அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
“LIVING IS THE ART OF GETTING USED TO WHAT WE DIDN’T EXPECT.” - ELEANOR C. WOOD.
******
பயணங்கள் இனிமையானவை. தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர்
உங்களுக்கும் பயன்படலாம்.
இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.
பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.
பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள்.
பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.
பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி.
பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட்.
பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு.
பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட்.
பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும்
ராமேஷ்வர் dhதாம்.
பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.
பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.
பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.
பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி
பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்
பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா
பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்
பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…
பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…
பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்
பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்
பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்
பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி
பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்
பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு
பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர்
பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை
பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை
பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்
பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா
பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி
பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்
பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்
பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்
பகுதி முப்பத்தி நான்கு - வாரணாசி - துள்சி மானஸ் மந்திர்
பகுதி முப்பத்தி ஐந்து - தென்னிந்திய உணவும் அய்யர் கஃபேவும்
பகுதி முப்பத்தி ஆறு - காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்
பகுதி முப்பத்தி ஏழு - அனைவருக்கும் உணவளிக்கும் அன்னபூரணி
பகுதி முப்பத்தி எட்டு - Gகங்கா ஆரத்தி - ஒரு அற்புத அனுபவம்
பகுதி முப்பத்தி ஒன்பது - விதம் விதமாக சாப்பிடலாம் வாங்க
பகுதி நாற்பது - நான்காம் நதிக்கரை நகரம் - ப்ரயாக்ராஜ்
பகுதி நாற்பத்தி ஒன்று - ப்ரயாக்ராஜ் - திரிவேணி சங்கமம்
பகுதி நாற்பத்தி இரண்டு - அக்ஷய் வட் மற்றும் பாதாள் புரி மந்திர்
பகுதி நாற்பத்தி மூன்று - ப்ரயாக்ராஜ் - Bப(d)டே ஹனுமான்
பகுதி நாற்பத்தி நான்கு - ஷங்கர் விமான் மண்டப் - கச்சோடி சப்ஜி
சென்ற பகுதியில் ப்ரயாக்ராஜ் சென்று மீண்டும்
வாரணாசி திரும்பியது குறித்து எழுதி இருந்தேன். பயணங்களில் பொதுவாக நான் மிகவும்
கவனமாகவே இருப்பது வழக்கம். இதுவரை சென்ற பயணங்களில் எதிலும் உடல்நிலை குறித்த
கவலை இருந்ததில்லை. குறைவான உணவு, தேர்ந்தெடுத்த இடங்களில் உணவு என எப்போதும்
கவனமாகவே இருப்பேன். இந்தப் பயணத்திலும் அப்படியே தான் இருந்தேன் என்றாலும் ஏனோ
இந்தப் பயணத்தில் உடல் நிலையில் சில தொல்லைகள். வெளியே சென்றால் எங்கே ஓட்டமாக ஓடி
ரெஸ்ட் ரூம் தேடவேண்டுமோ என்று பயந்து கொண்டே வெளியே செல்லாமல் நான் மட்டும்
தங்குமிடத்தில் இருக்க வேண்டியிருந்தது. ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே நல்ல
சுட்டெரிக்கும் வெய்யில். வெய்யில் ஒத்துக்கொள்ளாமல் இப்படி பிரச்சனை வர மாத்திரைகள் எடுத்துக் கொண்டேன். நண்பர்கள் மட்டும்
நகர்வலம் சென்று வந்தார்கள்.
நான் காசி செல்கிறேன் என்று சொன்னதும் தில்லி
நண்பர் ஒருவர் பித்தளை அல்லது தாமிரத்தில் விஷ்ணு பாதம் (வலது பாதம் மட்டும்)
கிடைக்கும். அதை தாமிரம்/பித்தளைத் தட்டில் வைத்து மாதா
மாதம் அமாவாசை தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது என்று சொல்லி, அவரிடம்
இருந்தாலும் இன்னும் சில நண்பர்களுக்குத் தரவேண்டும் என வாங்கி வரச் சொல்லி
இருந்தார். கடைசி நாள் சென்று வாங்கலாம் என நினைத்திருந்தேன். என்னால் இப்படி அலைய முடியுமா என்று தெரியாததால்,
நண்பரிடம் ஒரு மாதிரி நிழற்படம் அனுப்பி வைக்கச் சொல்லி இருந்ததைக் கொடுத்து அதே
போல வாங்கி வரச் சொல்லி இருந்தேன். நண்பரும்
அவரது இல்லத்தரசியும் எங்கள் தங்குமிடம் இருந்த பகுதியிலேயே சில கடைகளில் ஏறி
இறங்கி வாங்கி வந்துவிட்டார்கள். நிறைய கடைகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. அந்தக் கடைகளில் காசி சொம்பு, காசி கயிறு, அன்னபூரணி
சிலைகள், என காசி செல்பவர்கள் வாங்கும் அனைத்துப் பொருட்களும் கிடைக்கின்றன. என இந்தக் கடைகள் அனைத்திலும் பேரம் பேச
வேண்டியிருக்கும். வெளியூர் ஆட்கள், ஹிந்தி பேசத் தெரியாதவர்கள்
என யாராவது வந்துவிட்டால் முடிந்தவரை ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள்.
