வெள்ளி, 21 டிசம்பர், 2012

ஃப்ரூட் சாலட் – 26 – மனித நேயம் – ஜ்வல்யா



இந்த வார செய்தி:

தில்லியில் சென்ற வாரம், ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சில நோயாளிகள் மனித நேயத்தோடு ஒரு காரியம் செய்திருக்கிறார்கள். 

முகம்மது யூசஃப்
ஜெய்பூர் நகரைச் சேர்ந்த தையல் தொழிலாளி ஹஃபீஸ். அவரது மகன் முகம்மது யூசஃப். பிறந்து பதினாறு மாதங்கள் தான் ஆகிறது. பிறக்கும் போதே கல்லீரலை குடலுடன் இணைக்கும் நாளங்கள் இல்லாது பிறந்த குழந்தை முகம்மது யூசஃபிற்கு மஞ்சள் காமாலை நோய் தாக்க, அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே பலன் அளிக்குமென மருத்துவர்கள் சொல்லிவிட்டார்களாம்.

மருத்துவர்களின் கட்டணத்தைக் கழித்த பிறகும் கூட ஆறு லட்சம் வரை செலவாகும் என தில்லியிலுள்ள மருத்துவமனை கூறவே மனம் கலங்கிய ஹஃபீஸுக்கு, அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சில நோயாளிகள் ஆறுதல் வார்த்தைகள் கூறி தங்களால் முடிந்த உதவி செய்ய முன்வந்திருக்கிறார்கள். சொன்னது மட்டுமல்லாது மூன்று லட்சம் ரூபாய் சேகரித்துக் கொடுக்க, மீதி மூன்று லட்சம் தனது வாடிக்கையாளர்களிடம் கடனாக பெற்று மகனுக்கு அறுவை சிகிச்சை செய்து விட்டார்களாம்.

தனது கல்லீரலிலிருந்து ஒரு பகுதியையும் கொடுத்திருக்கிறார் இந்த தந்தை. அறுவை சிகிச்சை முடிந்து குழந்தையும் இப்போது நன்றாக இருக்கிறார். மனித நேயத்துடன் உதவி புரிந்த சக நோயாளிகள் பாராட்டுக்குரியவர்கள்.

தில்லியில் இந்த வாரம் ஒரு பெண்ணுக்கு நடந்த ஒரு காட்டுமிரண்டித்தனமான செயலைப் பற்றி சொல்ல நா கூசுகிறது. இப்படிப் பட்ட மிருகங்கள் இருக்கும் இதே தில்லியில் மனித நேயம் இன்னும் தழைப்பது மேலே சொன்ன மனிதர்கள் போன்றவர்களால் தான்.

இந்த வார முகப்புத்தக இற்றை:
 
இன்று உலகம் அழியப் போகிறதாமே! இல்லை இல்லை, அதைத் தள்ளி வைத்து விட்டார்களாம். இப்போது தான் செய்தி பார்த்தேன்!




இந்த வார குறுஞ்செய்தி


JUST CHANGE THE WAY YOU LOOK AT THE THINGS & EVEN THE WORST CAN BE CHANGED INTO THE BEST.  READ ‘EVIL’ THE OTHER WAY ROUND AND IT BECOMES ‘LIVE’.  

ரசித்த புகைப்படம்: 




நான் எப்படி போறேனோ அதே மாதிரி பார்த்து எல்லாரும் வந்திடணும்.... ஓகே..
 
ராஜா காது கழுதை காது

நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ராஜா காது கழுதை பகுதி மீண்டும்! சாலையோர உணவுத் திருவிழா என்ற பதிவில் கிடைத்த [கேட்ட] விஷயம் இது. தமிழக ஸ்டால் நோக்கி சென்றபோது ஒரு தமிழ் குடும்பம் – கணவன், மனைவி மற்றும் மகன் - அங்கிருந்து வந்து கொண்டிருந்தார்கள். இனி அவர்கள் பேசியது.

மனைவி: “அந்த தமிழ்நாடு ஸ்டால்-ல அசோகா அல்வா இருந்தது. வாங்கி சாப்பிட்டு இருக்கலாம். நீங்க தான் வாங்காம வந்துட்டீங்க

கணவன்: அது உன் முகரக்கட்டை மாதிரி இருந்தது. அதான் வாங்கலை! 

