அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
ஃபிப்ரவரி-மார்ச் மாதங்களில் தலைநகரின் குடியரசுத் தலைவர் மாளிகையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் அம்ருத் உ(dh)த்யான் எனும் அழகிய தோட்டத்தில் (முன்பு முக(g)ல் (G)கார்டன் என்று அழைக்கப்பட்ட இடம்!) எடுத்த நிழற்படங்கள் சிலவற்றை இரண்டு பதிவுகளாக வெளியிட்டு இருந்தேன். அந்தப் பதிவுகளை நீங்கள் பார்த்திருக்காவிட்டால் கீழே உள்ள சுட்டி வழி அந்தப் பதிவுகளை நீங்கள் படிக்கலாம்.
உ(dh)த்யான் உத்ஸவ் 2024 - நிழற்பட உலா - பகுதி ஒன்று
உ(dh)த்யான் உத்ஸவ் 2024 - நிழற்பட உலா - பகுதி இரண்டு
பொதுவாக தோட்டத்தினை சுற்றிப் பார்க்க ஃபிப்ரவரி-மார்ச் மாதங்கள் மட்டுமே அனுமதி கிடைக்கும் என்பதோடு, அந்த நாட்களில் தான் பூக்கள் அதிக அளவில் இங்கே பூக்கும் என்பதும் சொல்ல வேண்டிய விஷயம். எங்களால் இந்த மாதங்களில் வர இயலாது ஆனால் குடியரசுத் தலைவர் மாளிகையை பார்க்கவாவது முடியுமா என்றால் பதில் நிச்சயம் முடியும் என்பது தான். வருடத்தின் எல்லா மாதங்களிலும் குடியரசுத் தலைவர் மாளிகையையும், அங்கே உள்ள அருங்காட்சியகத்தினையும் சுற்றிப் பார்க்க வசதிகள் உண்டு. அவர்களது இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொண்டால் அந்த நேரத்தில் அங்கே சென்று வரலாம். உங்களுடன் ஒரு அதிகாரி வந்து அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்வார். முழு விவரம் வேண்டுபவர்கள் கீழேயுள்ள இணையதள முகவரியில் பார்த்துக் கொள்ளுங்களேன்.
Rashtrapati Bhavan Tour Management
வாருங்கள் இந்த வார நிழற்பட உலாவில் தொடர்ந்து சில நிழற்படங்களையும் காணொளிகளையும் கண்டு ரசிக்கலாம்.
இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
23-06-2024









பட்ங்களும் நீரூற்றுக் காணொளிகளும் மிக அழகு.
பதிலளிநீக்குநீரூற்று நடனக் காணொளிகளை ரசித்துப் பார்த்தேன்! மிக அருமை. காலையில் பார்த்துவிட்டு கருத்தும் போட்டது போகாமல் நின்று கொண்டிருந்ததை இப்போதுதான் கவனித்தேன், வெங்கட்ஜி!
கீதா
பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குநீங்கள் சுழற்றி எடுத்திருக்கும் காணொளிகளும் மிக அழகு.
பதிலளிநீக்குகீதா
சுழற்றி எடுத்திருக்கும் காணொளி - பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குவாசகம் அருமை. இப்படியான உறவுகள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பவை. எந்த ஒரு உறவும் இப்படி இருந்துவிட்டால் பிரச்சனைகள் இல்லை. தேவையற்ற conditions களுடன் அதாவது எதிர்பார்ப்புகளுடன் வரும் எந்த உறவும் நிலைப்பது சிரமம். நிலைப்பதாக எண்ணிக் கொண்டாலும் அது உண்மையில்லை மனதினடியில் சில discomforts இருந்துகொண்டே இருக்கும் உறவுகளாக இருக்கும். casual ஆக இருப்பது மிக நல்லது.
பதிலளிநீக்குகீதா
வாசகம் குறித்த தங்களது எண்ணங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டது நன்று.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.
படங்களும், காணொளிகளும் அருமை ஜி
பதிலளிநீக்குதகவல்கள் சிறப்பு.
படங்கள், காணொளிகள் மற்றும் தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குபடங்கள்,கருத்து அருமை
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்திற்கு நன்றி விஜி வெங்கடேஷ்.
நீக்குபடங்களையும் காணொளிகளையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் மிக அழகு. காணொளியும் சிறப்பு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குபடங்களும், காணொளியும் மிக அருமை.
பதிலளிநீக்குதோட்டத்து மலர்கள், ஆலமரம் அனைத்தும் அருமை.
நேரில் பார்த்த உணர்வை தந்தது. பகிர்வுக்கு நன்றி.
படங்கள் மற்றும் காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.