ப்ரயாக்ராஜ் சென்று வந்த அன்று மாலை நான்
நகர்வலம் வரவில்லை என்றாலும் அடுத்த நாள் காலையில் கொஞ்சமாக உடல்நிலையில் மாற்றம்
உண்டானதும் நகர் வலம் வந்தேன். முதல் நாள் நண்பர்கள் சென்று வந்த அதே
கடைக்குச் சென்று இன்னும் சில பொருட்கள் வாங்கலாம் என்றால் அந்தக் கடை பூட்டி
இருந்தது. சரி பரவாயில்லை, வேறு கடைகளில் உலா வரலாம் என
முடிவு செய்து ஒரு கடைக்குள் நுழைத்தோம். அங்கே
நிறைய விஷயங்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். பார்க்கும்
அனைத்தும் பிடித்ததாக இருந்தாலும் வாங்கி விட முடியாது அல்லவா? சிலவற்றை மட்டும் வாங்கிக் கொண்டேன். பொதுவாக காசிக்குச் சென்று திரும்புபவர்கள்
அன்னபூரணி சிலை வாங்கி அடுத்தவர்களுக்குத் தருவது வழக்கம். அப்படி என் வீட்டிலும்
சில அன்னபூரணி சிலைகள் உண்டு என்றாலும் அவை அனைத்தும் மிகச் சிறியவை -
அன்னபூரணியின் முகம் அத்தனை தெளிவாக இருக்காது. அதனால்
கொஞ்சம் பெரிய அன்னபூரணி சிலை வாங்கி வாருங்கள் என எனது Home Minister சொல்லி
இருந்தார்!
Home Minister சொன்னால் மறுப்பேது! அதனால்
அப்படியே ஒரு அன்னபூரணி சிலை வாங்கினேன். அதே போல சற்றே பெரிய அளவில் காசி
சொம்பும்! அவை இரண்டும் இப்போது எங்கள் வீட்டு பூஜை அலமாரியில் இருக்கிறது. கூடவே
எனக்குப் பிடித்தமாதிரி சிறிய சிறிய அளவில், கொலுவில் அரிசி, பருப்பு போன்றவற்றை
வைக்கும் அளவில் இருந்த பித்தளைக் கிண்ணங்கள் பார்க்க அழகாக இருந்தால் அவற்றையும்
வாங்கினேன். கூடவே ஒரு சிறு அளவு (3 இன்ச் உயரம் தான்!)
கூஜாவும்! கொலு சமயம் தவிர மற்ற நேரங்களில் கிண்ணங்களும் கூஜாவும் வீட்டு ஹாலில்
இருக்கும் Show Case-இல் இருக்கின்றன. இங்கே
வாங்கி இருக்கும் கூஜா பற்றி சொல்லி இருப்பதில் எந்தவித குதர்க்கமும், குசும்பும்
இல்லை என்பதையும் சொல்லி விடுவது எனக்கு நல்லது! அப்படியே நண்பர்களும் சில
பொருட்களை வாங்கிக் கொண்டனர். இந்த நகர்வலம் வந்ததெல்லாம் காலை 10 மணிக்கு
மேல் தான். காலை நேரம் விழித்து விட்டாலும் நான் வெளியில்
சென்று வரவில்லை. ஒய்வு தான். மெதுவாக
எழுந்து முடிந்த வரை ஒய்வு எடுத்துக் கொண்டதால் தான் என்னால் இப்படி கொஞ்சமாவது
நகர்வலம் வர முடிந்தது. உடம்பில் இருந்த அசதி எல்லாம் ஓரளவுக்கு
குறைந்து இருந்தது.
காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் நுழைவாயில்களில் ஒன்று…
காசி விசாலாக்ஷி கோவிலுக்கு இந்த வழி தான்.
