அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
******
காவேரி ஆற்றங்கரையில் - 23 செப்டெம்பர் 2023:
நம்ம வீட்டு கணேஷாவை கரைப்பதற்காக சென்றிருந்தோம்.
கரையைத் தொட்டுச் செல்லும் காவிரியை பார்த்த போது மனதுக்கு மகிழ்வாக இருந்தது! அங்கே மக்கள் குளித்து விட்டு விட்டுச்
சென்றிருக்கும் துணிகளும், குப்பைகளும் கரையின் ஓரமாய் சிறு மலை போல்
குவிந்திருப்பதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருந்தது...🙁
தன்னுடைய இருப்பை எல்லா இடத்திலும் கல்வெட்டு போல்
குப்பையால் பதித்து விட்டுச் செல்லும் மனிதர்கள்..🙁
&*&*&*&**&*&*
நடை நல்லது - 24 செப்டெம்பர் 2023:
மகளுக்கு இன்று விடுமுறை என்பதால் கொஞ்சம் பொறுமையா
சமைக்கலாம் என்று காலை நடைப்பயிற்சியை கொஞ்சம் விரிவாக்கிக் கொண்டோம்! சித்திரை
வீதிகளை பிரதட்சணம் செய்து வந்தோம்! நாலு கிமீ!
உடம்ப இளைக்க எல்லாரும் வாக்கிங் கிளம்பிடறாங்க இல்ல!
நாம மட்டும் இல்லன்னு சந்தோஷப்பட்டுக்கறேன்..🙂
இன்னைக்கு சாயந்திரம் காட்டழகிய சிங்கர் கோவில்ல
'துஷ்யந்த் ஸ்ரீதர்' சொற்பொழிவாம்..!
நேத்து ரோஸோட காலேஜ்ல 'வீரப் பெண்கள்'னு சீதா,
சூர்ப்பனகை, த்ரெளபதி பத்தியெல்லாம் பேசினாராம்! Youngstersக்கு ஏத்த மாதிரி ரொம்ப
ஜாலியா பேசினார்னு சொன்னா!
காய்கறி எதுவும் வாங்கணுமா?
இல்ல! இருக்கே! இன்னைக்கு முருங்கைக்காய் பொரிச்ச
கூட்டு, ரசம், பாகற்காய் கறி பண்ணிடலாம்னு இருக்கேன்! சரியா!
எதையோ பண்ணு!!
எனது குப்பை! எனது பொறுப்பு! நாளைய தலைமுறைக்கு வழி
அமைப்போம்!
மாநகராட்சியின் குப்பை வண்டியிலிருந்து பாடல்
ஒலிக்கிறது!
எவ்வளவு பாடினாலும் யாரும் வழிக்கு வருவதாய்
இல்லையே..🙁
&*&*&*&**&*&*
கண்களுக்கு விருந்து - 25 செப்டெம்பர் 2023:
இன்னிக்கு இன்னும் வெளிச்சமும் வரல! காத்தும்
ஜில்லுன்னு அடிக்கிறது! இல்ல!
வழக்கம் போல் 5 மணிக்கு எழுந்து தயாராகி
நடைப்பயிற்சிக்கு கிளம்பி விட்டோம்!
இயற்கையின் அழகு ஒவ்வொரு நாளும் கண்களுக்கு
விருந்தாய்! பசுமையின் நறுமணம் நாசிக்கு மருந்தாய்! வரவேற்கிறது!
ஆமா! இந்த தோப்புல தென்னைக்கு நடுவுல வாழையும்
ஊடுபயிரா வெச்சிருக்காங்களே! தண்ணி ரெண்டுத்துக்கும் ஓரே மாதிரி தான் விடணுமான்னு
தெரியல! இல்ல!
ஓரே மாதிரி தான் இருக்கும்! காலையிலேயே மோட்டார்
போட்டு விட்டிருக்காங்க பாரு!
