திங்கள், 3 டிசம்பர், 2012

நகரம் – சுஜாதா




பட உதவி: நன்றி பால் ஹனுமான் ஜி!



பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் ‘மட்ராஎன்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ‘மதுராஎன்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ‘மெதோராஎன்று குறிப்பிடுவதும் இத்தமிழ் மதுரையே யாம்!

சுவர்களில் ஓரடி உயர எழுத்துகளில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை – ஆ.கே. கட்பாடிகள் – எச்சரிக்கை! புரட்சித் தீ! சுவிசேஷக் கூட்டங்கள் – ஹாஜி மூசா ஜவுளிக்கடை [கடல்] – 30.9.73 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்.

மதுரையின் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல ‘பைப்அருகே குடங்கள் மனிதர்களுக்காக வரிசைத் தவம் இருந்தன. சின்னப் பையன்கள் ‘டெட்டானஸ்கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீஸல் புகை பரப்பிக் கொண்டிருந்தன. விரைப்பான கால் சராய் சட்டை அணிந்த, ப்ரோடீன் போதா போலீஸ்கார்ர்கள் ‘இங்கிட்டும் அங்கிட்டும்செல்லும் வாகன – மானிட போக்குவரத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தார்கள். நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரௌனியன் இயக்கம் போல் இருந்த்து. [பௌதிகம் தெரிந்தவர்களைக் கேட்கவும்] கடர் சட்டை அணிந்த, மெல்லிய, அதிக நீளமில்லாத ஊர்வலம் ஒன்று, சாலையில் இடது புறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காகத் திட்டிக் கொண்டே ஊர்ந்தது. செருப்பில்லாத டப்பாக்கட்டு ஜனங்கள், மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள், வற்றிய வைகைப் பாலம்.... மதுரை!

இப்படித்தான் சுவாரசியமாக ஆரம்பிக்கிறது தலைவரின் நகரம் சிறுகதை. இச்சிறுகதை இன்றைக்கு முப்பத்தி எட்டு - நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. ஊர் பற்றிய ஒரு கண்ணோட்டத்தினை முதல் மூன்று நான்கு பத்திகளிலேயே தரும் இந்த வித்தை வாத்தியாரிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். 
 
இச் சிறுகதையை சமீபத்தில் படித்தேன். தில்லி தமிழ்ச் சங்கத்தின் நூலகத்திலிருந்து எடுத்த புத்தகங்களுள் “நகரம் – சுஜாதாஎன்ற தலைப்பிட்ட புத்தகமும் அடக்கம். இத் தொகுப்பில் மொத்தம் 14 கதைகள். முன்னுரையில் இந்த பதினான்கு கதைகளும் சென்ற இரு வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை என்று சுஜாதாவே 04.03.74 அன்று சொல்லி இருக்கிறார்!


இத்தொகுப்பில் இருக்கும் பதினான்கு கதைகள் – [1] நகரம் [2] பார்வை [3] சென்றவாரம் [4] கள்ளுண்ணாமை [5] தலைப்பு என்ன? [6] மகன் தந்தைக்கு [7] உறுமீன் [8] இளநீர் [9] காணிக்கை [10] முரண் [11] காரணம் [12] அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடன் அல்ல [13] ஒரே ஒரு வரம் [14] வாட்டர் கார் விவகாரம்.

அனைத்து கதைகளுமே எனக்குப் பிடித்தது. இதில் சென்றவாரம் கதை – தினமணி நாளிதழில் 28.12.73 அன்று வெளிவந்த ஒரு விபத்துச் செய்தியை வைத்து ஒரு கதையை அழகாய் பின்னியிருப்பார். 

ஒரே ஒரு வரம் – ஆசாமியிடம் வித்தியாசமாக என்னவோ இருந்தது. என்ன என்று சுலபமாகச் சொல்ல முடியவில்லை. சட்டை பட்டன் ஒன்றை மாற்றிப் போட்டிருந்தாரே, அதுவா? இந்த 1973-ல் காதில் கடுக்கன் போல் போட்டுக் கொண்டிருந்தாரே, அதுவா? அல்லது வலது கை சுட்டு விரலில் மோதிரம்? குடுமியா, கிராப்பா என்று சொல்ல முடியாத சிகை, நிச்சயம் அவர் சென்னைக்குப் புதிது... சீனிவாசலு நாயுடு தெரு, இரண்டாம் சந்து.....

