ஞாயிறு, 10 மார்ச், 2024

பிரதான் மந்த்ரி சங்க்ரஹாலய் - நிழற்பட உலா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


கடந்த வியாழன் அன்று வெளியிட்ட தினம் தினம் தில்லி பதிவில், தலைநகர் தில்லியில் இருக்கும் பிரதான் மந்த்ரி சங்க்ரஹாலய் எனும் அருங்காட்சியகம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். அந்த அருங்காட்சியகம் குறித்து எழுதிய போது அங்கே எடுத்த நிழற்படங்களை தனிப்பதிவாக வெளியிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். இதோ இந்த ஞாயிறில் அந்த அருங்காட்சியகத்தில் எடுத்த நிழற்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாருங்கள் படங்களைப் பார்த்து ரசிக்கலாம்! படங்கள் குறித்த குறிப்புகளையும் கீழேயே கொடுத்திருக்கிறேன்.



படம்-1:  அமெரிக்கன் - பிரிட்டிஷ் சிற்பி Jacob Epstein என்பவரால் வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்ட பண்டிட் நேருவின் முகம்.


படம்-2:  மரத்தின் துண்டுகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட நேருவின் உருவம்.


படம்-3: ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்களால் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுகள் (Metal Letter Opener and Paperweight made of Smoky Topaz on Silver).


படம்-4: நேபாள் நாட்டிலிருந்து பரிசாகக் கிடைத்த விஷ்ணு மற்றும் லக்ஷ்மி - வெண்கலத்தில் உருவாக்கப்பட்டது.


படம்-5: தென் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து பிரதமர் வாஜ்பேயி அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசு.


படம்-6: யானைத்தந்தத்தில் வேலைப்பாடு - மரத்தினால் ஆன அடிப்பாகத்தில் ஒரு கிராமியக் காட்சி - நேபாள் மன்னர் இந்தியப் பிரதமருக்கு அளித்த பரிசு.


படம்-7: யானைத் தந்தத்தில் அழகிய வேலைப்பாடுகள் - நேபாள் மற்றும் USSR நாடுகளிலிருந்து கிடைத்த பரிசுகள்.


படம்-8: பர்மா (இன்றைய மியான்மார்) நாட்டிலிருந்து கிடைத்த பரிசு - வேலைப்பாடு மிகுந்த யானைத் தந்தந்தங்களின் நடுவே வெண்கலத்தினால் ஆன Gong and Hammer!


படம்-9:  USSR மற்றும் China நாடுகளிலிருந்து நேரு அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகள்.


படம்-10: வெள்ளியில் தேநீர் கோப்பைகள் - கொரிய நாட்டிலிருந்து!


படம்-11: துருக்கி நாட்டின் ORTAKOY MOSQUE மாதிரி - இஸ்தான்புல், துருக்கியிலிருந்து.


படம்-12: CLOISONNE VASES - சீனாவிலிருந்து.



படம்-13: முன்னாள் பிரதமர் நேரு அவர்களுக்கு 1960-ல் கிடைத்த பரிசு - USSR - இலிருந்து! - விளக்கம் படத்தில்!


படம்-14: ஒயின் அருந்துவதற்கான கோப்பைகள்… விளக்கம் படத்தில்!


படம்-15: ஒரு அழகிய பூஜாடி - விளக்கம் படத்தில்!


படம்-16: அழகான சிலைகள் - விளக்கம் படத்தில்!


படம்-17: சீனாவிலிருந்து கிடைத்த பரிசு ஒன்று - எத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள்!


படம்-18: நேபாள் நாட்டின் கோயில் ஒன்றின் மாடல்!


படம்-19: தென் வியட்னாம் நாட்டிலிருந்து ஒரு பூஜாடி!


படம்-20: இந்தோனேஷியாவிலிருந்து தேநீர் கோப்பைகள்!


படம்-21: இலங்கையிலிருந்து வெள்ளி தேநீர் கோப்பைகள்!


படம்-22: Registan Ensemble from Uzbekistan!


படம்-23: இத்தாலியிலிருந்து - விளக்கம் படத்தில்!


படம்-24:  சீனாவிலிருந்து வேலைப்பாடுகள் மிகுந்த பீங்கான் தட்டு!


படம்-25: ஒரு மசூதியின் மாதிரி - UAE நாட்டிலிருந்து!


படம்-26: இந்தோனேஷிய ராஜவம்சத்தினர் பயன்படுத்தும் ஒரு ஆயுதம்!

மேலே உள்ள படங்கள் வழி பகிர்ந்து கொண்ட பரிசுப் பொருட்களையும் மற்ற தகவல்களையும் நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அடுத்த ஞாயிறில் வேறு இடங்களில் எடுத்த படங்களுடன் மீண்டும் ஒரு நிழற்பட உலா வருகிறேன்!

 

*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…









20 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் அழகு. ஒவ்வொரு தலைவருக்கும் என்ன பரிசு கொடுப்பது என்பதே ஒவ்வொரு நாட்டினருக்கும் பெரிய டாஸ்க்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பரிசு என்ன தருவது என்பது பெரிய வேலை தான். அதிலும் தவறாக கொடுத்துவிட்டால் இரண்டு நாடுகளுக்கிடையே பெரிய பிரச்சனை கூட உருவாகிவிடுவதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அனைத்து படங்களும் விவரங்களும் அருமை.
    அழகான பகிர்வு. நேரில் பார்த்த உணர்வு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  4. பரிசுப் பொருட்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிசுப் பொருட்கள் பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  5. பரிசுகளும் அதை புகைப்படங்கள் எடுத்து விதமும் அற்புதமாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. எலலப் படங்களும் வெகு அழகு

    ஒயின் அருந்தும் கோப்பைகள் ஐஸ்க்ரீம் சாப்பிடும் கோப்பைகள் போன்று இருக்கின்றன!

    பர்மீஸ் புத்தா செம அழகு. நல்ல வடிவம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோப்பை பெரும்பாலும் ஒரு போலத் தெரிந்தாலும், உள்ளே இடும் பொருட்கள் மாறுபட்டே இருக்கின்றன! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. மசூதியின் மாதிரியும் வெகு அழகாக இருக்கிறது. குறிப்புகள் சில வாசிக்க முடிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்புகள் படத்துடன் இருப்பதை பெரிதாக்கி பார்க்கலாம் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. அனைத்துப் படங்களும் மிக அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....