என்ன கடுப்பில் இருந்தாரோ? இருந்தாலும் பொது இடத்தில், என்னதான் தில்லியாக இருந்தாலும், தமிழ் காரர்களும் இருப்பார்கள் என்ற எண்ணம் இல்லாது இப்படியா மனைவியை அவமதிப்பது.

ரசித்த காணொளி:

இப்படி ஒரு திறமைசாலியை நீங்க கண்டிப்பா பார்க்கணும். இந்த திமைக்காகவே இரண்டு இளநீர் கூட சாப்பிடலாம்!



படித்ததில் பிடித்தது:


இருட்டு வரப்ப
வெளிச்சம் எங்கப்பா
போவுது..
காக்கா எங்கப்பா
தூங்கும்..
மீனுக்கு குளிராதாப்பா
பசுமாடு குடிக்கதாப்பா பாலு..

ஜ்வல்யாவுக்குக் கேட்கத் தெரிகிறது..
எனக்கு விழிக்கத் தெரிகிறது..

ரிஷபன் சார் அவ்வப்போது முகப்புத்தகத்தில் இடும் ஸ்டேட்டஸ் கவிதைகள் படிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி சமீபத்தில் படித்த ஒரு ஸ்டேட்டஸ் கவிதை!

மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

62 கருத்துகள்:

  1. மனிதர்கள் பலவிதம்... தில்லியிலும் தான்!

    குறுஞ்செய்தி யோசிக்க வைத்தது.

    காணொளி ... உண்மையிலேயே வியக்கத்தான் வைக்கிறது.

    ஜ்வல்யா ஜொலிக்கிறாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      மனிதர்கள் பலவிதம்.... உண்மை.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  3. ஜ்வல்யாவுக்குக் கேட்கத் தெரிகிறது..
    எனக்கு விழிக்கத் தெரிகிறது../

    ஜாஜ்வல்யமாய் ஜொலிக்கிறது ..

    ஃப்ரூட் சாலட் சுவை அருமை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி

      நீக்கு
  4. சாலட் அருமை... இளநீர் வெட்டுவதை திரும்பத் திரும்ப அதிசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்...
    ரிசபன் சார் கவிதைகளுக்கு நான் தீவிர ரசிகன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  5. எல்லா இடங்களிலும் நல்லவர்களும் , தீயவர்களும் இருக்கிறார்கள்.
    முகப்பு இற்றை சிரிப்பை வரவழைக்கிறது. மாற்றி யோசிக்க சொல்லும் குறுச்செய்தி நன்றாக இருக்கிறது.
    ராஜா காது கேட்ட செய்தி இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்கிறது!
    காணொளி அருமை. இளநீர் தீர்ந்து விட்டதா என்று ஆட்டிப் பார்க்க வேண்டாம்.
    ஜ்வல்யாவின் கேள்வியும், ரிஷபனின் விழிப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. இந்த மனித நேயம் குறைந்து விட்டது.....நம் நாட்டில்....ஒரு சிலர் மட்டுமே மனித நேயத்துடன் நடந்து கொள்கிறார்கள்.......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மலர்.

      நீக்கு
  7. வழக்கம்போல ஃபூட் சாலட் அருமை
    ரசித்து ருசித்து மகிழ்ந்தேன்
    மருத்துவமனை ஊழியர்களின் மனிதாபிமான செயல்
    டெல்லி நிகழ்வால் புண் பட்ட மனதிற்கு
    ஆறுதல் அளிப்பது போல இருந்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. தமிழ்மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்ற் ரமணி ஜி!

      நீக்கு

  9. // சில நோயாளிகள் மனித நேயத்தோடு ஒரு காரியம் செய்திருக்கிறார்கள்.//

    வாழ்க அவர்கள் தொண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  11. கோபம்,நகைச்சுவை,வியப்பு என இவற்றின் கலவையான சுவையான ஃப்ரூட் சாலட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  12. ஆஹா..ஜ்வல்யா இங்கே வந்தாச்சா.. நன்றி வெங்கட்..

    பதிலளிநீக்கு
  13. யூசப் உதவி பெற்ற நிகழ்வு மனித நேயம் உயிர்த்திருப்பதைக் காட்டியது.. இம்மாதிரி பாசிட்டிவ் செய்திகள்தான் மனசுக்குள் புகுந்து நேரம் கிட்டும் போது அதன் கடமையை செய்யும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணமை....