அன்றைய தினம் ஶ்ரீ ராம நவமி கொண்டாட்டங்கள். சைத்ர நவராத்திரியில் ஒன்பதாம் நாள் - ஸ்ரீராம நவமி
என்பதால் காசி நகரமெங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. காசி விஸ்வநாதர் கோயில்
செல்லக்கூடிய நான்கு நுழைவாயில்களிலும் நீண்ட வரிசை. குறைந்த பட்சம் நான்கு மணி
நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருக்கும். எங்கள் வாரணாசி பயணத்தில் முதல்
நாளே நின்று நிதானித்து சிறப்பாக தரிசனம் செய்து கொண்டதால் ஸ்ரீராம நவமி தினத்தில்
நீண்ட நேரம் அடித்த 42 டிகிரி செல்சியஸ் வெய்யிலில் நிற்க வேண்டாம் என
முடிவெடுத்தோம். நாங்கள் தங்கி இருக்கும் Dhதஷாஸ்வமேத் Gகாட் செல்லும் சாலையில்
அப்படி ஒரு கூட்டம். பக்தர்களுக்கு இணையாக ஆட்டோ, இ-ரிக்ஷா ஓட்டுநர்களும்,
கோயிலுக்கு வரிசை இல்லாமல் அழைத்துச் செல்கிறோம் என்று பக்தர்களை வலம் வரும்
பண்டாக்களும் என எப்போதும் மக்கள் கூட்டம். எல்லாம் காசு தான்.... ஒவ்வொருவரும்
காசு பார்க்க அலைகிறார்கள். அதுவும் ஏமாற்றி பணம் வாங்கும் கும்பல் இங்கே நிறையவே.
ஏற்கனவே மூன்று முறை வந்து பார்த்த இடம் என்பதால் இந்த மாதிரி ஆட்களை Handle செய்ய
முடிகிறது. யார் நம்மிடம் வந்து பேசினாலும் காதே கேட்காத மாதிரி சென்று கொண்டு
இருப்பது தான் சரியான வழி. கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால் உங்களிடமிருந்து காசு
கறக்க குறியாக இருப்பார்கள் என்பதை நீங்கள் உணர முடியும். ஒரே நாளில் இப்படி
நான்கு அல்லது ஐந்து பேர் சிக்கினால் போதும், நன்கு சம்பாதித்து விடுகிறார்கள்.
காசி வரும் வாய்ப்பிருந்தால் இப்படியான மனிதர்களிடமிருந்து உங்களை காப்பாற்றிக்
கொள்வது உங்கள் கையில்......
காலை நேரம் நான் எழுந்திருக்கவில்லை என்றாலும்,
நண்பரும் அவரது துணைவியும் காலையிலேயே எழுந்து ஒரு இடத்திற்குச் சென்று வந்தார்கள்.
அந்த இடம் என்ன, அது குறித்த தகவல்கள் என்ன போன்றவற்றை அடுத்த பகுதியில்
சொல்கிறேன். தொடர்ந்து பயணத்தில் இணைத்திருங்கள் நண்பர்களே!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
இதோ இந்த ஏப்ரலும் சென்னையிலேயே வெய்யில் கொளுத்து கொளுத்து என்று கொளுத்துகிறது! ஒரே வெக்கை. அந்த வெப்பமே உங்கள் உடம்புக்கு ஆகாமல் போயிருக்கும். நான் மற்ற ஐட்டங்கள் வாங்கி வந்திருந்தாலும் விஷ்ணு பாதம் வாங்கி வரவில்லை.
பதிலளிநீக்குபெரும்பாலும் புண்ணிய ஸ்தலங்களில்தான் ஏமாற்றுப் பேர்வழிகள் நிறைந்து இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குநான் நினைப்பதுண்டு நல்ல வாழ்வைத் தேடித்தான் எல்லோரும் இங்கு செல்கிறார்கள்.
ஆனால் இவர்கள் இந்த இடத்திலேயே பாவத்தை சேர்க்கின்றார்களே...
திருப்பெருந்துறையிலேயே வாழ்வை நடத்துபவன் அந்தச் சிவன் கோவிலுக்குத் தினமும் வழிபடச் செல்லமாட்டான். தூர தேசத்திலிருந்து யாத்திரையாகச் சென்று அந்தக் கோவிலின் இறைவனை வணங்க வருபவர் பல்லாயிரம். கங்கைக் கரை வண்ணானைப் போன்ற செயல்தான் இவர்களுக்கும்.
