சமீபத்தில்
“எங்கள் பிளாக்”-ல் ”நல்ல பாம்பு” என்று ஒரு பதிவினை எழுதி இருந்தார். அந்தப் பதிவில் நான் இப்படி பின்னூட்டம் அளித்திருந்தேன்.
அட நாகராஜன் உங்க வீட்டுக்கு வந்தாரா.... சொல்லவே இல்லை :) அதான் இப்ப
சொல்லிட்டேனேன்னு சொல்லப்படாது!
நெய்வேலியில் நிறைய பாம்பு அனுபவங்கள்... கையால் பிடித்த கதையெல்லாம் இங்கே சொன்னால் அடித்து விடுவார்கள்.... :)
நெய்வேலியில் நிறைய பாம்பு அனுபவங்கள்... கையால் பிடித்த கதையெல்லாம் இங்கே சொன்னால் அடித்து விடுவார்கள்.... :)
இந்த பதிலைப் பார்த்துட்டு வல்லிம்மா “@ வெங்கட் உங்கள் நல்ல அனுபவங்களைச் சொல்லவும்.:)” அப்படின்னு கேட்க, ஒருத்தர் நம்ம கிட்ட கேட்டா, உடனே
சொல்லாம விட்டுடலாமா? அதான் இந்தப் பதிவு.
ஒரு நாள்
நெய்வேலியில் அதிகாலையில் எழுந்து பேஸ்டும் – பிரஷும் கையுமா வீட்டை விட்டு வெளியே
வந்தேன். வீட்டைச் சுத்தி தோட்டத்தினைப் பார்த்தபடியே பல்துலக்குவதில் இருக்கும்
ஆனந்தம் வாஷ்பேசின் முன் கண்ணாடி பார்த்து பல்துலக்கி, நம்ம மூஞ்சிய நாமே பார்த்து
பயப்படுவதில் இல்லை. அப்படியே வெளியே வந்தா ஒரு பாம்பு அடிச்சு போட்டு இருக்கு.
‘அடடா ராத்திரியோட ராத்திரியா யார் வீட்டுலயோ இதை கைமா பண்ணிட்டாங்கன்னு
நினைச்சுக்கிட்டே வீட்டுக்குள் வந்து காபியை குடித்தபடியே யார் வீட்டுலயோ ராத்திரி
பாம்பு வந்திருக்குன்னு சொன்னேன்.
சொல்லி
வாயை மூடல, அதுக்குள்ள பொட்டுன்னு பொடரில ஒரு அடி – யாருன்னு பார்த்தா எங்கப்பா!
“யார் வீட்டுலயோ அடிச்சாங்களாம்!, அப்படி என்னடா ஒரு கும்பகர்ண தூக்கம் உனக்கு?"
அப்படின்னு கேட்டார். சினிமாவுல
மட்டும்தான் Flash Back காமிக்கணுமா என்ன. நானும் மோட்டுவளைய பார்க்கறேன் – அட Flash Back சொல்லதான்!
ராத்திரி
ஐயா தூங்கிட்டேன். வீட்டுல அத்தை பாட்டி [அம்மாவோட அத்தை] மட்டும் சமையல் அறையில்
வேலை செய்து கொண்டிருக்க, அப்பா, சகோதரிகள் எல்லாரும் தூக்கத்தைத் தழுவ
முயற்சித்துக் கொண்டிருந்தனர். சிறிது
நேரத்தில் தங்கை நடுக்கூடத்தில் தூங்க, அப்பா, மூத்த சகோதரி படுக்கை அறையில் தூங்கி
விட்டனர். அம்மா, பெரியம்மாவோடு பன்ரூட்டி சென்றிருந்தார் – அடுத்த வாரம் நடக்க
வேண்டிய பூஜைக்கு ஏற்பாடு செய்ய.
