அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின்
தோட்டம் பதிவினை படித்து கருத்துகள்
தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
"THE REASON WE STRUGGLE WITH INSECURITY IS BECAUSE WE COMPARE OUR
BEHIND-THE-SCENES WITH EVERYONE’S HIGHLIGHT REEL" - PASTOR
STEVEN FURTICK.
******
கல்கி ஆன்லைனில் என் எழுத்து - 8 மார்ச் 2023:
இன்றைய தினத்தில் மகிழ்வைத் தந்த விஷயம்! 'கல்கி'யில்
என் படைப்பு! சகோதரர் ஆர்.வீ.எஸ் அவர்களின் பதிவைப் பார்த்ததும் சட்டென்று டைப்
செய்து
அனுப்பினேன். அதுவும் உடனே பிரசுரமானதில் மிக்க மகிழ்ச்சி!
'நான் கொண்டாடும் நாயகி' என்ற தலைப்பில் நான் எழுதிய
கட்டுரை கல்கி ஆன்லைனில் இன்று
வெளியாகியுள்ளது! இந்த தலைப்பில் நிறைய தோழிகள் தங்கள் படைப்புகளை
வெளியிட்டுள்ளார்கள். ஒவ்வொன்றுமே வாசிக்க ஸ்வாரஸ்யமாக உள்ளது. இணைப்பு
கமெண்ட்டில் தருகிறேன்.
படைப்பை வெளியிட்ட கல்கி குழுமத்திற்கு என் நன்றிகள்!
******
நெகிழியும் இஞ்சி தேங்காய் துவையலும்! - 10 மார்ச்
2023:
இன்றைய சமையல்! - நெகிழியும் இஞ்சி தேங்காய்
துவையலும்!
சற்று மாறுதலாக ஏதேனும் செய்யலாம் என நினைத்த போது
தென்பட்டது இந்த ரெசிபி!
இன்று பாரம்பரிய சமையல் தினம் என்று சொல்லலாம்!
பெயரைக் கேட்டதும் எனக்குத் தோன்றியது போலவே
என்னவருக்கும் மகளுக்கும் கூடத்
தோன்றியது! ஆனாலும் நான் ஒத்துக் கொள்ளவில்லை... என் சமையலைக்
கிண்டலடிப்பதாகத் தான் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்...:))
Yogambal sundar மேம் சேனலில் வெளியிட்ட இந்த
ரெசிபியில் அவர்
சேப்பங்கிழங்கு பயன்படுத்தியிருந்தார்! நான் உருளைக்கிழங்கில் செய்திருக்கேன்.
நெகிழி என்பது ஒரு சைட் டிஷ்! இதை துவையல் மற்றும் பொடி கலந்த
சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாமாம்! புட்டு மற்றும் ஆப்பத்திற்கு செய்யும் ஸ்டூ போன்று
இருந்தது! நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்!
ரெசிபியின் லிங்க் கீழே!
Recipe 686 : Sembu Negizhi & Inji
Thengai Thogayal - YouTube
******
புது வரவு - மண் பாத்திர சமையல் - 17 மார்ச் 2023:
பத்து வருஷமா நம்ம வீட்டில் மண்பாத்திர சமையல் தான்!
குக்கரில் சாதமும், பருப்பும் வைப்பதோடு சரி! சாம்பார், ரசம், வத்தக்குழம்பு,
சப்பாத்திக்கு தொட்டுக்கையாக சப்ஜிகள் என்று அனைத்தும் மண்பாத்திரத்தில் தான்.
இந்த பத்து வருடத்தில் மூன்று அல்லது நான்கு குழம்பு
சட்டிகள் மாற்றியிருப்பேன்! சில மாதங்களாக இப்போது புழங்கும் சட்டியை மாற்றி
விடலாம் என நினைத்திருந்தேன். அடியில் விரிசல் விட ஆரம்பித்து விட்டது! முழுதாக
போவதற்குள் புதிதாக வாங்கி பழக்கப்படுத்தணுமே!
இன்று காலை மகளை தேர்வு மையத்தில் கொண்டு
விட்டுவிட்டு எதிர் சாலையில் இருந்த மண்பாத்திரக் கடையில் குழம்புக்காக இரண்டு
சட்டிகளும், தயிருக்காக ஒரு பாத்திரமும் பார்த்து வாங்கி வந்தோம். காலை முதல்
வியாபாரம் என்பதால், 'ஒரு நிமிஷம் இருடா!' 'கோவில்ல விளக்கு போட', என்று இரண்டு
அகல் விளக்குகளும் போட்டு தந்தார் கடை வைத்திருக்கும் அக்கா!
குழம்பு சட்டிகள் இரண்டையும் பழக்கப்படுத்த
வேண்டாமாம்! 'இதுல
தண்ணி விட்டு கொதிக்க வெச்சு கீழ கொட்டிடும்மா! அப்புறம் தாராளமா சமைக்கலாம்!' மண்ணு அப்படி!!! என்று அக்கா
சொல்லியிருக்கிறார்! தயிர் பாத்திரத்தை மட்டும் பழக்கணும்! எல்லாவற்றையும் எடுத்துக்
கொண்டு சந்தையில் சில
காய்கறிகளையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம்.
******
இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை
பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்,
ஆதி வெங்கட்
கல்கி ஆன்லைன் பதிப்பில் இடம்பெற்றதற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குரெசிபி - புதுமை முயற்சிக்கும் வாழ்த்துகள்.
பத்து வருடங்களாக மண்பானைச் சமையல் - வாழ்த்துகள். சாதமும் குக்கரில் வைக்காமல் வடிக்கத்தொடங்கி விடலாமே...
கதம்பம் அருமை...
பதிலளிநீக்குகல்கியில் பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துக்கள் மேடம்.
பதிலளிநீக்குகதமபம் அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஆதி.
அனைத்தும் முகநூலிலும் படித்தேன்.