திரிவேணி சங்கமம் – காசி பயணம் – பகுதி - 15
அலஹாபாத் ரயில் நிலையத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில், சந்திர சேகர்
ஆசாத் பூங்காவிற்கு மிக அருகில் அமைந்திருப்பது அலஹாபாத் அருங்காட்சியகம். சென்ற
பகுதியில் சென்றது மோதிலால் நேரு அவர்களின் ஆனந்த பவன் – ஸ்வராஜ் பவன். அங்கிருந்து
கிளம்பி நாங்கள் அடுத்ததாய்ச் சென்றது இந்த அருங்காட்சியகத்திற்குத் தான்.
வளாகத்தின் வெளியிலேயே சந்திர சேகர ஆசாத் அவர்களின் சிலை ஒன்று அமைக்கப்பட்டு
இருக்கிறது. எதிரே புல்வெளி ஒன்றும் பராமரித்து வருகிறது இந்த நிர்வாகம். நுழைவுச்
சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே செல்லும் வழியில் பலவிதமான, புராதனமான சிற்பங்களும்
நம்மை வரவேற்கின்றன. வாருங்கள் அழைப்பினை ஏற்று உள்ளே செல்வோம்.
அருங்காட்சியினுள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது கிருஷ்ணரும் அர்ஜுனனும். யானைத்
தந்தத்தில் செய்யப்பட்ட இச்சிலை இருப்பது சந்தனத்தில் செய்த ஒரு தேரில். மிக அழகாக
இருக்கும் இதை ஒரு கண்ணாடிப் பெட்டியினுள் பத்திரப்படுத்தி இருக்கிறார்கள். வரும்
மக்கள் அதைத் தொட்டுப் பார்த்து, I Love
You darling என எழுதி விடுவார்களோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்!
இந்தியாவின் தேசிய அளவிலான அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று. பறவைகள் மற்றும் விலங்குகளின் சிற்பங்களோடு
சிறிய அளவில் 1931 ஆம் ஆண்டு அலஹாபாத் நகராட்சியில் தொடங்கப்பட்ட இந்த
அருங்காட்சியகம் தற்போது செயல்படும் இடம் 1947 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 1952
– ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்ட இந்த இட்த்தில் பலவிதமான புராதனமான சிற்பங்கள்,
டெரக்கோட்டா வகை கலைப் பொருட்கள் என எண்ணிலடங்கா விஷயங்கள் இருக்கின்றன.
உலக அளவில் நிறைய பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகங்களில் இதையும் சொல்லலாம்.
இண்டஸ் வேலி, தொல்பொருட்கள், கைவினைப் பொருட்கள், வெண்கல முத்திரைகள், நாணயங்கள்
[தங்கம் மற்றும் வெள்ளி], மிகச் சிறிய ஓவியங்கள், புத்தர் கால திரைச்சீலை
ஓவியங்கள், உடைகள், தளவாடங்கள், ஆயுதங்கள் என இங்கிருக்கும் பொருட்களைச் சொல்லிக்
கொண்டே போகலாம்.
நேரு அவர்கள் தனது பங்காக அவரிடம் இருந்த பல அரிய பொருட்களையும் இந்த அருங்காட்சியகத்திற்கு
அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார்.
இந்த அருங்காட்சியகத்தில் இருபத்தி
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட ஒரு சிறப்பான நூலகமும்
இருக்கிறது. அருங்காட்சியகத்திற்கு வரும் நபர்கள் நேரமிருந்தால் அங்கேயும் சென்று
பார்க்கலாம்.
புராதன சிற்பங்கள், ஓவியங்கள்
மட்டுமல்லாது சமகால படைப்புகளையும் ஆங்காங்கே வைத்திருந்தார்கள். இந்த அருங்காட்சியகத்தில் மொத்தம் 18
காட்சியகங்கள் இருக்கின்றன. இவற்றில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தவிரவும் செல்லும்
வழியெங்கும் கூட கலைப் பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. பழமையை விரும்பும்
நபர்களுக்கு இந்த இடம் நிச்சயம் ஒரு வரப் பிரசாதம்.
