்திய உணவும் அய்யர் கஃபேவும்
பகுதி முப்பத்தி ஆறு - காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்
பகுதி முப்பத்தி ஏழு - அனைவருக்கும் உணவளிக்கும் அன்னபூரணி
பகுதி முப்பத்தி எட்டு - Gகங்கா ஆரத்தி - ஒரு அற்புத அனுபவம்
பகுதி முப்பத்தி ஒன்பது - விதம் விதமாக சாப்பிடலாம் வாங்க
பகுதி நாற்பது - நான்காம் நதிக்கரை நகரம் - ப்ரயாக்ராஜ்
பகுதி நாற்பத்தி ஒன்று - ப்ரயாக்ராஜ் - திரிவேணி சங்கமம்
பகுதி நாற்பத்தி இரண்டு - அக்ஷய் வட் மற்றும் பாதாள் புரி மந்திர்
பகுதி நாற்பத்தி மூன்று - ப்ரயாக்ராஜ் - Bப(d)டே ஹனுமான்
நதிக்கரை நகரங்கள் தொடரின் சென்ற பகுதியில்
திரிவேணி சங்கமம் அருகே இருக்கும் Bப(d)டே ஹனுமான் கோவில் குறித்துப் பார்த்தோம்
என்றால், இந்தப் பகுதியில் நாம் பார்க்க இருப்பது ஹனுமான் கோவில் அருகே இருக்கும்
ஷங்கர் விமான மண்டபம் (உள்ளூரில் அழைப்பது ஷங்கர் விமான் மண்டப்!) பற்றி. காஞ்சிபுரம் நகரில் இருக்கும் காஞ்சி காமகோடி
பீடத்தினால் ப்ரயாக்ராஜ் நகரில் கட்டப்பட்ட கோவில் தான் இந்த ஷங்கர் விமான
மண்டபம். முற்றிலும் தென்னகத்தின் கட்டிடக்கலை பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த கோவில்
ரயில் நிலையத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில், சங்கமத்திற்கு வெகு
அருகிலேயே இருக்கிறது. மொத்தம் நான்கு மாடிகள் கொண்ட இக்கோவிலில் சிறப்பான
சிற்பங்கள் இருக்கின்றன. 16 தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கோவிலின்
மொத்த உயரம் 130 அடி.
1970-ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து 1986-ஆம் வருடம்
கட்டி முடிக்கப்பட்டது. கோவிலின் நுழைவாயிலில் ஆதி சங்கரர் மற்றும் மந்தன் மிஷ்ரா
[இவர்களுக்கிடையே நடந்த விவாதம் பிரபலமானது] அவர்களுடைய உருவச் சிலைகள்
வைத்திருக்கிறார்கள். கோவிலின் உள்ளே மீமாம்ச தத்துவத்தினை பரப்பிய
குமாரில பட்டர், ஜகத்குரு சங்கராச்சாரியர், காமாட்சி தேவி, திருப்பதி பாலாஜி,
யோகஷாஸ்திர சஹஸ்ரயோக லிங்கம் ஆகிய சிலைகளும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு சிலை.
அழகிய சிற்பங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாற்றினை ஓவியங்களாக
வரைந்து கோவிலின் சுவற்றில் வைத்திருக்கிறார்கள். காலை 6 மணி
முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில்
திறந்திருக்கும். சிறப்பான விழாக்களும் இங்கே கொண்டாடப்படுகின்றன.