வாவ்! அந்த birds எல்லாம் எவ்வளவு அழகா formation
பண்றது பாரு! கிளி தான்னு நினைக்கிறேன்!
இல்ல! இது குட்டி குட்டியா இருக்கே! வேற ஏதோ birds!
நம்ம இடத்துல அப்பாவும் அம்மாவும் இருந்திருந்தா
இந்நேரம் இவங்க கிட்ட குடும்பக்கதை வரை பகிர்ந்து கொண்டிருப்பாங்க!
ஆனா நாம இன்னும் ஸ்மைலோட தான் கடந்து
போயிண்டிருக்கோம்! இல்லையா! என்றேன்.
எதிர்ப்புறத்தில் தினசரி பார்க்கும் அந்த தம்பதிகள்!
நின்று பேசுவதற்கான நேரமும் நம்மிடம் இல்லை! விஷயமும் இல்லை...🙂
சரி! சரி! சீக்கிரம் நடப்போம்!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
பின் குறிப்பு: கடந்த
செப்டம்பர் மாதம் எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றை, வலைப்பூவில் எனக்கான
சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…
காவிரியில் நிறைய தண்ணீர் ஓடுவது கண்கொள்ளா காட்சி. அழகான புகைப்படம் ஸ்ரீரங்கம் வந்தபோது சில நண்பர்கள் காட்டழகிய சிங்கர் கோவிலுக்கு சென்று வரும்படி அறிவுறுத்தினார்கள். நேரமில்லாததால் செல்ல முடியவில்லை. நீண்ட சாலையின் புகைப்படம் நன்றாயிருக்கிறது. சூரியனை மறைக்காத பயிராயிருந்தால் அதனுடன் கூட ஏதாவது பயிரிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஇனிமையான காட்சிகள்...
பதிலளிநீக்குகாவிரி ஆற்றில் நீர் க்ரை புரண்டு ஓடுவது மகிழ்ச்சி. கண் கொள்ளாக்காட்சி . படங்கள் எலலம் அழகு. எந்த ஆற்றைப் பார்த்தாலும் மனம் துள்ளும்.
பதிலளிநீக்குதுஷ்யந்த் ஸ்ரீதர் இளையதலைமுறைக்கு ஏற்பவும் பேசுகிறார்.
சாலையின் படம் அழகு. ஊடு பயிர் வாழைக்கு வெயில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
பறவைகள் படம் செம அழகு. படத்தைப் பார்க்கறப்ப இவை cormorants என்று சொல்லப்படும் நீர்க்காகங்கள் போல இருக்கு. அவை இப்படி பாட்டர்ன் அமைத்து மாற்றிக் கொண்டே பறக்கும் ஒவ்வொரு பாட்டர்ன் மாறும் போது அது எப்படி இரு நுனியிலும் இருப்பதுக்குத் தெரியுமோ தெரியலை அவையும் அழகாகத் திரும்பும். சொல்லி, பேசிக் கொண்டது போல் ஏதோ ராணுவ பட்டாலியன் பயிற்சி போல பறக்கும். நான் நிறைய பார்த்திருக்கிறேன். இப்படி கொக்குகளும் பறக்கும். ஆச்சரியமான விஷயம் அந்த வடிவம் தான் அதுவும் அதை மாற்றும் சமயம் எல்லாம் ஒருமிச்சு மாறும் டிசைன் கலையாம....எண்ணிப் பார்த்தீங்கன பொதுவா ஒற்றைப்படை எண்ணாகத்தான் இருக்கும். நடுவில் ஒன்றும் அதன் இரு புறமும் சம அளவில் அப்படிப் பறக்கும் போது அவை பாட்டார்ன் மாற்றும் போது சௌகரியமாக இருக்குமாம்.
கீதா
நடை பயிற்சியும் . இயற்கை காட்சிகளும் உரையாடலும் அருமை.
பதிலளிநீக்குகாவிரி படம் அழகு
பதிலளிநீக்கு