தலைநகரிலிருந்து – பகுதி 20
கடந்த வெள்ளி [14.12.2012]
முதல் மூன்று நாட்களுக்கு தில்லியில் சாலையோர உணவுத் திருவிழா நடைபெற்றது. தேசிய
சாலையோர வியாபாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இத் திருவிழாவிற்கு
சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் நண்பர்களோடு சென்றிருந்தேன் [ஒரே இடத்திற்கு
இரண்டு நாட்கள் தொடர்ந்து சென்ற காரணம் என்னவோ? அதைக் கடைசியில் பார்க்கலாம்!]
தில்லி, உத்திரப் பிரதேசம்,
பஞ்சாப், குஜராத், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம்
மற்றும் தமிழகத்திலிருந்து சாலையோர வியாபாரிகள் ஐம்பதிற்கும் மேற்பட்ட கடைகளை தில்லியின்
Constitution Club வளாகத்தில் அமைத்திருந்தனர். ஒவ்வொரு ஊரின் கடையிலும் அந்தந்த ஊரின்
சிறப்பான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.
சனிக்கிழமை சென்றபோது
தமிழகத்தின் உணவுக் கடைகளில் என்ன இருக்கிறது என்று பார்த்தோம். வெண் பொங்கல்
[ரூபாய் 20/-], அசோகா ஹல்வா மற்றும் தோசை ஆகியவை வைத்திருந்தார்கள். மூன்றையும் சுவைத்தோம். தோசை மாவு தீர்ந்து விட்டது போலும், அதனால்
அரிசி மாவினைக் கோதுமை மாவுடன் கலந்து செய்து கரைத்த தோசையை தோசை [ரூபாய் 20/-] என்று
விற்றுக் கொண்டிருந்தார்கள். அசோகா ஹல்வா
நன்றாக இருந்தது. பொங்கலும் ஓகே ரகம்.
தில்லியில் இப்போது இருக்கும் குளிருக்கு சூடாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், பொங்கல், ஹல்வா இரண்டுமே சூடின்றி
ஜில்லென்று தான் இருந்தது.
ஜிலேபி |
மால்புவா |
தில்லி ஸ்டாலில் ஆலு
பராட்டா, கோபி பராட்டா, என நான்கு வகை பராட்டா இருந்தது. பீஹார் மாநில ஸ்டாலில்
பாலில் மைதா கலந்து செய்யும் ஜிலேபி வைத்திருந்தார்கள். மைதாவில் வாழைப்பழம்
கலந்து செய்யும் “மால்புவா” தீர்ந்து விட்டது. அதனால் ஒரு ஜிலேபி பத்து ரூபாய் என்று
விற்றதை வாங்கி ருசித்தோம்.
மக்கி தா ரொட்டி-சர்சோன் கா சாக்
பஞ்சாப் மாநிலத்தின்
கடைகளில் ”மக்கி தா ரொட்டி-சர்சோன் கா சாக்” விற்பனை அமோகமாக இருந்தது. என்னப்பா இது புரியாத ஐட்டமா இருக்கே
என்பவர்களுக்கு, சோள மாவில் செய்யும் சப்பாத்தியும் தொட்டுக்கொள்ள கடுகுக் கீரை
சப்ஜியும் தான். இது குளிர்காலத்தில்
சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. உடலுக்கு சூடு கொடுக்கும் உணவு என்பதால் பெரும்பாலான
வட இந்தியர்களில் வாரத்திற்கு ஒரு முறையாவது இதை சாப்பிடுவார்கள். அதிக கும்பல்
இருந்ததால் சாப்பிட வில்லை. மூன்று நான்கு
மாநில ஸ்டால்களில் உண்டதே சற்று அதிகமாகத் தோன்றியதால், தில்லியின் ஒரு ஸ்டாலில்
மீட்டா பான் [15 ரூபாய்] வாங்கி சுவைத்து வீடு திரும்பினோம். நாரியல் பான் கூட
விற்றார்கள் – பான் மேல் தேங்காய் பொடி தூவி இருந்தது!
நேற்று சென்று வந்ததை
பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சியிடம் இன்று சொன்னபோது, ”இன்றும் செல்லலாம் வாங்க” என்று சொல்லவே இன்றும் சென்றோம். இன்றே கடைசி என்பதால், நாங்கள் சென்றபோதே
தமிழகத்திலிருந்து வந்திருந்தவர்கள் கிளம்பிச் சென்று விட்டார்கள். கேரளத்தின் கடைகளில் கப்பா, மீன்வருவல், என்றெல்லாம்
வைத்திருந்தார்கள். கர்நாடக கடைகளில்
எலுமிச்சை சாதம், புளி சாதம் என்றெல்லாம் வைத்திருந்தார்கள். ஆந்திராவின் கடையில்
ஹைதை பிரியாணி! இதையெல்லாம் தான் எப்போதும் சாப்பிடுகிறோமே என நினைத்து சற்றே
வித்தியாசமாக சாப்பிடலாம் என முடிவு செய்தோம்.