கோவில் மிகவும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு
இருக்கிறது. கோவிலின் உள்ளே மேல் மாடியிலிருந்து வெளியே
பார்த்தால் திரிவேணி சங்கமம் கண்களுக்கு விருந்தாகக் காட்சி அளித்துக்
கொண்டிருக்கிறது. சில நிமிடங்கள் அங்கே நின்று நிதானித்து
கோவிலின் அழகையும், கோவிலிலிருந்து தெரியும் திரிவேணி சங்கமக் காட்சிகளையும்
பார்த்து ரசித்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டோம். எங்கள்
வாகன ஓட்டுநரை கோவில் அருகே இருக்கும் சாலையில் வந்து காத்திருக்கச் சொன்னோம். சொன்னபடியே அவர் வந்து விட, கோவிலிலிருந்து நாங்கள்
புறப்பட்டுச் சென்ற இடம் - ஒரு உணவகம். காலையில்
வாரணாசியில் புறப்பட்ட பிறகு ப்ரயாக்ராஜ் வந்து சேர்ந்து, திரிவேணி சங்கமத்தில்
குளித்து, மற்ற கோவில்களையும் பார்த்து ரசிக்கும் வரை உணவகம் எங்கும் செல்லவில்லை. நடுவே ஆங்காங்கே வெள்ளரிக்காய் போன்றவற்றை உண்டதோடு
சரி என்பதால் உணவகத்திற்கு நேராக வண்டியை விட்டோம்.
ப்ரயாக்ராஜ் நகரில் நேத்ராம் chசௌராஹா, கட்ரா
எனும் பகுதியில், நேத்ராம் மூல்சந்த்(dh) அண்ட் சன்ஸ் என்று ஒரு உணவகம். நகரில்
மிகவும் பிரபலமான உணவகம் இது. அளவில் மிகச் சிறியது தான் என்றாலும் இங்கே
கிடைக்கும் கச்சோடி சப்ஜி மிகவும் பிரபலமான ஒன்று. இணையத்தில் இந்தப் பெயரில்
தேடிப்பாருங்கள் - நிறைய Youtuber-கள் இந்த உணவகம் குறித்து காணொளிகள் பகிர்ந்து
இருப்பார்கள். இங்கே கிடைக்கும் கச்சோடி சப்ஜி, தயிருடன் ஜிலேபி, இனிப்புகள் என
அனைத்தும் சுவையாக இருக்கும். 165 வருடங்கள் பழமையான உணவகம். ஐந்து தலைமுறைகளாக இந்த உணவகத்தினை தொடர்ந்து நடத்தி
வருகிறார்களாம். அலஹாபாத் விஷ்வவித்யாலாயா (அலஹாபாத்
பல்கலைக்கழகம்) மாணவர்கள் பலரும் இந்த உணவகத்தில் உணவு உண்பதற்காக வருவார்கள்
என்றும், பல வருடங்களாக இங்கே உணவகம் இருப்பதால் பல அரசியல் தலைவர்கள் இங்கே வந்து
உணவு உண்டிருப்பதாகவும் தகவல்கள் உண்டு. நமது
முன்னாள் குடியரசுத்தலைவர் ஷங்கர் தயாள் ஷர்மா அவர்கள் பல்கலைக்கழகத்தில்
படித்தபோது தினமும் இங்கே காலை உணவு சாப்பிட வந்ததாக அவரது புத்தகத்திலும் எழுதி
இருக்கிறாராம். தினமும் காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரை
இந்த உணவகம் திறந்திருக்கும்.
தையல் இலையில் தான் உணவு பரிமாறுகிறார்கள். உணவும் சுவையாக இருக்கிறது என்பதோடு, இடமும் நன்றாக,
சுத்தமாக பராமரிக்கப்படுகிறது என்பது கூடுதல் Attraction! பொதுவாக வட இந்திய
உணவகங்கள் பலவற்றில் சுத்தம் இருக்காது - அதிலும் சிறு உணவகங்களில். பெரிய பெரிய உணவகம் என்றால் சுத்தமாக
பராமரிக்கிறார்கள். ஆனால் சிறிய உணவகங்களில் அத்தனை சுத்தம்
போதாது! மெதுவாக உணவை ருசித்து சாப்பிட்ட பிறகு இங்கே கிடைக்கும் கெட்டியான லஸ்ஸி
வாங்கி சுவைத்தோம். ப்ரயாக்ராஜ் நகரில் பார்க்க வேண்டிய இன்னும் சில இடங்கள் உண்டு
என்றாலும் எங்கள் மூவருக்கும் வாரணாசி திரும்பி செல்ல வேண்டியிருந்தது. எனக்கும் வெய்யிலில் சுற்றியதில் வயிற்று பிரச்சனை.