சமையலறையில்
வேலை செய்து கொண்டிருந்த அத்தைப் பாட்டிக்கு தங்கை தூங்கிக்கொண்டிருந்த அறையில்
ஏதோ மினுமினுவென தென்பட்டிருக்கிறது. ”என்னன்னு புரியலையே” என்று யோசித்தபடியே,
சத்தமில்லாது வந்து கூடத்தில் விளக்கை போட்டுப் பார்க்க, தங்கை தலைமாட்டில் “நல்ல
பாம்பு” படமெடுத்து நின்று கொண்டிருக்கிறது. என்ன வேகம் வந்ததோ தெரியாது – தங்கையின் காலைப்
பிடித்து ஒரு இழு, அவள் நேரே சமையலறையில்...
எழுந்து உட்கார்ந்து “நான் எப்படி இங்க வந்தேன்” என முழித்துக்
கொண்டிருந்தாள்.
அத்தைப்
பாட்டி மெதுவாக அப்பாவை அழைத்து விஷயத்தைச் சொல்ல, பாம்பு அங்கேயே இருந்தது. “நாகராஜா, சமத்தா போயிடுப்பா, பாலும் பழமும்
கொடுக்கறேன்” என்று எங்க அப்பா நாகராஜன் பாம்பு கிட்ட டீலிங் பேச, நாக ராஜனுக்கு அந்த டீலிங் பிடித்தது போல! வாயில் கதவு இடுக்கு வழியே வெளியே வந்தது.
வந்தது நேரா அதோட வீட்டுக்குப் போகக் கூடாதோ, நேரே வராண்டால இருக்கற திண்ணைக்குக்
கீழே போய் அடைக்கலம் ஆயிடுச்சு.
தலைவருக்குப்
பின்னாடியே போகிற தொண்டர்கள் மாதிரி, அப்பா, அத்தைப் பாட்டி, சகோதரிகள் எல்லாம்
பின்னாடியே வராண்டாவுக்கு வந்து பாம்போடு பேச்சுவார்த்தை நடத்த, சத்தம் கேட்டு
பக்கத்து வீட்டு சாமிநாதன் அண்ணன் வந்து விஷயம் தெரிந்து கையில் கழி எடுத்து
பாம்பை அடித்து வெளியே போட்டு விட்டார்! இத்தனை விஷயம் நடந்து ஏரியாவே எழுந்து
பாம்பு கதை பேசிருக்கு. ஆனா ஐயா மட்டும் தூங்கிட்டே இருந்திருக்கேன். அப்படி ஒரு
கும்பகர்ண தூக்கம். அதே பாம்பு தான் நான்
காலையில் பார்த்தது! அதைக் கேட்டு அடி வாங்கியது.
அது சரி, ”கையால் பிடித்த கதையெல்லாம் இங்கே
சொன்னால் அடித்து விடுவார்கள்....
:)” அப்படின்னு சொல்லிட்டு தூங்கின கதைய சொல்றீங்க! எனக்
கேட்பவர்களுக்கு, அதெல்லாம் சப்பை மேட்டர்...
:) காலையில கேட்டு திறக்க, கை வச்சேன் ஒரு நாள் – வழக்கத்தை விட கேட்
வழவழன்னு இருக்க, என்னன்னு தடவிப்பார்த்தா, பாம்பார் கேட் மேலே தாச்சிண்டு தூச்சிண்டு
இருக்கார். தடவிக்கொடுத்தது சுகமா இருந்ததோ என்னமோ ”புஸ்... புஸ்...” சத்தம் கொடுக்க, அப்படியே
பிடிச்சு தூக்கிப் போட்டுட்டேன்! ”அப்புறம் அதிர்ச்சியில அப்படியே
சிலையா நின்னுட்டேன்” என்பது உங்களுக்கும்
எனக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அதை யாருகிட்டயும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்!
இன்னும் சில பாம்பு கதைகள் என் பக்கத்தில் முன்பே
எழுதி இருக்கேன். விருப்பமிருந்தால்
அதையும் படிக்கலாம்.
வேறு சில
நெய்வேலி அனுபவங்களோடு அடுத்த ‘மனச் சுரங்கத்திலிருந்து” பகுதியில்
சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி.
