திரிவேணி சங்கமம் – காசி பயணம் – பகுதி - 14
இன்று உங்களை அழைத்துச்
செல்லப்போவது ஆனந்த பவனுக்கு. அடையார் ஆனந்த பவனுக்கு இல்லை அலஹாபாத்
ஆனந்தபவனுக்கு. 1900-களில் மோதிலால் நேரு ஒரு சிறந்த வழக்குரைஞர். இலண்டனுக்கும் இந்தியாவிற்கும் அடிக்கடிச்
சென்று வந்து கொண்டிருந்தவர். தனது ஊரான
அலஹாபாதின் சர்ச் ரோடில் இருந்த ஒரு வீட்டையும் அதைச்சுற்றிய தோட்டத்தினையும்
வாங்கினார். பெரிய் வீடு தான் ஆனால் மோசமாக இருந்த வீடு.
வீட்டினை வாங்கி அதை
புனர்நிர்மாணம் செய்ய ஆரம்பித்தார். பத்து
வருடங்களுக்கு மேல் இந்த வேலை நடந்ததாம். ஒவ்வொரு முறை இலண்டன் செல்லும்போதும்
அங்கே இருந்து தனக்குப் பிடித்த வகையில் அறைகலன்களையும் பொருட்களையும் வாங்கி
வந்து தனது மாளிகையில் வைத்தாராம் மோதிலால் நேரு. ஆங்கிலேயர்களின் வீடுகளைப் போல
வசதிகள் கொண்டு கட்டுவதில் முனைப்பாக இருந்திருக்கிறார்.
இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த
ஆனந்த பவன் சர் சையத் அஹமது கான் என்பவரிடமிருந்து 19000 ரூபாய்க்கு வாங்கப்
பட்டதாம்! இப்போது இந்த இடத்தின் மதிப்பு கோடிகளில்! பக்கத்திலேயே இன்னோர் வீடும் விலைக்கு வர,
அதையும் வாங்கி தான் தங்குவதற்கு வைத்துக் கொண்டு, இந்த வீட்டினை 1930 – ஆம்
ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அன்பளிப்பாக்க் கொடுத்து விட்டாராம்
மோதிலால் நேரு. கட்டிடத்தின் பெயரை ஸ்வராஜ் பவன் என்று மாற்றி விட்டு, தான்
வாங்கிய அடுத்த வீட்டின் பெயரை ஆனந்த பவன் ஆக்கினார். காங்கிரஸ் கட்சியின் பல
முக்கியமான கூட்டங்கள் இங்கே தான் நடத்தப்பட்டது. பல சிறப்பான திட்டங்கள்
தீட்டியதும், சுதந்திரத்திற்கான முயற்சிகள் எடுத்ததும் இங்கிருந்து தான்.
இதே வீட்டில் பிறந்த இந்திரா
காந்தி, 1970-ஆம் ஆண்டு இவ்வீட்டினை இந்திய நாட்டிற்கு அர்ப்பணித்தார். அவரின் விருப்பப்படியே, இன்று அங்கே ஒரு
அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட்டு, மோதிலால் நேரு, ஜவஹர் லால் நேரு மற்றும்
இந்திரா காந்தி ஆகியோர்கள் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள், பரிமாறிய
கடிதங்கள், இந்திய விடுதலை இயக்கம் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள் என பல அரிய
பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
நேருவின்
ஜாதகம்: இந்த இடத்தில் நேரு பயன்படுத்திய பல பொருட்களை
வைத்திருக்கிறார்கள். பல பத்திரிகைகளில் வந்த சித்திரங்களையும், செய்திகளையும்
புகைப்படங்களின் அருகே ஒரு புகைப்படத்தில் ஹிந்தியில் ஏதோ எழுதி வைத்திருக்க
அருகில் சென்று படித்தால், அது நேருவின் ஜாதகம்! அதை ஒரு புகைப்படம் எடுத்து
வந்தோம். நீங்களும் பார்க்கத்தான்!
காந்தி அலஹாபாத்
வரும்போதெல்லாம் இங்கே தான் தங்குவாராம்.
அவர் தங்கிய இடத்தில் காந்தி பற்றிய நினைவுகளை அமைத்திருக்கிறார்கள்.
அங்கிருந்து அழகிய தோட்டத்தினை பார்க்க முடியும்.
இந்த அருங்காட்சியகத்தின்
வெளியே ஒரு ஹாலில் ஒரு கோளரங்கமும் இருக்கிறது. தினமும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நீங்கள் Light and Sound Show பார்க்க வசதிகளும்
செய்திருக்கிறார்கள்.