வாரணாசி சென்று சேர்ந்து கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று தோன்றி விட்டது. அதனால் நேராக புறப்பட்டு வாரணாசி சென்றடைந்தோம். மாலை நேரமே வாரணாசி வந்து சேர்ந்து விட்டாலும்
அன்றைய மாலையில் எங்குமே செல்லவில்லை. தங்குமிடத்திலேயே நான் இருக்க, நண்பரும்,
அவரது இல்லத்தரசியும் கொஞ்சம் நகர் வலம் வந்தார்கள். அடுத்த நாள் என்ன செய்தோம்,
எங்கே சென்றோம் என்பது குறித்து அடுத்த பகுதியில் சொல்கிறேன். தொடர்ந்து பயணத்தில் இணைத்திருங்கள் நண்பர்களே!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து.
அதன் பெயர் 'ஷங்கர் விமான மண்டப்'பா? ஏக்கத்துடன் பார்த்தவாறு திரிவேணி சங்கமம் நிகழ்வு முடிந்து பஸ்ஸில் கடந்தோம். காட்டவில்லை. தாண்டிச் செல்லும் போதும் வரும்போதும் பஸ்ஸிலிருந்து சில போட்டோஸ் எடுத்திருந்தேன். அவ்வளவுதான். அங்கு எந்த ஹோட்டலுக்கு செல்லவில்லை. லஸ்ஸி முதலானவையும் முயற்சிக்கவில்லை!
பதிலளிநீக்குஅங்கு லஸ்ஸி சூப்பராக இருக்கும்.
பதிலளிநீக்குஜிலேபி கலர் கதிகலங்குது
நாங்களும் சங்கர மடத்துக் கோவிலை வெளியிலிருந்து பார்த்தோம். இரண்டு கருத்துக்களும் நெல்லை
பதிலளிநீக்குமுதல் படத்தில் கோயிலின் முகப்பு அற்புதம்.
பதிலளிநீக்குவித்தியாசமான உணவகம்...
பதிலளிநீக்குமுதல் படம் அட்டகாசமாக இருக்கு. அந்த வடிவம்....மனதை ஈர்க்கிறது., வண்ணங்கள் உறுத்தினாலும்...வடிவம் செமை
பதிலளிநீக்குகீதா
கோயில் பற்றிய விவரங்கள் அருமை
பதிலளிநீக்குமீண்டும் பின்னர் வருகிறேன் ஜி
கீதா
முதல் படத்தில் காண்பித்துள்ளதுதானே "ஷங்கர் விமான மண்டபம்".
பதிலளிநீக்குவாவ் அதன் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை... அவ்வளவு பிரமாதம்... உண்மையில் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகு.... சேமித்துக்கொண்டேன்... நன்றி!!!
கோவில் பற்றிய விவரங்களும் படங்களும் அருமை.
பதிலளிநீக்குஷங்கர் விமான மண்டபம் பார்க்க அழகாய் இருக்கிறது.
நேத்ராம் மூல்சந்த்(dh) அண்ட் சன்ஸ் என்று ஒரு உணவகம் விவரங்கள் , மற்றும் படங்கள் அருமை.
ஷங்கர் விமான மண்டபம் - சங்கர மடம் பார்க்க வேண்டும் என்று அங்கு சென்றும் கிரகணத்தின் காரணமாக காணவில்லை. வெளியவே நின்று சில பல படங்களுடன் வந்து விட்டோம்.
பதிலளிநீக்குநேத்ராம் மூல்சந்த்(dh) அண்ட் சன்ஸ் ...குறித்து கொள்கிறேன்