ஒடிசாவின் ஒரு ஸ்டால் இருந்தது.
அங்கே ஒரு பெண்மணி எதையோ விற்றுக் கொண்டிருந்தார். இது சைவமா, அசைவமா என்று
கேட்கவே “Pure bej” என்றார்.
சரி இதன் பெயர் என்ன என்றோம்? ”மூங்
தால் கா ரஸ்பரா” என்று சொல்லவே, சரி பயத்தம்பருப்பு கொண்டு செய்த உணவு என்று
புரிந்தது. ஏதோ காரம் என நினைத்தால்
இனிப்பு! ஒரு பீஸ் ரூபாய் 15/-.
Bhav Nagri Gathiya
அங்கிருந்து நகர்ந்து
வந்தோம். குஜராத் கடையிலும் நிறைய மக்கள்
இருந்தார்கள். அங்கே “Bhav Nagri Gathiya” என்று ஒரு தின்பண்டம்
வைத்திருந்தார்கள். சரி வித்தியாசமாக
இருக்கிறதே என ஒரு ப்ளேட் ஆர்டர் செய்தோம் [ரூபாய் 20/-]. ஒரு வித மஞ்சள் நிறத்தில் நீள நீளமாக ஃபிங்கர்
சிப்ஸ் போன்று இருந்தது. அதன் மேல் வெங்காயத் துண்டுகளையும், சாஸ் போன்று ஒரு
திரவத்தினையும் ஊற்றிக் கொடுத்தார்கள்.
என்னவென்று சாப்பிட்டு பார்த்தால், கடலை மாவு கொண்டு செய்யப்பட்ட ஒரு
நொறுக்ஸ்!
மொத்தத்தில் இரண்டு
நாட்களும் விதம்விதமாய் உண்டு வந்தோம். சிறப்பான ஏற்பாடுகள் என்றாலும், திறந்த
வெளியில் வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மூடிய அரங்கினுள் வைத்து அதில் எல்லாவித உணவுப்
பொருட்கள் தயாரிப்பில் உருவாகும் புகையும், குப்பைக் கூடைகள்
வைத்திருந்தாலும் சாப்பிட்ட கழிவுகளை ஆங்காங்கே போட்ட மக்களும் ரொம்பவே
படுத்தினார்கள்.
எப்போதும் போலவே காது
கொஞ்சம் ஷார்ப்பாகவே கேட்டுக் கொண்டிருந்தது – ‘ராஜா காது கழுதைக் காது’ பகுதிக்காக! கேட்டதில் பிடித்ததை இந்த வெள்ளியன்று
வெளியிடுகிறேன்! :)
தில்லி மக்கள் சாதாரணமாகவே சாலையோர
உணவுப் பிரியர்கள் – இங்கே ஆலூ டிக்கி, பானி பூரி கடைகளில் இருக்கும் மக்கள்
வெள்ளத்தினைப் பார்த்தாலே புரியும்.
இங்கும் அலைமோதியது கூட்டம். முதல்
நாள் பத்தாயிரம் பேர் வந்தார்களாம். இரண்டாம் நாள் 25000, கடைசி நாளான ஞாயிறன்று
50000 பேர் வந்திருப்பதாக ஏற்பாடு செய்தவர்கள் பெருமையுடன் சொல்லிக் கொண்டு
இருந்தார்கள்.
நான் சென்று சாப்பிட்டு வந்ததை
உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். எங்களுக்கு
எங்கே என்று கேட்பவர்களுக்கு, கூகிள் பாபாவிடம் இருந்து எடுத்த படங்களை [நான்
கேமரா கொண்டு செல்லவில்லை] சேர்த்திருக்கிறேன். எஞ்சாய்!
அது சரி, இரண்டு நாளும் சென்றது எதற்கு? ஒரே நாளில் இத்தனையும் உண்டால் வயிறு என்ன ஆவது? அதான்!
மீண்டும் வேறு ஒரு பகுதியில்
உங்களைச் சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
சுவையான உணவினை ருசித்து
பதிலளிநீக்குஎங்களுக்கும் அருமையான பதிவாக
சுவைக்கத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 2
பதிலளிநீக்குதமிழ்மணம் இரண்டாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!
நீக்குஅதென்ன தமிழர்களுக்கு அவ்ளோ அவசரம்? சீக்கிரமாக் கடையை மூடிப்புட்டாங்களே:(
பதிலளிநீக்குஅந்தக் கிளப்பின் பின்புறம் அட்டகாசமான புல்வெளியோடு இடம் தாராளமா இருக்கே.... அங்கே ஷாமியானா போட்டு வச்சுருந்துருக்கலாம், இல்லே?
