அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையில், வழமை போல நான் எடுத்த சில நிழற்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். கடந்த மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில் தலைநகரிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இருக்கும் தோட்டத்தில் எடுத்த சில படங்களை பகிர்ந்து கொண்டேன். இந்த வாரம் தலைநகரை அடுத்த நோய்டா (NOIDA) நகரில் வருடத்தின் ஆரம்பத்தில் நடந்த ஒரு பூக்கள் கண்காட்சியில் எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். ஒரு பெரிய மைதானத்தில் தொட்டிகளில் பூஞ்செடிகள் வைத்து பூக்களை காட்சிக்கு வைத்திருந்ததோடு, பூக்களைக் கொண்டு பல வித அலங்காரங்கள் செய்திருந்தார்கள் - அயோத்யா இராமர் கோயில் அலங்காரம் உட்பட. அந்த நிகழ்விலிருந்து சில நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு! வாருங்கள் - படங்களை ரசிக்கலாம்!
******
இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
30 ஜூன் 2024
வாசகம் அருமை.
பதிலளிநீக்குநிழற்பட உலா அருமை.மலர் கண்காட்சி படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.
குடை கூடாரம் அழகு.
வாசகம் மற்றும் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வாசகம் மிக அருமை.
பதிலளிநீக்குபடங்கள் பூக்களின் அணிவகுப்பு!!! அத்தனையும் மிக மிக அழகு. குடைகள் தொங்கவிட்டிருப்பதும் சமீபகாலங்களில் இப்படியான வித விதமான அலங்காரங்கள் கற்பனைத் திறனை வெளிப்படுத்துகின்றது.
கீதா
படங்களும் இன்றைய வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பூக்களின் அணிவகுப்பு அருமை.
பதிலளிநீக்கு"பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்...பூமியில் சொர்க்கம் வந்த 'மண'வறை அமைக்கும்... எதிர்பார்த்தேன் எந்தன் மனம் நந்தவனம் இனிமேல் " என்று பாடிக்கொண்டே பார்த்து ரசித்தேன்.
கட்டி வைக்க முல்லை மொட்டு இல்லை. முத்தமிட அழைக்க செண்பகப்பூ இல்லை!!
பூக்களின் அணிவகுப்பு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பாடிக்கொண்டே ரசித்தீர்களா - ஆஹா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தன்னம்பிக்கை குறித்த வாசகமும் அருமை.
தாங்கள் எடுத்த நிழற்பட உலா படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. மலர்களின் படங்கள் அனைத்தும் கண்களை கவர்கிறது. விதவிதமான வண்ண மலர்களை பார்க்கும் போது மனது மகிழ்வு கொள்கிறது.
வண்ண வண்ண குடைகளை சேர்ந்தாற் போல கட்டி தொங்க விட்டிருப்பதும் மிக அழகாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபடங்களும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
Superb snaps
பதிலளிநீக்குகடவுள் மிக மிக சந்தோஷத்தில் இருக்கும்போது படைக்கப்பட்டவை பூக்கள். கண்,காது(வண்டுகள் ரீங்காரம்),மூக்கு,தொடுகை அனைத்திற்கும் ஆனந்தமளிக்கும் படைப்பு.பல மலர்கள்(ரோஜா) நாக்கிற்கும்!கடவுளின் ஆகச் சிறந்த கவிதை, பூக்கள்.
கடவுளின் ஆகச் சிறந்த கவிதை - பூக்கள்! ஆஹா....
நீக்குபூக்களின் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி விஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்கள் எல்லாம் மிகவும் அழகாக இருக்கிறது ஜி.
பதிலளிநீக்குதங்களது கை வண்ணத்தில் மேலும் அழகு.
பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குஎத்தனை வண்ணங்கள்! எத்தனை வகைகள்! அத்தனை மலர்களும் அழகு. மலர்களின் வண்ணங்களோடு போட்டி போடும் விதமாக அமைந்துள்ளன குடைகளின் தோரணம்.
பதிலளிநீக்குஇந்த வார வாசகம் அருமை.
வாசகம் மற்றும் பதிவு வழி வெளியிட்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வண்ணப் பூக்களின் படங்கள் மனதைக் கவர்கின்றன.
பதிலளிநீக்குநிழற்படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்கு