[மனச்சுரங்கத்திலிருந்து…]
நெய்வேலி நினைவுகளைப் பற்றி "மனச்சுரங்கத்திலிருந்து" பக்கங்களில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறேன். எங்கள் வீட்டிலிருந்த பல மரங்கள்
பற்றியும் அதில் இருந்து கிடைத்த காய்-கனிகள் பற்றியெல்லாம் சில பதிவுகளில்
எழுதியிருக்கிறேன். இந்தப் பகிர்வில் நாவல் பழம் பறிக்கப்போய் நடந்த அமர்க்களங்களைப் பற்றி
சில சுவையான விவரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.
எங்கள் வீட்டில் மூன்று பேர் – நான், அக்கா, தங்கை. இடது பக்க வீட்டில் [வலப்பக்க வீட்டில் இருந்தது டிரைவரூட்டம்மா] ஒரு மலையாளி. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் – பிரசாத், ஒரு அக்கா
மற்றும் முரளி. அவர்களுக்கு பக்கத்து வீட்டில் ஒரே ஒரு அக்கா. ஆக மொத்தம் ஏழு
பேர். எங்களோட
எல்லா விஷமமும் அரங்கேறுவது எங்கள் தோட்டங்களில் தான்.
எங்கள் வீட்டிலும், முரளி வீட்டிலும் பல மரங்கள் இருந்தாலும், நாவல் பழ
மரம் மட்டும் மூன்றாவதாக இருக்கும் அக்கா வீட்டில் தான் இருந்தது. ஒரு நாவல் பழ சீசனில் எங்கள் எழுவர் படை அந்த நாவல்
மரத்தின் அருகே முற்றுகையிட்டது. கீழே விழுந்திருந்த பழங்களை எல்லாம் எடுத்துப் பார்த்தால் ஆங்காங்கே
அடிபட்டு தூசி படிந்திருந்தது. அவற்றை உண்ண மனசு இடம் தரவில்லை – எப்படித் தரும், மேலே மரம் முழுவதும் பெரிய பெரிய முழு நாவல் பழங்கள் எங்களை “வா, வா” என்று அழைக்கும் போது?
எங்கள் ஏழு பேரில் – “டவுசர் பாண்டி” யாக இருந்த நான், பிரசாத், முரளி
மூன்று பேருமே மரம் ஏறுவது என்றும் நாவல் பழங்களைப் பறித்து ட்ரவுசர் பாக்கெட்டில்
போட்டுக் கொண்டு கீழே இறங்கி வந்து எல்லோரும் பகிர்ந்து உண்ணுவது என்றும் எழுவர்
படையில் – பெரும்பான்மையாக இருந்த மகளிர் அணி முடிவு செய்தது.
சரி என்று நாங்கள் மூவரும் நாவல் மரத்தில் ஏறினோம். அணில், பறவைகள்
கடிக்காமல் முழுமையாக இருந்த நாவல் பழங்களைப் பறித்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ள
ஆரம்பித்தோம். இரண்டிரண்டு பாக்கெட்டுகள் நிரம்பி வழியும் அளவுக்கு எடுத்து கீழே
இறங்க ஆயத்தமாகும்போது தான் அந்த எதிர்பாராத நிகழ்ச்சி...
கீழே இருந்து அண்ணாந்து பார்த்தபடி எங்கள் மூவரையும் உற்சாகப்படுத்திக்
கொண்டு இருந்த மகளிர் அணி திடீரென அலற ஆரம்பித்தது. ”டேய் அங்க பாரு, மரத்துல பாம்பு…!” என அலறல் சத்தம்
கேட்ட உடனே நானும் பிரசாத்தும் சரசரவென பாம்பை விட வேகமாக இறங்க ஆரம்பிக்க,
முரளியோ "ஆ... பாம்பா?" என்று பயத்தில் அலறியபடியே பூமியில் இருந்து பனிரெண்டு அடி மேலேயே இரண்டு கையையும் விட்டு அங்கிருந்து
அப்படியே கீழே விழ அப்போது ஆரம்பித்தது பிரச்சனை.
