வியாழன், 28 மார்ச், 2024

GPT 1997- 2000 batch



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


GPT 1997- 2000 batch - 27 மார்ச் 2024:



இணையம் உண்மையில் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்! பல வருடங்களுக்குப் பின்னும் தொலைந்து போன உறவுகளையும் நட்புகளையும் மீட்டெடுத்து புதுப்பித்து தருகிறதே!! நேற்றைய பொழுதில் அப்படியொரு நிகழ்வு தான் எனக்கு வரம் போல கிடைத்திருக்கிறது!


சில வருடங்களுக்கு முன் என் பள்ளிக்கால தோழமைகளை கண்டெடுத்து நட்பில் இணைந்து கொண்டேன்! நான் பயின்ற பள்ளிக்கும் சென்று ரீ யூனியன் நிகழ்விலும் கலந்து கொண்டு தோழிகள் சிலரையும் ஆசிரியர்களையும் கண்டு வந்தேன்! என் ஆசிரியர்கள் கூட என்னை நினைவில் வைத்திருந்ததும், மகளிடம் அவர்கள் என்னைப் பற்றி பகிர்ந்து கொண்டதும் மறக்க இயலா தருணங்கள்!


அப்போது நினைத்தேன் கல்லூரித் தோழமைகளையும் இப்படி கண்டெடுத்து நட்பில் இணைத்துக் கொண்டால் நன்றாக இருக்குமே என்று! அப்படியொரு சந்தர்ப்பம் இப்போது கிட்டியிருக்கிறது! Government polytechnic 1997-2000 பேட்ச்சை சேர்ந்த மாணாக்கர்களின் குழுவில் இப்போது நானும் சேர்ந்துள்ளேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி!


Welcome Adhilakshmi mechanical dept! 97-2000 batch  என்ற போது கல்லூரிப் பருவத்திற்கே சென்று விட்ட உணர்வு!  24 வருடங்கள் அதிவேகமாக கடந்துள்ளன என்பதை நினைத்தால் பிரமிப்பாக உள்ளது! எல்லோரது வாழ்விலும் எத்தனையோ  ஏற்றங்களும் இறக்கங்களும் இருந்திருக்கும்!


பத்தாம் வகுப்பு முடித்ததும் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தது! அப்போது எங்களில் பெரும்பாலானோருக்கு பதினைந்து வயது தான்! எங்கள் இயந்திரவியல் துறையில் 57 மாணவர்களும், 3 மாணவிகளும்! முதல் வருடம் production engineering ஐ சேர்ந்த 20 மாணாக்கர்களும் கூட எங்களுடன் தான் பயின்றார்கள்! அதில் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே ஒரு பெண் இருந்தாள்!


நினைவுகள் பின்னோக்கி பயணிக்கிறது! இரண்டாம் வருடத்தில் தான் எங்கள் வகுப்புத் தோழர்களிடமே பேசிப் பழகினோம்..🙂 அதன் பின் அரட்டையும், கலாட்டாக்களுமாய் சென்றன நாட்கள்! எத்தனையோ சந்தர்ப்பங்களில் எங்களுக்கு பக்கபலமாய் உடன் நின்ற தோழர்கள் அவர்கள்! கல்லூரிக்குப் பின் வாழ்க்கைப் பாதை மாறியதில் நட்பை தொடர இயலாமல் போய்விட்டது!


2010ல் துவங்கிய என் எழுத்து பயணத்தில் என் ஆரம்பகால பதிவுகளில் கூட என் கல்லூரி நினைவுகளை தான் பகிர்ந்து கொண்டிருப்பேன்! சில வருடங்களுக்கு முன் கல்லூரி நாட்களை பற்றி 17 பகுதிகளாக ஒரு தொடரும் கூட வலைப்பூவில் எழுதி அது அமேசானில் மின்னூலாகவும் வந்திருக்கிறது!


57 மாணவர்களால் மூன்று மாணவிகளை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள முடியும்! ஆனால் எங்களால் முடியுமா என்றால் சந்தேகம் தான்..🙂  கடந்து சென்ற 24 வருட நினைவுகளை மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும்! இணைய உலகில் எதுவும் சாத்தியமே! பார்க்கலாம்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. நமது தளங்களில் பின்னூட்டமிட்டு விட்டு பின் தொடரும் ஆப்ஷனை க்ளிக் செய்து விட்டு வந்து விடுவேன்.  அந்த போஸ்டுக்கு வரும் பின்னூட்டங்களும், பதில்களும் எனது மெயில் பாக்ஸுக்கு வந்து விடும்.  Follow செய்ய எளிதாக இருக்கும்.  இரண்டு நாட்களாய் இது எனக்கு வேலை செய்யவில்லை.  எனக்கு மட்டும்தானா?  நண்பர்களின் அனுபவம் என்ன?  மறுபடி நினைவு வைத்துக்கொண்டு தளத்துக்கு வந்து பார்த்தால்தான் மற்ற நண்பர்களின் கருத்துகளையும், நம் கருத்துக்கான பதிலையும் படிக்க முடியும் என்கிற நிலை.

    பதிலளிநீக்கு
  3. பழைய நண்பர்கள், பழைய நினைவுகள் நம் வாழ்க்கையை இனியதாக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  4. இந்தப் பதிவை அன்றே படித்தேன்... உடனே உங்கள் வாழ்க்கைப்பாதை பதிவுகள்தாம் நினைவுக்கு வந்தன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை நினைவு வைத்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி சார்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  5. அன்றைய பொழுதுகள் இனிமையானவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்ப்பா. மீண்டு வாராத நாட்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு
  6. அன்றைய பொழுதுகள் இனிமையானவை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....