இந்த அருங்காட்சியகம்,
திங்கள் தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் திறந்து இருக்கும். 09.30 மணி முதல் 05.00 மணி வரை திறந்திருக்கும்
இங்கு செல்ல அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் – அதன் கட்டணம் இந்தியர்களுக்கு 10
ரூபாய், வெளிநாட்டவர்களுக்கு 50 ரூபாய்!
நாங்கள் முழுவதும் சுற்றி
விட்டு, சில புகைப்படங்கள் எடுத்த பின் வெளியே அமர்ந்திருந்தோம். அலஹாபாத்
செல்லும் அத்தனை பயணிகளும் இங்கே செல்கிறார்கள். நிறைய சுற்றுலாப் பயணிகளைக் காண
முடிந்தது. கங்கைக் கரையில் கண்ட “உலகம் சுற்றும் வாலிபனை” இங்கேயும் காண முடிந்தது. அது தவிர சில தெலுங்கு மக்களையும் பார்த்தோம்.
வேலூரைச் சேர்ந்த ஒரு தம்பதிகளைப் பார்த்தபோது, அந்தப் பெண்மணிக்கு உள்ளே சென்று
சுற்றிப் பார்க்க ஆசை. ஆனால் கணவருக்கோ கால் வலி! மனைவிக்கு, கணவனை விட்டு உள்ளே
செல்லவும் பிடிக்காது, செல்லாமல் இருக்கவும் முடியாது தவிக்க, ”நீ போயிட்டு வாம்மா, நான் இங்கேயே தம்பி பக்கத்துல
உட்கார்ந்துக்கறேன்’ என்று என்னருகில் உட்கார்ந்தார்.
என்னருகில் அமர்ந்த அவரிடம்
தமிழில் பேச, அவருக்கு மிகுந்த சந்தோஷம். ”அட இந்த
ஊர்லயா இருக்கீங்க, தமிழ் நல்லா பேசறீங்களே?” என்றார். அவர் பயணம் பற்றி கேட்டபோது வேலூரிலிருந்து கிளம்பி பதினெட்டு
நாட்கள் ஆகிவிட்டது என்றார். இன்னும் இரண்டு நாட்கள் சுற்றிவிட்டு தில்லி வந்து
அங்கிருந்து ரயிலில் செல்லப்போவதாகக் கூறினார். தொடர்ந்து பயணம் செய்வதில்
பலருக்கு உடல் நிலை சரியில்லை எனவும் ‘எப்படா வீட்டுக்குப் போய் அக்கடான்னு
சாய்வோம்”னு இருக்கு எனவும் சொன்னார்.
பயணம் இனியது தான் ஆனால்
தொடர் பயணம் நிச்சயம் இனிக்காது இல்லையா! இப் பயணத் தொடரின் பதினான்காம் பகுதி
இது. இன்னும் இரண்டு பகுதிகளில் பயணத்
தொடர் முடியும்.
பயணத் தொடரின் அடுத்த
பகுதியில் சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
கட்டுரையின் சுவாரஸ்யமான பகுதிகளில் ஒன்று. நேருவின் ஜாதகம் : ஜாதகங்களைத் தமிழில் படித்தாலே புரியாது! ஹிந்தியிலா புரிந்துவிடப் போகிறது?!!! :))
பதிலளிநீக்கு//ஹிந்தியிலா புரிந்துவிடப் போகிறது?!!! :))//
நீக்கு:)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அடையார் ஆனந்த பவன் டெல்லியிலும் உண்டா :-) நேருவின் ஜாதகமே இப்போது உங்கள் கையில். என்னவோ போங்க :-)
பதிலளிநீக்குநல்ல பகிர்வு வெங்கட் அருமையான புகைப்படங்களுடன்...
டெல்லியிலும் அடையார் ஆனந்த பவன் கிளை இருக்கிறது - க்ரீன் பார்க் என்னும் இடத்தில்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால ஹனுமான் ஜி!
அருமையான தகவல்கள்... நன்றி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.
நீக்குத.ம.4
பதிலளிநீக்குதமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு நன்றி பால ஹனுமான் ஜி!
நீக்குபார்க்கவேண்டிய இடங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்களை அழகாகத் தந்திருக்கிறீர்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குபயணம் இனியது ...!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குதகவல்களுக்கு மிகவும் நன்றி..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேடந்தாங்கல் கருண்.