(தோழியின் மகன் திருமணம் அங்கே அந்தக் க்ளப்பில் நடந்தது. சாப்பாடு பின்புறத்தோட்டத்தில்)
வெளியே Constitution Club Annexe என்று ஒரு அரங்கம் இருக்கிறது - ஃபால்ஸ் சீலிங் போட்டது. அங்கே தான் வைத்திருந்தார்கள். பக்கத்தில் தென்னக உணவகங்கள் மட்டும் ஷாமியானா கொண்டு கடைகள் - வானம் பார்த்த கடைகள்...
நீக்குபின்புறத் தோட்டத்தில் நானும் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருக்கிறேன். அங்கே இடம் காணாது என்று நினைத்திருப்பார்களோ என்னமோ!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
ஆஹா.... சுவையான பயணம் போல! பெயர்கள்தான் பற்களுக்கிடையில் சிக்கிக் கொள்கின்றன!
பதிலளிநீக்குபெயர்கள் - பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்டனவா? :) பல்குச்சி அங்கே நிறைய வைத்திருந்தார்கள் - அதனால் தப்பித்தோம்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
சாப்பாடு ஐட்டம் பேரே வித்யாசமா இருக்கு எப்படி தைரியமாக சாப்பிட முடிந்தது? இந்த பானி பூரி பேல் பூரி வாலாக்கள் எப்பவுமே சாக்கடை ஓரமாகவே கைவண்டியில் வியாபாரம் செய்கிரார்கள். சாப்பிடவே தோனாது
பதிலளிநீக்குபொதுவாகவே பானி பூரி என்றால் எனக்கும் அலர்ஜி தான்... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.
சுவை நிறைந்த விருந்துப்பகிர்வுக்கு பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்கு14-ஆம் தேதி மாலை late-ஆகத் தான் துவங்கினார்கள். மதியம் சென்ற போது திறக்கவில்லை. அதனால் மிகவும் கூட்டம். கஷ்டப்பட்டு உள்ளே நுழைந்தால், சிற்றுண்டிகளை வாங்க வெளியில் முதலிலேயே token (தீம் பார்க் போல்) வாங்க வேண்டும் என்று படுத்தினார்கள். வெளியில் வந்து மீண்டும் டோக்கன் வாங்க நேரமில்லாமல் (கூட்டம் & சோம்பல்) சும்மா பார்த்துவிட்டுத் திரும்பினோம்.
பதிலளிநீக்குஉனது அலுவலகத்திற்கு எதிர்த்த மாதிரியே இருப்பதால் வசதியாக இருக்குமென நினைத்தேன்.... :)
நீக்குசனிக்கிழமை டோக்கன்கள் உள்ளேயே கிடைத்தது. நுழைவுக் கட்டணம் என்று 20 ரூபாய் கேட்டார்கள் - ஞாயிற்றுக்கிழமை ஒன்றும் கேட்கவில்லை! :)
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிடா சீனு!
செமயா எஞ்சாய் செய்யறீங்க போலயே. :)
பதிலளிநீக்குஅடடா கண் வைக்காதீங்க முத்துலெட்சுமி! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//நேற்று சென்று வந்ததை பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சியிடம் இன்று சொன்னபோது, ”இன்றும் செல்லலாம் வாங்க” என்று சொல்லவே இன்றும் சென்றோம்.//
பதிலளிநீக்குபின்னே இந்த மாதிரி உணவுத் திருவிழாவைக் சுற்றிக் காட்டி உணவு வாங்கிக் கொடுக்க வேறு யார் கிடைப்பார்கள். ஈஸ்வரன் குடுமி (?!?) சும்மா ஆடுமா!
இந்தமாதிரி உணவுத்திருவிழாக்கள் தில்லியில் எப்போது நடத்தினாலும் வெற்றிதான் என்பது அங்கு கண்ட மெகாசைஸ் ஜீன்ஸ் அம்மணிகளையும் - ணர்களையும் பார்த்தாலே புரியும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி!
நீக்குமூடிய இடத்தில் வைத்து விட்டு ஏன் சாலையோர உணவு என்று சொன்னார்கள்?
பதிலளிநீக்குஒருவேளை அங்கு தயாரித்தவை சாலையோரங்களில் மட்டுமே கிடைக்குமோ?
இந்த மாதிரி இடங்களுக்குப் பானால் சாப்பிட ரொம்பவே யோசிப்பேன் நான்.
புகைபடங்களைப் பார்த்து திருப்தி பட்டுக் கொண்டேன்.
கழுதைக் காதில் என்ன விழுந்திருக்கும் என்று இப்பவே யோசிக்க வைத்து விட்டீர்கள்!