சுதந்திரப் போராட்டத்தினைப்
பற்றிய குறிப்புகளுக்கும் செய்திகளுக்கும் கூட இங்கே இடமுண்டு. மகாத்மா காந்தியின்
வாழ்க்கையும் அவரது சாதனைகளும் புகைப்படங்கள் மூலமாக விவரிக்கப் பட்டிருக்கின்றன. பல
வெளி நாடுகளால் மகாத்மா காந்தியின் நினைவாக வெளியிடப்பட்ட அரிய தபால் தலைகள்,
நாணயங்கள் ஆகியவற்றையும் இங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
சிறப்பான இந்த இடத்திற்குச் செல்ல நுழைவுச் சீட்டு என்று சொல்லிவிட்டு எவ்வளவு
கட்டணம் என்று சொல்லாமல் விடுவதா? பெரியவர்களுக்கு ஐந்து ரூபாய், பன்னிரெண்டு
வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு ரூபாய். எல்லா இடங்கள் போலவே,
வெளிநாட்டவர்களுக்கு 100 ரூபாய்! புகைப்படங்கள் எடுக்க விரும்பினால் ரூபாய் 25
கொடுத்து ஒரு சீட்டு வாங்க வேண்டும் – எடுக்கும் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்த
மாட்டேன் எனும் உத்திரவாதம் எழுதியும் தரவேண்டும்! வருடம் முழுவதும் [திங்கள்,
இரண்டாம் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகள் நீங்கலாக] காலை 10.30 மணி முதல் மாலை
04.45 வரை இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கும்.
சந்திர சேகர ஆசாத் பூங்கா |
அல்ஹாபாத் சென்றால் பார்க்க வேண்டிய இடங்களில் இதையும் ஒன்றாக குறித்துக்
கொள்ளலாம். இடங்களைச் சுற்றிப் பார்த்து கொஞ்சம் களைப்பாயிருக்கிறதா?
அருங்காட்சியகத்தின் எதிரே தான் சந்திர சேகர ஆசாத் பூங்கா! அங்கே சற்றே
இளைப்பாருங்களேன்! நான் அதற்குள் அடுத்த பகுதியை எழுதி முடிக்கிறேன்.
மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
அலகாபாத் சென்றால் நிச்சயம் பார்க்கவேண்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குநேரிலே நாங்க சென்று அருங்காட்சியகம் சுற்றிப்பார்த்ததுபோலவெ இருந்தது படங்களும் பகிர்வும் நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.
நீக்கு// I Love You darling என எழுதி விடுவார்களோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்!// ஹா ஹா ஹா அருமையான ஹாஸ்யம் சார்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.
நீக்குஅருமையான படங்கள்.... பகிர்வுக்கு நன்றி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.
நீக்குஅருமையான அருங்காட்சியகம் ப்ற்றிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குஅருங்காட்சியகத்தில் நூலகமும் இருப்பது சிறப்பு!
பதிலளிநீக்குபழமையும் புதுமையும் கலந்து மிளிரும் அருங்காட்சியகம் உங்கள் பதிவில் புகைப்படங்களுடன் பார்க்கும் போதே மனதை கவருகிறது.
நேரில் பார்க்க ஆவலாக இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
நீக்குஅலகாபாத் சென்றும் என்னால் பார்க்க இயவில்லை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குபுகைப்படங்களின் சேர்க்கை சிறப்பு..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுமதி.
நீக்குநல்லதொரு பகிர்வு. அருங்காட்சியகத்துக்குள்ளே போனாலே வெளியே வர மனசு வராது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குசுவாரஸ்யம். அருமை. ஆசாத் சிற்பம் புகைப் படம் எடுக்கவில்லையா?
பதிலளிநீக்குஇரண்டாவது புகைப்படம் அவரது சிற்பம் தான் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பயணம் குறித்த பகிர்வு படங்களுடன் அருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.
நீக்குஅருங்காட்சியகம் ப்ற்றிய அருமையான பகிர்வு ;)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்கு