ஞாயிறு, 31 மார்ச், 2024

உத்யான் உத்ஸவ் 2024 - புகைப்பட உலா - பகுதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். ******


உத்யான் உத்ஸவ் 2024 - இப்படித் தலைப்பிட்ட ஒரு நிகழ்விற்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன்.  எங்கே இந்த நிகழ்வு?  தலைநகர் தில்லியில் தான். ஒவ்வொரு வருடமும் ஃபிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்த மாதிரி நிகழ்வுகள் நடப்பது வழக்கம். எங்கே இந்த நிகழ்வு? நம் தில்லியின் பிரபலமான குடியரசுத் தலைவர் மாளிகையில் தான்.  அங்கே இருக்கும் அம்ருத் உத்யான் என அழைக்கப்படும் பூங்காவில் தான் இந்த நிகழ்வு. பூங்கா குறித்து நிறைய தகவல்கள் உண்டு என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பகுதியிலும் எழுதுகிறேன். வாருங்கள் இந்த நிகழ்விற்கு நாங்கள் சென்ற போது எடுத்த சில படங்களை பார்க்கலாம்!******


இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


13 கருத்துகள்:

 1. உத்ஸவ் என்றால் புரிகிறது.  உத்யான் என்றால் என்ன?  படங்களின் தொகுப்பை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உத்(dh)யான் என்றால் தோட்டம். படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 2. வனத்தின் படங்களும் பூக்களின் தொகுப்பும் மனதைக் கவர்ந்தது.

  குடியரசுத் தலைவர் அவருடைய மாளிகையை முழுவதும் சுற்றிப் பார்ப்பதற்குள், அவருடைய பதவிக்காலம் முடிந்துவிடும் போலிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடியரசுத் தலைவர் மாளிகை வளாகம் மிகப் பெரியது தான். தோட்டத்தினை நின்று நிதானித்துச் சுற்றி வர நிறைய நேரம் ஆகும் நெல்லைத்தமிழன். அந்தக் காலத்திலேயே திட்டமிட்டு கட்டி வைத்திருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 3. பசுமையான மரங்களும் செடிகளும் பூக்களும் கண்களுக்கு விருந்தாக மனதையும் நிறைக்கின்றன!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு வழி பகிர்ந்த படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 5. லால்பாக் மலர்க் கண்காட்சியை நினைவு படுத்துகின்றன படங்கள். அழகிய தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோட்டம் பிரம்மாண்டமானது தான் இங்கேயும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 6. உற்ஸவ் என்றால் உத்சவம் தானே? படங்களில் ஒருவரையும் காணவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உத்ஸவ் - உத்ஸவம் தான். படங்களில் மனிதர்கள் இல்லாமல் தான் எடுத்தோம். நிறைய கும்பல் அங்கே இருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   நீக்கு
 7. குடியரசுத் தலைவர் மாளிகையின் தோட்ட உற்சவம் அழகு.

  அந்த சிறுவர் பூங்கா வண்டியும் அதிலுள்ள பூக்களும் நன்றாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....