புதன், 25 அக்டோபர், 2023

கதம்பம் - நவராத்திரி 2023 - கடைசி மூன்று நாட்கள் - தேங்காய் போளி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும் ஒரு போதும் அடுத்தவரை ஏமாற்றக் கற்றுக் கொள்ளக் கூடாது… நேர்மைக்கு என்றும் மரணமில்லை.

 

******

 

நவராத்திரி 2023 - ஏழாம் நாள்: 21 அக்டோபர் 2023:


 

இன்றைய பதிவில் நவராத்திரி கொண்டாட்டங்களின் கடைசி மூன்று நாட்கள் குறித்து பார்க்கலாம்! 

 

நவராத்திரி ஏழாம் நாள் நைவேத்தியமாக சிமிலி உருண்டை செய்திருந்தேன்! சனிக்கிழமை என்பதால் எள் இடம்பெற்றுள்ளது!

 

மாலை எழுத்தாளர் Rishaban Srinivasan சார், மேடமுடன் கொலுவுக்கு வருகை தந்திருந்தார். சற்று நேரம் எல்லோரும் பேசிக் கொண்டிருந்ததில் இனிமையான மாலைப்பொழுதாக அமைந்தது!

 

&*&*&*&**&*&*

 

நவராத்திரி 2023 - எட்டாம் நாள்: 22 அக்டோபர் 2023:


 

நவராத்திரி எட்டாம் நாள் நைவேத்தியமாக இன்று வேர்க்கடலை சுண்டல் செய்திருந்தேன்!

 

&*&*&*&**&*&*

 

நவராத்திரி 2023 - ஒன்பதாம் நாள்: 23 அக்டோபர் 2023:


 

இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்! 

 

காலையிலேயே பூஜை முடித்து சாப்பிட்டு விட்டு தீபாவளி பர்சேஸுக்கு கிளம்பி விட்டோம்! பதிவு பின்னர் எழுதுகிறேன்! இப்போது சற்று ரெஸ்ட் எடுத்துட்டு மாலை சுண்டல் நைவேத்தியம் செய்யணும்! இன்னும் சில தோழிகள் மாலை வரலாம்!


 

நவராத்திரி ஒன்பதாம் நாள் நைவேத்தியமாக இன்று கறுப்புக் கொண்டக்கடலை சுண்டல் செய்திருந்தேன்! 

 

இன்று சரஸ்வதி பூஜை என்பதால் தாம்பூலம் வாங்கிக் கொள்ள இன்னும் சிலர் வந்திருந்தனர்!

 

&*&*&*&**&*&*

 

நவராத்திரி 2023 - விஜய தசமி - 24 அக்டோபர் 2023:



சூடான தேங்காய் போளி!

 

நவராத்திரி சமயம் என்பதால் வீட்டில் தேங்காய் நிறைய இருக்கவே மாலைநேர ஸ்நாக்காக இன்று தேங்காய் போளி செய்து தந்தேன்! ஆளுக்கு ரெண்டு! 

 

அம்மா பண்டிகை நாட்களில் போளி பண்ணும் போது இலையில் தட்டித் தருவேன்! ஃபினிஷிங் டச் அம்மா செய்து கொள்வாள்! மெலிதாக இருக்கணும்! பூரணம் வெளியே வரக்கூடாது! மாவு அதிகம் தெரியக்கூடாது! பூரணத்தை கவர் செய்ய ஒரு மெல்லிய திரையாக தான் மாவு இருக்கணும்! என்றெல்லாம் கண்டிஷன்ஸ் சொல்வாள்! அப்பா நெய் தொட்டுண்டு சாப்பிட்டு பாருடா! ஜோரா இருக்கும்! என்பார்!

 

போளியோடு இணைந்து சுவைக்கூட்டிய அப்பா அம்மாவின் நினைவுகள்!

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்


பின் குறிப்பு:  எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

9 கருத்துகள்:

  1. போளியுடன் மலரும் நினைவுகள் அருமை.
    அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. ஆதி, போளி சுண்டல் என்று அமர்க்களம். பொம்மைகளும் அழகு. ரிஷபன் அண்ணா அவர் மனைவியுடன் உங்கள் சந்திப்பு மகிழ்வான விஷயம்! அனைத்தும் சிறப்பாக இனிதே நவராத்திரி முடிந்தது மகிழ்வான விஷயம்.

    வாசகமும் நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  3. தேங்காய் போளி கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.  நவராத்திரி கொண்டாட்டங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும் கடலைப்பருப்பு போளி தான் செய்வேன். இம்முறை தேங்காய் போளி.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  5. சிறப்பான நவராத்திரி கொண்டாட்டம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....