கீழே விழுந்தாலும் முரளி எழுந்து எங்களுடன் ஓடி வர, அதற்குள் எங்கள்
அம்மாக்கள் வீட்டிலிருந்து மகளிர் அணி போட்ட சத்தத்தில் ஓடி வர, பாம்பு விஷயம்
தெரிந்தது மட்டுமல்லாது, முரளி கீழே விழுந்தது முதல் ஆதியோடு அந்தம் வரை எல்லா
விஷயமும் கேட்டு – யார் யாரை அடிக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் அடித்துக் கொண்டு
இருந்தார்கள். முரளி கீழே
விழுந்ததில் கூட அவ்வளவு அடிபட்டிருக்காது – அவன் அம்மா அடித்ததில் தான் நிறைய
அடிபட்டு இருக்குமோ என்று எங்களுக்கு தோன்றும் அளவுக்கு அடி... எங்களுக்கும் தான்.
இத்தனை நடந்தாலும், மகளிர் அணி காரியத்தில் கண்ணாய் இருந்தார்கள் –
எங்களைப் பார்த்து ஜாடையாகக் கேட்டுக் கொண்டு இருந்தனர் – பாக்கெட்டில் இருக்கும்
நாவல் பழம் பத்திரம் தானே! நாங்களும் அடி வாங்கியபடியே பதில் கொடுத்துக் கொண்டு இருந்தோம். பத்திரமாக இருக்கு!
அடித்து ஓய்ந்த பின் அவரவர் உள்ளே செல்ல, மகளிர் அணி காரியத்தில் இறங்கிற்று. எல்லா நாவல் பழங்களையும் தண்ணீரில் சுத்தம் செய்து, உப்பு,மிளகாய்த்தூள் தூவி கலக்கி, ஏழு பங்கு பிரித்தனர். முரளிக்கு மட்டும் கொஞ்சம் அதிகம் -- பாவம், கீழே விழுந்ததால்! எல்லோருமாக நாவல் பழங்களைச் சுவைத்தோம்.
குப்புற விழுந்தாலும் நாவல் பழத்தை சுவைக்காமல் விடுவோமா என்ன... தில்லியில் நாவல் பழத்தை எப்போது பார்த்தாலும் அந்த நினைவுகள் வந்து
கொண்டேயிருக்கும். உடனே பக்கத்து வீட்டு முரளியை அலைபேசியில் அழைத்து விடுவேன். ஏனெனில் முரளியும் தில்லியில் தான் தாமசம் கேட்டோ! [மலையாளம்…!]
மீண்டும் ”மனச்சுரங்கத்திலிருந்து…” பகுதியில் வேறொரு நினைவுடன்
சந்திக்கிறேன்…
நட்புடன்
வெங்கட்.
நாவல் பழம் பற்றி
பதிலளிநீக்குநாவலாய்
நாவூற வைக்கும் இனிய
நல்ல பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
எழுவர் படையில் – பெரும்பான்மையாக இருந்த மகளிர் அணி முடிவு செய்தது
பதிலளிநீக்குஅருமையான தீர்மானம்!
முரளி கீழே விழுந்ததில் கூட அவ்வளவு அடிபட்டிருக்காது – அவன் அம்மா அடித்ததில் தான் நிறைய அடிபட்டு இருக்குமோ என்று எங்களுக்கு தோன்றும் அளவுக்கு அடி... எங்களுக்கும் தான்./
பதிலளிநீக்குநானும் இப்படியாக்த்தானே கீழே விழுந்த பிள்ளைகளை அடி பின்னியிருக்கிறேன்..
இப்போது வருந்துகிறேன்..
மலரும் நினைவுகள்..
”மனச்சுரங்கத்திலிருந்து…” வந்து மின்னிய வைரங்களுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி: தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு//அருமையான தீர்மானம்// உண்மை.
//நானும் இப்படித்தானே அடித்திருக்கிறேன்// - பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு.... :(
தங்களது வாழ்த்துகளுக்கும், கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி.