வாஷ்பேசின் முன் கண்ணாடி பார்த்து பல்துலக்கி, நம்ம மூஞ்சிய நாமே பார்த்து பயப்படுவதில் இல்லை.
பதிலளிநீக்குபாம்பு கதைக்கு தேவையான பயம் தான் !
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குபாம்பு பாத்தாலே பயத்தில் வார்த்தையே வராது இப்படி அனுபவிச்சு காமெடியா சொல்லி இருக்கீங்களே. இடுக்கண் வருங்கால் நகுக வா?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.
நீக்கு:) ரஜினிய விட பெரிய ஆளா இருப்பீங்க போல..
பதிலளிநீக்குஹிஹி....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.
பாம்பென்றால் படையும் நடுங்கும்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.
நீக்கு//நேரா அதோட வீட்டுக்குப் போகக் கூடாதோ, நேரே வராண்டால இருக்கற திண்ணைக்குக் கீழே போய் அடைக்கலம் ஆயிடுச்சு.//
பதிலளிநீக்குநீங்க வேற.. வீட்ல தெனமும் பாலும் பழமும் மெனுவையே அதோட ஆத்துக்காரி பரிமாறி வெறுப்பேத்தியிருப்பாங்க. வெரைட்டி கிடைக்கும்ன்னு உங்க வீட்டுக்கு வந்தா நீங்களும் அதையே கொடுத்தா எப்படி? :-))))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குஹீ ஹீ ஹீ !! எனக்கு பாம்பு என்றால் பயமே இல்லை ஆனால் உங்களுடைய கதையை படிக்கும் முன் கொஞ்சம் நிதானமாகத்தான் படித்தேன், படையே நடுங்குமே நான் நடுங்காமல் என்ன செய்வேன், அருமையான பகிர்வு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செம்மலை ஆகாஷ்.
நீக்குhahahaha:-))))))) super!!!!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குபோட்டுடைத்த இரகசியம் நல்லாருக்கு:).
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு//வீட்டைச் சுத்தி தோட்டத்தினைப் பார்த்தபடியே பல்துலக்குவதில் இருக்கும் ஆனந்தம் வாஷ்பேசின் முன் கண்ணாடி பார்த்து பல்துலக்கி, நம்ம மூஞ்சிய நாமே பார்த்து பயப்படுவதில் இல்லை.//
பதிலளிநீக்குஅதானே! அடுத்தவன் தானே பார்த்துப் பயப்படனும்.
எங்க பக்கத்து வீட்டுக்காரர் ஒருத்தர் தன் வீட்டு கீழ் போர்ஷனை வாடகைக்கு விட ஆள் தேடறாரு. ஒரே கண்டிஷன் - சப்பை மூக்குக்காரன்தான் வேணுமாம். பாம்பு ப்ரச்சனை தீர்ந்துடும்லாடே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்கு
பதிலளிநீக்குபாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று புலவர் மேற்கோள் காட்டியிருக்கிறார்.
ஒரு பதினைந்து வருடத்திற்கு முன் நடந்த கதை.
அம்பத்துரில் எங்கள் பயிற்சிக்கல்லூரி. நான் அங்கு துணை முதல்வராக குப்பை கொட்டிக்கொண்டிருந்த
காலம்.
எங்களது கல்லூரியில் ஒரு நாள்.
காலை மணி 11.15 . இரண்டாவது பீரியட் துவங்கும் நேரம்.
அது என்னுடைய வகுப்பு.
பாடத்தின் நிழற்படங்கள் ட்ரான்ஸ்பெரன்ஸி கலர் சாக் பென் எல்லாம் எடுத்துக்கொண்டேன்.
பாடத்த்தின் சுருக்கம் இருக்கும் பக்கங்கள் ஃபோல்டரில் இருக்கிறதா என உறுதி செய்துகொண்டு
என் அறையின் கதவைத் திறந்து பள்ளி அறைக்குச் செல்லும் பாதையை நோக்கி இருக்கும்
வராண்டாவில் காலை வைத்தேன்.
