வெள்ளி, 13 அக்டோபர், 2023

ஸ்ரீ கிருஷ்ண கோவிந்தா


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

நேற்று வெளியிட்ட ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

துன்பமான தருணங்களில் என்னவென்றே தெரியாததுபோல் நடந்து கொண்டவர்களை, மகிழ்ச்சியான தருணங்களில் யாரென்று தெரியாதவர் போல கடந்து செல்வோம்.

 

******

 

ஸ்ரீ கிருஷ்ண கோவிந்தா!



 

ஸ்கூல் விட்டுட்டாளா! ரெண்டு பேரும் ட்ரஸ்ஸ மாத்திண்டு கைய கால அலம்பிண்டு வாங்கோ! அம்மாவுக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணணும் என்ன? 

 

ஹாலின் நடுவில் மண்ணெண்ணெய் அடுப்பை வைத்துக் கொண்டு தட்டை தட்டிக் கொண்டும், சீடைக்கு உருட்டிக் கொண்டும் அமர்க்களமாக இருக்கும் எங்கள் வீடு!  அம்மா அடுப்பு சூட்டில் வெந்து கொண்டிருப்பாள்! 

 

கையில் காசில்லை என்றாலும் அம்மா பண்டிகைகளை என்றும் குறைத்ததில்லை! பகவானை நன்னா பிரார்த்தனை பண்ணிண்டு சீடைக்கு அழுத்தம் குடுக்காம உருட்டணும்! சரியா! 

 

கோகுலாஷ்டமி என்றால் பெரிய பெரிய சம்படங்களில் தான் தேன்குழல், தட்டை, வெல்ல சீடை, உப்பு சீடை என்று செய்து வைப்பாள்! இதுபோக அப்பம், அவல் பாயசம் என்றும் இருக்கும்!

 

அம்மாவை நினைத்துக் கொண்டு இந்த வருடம் முதன்முறையாக சிறிதளவு மாவில் உப்பு சீடையும், வெல்ல சீடையும் செய்து பார்த்தேன். மகள் உருட்டித் தந்தாள்! வழக்கம் போல தேன்குழலும்! இனிப்புக்காக இணையத்தில் தேடியதில் பாரம்பரிய இனிப்பாக தேங்காய் திரட்டிப்பால் கிடைக்கவே செய்தேன்!

 

பட்சணம் பண்ணின பாத்திரம் எல்லாம் நிறைய தேய்க்க இருக்கு கண்ணா! துணி வேற மடிக்கணும்! அப்புறம் பாயசம் பண்ணனும்! நான் இதெல்லாம் பண்ணிடறேன்! நீ வாசல்ல கோலம் போட்டுட்டு, வாசல்ல இருந்து உள்ள வரைக்கும் பாதம் போட்டுடு என்ன! 

 

இவ்வளவு வருஷம் நான் தான போட்டேன்! இப்போ கால் பேலன்ஸ் பண்ண முடியல! கீழே குனிஞ்சு போடும் போது விழுந்திடுவேனோன்னு பயமா இருக்கு கண்ணா! சரியா!

 

இப்படியாக இந்த வருட கோகுலாஷ்டமி இனிதே நிகழ்ந்தது! 

 

கண்ணன் பிறந்த வேளையில் கொட்டும் மழையில் வசுதேவர் கூடையில் வைத்து ஐந்து தலை நாகம் குடைபிடித்து வர கண்ணனை கோகுலத்துக்கு கொண்டு சென்றாராம்! கண்ணன் பிறந்த இன்றைய அஷ்டமி நாளிலும் மழை பெய்து அவனிருப்பை உறுதி செய்தது! அவனின்றி ஓரணுவும் அசையாது! 

 

ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்


பின் குறிப்பு:
 
கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி அன்று கிருஷ்ண ஜெயந்தி அன்று எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றை, வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

18 கருத்துகள்:

  1. கோகுலாஷ்டமி நினைவுகள் அருமை.  எனக்கு கோகுலாஷாடமியை விட விநாயகர் சதுர்த்திதான் பிடிக்கும்.  எனென்றால் எனக்குப் பிடித்த கொழுக்கட்டைகள் அப்போதுதான் கிடைக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே சீடையும் பிடிக்கும். கொழக்கட்டைகளும் பிடிக்கும்...:)

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. கோகுலாஷ்டமியைச் சிறப்பாக்க் கொண்டாடிவிட்டீர்கள். இரண்டு சீடைகளும் சரியா வந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் முயற்சியில் இரண்டுமே நன்றாக வந்திருந்தது சார். வெல்லச்சீடை ரொம்பவே கிரிஸ்பியாக மாறி விட்டது..:)

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  6. ரோஷ்ணியின் கைவண்ணம் அருமை.
    மலரும் நினைவுகளும் கோகுலாஷ்டமி பண்டிகை படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. ரோஷ்ணியின் கோலம் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    தங்களின் கிருஷ்ண ஜெயந்தி நினைவுகளும், இந்த வருடம் நீங்கள் கொண்டாடிய முறைகளையும் பார்த்து ரசித்தேன். அழகான கிருஷணரை தரிசித்து கொண்டேன். அழகான அலங்காரங்கள், கிருஷ்ணரின் பாதம், பட்சணங்கள் எல்லாமே அருமையாக உள்ளது. அன்றைய தினத்தில் தங்களுக்கு உதவியாக இருந்த தங்கள் மகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்து தங்களின் விரிவான கருத்துகளை கண்டு மகிழ்ந்தேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஜி.

      நீக்கு
  9. ஆதி உங்கள் பழைய நினைவுகள் இனிமை. சிறிய வயதில் நம் வீட்டில் சமையல் அறைக்குள் விட மாட்டார்கள்.
    ஆனால் சுற்று வேலைகள் எல்லாம் செய்ததுண்டு.

    ரோஷ்ணி போட்ட கோலம் சூப்பர். ரொம்ப அழகா போட்டிருக்காங்க. பாராட்டுகள்!

    சீடை பக்ஷணங்கள் எல்லாமே நன்றாக வந்துள்ளன.
    ஹைலைட் ரோஷ்ணியின் கோலம்தான்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. பட்சணங்கள், அலங்காரங்களுடன் விழா சிறப்பு. மகளுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....