இத்தனை நடந்தாலும், மகளிர் அணி காரியத்தில் கண்ணாய் இருந்தார்கள் – எங்களைப் பார்த்து ஜாடையாகக் கேட்டுக் கொண்டு இருந்தனர் – பாக்கெட்டில் இருக்கும் நாவல் பழம் பத்திரம் தானே! நாங்களும் அடி வாங்கியபடியே பதில் கொடுத்துக் கொண்டு இருந்தோம். பத்திரமாக இருக்கு!
பதிலளிநீக்குஆற்றாது அடி வாங்கினாலும்
காரியத்தில் கண் வைத்த தாண்டவ்க்கோன்கள்!
அருமையான பகிர்வு..
கீழே விழுந்திருந்த பழங்களை எல்லாம் எடுத்துப் பார்த்தால் ஆங்காங்கே அடிபட்டு தூசி படிந்திருந்தது. அவற்றை உண்ண மனசு இடம் தரவில்லை //
பதிலளிநீக்குவெங்கட் ,சுட்ட பழம் வேண்டாம் என சுடாத பழங்கள் எடுத்தீர்களா?
மலரும் நினைவுகள் அருமை.
நாவல் பழத்தை சாப்பிட தோன்றுகிறது படத்தைப் பார்த்தவுடன்.
@ இராஜராஜேஸ்வரி: //ஆற்றாது அடி வாங்கினாலும்
பதிலளிநீக்குகாரியத்தில் கண் வைத்த தாண்டவ்க்கோன்கள்!// காரியத்தில் கண் வைக்கத்தானே வேண்டும்....
தங்களது தொடர் கருத்துகளுக்கு மிக்க நன்றி.....
Novel அனுபவம் தான்!
பதிலளிநீக்கு@ கோமதி அரசு: ஆமாம் அம்மா சுடாத பழம் தான்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....
@ கே.பி. ஜனா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....
பதிலளிநீக்குபடத்தில் காட்டப்பட்டுள்ள நாவல்பழ பளபளப்பாக பார்க்கவே நாக்கில் நீரை வரவழைப்பதாக உள்ளது.
பதிலளிநீக்குநாவற்பழம் போன்ற மிகச்சுவையான அனுபவம் தான்
.
சிறுவயதில் நமக்கு விழும் எல்லா அடி வாங்கும் அனுபவங்களுக்கும் பின்னே, மகளிர் அணியே தான் நிச்சயம் இருக்கும். அருமையான நகைச்சுவையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
தமிழ்மணம்: 2 vgk
@ வை. கோபாலகிருஷ்ணன்: //சிறுவயதில் நமக்கு விழும் எல்லா அடி வாங்கும் அனுபவங்களுக்கும் பின்னே, மகளிர் அணியே தான் நிச்சயம் இருக்கும்.// :)))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ஏற்கனவே வாய் மொழியாகக் கேட்டிருந்ததுதான் என்றாலும் படிக்கும் பொழுது நன்றாகவே இருக்கிறது.
பதிலளிநீக்குமனச்சுரங்கத்தில்தான் எத்தனை இனிமையான நினைவுகள் புதைந்து கிடைக்கிறது.
பதிலளிநீக்குசில இனிமையான ஞாபகங்கள்தான் நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றன என நினைக்கிறேன்.
Noவல் பறிக்கப் போய் Noபல் ஆக வந்த கதை நன்று. நன்று.
பதிலளிநீக்குஅடி வாங்கி அழுத கதையெல்லாம் மறந்து இருக்கும் போது, திரும்பவும் எங்கள் நினைவுகளையும் கிளப்பி விட்டு சிரிக்க வச்சுட்டீரே! சின்ன வயசில கூட்டமா அடி வாங்கினா ஜாலியாகத்தான் இருக்கும். இல்லையா!
(அப்புறம் பாம்பை த்ராட்டுல் விட்டுட்டீங்களே! பாம்பை அடிச்சிங்களா! புடிச்சிங்களா! சொல்லவே இல்ல.)
அருமை! பதிவு மட்டுமல்ல படதில் உள்ள நாவல்
பதிலளிநீக்குபழங்களும் அருமை!