கதவு எண்களைப் பார்த்துக்கொண்டே ஒரு வீட்டு வாசலில் நின்றார். அதன் முகப்பில் தெரிந்த மாடிப் படிகளில் ஏறி ஒரு தண்ணீர் டிரம்மைத் தாண்டி ஓர் அறையின் வாசற் கதவை லேசாகத் தட்டினார். பதிலில்லை. சுற்று முற்றும் பார்த்தார். ஒருவருமில்லை. உடனே அவர் ஒரு அமானுஷ்யமான காரியம் செய்தார். மூடி இருந்த அந்த அறைக் கதவின் ஊடே, புகை போல் ஊடுருவி உள்ளே சென்றார்.

உள்ளே சென்று பார்த்தால் ஒரு பெண், தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். அவளைத் தடுத்து அவளுக்கு ஒரே ஒரு வரம் அளிக்கிறார். அந்த வரம் அளித்த பிறகு தனது வேலையை ராஜினாமா செய்ய நினைக்கிறார் - காரணத்தை மிக அழகாய்ச் சொல்லி இருக்கிறார் “ஒரே ஒரு வரம்என்ற இக்கதையில்.

அனைத்து கதைகளுமே அருமை.  நான் படித்த புத்தகம் குமரி பதிப்பகம் 1974-ல் வெளியிட்டது. வெளி வந்த கதைகளில் சிலவற்றை இணையத்தில் படிக்கலாம். நகரம் கதை சுஜாதாவின் தீவிர ரசிகர் திரு. பால் ஹனுமானின் தளத்தில் இருக்கிறது.

மீண்டும் வேறொரு படித்ததில் பிடித்ததுபகிர்வில் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


 

32 கருத்துகள்:

  1. நகரம் கதை நம் அரசாங்க மருத்துவமனைகளின் அவலத்தைச் சொல்லும் கதை. கடைசியில் அந்தக் குழந்தையை நினைத்தால் மனம் வேதனைப்படும். :(((( சுஜாதா பேரைப் பார்த்ததும் ஓடி வந்தேன். அதிசயமா கரன்ட் வேறே இருக்கு இன்னிக்கு. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும் கூட அரசாங்க மருத்துவமனையின் நிலை மோசம் தான்...

      கரண்ட் வேற இருக்கு :))) ”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பது நான் நினைவுக்கு வந்தது...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  2. இப்போது அவர் தளத்தில் அருமையான கேள்வி பதில்கள் - பதிவுகளும் வருகிறது...
    tm2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. சுஜாதா கதைகள் நம்ம அந்த இடத்துக்கே அழைத்து சென்றுவிடும் திறமையான எழுத்துக்கு சொந்தக்காரர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

      நீக்கு
  4. இந்த கதையை படித்ததில்லை ,கதையை எழுதியவர் தமிழை கொலை செய்தது மாதிரி இருப்பதாக எனக்கு தோன்றுகிறது .மறு பகிர்வுக்கு பாராட்டுக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

      நீக்கு
  5. அன்புள்ள வெங்கட்,

    சுஜாதாவின் 'முரண்' - ஒரு குறு விமர்சனம் இங்கே...