நீக்குநிறைய இடைத்தரகர்கள், விசுவநாதரை விரைவில் தரிசனம் செய்ய உதவுகிறேன் என்று வந்தார்கள். யாரையும் கண்டுகொள்ளவில்லை. அடுத்தவர்கள் காத்திருக்கும்கோது நமக்கெதற்கு முன்னுரிமை என்ற எண்ணம்தான் காரணம்.
பதிலளிநீக்குவிஷ்ணு பாதம் கயாவில்தான் வாங்கினேன்.
தூரத்திலிருந்து யாத்திரையாக வரும் பக்தர்களை ஏமாற்றிப் பிழைப்பதும் ஒரு பிழைப்பா?..
பதிலளிநீக்குஅவன் தான் முக்கியம் என்று வருவோர்க்கு விஸ்வநாதனே வந்து வழிகாட்டக் கூடும்..
ஒன்றுமில்லாமல் போய்ச் சேர்வதைத் தினம் தினம் கண்டும் மனம் திருந்தாத பிறவிகள்..
விஸ்வநாதன் துணை..
விசாலாட்சி அருள்!..
பதிவு சிந்திக்க வைக்கின்றது..
பதிலளிநீக்குஎல்லாம் அவன் செயல்...
பதிலளிநீக்குவிஷ்ணு பாதம் கயாவில் வாங்கினோம்.
பதிலளிநீக்குகாசியில் முடிந்த அளவு அனைத்தும் நாட்கோட்டை செட்டியார் மடத்தில் வாங்கியாச்சு அத்தை , இன்னுமொரு அத்தையும் தான் வாங்கினார்கள்.
6 குட்டி பித்தளை கிண்ணமும், அப்பாவிற்கு குட்டி கண்ணனும் எனது லிஸ்ட் .
பயணங்களில் நாங்கள் அதிகம் ஷாப்பிங் செய்வது இல்லை.
உங்களின் அயோத்தியா பதிவு ஒன்றில் தங்கும் இடம் பற்றியும் yatra dham பற்றியும் குறிப்பிட்டு இருந்திர்கள்.
பதிலளிநீக்குபோன வாரம் மருதமலை தரிசனம் செல்லும் வாய்ப்பு வந்தது அப்பொழுது yatra dham வழியாக ரூம் புக் செய்தோம் நல்ல இடமாக அமைந்தது. நன்றி வெங்கட் சார் அருமையான தகவலுக்கு
விஷ்ணு பாதம் பக்திஸ்பெஷல் புத்தகம் வாங்கிய போது கொடுத்தார்கள்.
பதிலளிநீக்குநாங்களும் காசியில் அன்னபூரணி, காசி செம்பு வாங்கி உறவினர், நன்பர்களுக்கு கொடுத்தோம். நகரத்தார் சத்திரத்தில் கேட்டு கடைகள் போனோம்.
உடல்நிலை சரியில்லாமல் போனது வெயில், அலைச்சல் காரணமாக இருக்கும் ஓய்வு எடுத்து கொண்டது நல்லது.
படங்கள் நன்றாக இருக்கிறது. என் அத்தை கூஜா இதே போல வாங்கி வந்தார்கள்.
வெயிலின் தாக்கம் தான் ஜி உங்களைப் படுத்தியிருக்கிறது. பங்களூரிலுமே வெயில்தான்.
பதிலளிநீக்குஎனக்கும் காசிக்குச் சென்று வந்த என் உறவு சித்திப்பாட்டி அன்னபூரணி விக்ரகம் கொடுத்தார். ஆனால் அதன் வடிவம் நீங்கள் இங்கு படத்தில் போட்டிருப்பது போல இல்லை அது போல வலக்கையில் உள்ளங்கையில் ஒரு சிறிய ஓட்டை அதன் வழி சின்ன குழி கரண்டி செருகி கூடவே சிறு தட்டு. அதில் அரிசி போட்டு அதன் மீது அன்னபூரணியை வைத்து அந்தக் கரண்டியை செருகினால் அரிசியை கிளறுவது போன்று...
கீதா
சின்ன பித்தளைக் கிண்ணங்கள் செம அழகு. ரொம்பப் பிடித்திருக்கிறது. பொருட்கள் எல்லாமே அழகு
பதிலளிநீக்குகாசியில் எல்லாம் ஏமாற்றுபவர்கள் நிறைய உண்டு என்று கேள்விப்பட்டதுண்டு.
இங்கே வாங்கி இருக்கும் கூஜா பற்றி சொல்லி இருப்பதில் எந்தவித குதர்க்கமும், குசும்பும் இல்லை என்பதையும் சொல்லி விடுவது எனக்கு நல்லது!//
இது புரியவில்லையே ஜி.
கீதா