புலவர் சா இராமாநுசம்
சிறுவயது ஞாபகங்கள் என்றுமே பசுமையான து தான். அதை சுவை பட நல்லா சொல்லி இருக்கீங்க.
பதிலளிநீக்குஉங்கள் அனுபவப் பகிர்வு சுவாரஸ்யமாக இருக்கு பாஸ் சுவையான பல பழங்களில் நாவல் பழமும் வித்தியாசமான சுவையுடைய அருமையான பழம்
பதிலளிநீக்குஆஹாஹா அருமையான மலரும் நினைவுகள், நானும் நாவல் பழம் பறிக்கபோயி கல்லெறி பட்டு ரத்தகளரியா வீடு வந்து வாங்கி கட்டிக்கொண்டது உண்டு...!!!
பதிலளிநீக்கு//முரளிக்கு மட்டும் கொஞ்சம் அதிகம் -- பாவம், கீழே விழுந்ததால்! //
பதிலளிநீக்குகீழே விழ்ந்ததில் ஒரு லாபம் போலிருக்கே?
மிகச் சிறப்பாக இருக்கு உங்க அனுபவப் பதிவு.
சுவாரஸ்யமான அனுபவப் பகிர்வு..
பதிலளிநீக்குஇத்தனை நடந்தாலும், மகளிர் அணி காரியத்தில் கண்ணாய் இருந்தார்கள் – எங்களைப் பார்த்து ஜாடையாகக் கேட்டுக் கொண்டு இருந்தனர் – பாக்கெட்டில் இருக்கும் நாவல் பழம் பத்திரம் தானே!
பதிலளிநீக்குஹா.. ஹா..
ஏன் சிறுகதை மாதிரி எழுதறீங்க.. நாவலா வே எழுதலாம்.. தொடருங்கள்.
என் சிறுவயதில் நடந்த இதே போன்ற நிகழ்வை ஞாபகப் படுத்திய பதிவு!
பதிலளிநீக்குசாகசம்(மரமேறி பழம் ருசிக்க), பயம்(பறித்த பின்னாவது வந்ததே பாம்பு!), சிரிப்பு(விழுந்தாலும், உதை வாங்கினாலும் பழமெல்லாம் பத்திரமாய் பங்கு), அழுகை(யார் யாரை அடிக்கிறதென்றே தெரியாமல்...), ஆசுவாசம்(தொடரும் முரளியுடனான நட்பு) என மொத்த பதிவும் வெகு சுவாரஸ்யம் சகோ...
பதிலளிநீக்குஈஸ்வரன் போல் 'பாம்பு என்னாச்சு' என எனக்கு தோன்றியது. பரபரப்பில் அதைப் பார்க்காமல் விட்டாச்சு.
ரிஷபன் சாரின் டைமிங்&ரைமிங் ரசித்தேன்.
ஹைய்யா... கமெண்ட் போட முடியுதே! நன்றி சகோ..
பதிலளிநீக்கு@ வேங்கட ஸ்ரீனிவாசன்: ஆமாம் சீனு... உன்னிடம் சொல்லி இருக்கலாம்... சில நினைவுகள் நம்மை விட்டு அகலுவதே இல்லை - நீ சொல்லிய சில விஷயங்கள் [சூடு வைத்தது!] உட்பட!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு....
@ புதுகைத்தென்றல்: //சில இனிமையான ஞாபகங்கள்தான் நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றன என நினைக்கிறேன்.//
பதிலளிநீக்குமுற்றிலும் உண்மை...
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.....
@ ஈஸ்வரன்: //Noவல் பறிக்கப் போய் Noபல் ஆக // அட என்ன ஒரு டைமிங்!
பதிலளிநீக்குபாம்பு என்ன ஆச்சு? வேற என்ன வாங்கின அடில, பாம்பை யாரு பார்த்தா! பார்த்ததெல்லாம் நாவல் பழங்களை மட்டுமே!!!!
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி...