நீக்குநாமாகத் திட்டமிட்டு ஆங்காங்கே ரெஸ்ட் எடுத்திட்டுப் போகும் தொடர் பயணங்கள் நல்லாத்தான் இருக்கும். ட்ராவல்ஸ் ஆட்கள் கூட்டிட்டுப் போகும் புயல்வேகப் பயணம்ன்னா கொஞ்சம் கஷ்டம்தான். உடல் நிலை பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.
பதிலளிநீக்குபெரிய ஆட்களோட ஜாதகமெல்லாம் இப்ப உங்க கையில். அப்ப நீங்களும் இனிமே ஒரு வி.ஐ.பிதான் :-))
நானும் நண்பரும் ரயிலில் சென்று அங்கே ஒரு வாகனத்தினை அமர்த்திக்கொண்டதால் நிம்மதியாகச் சுற்ற முடிந்தது. தமிழகத்திலிருந்தும், மற்ற மாநிலங்களிலிருந்தும் பஸ் மூலம் வந்த பயணிகள் படும் கஷ்டம் ரொம்பவே அதிகம் என தோன்றியது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
nalla pakirvu anne...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குநேர்ஜி என்றால் ஒரு ஸாஃப்ட் கார்னர்:)
பதிலளிநீக்குஅவர் வீட்டைச் சுற்றிப் பார்த்து,அழகான படங்களையும் எடுத்துப் பதிவிட்டீர்கள். நேருவின் ஜாதகம் என்ன சொல்கிறது?நான் இன்னும் ட்ராவல்ஸ் டூர் போனதில்லை.நமக்கு அந்த வேகம் ஆகாதுன்னு தெரியும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குதொடர்ந்து ட்ராவல்ஸ் பயணம் என்றால் கஷ்டம் தான்.
அமைதிச்சாரல் சொல்றது சரிதான்.ட்ராவல்ஸ் ஆட்கள் கூட போனா டூரே வெறுத்துடும்.அலகாபாத் 3 முறை போய் வந்தாச்சு.பெரிய வீடும் அதன் தோட்டமும் எப்படி தான் அரசிற்கு தர மனம் வருமோ??
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.
நீக்குஅலகாபாத் போன போது பார்க்க நேராமில்லாமல் வந்து விட்டோம். இப்போது உங்கள் பதிவின் மூலம் நன்கு சுத்திப் பார்த்துவிட்டேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஅலஹாபாத் பிரயாணம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கட்டுரைகளை பிரதி எடுத்துக் கொண்டு போகவேண்டும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅனுமதி உண்டா?
நேருவின் ஜாதகம் என் வலைத்தளத்தில் என்று பெருமையாக கூறலாம் நீங்கள்!
கட்டுரைகளை தாராளமாக பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்! :)
நீக்குஅனுமதி இலவசம் :))))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
நேரு ஜாதகம் போட்டிருக்காரே அதுலே இன்டரஸ்டிங்கா ஒரு விசயம் பார்ப்போம் அப்படின்னு
பதிலளிநீக்குஏழாவது இடம், யாரு களத்ரகாரகன், அவன் எங்கிருக்கான், சுக்ரன் எங்கிருக்கான் அப்படியெல்லாம் பாக்க நினச்சேன்.
ஃபோட்டோவிலே எழுத்தே தெரியல்லையே !!
சுப்பு தாத்தா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.
நீக்குஎங்கே ஜாதகம்!
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு
மேலிருந்து நான்காம் படம் பார்க்கவும்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.
உங்கள் பயணத்தில் நேருவின் பங்களாவும் பார்த்துவிட்டோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குபழைய பல வரலாறு செய்திகள் நல்ல பல பயனுள்ள தகவல்கள் பற்றி தெரிந்து கொண்டேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.
நீக்குபடங்களும் தகவல்களும் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஅறைக்கலங்கள் ... அழகு தமிழ்!
பதிலளிநீக்குஇந்தியர்களுக்கு 10; வெளிநாட்டவர்களுக்கு 50!
ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பலரது பேச்சுக்களை உள்வாங்கிய அவ்வீட்டை மறுபடியும் பார்த்துக் கொள்கிறேன். அந்த துளசி மாடப் பசுமையோடு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
நீக்குதாத்தா வீட்டைக் கொடுத்து விட்டு நாட்டையே தனது பரம்பரை வாரிசுகளுக்கு வரும்படியாப் பண்ணிட்டாரு பாத்தீங்களா!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
பதிலளிநீக்குஇனிமையான பயணக்கட்டுரையும் படங்களும் ஜோர் ஜோர் ;)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்கு