    விடிந்தால் ஓய்வு பெறப் போகும் ஒருவர் முப்பத்தெட்டு ஆண்டுகளாகச் சம்பாதித்த நற்பெயருக்குக் களங்கம் உருவாகும் வண்ணம் இறுதிநாளில் கையூட்டுக்குக் கையை நீட்டிவிட்டு அகப்பட்டுத் தண்டிக்கப்பட்ட சம்பவங்களைப் பார்க்கிறோம். வழிப்பறிக் கொள்ளைக் காரனாக இருந்தவர்கள் பக்தர்களாகவும் மகாகவியாகவும் மாறிய அற்புதங்களைப் படித்திருக்கிறோம். ஆசைப்பட்டுத் திருமணம் செய்து கொண்டு ஒருசில நாட்களிலேயே கசப்புணர்வில் விலகிச் சென்றவர்களும் உண்டு. வேண்டா வெறுப்பாகத் தலையை நீட்டிய பெண் மெல்லமெல்லக் கணவனை நேசிக்கத் தொடங்கிக் கணமும் பிரியாத இல்லற வாழ்வை நடத்துகிறவர்களும் உண்டு. ஏன் இந்த மாற்றம் ? மனம்தான் காரணம். ஆனால் மனம் எடுக்கிற முடிவு, முடிவெடுப்பதற்கு முந்தைய கணம் வரை மனத்துக்கே தெரிவதில்லை. மனம் ஒரு விசித்திரப் பறவை. வானம் முழுக்க அதன் வெளி. எந்தக் கோணத்தில் அதன் சிறகு விரியும் என்பது புரியாத புதிர். ஏன் விரிகிறது என்பது இன்னும் விளங்கிக் கொள்ள இயலாத புதிர். ஒருவகையில் ஆர்வத்தைத் துாண்டும் புதிர்.

    மனத்தின் புதிர்ப்பயணத்தை நினைத்துக் கொள்ளும் போதெல்லாம் நினைவுக்கு வரும் சிறுகதை சுஜாதாவின் ‘முரண் ‘. கதையில் குமாரசாமி என்னும் நடுவயது இளைஞன் ஒருவன் இடம்பெறுகிறான். சிறுவயதில் ஒரு ஆங்கிலப் பள்ளியில் ஓடிக்கொண்டிருந்த வாகனத்துக்குக் கிளீனராக வேலையில் சேர்ந்தவன் ஐந்தே ஆண்டுகளில் வாகன ஓட்டியாகப் பதவிஉயர்வு பெற்று இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து மிகநல்ல முறையில் சேவை செய்து வருபவன். வாகனத்தை மிக நல்ல முறையில் பராமரிப்பவன். எப்போதும் துாய்மையாக வைத்துக் கொள்பவன். இருபத்தைந்து ஆண்டு கால சேவையில் ஒருமுறை கூட நேரம் தவறாதவன். யாரிடமும் கெட்ட பெயர் எடுக்காதவன். எல்லாப் பிள்ளைகளிடமும் அன்பாக இருப்பவன். திருமணம் செய்து கொள்ளாமல், குறைந்தபட்ச அளவிலான தன் தேவைக்குச் செலவழித்த பிறகு எஞ்சிய சம்பளப் பணத்தையெல்லாம் வங்கியில் போட்டு வைத்திருப்பவன். தூய ஆடைகளை அணிபவன்.

    நிகழ்ச்சி நடக்கும் அன்று பள்ளி தொடங்கிய பிறகு தலைமை ஆசிரியையால் அழைக்கப்படுகிறான் குமாரசாமி. அன்றோடு இருபத்தைந்து ஆண்டுகள் சேவையை அவன் முடித்திருப்பதாக அவர்தான் சொல்கிறார். அவன் சேவையைப் பெரிதும் பாராட்டி, நிர்வாகம் ஒரு கடிகாரத்தையும் பணமுடிப்பையும் அன்பளிப்பாகத் தந்திருப்பதாகச் சொல்கிறார். அவன் பணத்தை வாங்க மறுத்து விடுகிறான். கடிகாரத்தை மட்டும் தயக்கத்துடன் வாங்கிக் கொள்கிறான். அவன் பெருந்தன்மையைப் பற்றியும் பற்றற்ற தன்மையைப் பற்றியும் பாராட்டாதவர்களே பள்ளியில் இல்லை. எங்கும் அவன் பேச்சாகவே இருக்கிறது.