அடிவாங்கிக் கொண்டிருந்தாலும் காரியத்தில் கண்ணாயிருந்த
பதிலளிநீக்குமகளிர் அணியைக் குறித்து எழுதியதைப் படிக்க
என்னையறியாது சிரிப்பு வந்துவிட்டது
இதுபோன்ற சிறு சிறு அழகிய நினைவுகள்தான்
இன்னமும் நம் வாழ்வை சுவாரஸ்யப் படுத்திப் போகின்றன
நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்
tha.ma 8
பதிலளிநீக்குஅருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
Padangalum pathivum arumai Sir.
பதிலளிநீக்குTamilmanam 9.
@ புலவர் சா. இராமாநுசம்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே....
பதிலளிநீக்கு@ லக்ஷ்மி: உண்மைதான் அம்மா.. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.....
பதிலளிநீக்கு@ K.s.s.Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....
பதிலளிநீக்கு@ MANO நாஞ்சில் மனோ: //நானும் நாவல் பழம் பறிக்கபோயி கல்லெறி பட்டு ரத்தகளரியா வீடு வந்து வாங்கி கட்டிக்கொண்டது உண்டு...!!!//
பதிலளிநீக்குஅட!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ....
@ ராம்வி: //கீழே விழ்ந்ததில் ஒரு லாபம் போலிருக்கே?// கொஞ்சம் லாபம் நிறைய அடி! :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி....
@ அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ...
பதிலளிநீக்கு@ ரிஷபன்: //ஹா.. ஹா..
பதிலளிநீக்குஏன் சிறுகதை மாதிரி எழுதறீங்க.. நாவலா வே எழுதலாம்.. தொடருங்கள்.// என்ன ஒரு ரைமிங் கருத்துரை!
தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
@ கலாநேசன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....
பதிலளிநீக்கு@ நிலாமகள்: அட உங்க கருத்துரை! என் உதவி இல்லாமலே... :) மாற்றம் வேலை செய்கிறது....
பதிலளிநீக்குஇனிமையான கருத்துரை எழுதியமைக்கு மிக்க நன்றி சகோ....
@ ரமணி: //இதுபோன்ற சிறு சிறு அழகிய நினைவுகள்தான்
பதிலளிநீக்குஇன்னமும் நம் வாழ்வை சுவாரஸ்யப் படுத்திப் போகின்றன// உண்மை....
தங்களது வருகைக்கும் இனிமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி....
@ திண்டுக்கல் தனபாலன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே....
பதிலளிநீக்கு@ துரை டேனியல்: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே...
பதிலளிநீக்குசுரங்கத்திலிருந்து தோண்டியெடுத்த தங்கம்!
பதிலளிநீக்குநாவல் பழமேன்றால் எனக்கு நினைவில் வருவது..
பதிலளிநீக்கு'ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தினம்' அன்று நாவல் பழத்துடன் பூஜை புனஸ்காரம் நடக்கும்.
@ சென்னை பித்தன்: ஆஹா... என்னவொரு கருத்து! தங்கமான மனசு உங்களுக்கு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்குக் தங்கமான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா...
@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....
பதிலளிநீக்கு//சில நினைவுகள் நம்மை விட்டு அகலுவதே இல்லை - நீ சொல்லிய சில விஷயங்கள் [சூடு வைத்தது!] உட்பட!//
பதிலளிநீக்குசீனுவிடம் சீக்கிரம் சூடு வைத்த அனுபவத்தை ’கொட்டை’ எழுத்தில் எழுதச் சொல்லுங்கள்.
மனச்சுரங்கத்திலிருந்த நாவல்பழங்கள் இனிக்கின்றன.
பதிலளிநீக்குமெயின் ரோட்டோரம் எங்கள் வீட்டு முன்வாசலில் நாவல்மரம் இருந்தது. சண்டைக்காலத்தில் பாதுகாப்பிற்காக மரத்தைத் தறிக்கச் சொல்லி தறிக்கப்பட்டது :(
@ ஈஸ்வரன்: தங்களது இரண்டாவது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....
பதிலளிநீக்கு@ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....
பதிலளிநீக்குமரங்களை வெட்டியது வருத்தம் தான்!
நாவலான பதிவு!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்கு