அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
ஃபிப்ரவரி-மார்ச் மாதங்களில் தலைநகரின் குடியரசுத் தலைவர் மாளிகையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் அம்ருத் உ(dh)த்யான் எனும் அழகிய தோட்டத்தில் (முன்பு முக(g)ல் (G)கார்டன் என்று அழைக்கப்பட்ட இடம்!) இருக்கும் கண்கவர் பூக்களையும் நீர் ஊற்றுகளையும் பார்ப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிப்பது வழக்கமாக இருக்கிறது. தலைநகரில் பலரும் இந்த இரண்டு மாத காலத்திற்காகக் காத்திருப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். பல வித வண்ணங்களில் ரோஜா, நம்மால் வீட்டில் வளர்க்க முடியாத பூக்கள், தொங்கு தோட்டம், மூலிகைத் தோட்டம், (B)போன்சாய் தோட்டம், என பல விஷயங்கள் அங்கே உண்டு என்பதால் இந்த மாதங்களுக்காகக் காத்திருப்போம். இந்த வருடமும் இந்த தோட்டத்தில் “உ(dh)த்யான் உத்ஸவ் 2024” என்ற பெயரில் விழாவாகக் கொண்டாடினார்கள். இந்த இடத்திற்குச் சென்ற போது எடுத்த படங்களில் சிலவற்றை கடந்த 31 மார்ச் 2024 அன்று ஒரு பதிவாக வெளியிட்டு இருந்தேன். அப்பதிவின் தொடர்ச்சியாக இதோ அந்தப் பதிவுத் தொகுப்பின் இரண்டாவது பகுதி உங்கள் பார்வைக்கு! பூக்களை ரசிக்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
படங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத்தமிழன்.
நீக்குபூக்கள் அழகு. குச்சி ஐஸ் போல வெட்டி விடப்பட்டிருக்கும் மரம் அழகு. பரந்து விரிந்து விழுதுகளுடன் இருக்கும் மரம் அழகு... அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குபதிவில் பகிர்ந்து கொண்ட படங்கள் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குகுடியரசுத்தலைவர் மாளிகையின் அழகிய தோட்டம் கவரும் மலர்களாலும் மரங்களாலும் அழகுறுகிறது.
பதிலளிநீக்குஅந்த வண்ணத்துப்பூச்சி அழகு.
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை இன்றைய வாசகமும் அருமை. மரங்கள், அழகான மலர்கள், நீரூற்றுகள் என நீங்கள் பகிர்ந்த படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. கப்ஐஸ் மாதிரியான மலர்கள், வண்ணத்துப்பூச்சி மாடலில் அழகுடன் செய்யப்பட்ட மலர்கள் என கண் கொள்ளாத காட்சியாக விருந்தளிஎக்கிறது. பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவு, வாசகம் மற்றும் பதிவு வழி வெளியிட்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நிழற்பட உலா பதிவு மிக அருமை.
பதிலளிநீக்குநீரூற்று படங்கள் கோடை காலத்தில் மகிழ்ச்சி.மலர்கள் படங்கள் மனதை கவர்கிறது.
வண்ணத்து பூச்சி மலர் அமைப்பு அருமை.
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குஎல்லாப் படங்களும் மிக அழகு வெங்கட்ஜி. நேற்று வர முடியவில்லை.
பதிலளிநீக்குதலைநகரில் பலரும் இந்த இரண்டு மாத காலத்திற்காகக் காத்திருப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். //
இங்கு லால்பாக் மலர்கள் கண்காட்சி போன்று.
பூக்கள் அழகு என்றால் வேர்கள் கிளைகளோடான மரங்கள் செம அழகு. இங்குலால்பாகிலும் இப்படி மரங்கள் பார்க்க மிக அழகாக இருக்கும் வித்தியாசமான வடிவங்களில்.
அனைத்தும் ரசித்தேன் ஜி
கீதா
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
நீக்குபடங்கள் எல்லாமே மிக அருமை. நீரூற்று, மரங்களின் வடிவங்கள், மரத்தை ஷேப்பில் கட் செய்திருப்பது, வண்ணத்துப் பூச்சி வடிவில் பூந்தொட்டிகள், கடல் நுரை போன்ற அந்தச் செடி உட்பட எல்லாமே அருமை.
பதிலளிநீக்குதுளசிதரன்
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்கு