    அன்று மாலை பள்ளியில் ஏதோ நாடகப் பயிற்சி நடக்கிறது. மற்ற பள்ளி மாணவிகளை விட்டு விட்டு நாடக ஒத்திகை நடக்கும் வகுப்பறையின் வாசலில் காத்திருக்கும் போது இருட்டி விடுகிறது. பயிற்சி முடிந்து வரும் பத்துப் பெண்களையும் பி.டி.டீச்சரையும் ஏற்றிக் கொண்டு மறுபடியும் வாகனம் புறப்படுகிறது. ஒவ்வொருவராக அவரவர்கள் இல்லத்தருகில் விட்டுவிட்டுக் கடைசியாக எஞ்சிய பெண்ணுடன் வழக்கத்துக்கு மாறான திசையில் இருட்டில் வழக்கத்துக்கு மாறான வேகத்தில் வாகனம் திரும்புகிறது. படிப்பவர்கள் பதற்றமுறும்படி இக்குறிப்புடன் கதை முடிகிறது.

    கதையில் குமாரசாமி தீட்டிக்காட்டப்பட்ட குணங்களுக்கு நேர் எதிரான குணத்தைப் பெற்று விடுவது ஒரு பெரும்புதிர். இந்த மாற்றம் அவனுக்குள் எப்படி நிகழ்ந்தது ? அந்த வாகனத்தை அவன் எங்கே செலுத்துவான் ? அந்தப் பெண்ணுடன் அவன் ஏன் சென்றான் ? அவன் நோக்கம் என்ன ? எது அவனைச் செலுத்துகிறது ? திரும்பவும் அவன் வருவானா ? மறுபடியும் அதே பள்ளியில் வேலை செய்ய அவன் மனம் ஒப்புக்கொள்ளுமா ? இப்படி ஏராளமான கேள்விகள் கதையின் தளத்தை விரிவாக்குகிறது. எந்த விடையும் கதைக்குள் இல்லை. எது விடையாக இருந்தால் நல்லது என்று நாம் நம்புகிறோம் ? எல்லாமே நம் மனம் முடிவெடுக்க வேண்டிய கேள்விகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக தலைப்பு சொல்வது போல இந்த கதை பெரிய முரண் தான். படித்துக் கொண்டே வந்து கடைசியில் குமாரசாமி இப்படிச்செய்வதை சொல்லி முடிவை வாசகர் கையிலேயே விட்டிருப்பார் தலைவர்.....

      குறுவிமர்சனம் அருமை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால் ஹனுமான் ஜி!

      நீக்கு
  6. வாட்டர் கார் விவகாரம் — சுஜாதா

    http://balhanuman.wordpress.com/2011/06/02/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாட்டர் கார் விவகாரம் சிறுகதையின் சுட்டியை இங்கே அளித்தமை நன்று. படிக்காதவர்கள் படிக்க வசதியாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால் ஹனுமான் ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. அருமையான கதை.ஒரு குறும்படமாகக் கூடப் பார்த்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. ஆமாம் மோகன். அவருக்குப் பிடித்த அவரது சிறுகதைகளில் இதுவும் ஒன்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன் குமார்.

      நீக்கு
  11. ஆஹா!! நிரந்தர எழுத்துலக சூப்பர் ஸ்டாரின் சிறுகதைகளை நினைவுபடுத்தியமைக்கு நன்றி. தங்கள் அலசல் பாணியும் மிக நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பார்வதி ராமச்சந்திரன்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  13. நகரம், தனிமை கொண்டு (பின்னாளில் நைலான் கயிறாக விரிவாக்கப்பட்டது), விபா, தூண்டில் கதைகள் .. ஒன்றிரண்டு பெயர்களைச் சொல்வது சுஜாதாவுக்கு நாம் இழைக்கும் துரோகம்தான். தமிழ் எழுத்தில் அவர் 60-70களில் புகுத்திய புதுமையை இன்றும்கூட யாரும் விஞ்சவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பக்கத்தில் தங்களது முதல் வருகையோ சுரேஷ்?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  14. அழகான விமர்சனம் கண்டிப்பாக படிக்க முயல்கிறேன் .புத்தகம் கிடைக்கணும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  15. புத்தக விமர்சனம் நல்லாயிருக்கு. பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....