ஒரு சில அடிகளிலே நடந்திருப்பேன்.
ஒரு பெரிய பாம்பு சற்று பத்து அடி தொலைவிலே இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக பாதையை தாண்டும் காட்சி.
சத்தம் போடாமல் அங்கேயே நின்றேன்.
வகுப்புகள் ஆங்காங்கே துவங்கிவிட்டதால், சக ஆசிரியர்களோ மாணவர்களோ இல்லை.
ஒரு பத்து வினாடிகள் தான் இருக்கும்.
அந்த நாக ராஜா என்னை ஒரு தரம் திரும்பிப் பார்ப்பது போல இருந்தது.
நானும் நிற்கிறேன்.
நாகராஜனும் நிற்கிறான். ( ள் ளோ தெரியவில்லை )
அவனுக்கு போர் அடித்துவிட்டதோ, கால் வலித்ததோ தெரியவில்லை.
அடுத்த கணம் விரைந்து தன் வழியே சென்று பக்கத்தில் உள்ள பூங்காவில் மறைந்தது.
எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
பாம்பு நின்ற இடத்தை தாண்டி தான் அந்த பக்கம் செல்லவேண்டும்.
பரந்தாமா ! பாற்கடலில் பள்ளி கொண்டவனே ! என்று
அவனை நினைத்த வாறே வகுப்பறைக்குள் நுழைந்தேன்.
குட் மார்னிங் என்றார்கள் மாணவர்கள்.
குட் பாம்பு என்றேன்.
அந்த வகுப்பில் என்ன நடத்தினேன் எப்படி நடத்தினேன் என்றே தெரியவில்லை.
மனமெல்லாம் அந்த
நாகராஜனே நிறைந்திருந்தான்.
சுப்பு ரத்தினம்.
அடடா.... உங்களுக்கும் இனிய அனுபவம் தான்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.
முதல் பத்தி படித்தவுடம் ஏதோ பிரமாண்டமான அனுபவம் காணப் போகும் ஆவலில் நான் .... இருந்தாலும் நகைச்சுவை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
நீக்குநாகராஜ் என்ற பெயர் இருப்பதால் பாம்பு கிட்ட வரலையோ?
பதிலளிநீக்குநல்ல அனுபவம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
நீக்குஆஹா தலைமாட்டில் பாம்பா..பாட்டிக்கு தைரியம் தான் கூப்பாடு போட்டு ஊரை கூட்டாமல் தங்கையை காப்பாத்தி இருக்கிறார்.பாம்பை பார்த்தால் தோஷம் போய் விடும் என்று ஒருவர் டி.வியில் சொல்லி கொண்டு இருந்தார்.கையால் தூக்கி போட்டால் என்னவாகும் என்று சொல்லலை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.
நீக்கு"சொல்லி வாயை மூடல, அதுக்குள்ள பொட்டுன்னு பொடரில ஒரு அடி – யாருன்னு பார்த்தா எங்கப்பா!" - இது பாம்பு வந்த அனுபவத்தைவிட சூப்பர் ப்பா.
பதிலளிநீக்குபாம்பு அனுபவம் நன்றாக ரசித்தோம் வாழ்த்துக்கள்.
மீண்டும் பாம்பு வரவும் வாழ்த்துக்கள்.
விஜய்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!
நீக்குபயத்தைக் கூட இப்படி நகைச்சுவையா எழுத முடியுமா ? பாம்பு கூட அந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.
நீக்குதிகிலான அனுபவமாத்தான் இருக்கு. கதவில் இருந்த கொழ கொழ பாம்பை எடுத்து தூர எறிந்த பின் லேட் ஆக்ஷனாகத்தான் திடுக்கிடல் + பயம் வந்திருக்கும்!!!