சாலையோரக் கடைகள் வைத்திருப்போர் சங்கம் தான் இத் திருவிழாவினை நடத்தியது!
நீக்குநானும் பொதுவாய் சாப்பிடுவதில்லை! ஆனாலும் எப்போதாவது என்பதால் சென்றுவிட்டேன்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா!
வயிற்றுக்கும் கொஞ்சம் செவிக்கும் ஈந்துவிட்டு வந்திருக்கீங்க போல.. ராஜா காதுல என்னல்லாம் விழுந்துச்சுன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங் :-))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குராஜா காது - வெள்ளியன்று நிச்சயம் சொல்கிறேன்! :)
நலம் தானே! எனக்கு தெரிந்து...சாலையோர உணவகங்கள்...டில்லியிலும்...மும்பையிலும்...தான்...வெரையிடியாக உள்ளன........இருப்பினும்...டில்லி கிளைமேட்டுக்கு சாலையோரத்தில் சாதா அடுப்பில் செய்து விற்கும்...பிஸ்கட் கூட ஸ்பெஷல் தான் !!!
பதிலளிநீக்குநான் நலம். நீங்கள் நலம் தானே! நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களது வருகை. மிக்க மகிழ்ச்சி அப்பாஜி!
நீக்குஉண்மை. தில்லியில் சாலையோர உணவுகள் அதிகம் தான்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாஜி!
படங்களைப் பார்த்தாலே நாக்கில் நீர் ஊறுகிறதே!இப்போதெல்லாம் 5 நட்சத்திர ஓட்டல்களில் சாலையோர உணவுத் திருவிழா நடத்துகின்றனர்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.
நீக்குஎங்க பகுதியில் இப்படியான விழாக்கள் கிடையாது.
பதிலளிநீக்குரசித்தேன் உங்கள் சுவையான பதிவை
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகானந்தன் ஜி!
நீக்கு"அது சரி, இரண்டு நாளும் சென்றது எதற்கு? ஒரே நாளில் இத்தனையும் உண்டால் வயிறு என்ன ஆவது? அதான்!" எங்களை ஒரேநாளில் உண்ண வைத்துவிட்டீர்களே எமக்கு இன்று வயித்துவலிதான் :)))
பதிலளிநீக்குஅடடா உங்களுக்கு வயிற்று வலி வரவைத்து விட்டேனே! சாரிம்மா!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
சுவையான பகிர்வு:)! இங்கே வட இந்திய ஸ்வீட் ஸ்டால்களில் மால்புவா ஹாட்சேல் ஆகும்.
பதிலளிநீக்குமால்புவா - இங்கே மலிக் ஸ்வீட்ஸ் என்று ஒரு கடை இருக்கிறது கன்னாட் ப்ளேசில். அங்கே இது ஸ்பெஷல்! இதற்காகவே நிறைய மக்கள் வருவார்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
சுவையான பதிவு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவரே.
நீக்குசுவை நிறை விருந்து
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹாரி.
நீக்குமால்புவா...வைப் பார்க்க நம்ம ஊர் அதிரசம் போல் இருக்கிறது.
பதிலளிநீக்குசுவையும் அது போல் தான் இருக்குமா...?
நினைக்கவே எச்சில் ஊருகிறது...
நீங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
நீக்குகாலங்கார்த்தாலேயே பசியைக் கிளப்பிட்டிங்களே சகோ...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
நீக்குநண்பரே! வலைச்சரமெங்கும் உங்களைப் பற்றிய பேச்சுதான்! தங்களின் கனவில் மும்தாஜ் வந்தார்களாமே? வந்து பாருங்களேன் வலைச்சரத்திற்கு!
பதிலளிநீக்குஅடடா இந்த மும்தாஜ் சும்மாவே இருக்க விடமாட்டேங்கறாரே.... :)
நீக்குஅறிமுகத்திற்கும் தகவலுக்கும் மிக்க நன்றி நண்பர் சேஷாத்ரி.
anne....
பதிலளிநீக்குkoduththu vacha aalune neengaa!
ithai padiththathil naanumthaan....
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குஇரண்டு நாட்களாய் உணவு திருவிழாவில் கலந்து கொண்டு புது வகையான உணவுகளை அறிமுகபடுத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குஅடுத்து ராஜா காது கேட்ட விஷயங்களை கேட்க ஆசை.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குபதிவு நல்ல டேஸ்டா இருந்தது...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குஅருமையான பகிர்வு...
பதிலளிநீக்குசுவைத்ததை சுவையாய் தந்தமைக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.
நீக்குபடங்களும் பதிவும் சுவை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குசுவை மிகுந்த பகிர்வு. பாராட்டுக்கள் ;)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்கு