ஞாயிறு, 24 மார்ச், 2024

நிழற்பட உலா - ஹிம் மஹோத்ஸவ், தில்லி ஹாட் - டிசம்பர் 2023


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தலைநகர் தில்லியில் அவ்வப்போது நிகழ்வுகள் - பல மாநிலங்கள் குறித்த நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். குறிப்பாக குளிர் காலங்களில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்திற்கும் நான் பெரும்பாலும் சென்று விடுவது வழக்கம். அப்படி டிசம்பர் 2023-இல் நடந்த ஒரு நிகழ்வு - ஹிம் மஹோத்ஸவ்!  அதாவது ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்திலிருந்து கலைஞர்களும், பலவித விற்பன்னர்களும் தலைநகர் தில்லியின் INA பகுதியில் இருக்கும் தில்லி ஹாட் என்கிற ஸ்தலத்திற்கு வந்து இந்த நிகழ்வில் பங்கு கொண்டார்கள்.  தலைநகரில் இப்படியான தில்லி ஹாட் மூன்று இடங்களில் இருக்கிறது - தில்லி ஹாட் INA, தில்லி ஹாட் ஜனக்புரி மற்றும் தில்லி ஹாட் பீதம்புரா ஆகிய மூன்று தான் அவை.  இதில் பெரும்பாலும் தில்லி ஹாட் INA தான் நான் செல்வது வழக்கம். மற்ற இரண்டு இடங்களில் நடந்த ஒன்றிரண்டு விழாக்களுக்கும் சென்றிருக்கிறேன் என்றாலும் அதிகம் செல்வது தில்லி ஹாட் INA தான். தில்லி ஹாட் உள்ளே செல்ல நுழைவுக்கட்டணம் உண்டு - பெரியவர்களுக்கு 30 ரூபாய், சிறுவர்களுக்கு 20 ரூபாய் மற்றும் வெளிநாட்டினராக இருந்தால் 100 ரூபாய்! 


இங்கே நிரந்தரமாக இருக்கும் கடைகள், உணவகங்கள் தவிர இப்படியான நிகழ்வுகள் நடக்கும்போது கூடுதலாக பல கடைகள், உணவகங்கள் வரும். அதைத் தவிர மாலை நேரங்களில் (சில சமயங்களில் நாள் முழுவதும்) கலைஞர்களின் இசை, நடனம் போன்ற நிகழ்வுகளும் நடக்கும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வரும் கலைஞர்களின் திறமைகளை எடுத்துக் காண்பிக்க இந்த இடம் ஒரு சிறப்பான வரம்.  நிறைய நிகழ்வுகளை நான் இங்கே பார்த்து ரசித்திருக்கிறேன்.  திறந்தவெளி அரங்கில் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டும்போது - அதுவும் பல மாநிலத்திலிருந்து வரும் கலைஞர்கள் - அவர்களது கலையை தில்லியிலிருந்தபடியே பார்த்து ரசிக்க வாய்ப்பு கிடைப்பது நல்ல விஷயம் தானே! நிறைய இப்படியான நிகழ்வுகளுக்குச் சென்றதோடு, சில நிகழ்வுகள் குறித்து இத்தளத்திலும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சரி இந்த நாளில் டிசம்பர் மாதம் சென்ற போது நான் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு - ஒரு நிழற்பட உலாவாக! 



மண்ணால் செய்யப்படும் தோரணங்கள்...


ஹிமாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரிய இசைக்கருவியான டோல்...


ஹிமாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரிய உடைகள்...


உல்லன் கொண்டு செய்யப்படும் பொம்மைகள்...


மர பொம்மைகள்... 
வாங்கலாம் எனக் கேட்டபோது ஜோடி 850 ரூபாய் என்றார்கள்...


அழகான ஜோடி! 


புற்கள் கொண்டு செய்யப்படும் பெட்டிகள் - சப்பாத்தி வைக்கவாம்!


ஒரு இசைக்கலைஞர் - 
இந்த வாத்தியம் நீங்கள் எப்போதேனும் இசைத்ததுண்டா?



தேவதா - தேவதை பொம்மைகள்...


வட இந்தியாவின் பிரபல டோல்! 
இதை இசைத்தால் ஆட ஆரம்பித்து விடுவார்கள்!


பத்து தலை ராவணன்...


கூடையும் நூலும் அலங்காரப் பொருளாக!


ரண்சிங்கா என்னும் இசைக்கருவி - இரண்டு பாகங்களை இணைத்து வாசிப்பார்களாம்!


நகாரா(டா) எனப்படும் பெரிய மேளம்!


வாயிலில் கூடை, நூலாலான அலங்காரம்...

******


இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


12 கருத்துகள்:

  1. மண்ணால் செய்யப்பட தோரணங்கள் வியப்பு.  

    அது ஒரு இசைக்கருவி என்பதையே நம்ப முடியவில்லை!

    விழியில்லா தேவதா பொம்மைகள்!!!

    அங்கு பொருட்கள் வாங்கலாம் என்றால் யானைவிலை குடத்திரை விலை விற்பார்கள் போல...  படங்களை ரசித்தேன்.  தகவல்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. படங்கள் மிக அழகு. இந்தியாவில்தான் எத்தனை எத்தனை கலாச்சாரங்கள்.

    கொம்பு, பேரிகை வாத்தியங்கள் போல இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை கலாச்சாரங்கள் - எத்தனை வித மனிதர்கள். அனைத்துமே நல்ல விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. இந்த மாதிரி பொருட்காட்சிகளில் விலை அதிகமாக இருப்பது சாதாரணம்தான். உணவு சுத்தமாகத் தயாரிக்கறாங்களா?

    சப்பாத்தி கூடை அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவின் தரம் - நான் அறிந்த வரை நன்றாகவே இருக்கிறது - சில முறை இங்கே இருக்கும் கடைகளில் சாப்பிட்டு இருக்கிறேன் நெல்லைத்தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இன்றைய வாசகம் சிறப்பு

    எல்லா மனிதர்களின் பார்வையும் ஒன்றுதான் வெளிநாட்டினருக்கு அதிகம் வசூலிப்பது முறையல்ல... உண்மையில் அவர்களுக்கு குறைவான கட்டணமே சிறப்பு.

    படங்கள் வழக்கம் போல அழகு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிநாட்டினருக்கு அதிக கட்டணம் - இங்கே எல்லா இடங்களிலும் இப்படித்தான் கில்லர்ஜி. கேட்டால் அவர்களுக்கு டாலரில் சம்பளம் என்று சொல்வார்கள்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. மண்ணால் செய்யப்பட்ட தோரணம் கண்கவரும் வர்ணத்தில் அழகு. எங்கள் வீட்டில் மண்ணால் ஆன மணிகள் மண்ணிறத்திலேயே வாயில் கதவின் பக்கத்தில்கட்டி இருக்கிறோம்.

    மரப்பொம்மைகள்,வாத்தியங்கள் ,புல்லுப் பொருட்கள் என அனைத்தும் நன்றாக இருக்கின்றன.
    கலைஞர்கள்,கலைப்பொருட்கள், வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  6. வாசகம் அருமை.

    அனைத்து படங்களும் அருமை. மண்ணால் தோரணம் அழகிய வண்ணத்தில் இருக்கிறது.
    உள்ளன் நூல் பொம்மைகள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....