      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி வேங்கட ஸ்ரீனிவாசன் [சீனு...]

      நீக்கு
  15. மனிதாபிமானம் இன்னும் மரத்து போகவில்லை.குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கொடுத்து விட முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

      நீக்கு
  16. ராஜா! பொண்டாட்டி மூஞ்சிய அல்வாக்குத்தானே கம்பேர் பண்ணினார்.


    //’இருட்டு வரப்ப வெளிச்சம் எங்கப்பா போவுது..’

    குட் கொஷ்டின்! கீப் இட் உப் கொயந்தே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி!

      நீக்கு
  17. ரசித்துப் பார்த்துப் படித்தேன்.
    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  18. கவிதை சிறப்பு. மருத்துவ தகவல்கள் நெகிழ வைத்தது. சிறப்பான பகிர்வு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  19. தில்லி நோயாளிகள் சிலரைப் போல மனிதர்கள் இருப்பதால்தான் இன்னும் மனித நேயம் உயிருடன் இருக்கிறது என்று தோன்றுகிறது.

    தலைவர் நடை செம!
    இளநீர் வெட்டும் கலைஞர் அருமை! என்ன ஒரு லாவகம் கையில்!

    கேள்விகளைப் படிக்கும்போதே ஜ்வல்யா மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன். அவளேதான்! ரிஷபன் சாரின் வலைப்பதிவுகளில் ரசித்து இருக்கிறேன். உங்கள் வலைபதிவுக்கும் வந்து விட்டாளே குழந்தை!

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
  20. நல்ல தொகுப்பு. உதவிய உள்ளங்களின் அன்பால் சிறுவன் விரைவில் குணமடைவான்.

    Breaking News.. ரசித்தேன்:)!

    ஜ்வல்யா எல்லோர் மனதையும் கட்டிப் போடுகிறாள்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  21. அப்பாவின் ரத்தத்தோடு கல்லீரலில் கொஞ்சமும் எடுதுக் கொண்ட கதை மிக நல்ல மனிதனாக வளரட்டும்.இளநீர் வீடியோ அருமை.எத்தனை அழகாக் கம்பீரமா சேவல் தலைமை ஏற்றிக் கொண்டிருக்கிறது..ஜ்வல்யா இங்கயும் ஜொலிக்க வந்துட்டாளா.அழகுப் பொண்ணே .அறிவும் ஜாஸ்தி.மிக மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி வேடந்தாங்கல் கருண்.

      நீக்கு
  23. அருமையான தொகுப்பு உங்களின் சாலட்டிலிருந்து குறுஞ்செய்தி திருடப்படுகிறது என் முக புத்தகத்திற்காக... நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி எழில். உங்கள் முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டதற்கும் தான்! :)

      நீக்கு
  24. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரெவெரி.

      நீக்கு
  25. தில்லி ஆஸ்பத்திரி - தனியாரா, அரசு மருத்துவமனையா? கேட்கவே நெகிழ்ச்சியான செய்தி.

    இளநீரும், சேவலும் -ரசிக்க வைத்தன. ராஜா காது - ஆர்வமா வாசிச்சேன், ஆனா :-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

      நீக்கு
  26. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  27. மனிதம் எங்கோ தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது,இளநீர் வெட்டுகிறவருக்கு இருக்கிற தெளிவு கூட நமது,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி விமலன்.

      நீக்கு
  28. அட, முதல் நியூஸ் நல்ல பாசிட்டிவ் நியூஸ். முதலிலேயே பார்த்திருந்தால் ஒன்பதைப் பத்தாக்கியிருப்பேனே!

    இற்றை புன்னகைக்க வைக்கிறது!

    குறுஞ்செய்தி அருமை.

    ர.பு. எங்கிருந்து கிடைக்கிறது இப்படிப் புகைப்படங்கள்? அருமை.

    இளநீர் இப்படி வெட்டினால் சௌகர்யம்தான்!

    ஜ்வல்யாவின் கேள்வி ரசிக்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரத்தின் பாசிட்டிவ் நியூஸ்-ல் சேர்த்துக் கொள்ளுங்களேன்...

      புகைப்படங்கள் இணையத்திலிருந்தும், முகப்புத்தகத்திலிருந்தும் எடுக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  29. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  30. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

      நீக்கு
  31. மிகவும் ருசிமிக்க ஃப்ரூட் சாலட். ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....