பதிலளிநீக்குஎங்கள் ஏரியாவில் வீட்டு எல்லைக்குள் பாம்பு வந்ததுதான் புதிதே தவிர, நடக்கும் பாதையில் பாம்பு கிராஸ் செய்வது அடிக்கடி நடக்கும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபாம்புன்னா பயம். டிவியில் வந்தாலே பாக்க மாட்டேன்
பதிலளிநீக்குஇந்த பதிவை முதல் சில பாராவுக்கு பின் படிக்கலை . எல்லாம் நம்ம வல்லிம்மாவால் வந்தது :)
அட ரொம்ப பயந்துட்டீங்களா.... பயப்படாம படிங்க மோகன். ஒண்ணும் ஆகாது. நான் பார்த்துக்கறேன்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.
பாம்பு பத்தி படிக்கறச்ச நல்லாத்தான் இருக்கு..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குஅடடா! நானு ரிஷிகேசத்துலே படுத்து எந்திரிச்சு ரஜாயை உதறினபோது ஒரு மூணடி நீளமான பாம்பு பொத்துன்னு கீழே விழுந்திருச்சு! நான் கத்தின கத்து ஹரித்வார் வரைக் கேட்டதுன்னு அப்பாலிக்கா பஸ்சுலே வரும்போது எல்லாரும் சொன்னாங்க! நானு நாகர்கோவில்காரனுங்க, பாம்பு பத்தி ஏகத்துக்கும் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குது! எழுதினா யாரும் பயந்துபோய் படிக்க வர மாட்டாங்களோன்னு சும்மாயிருக்கேன்! :-))
பதிலளிநீக்குஅட சேட்டை அண்ணாச்சி நீங்க எழுதுங்க... சிறப்பான நகைச்சுவையோடு நீங்க எழுத நாங்க படிக்க.... சூப்பர் தான் போங்க!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை.
ஹா...ஹா அசகாய சூரர்தான்.:))
பதிலளிநீக்குரசித்தேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குநகைச்சுவையாக இருந்தது பதிவு.
பதிலளிநீக்குரசித்துப் படித்துச் சிரித்தேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
நீக்குபாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று சும்மாவ சொன்னாங்க..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குணசீலன்.
நீக்குபாம்பு அனுபவம் நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குஎங்க வீட்டிலும் இப்படி நிறைய அனுபவம்..உண்டு.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ஜி!
நீக்கு// அப்படின்னு கேட்க, ஒருத்தர் நம்ம கிட்ட கேட்டா, உடனே சொல்லாம விட்டுடலாமா? //
பதிலளிநீக்குவிவரம் தெரியாம கேட்டுப்புட்டாங்க போல
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்....
நீக்குபாம்பு நம் கண்ணில் படாத வரை அதைப்பற்றி கதை கேட்பதில் நல்ல ஸ்வாரஸ்யம் உள்ளது.
பதிலளிநீக்குநான் BHEL Township Quarters லிருந்து என் ஆபீஸுக்கு பைக்கில் போகும் போதும், திரும்ப வீட்டுக்கு வரும் போதும் நிறைய மிக நீள பாம்புகள் ரோட்டின் இந்தப்பக்கத்திலிருந்து அந்தப்பக்கம் வரை கடந்து போவதைப் பார்த்து திகைத்துப்போய், பலநாட்கள் வண்டியை நிறுத்தியுள்ளேன்.
ரயில் வண்டிகள் கடந்து போகும் போது ஆள் இல்லா கேட்டில் நிற்போம் அல்லவா, அது போலத்தான் இதுவும். அதே பாதையில் நிறைய மயில்களும் அடிக்கடி என் கண்களில் தென்படும்.
பாம்பைப்பற்றிய நகைச்சுவையான பதிவு கும்பகர்ணன் ஜி. பாராட்டுக்கள்.
கும்பகர்ணன் ஜி.... :)
பதிலளிநீக்குஉங்களது அனுபவங்களையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வை.கோ. ஜி.
சிறு வயதில் தான் கவலையின்றி தூங்கமுடியும்.
பதிலளிநீக்குபாம்பு அனுபவம் சிரிப்பை வரவழைத்து விட்டது.
சிறு வயதில் மட்டும் தான் கவலையின்றி தூங்க முடியும்..... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.