வெள்ளி, 18 ஜனவரி, 2013

ஃப்ரூட் சாலட் – 29 – மாதவிடாய் – ஆவணப்படம் - சரிதாயணம்


இந்த வார செய்தி:

இந்த மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை அன்று “தில்லிகைஅமைப்பின் பன்னிரெண்டாவது கூட்டம் தில்லி தமிழ்ச் சங்கத்தின் பாரதி கலையரங்கில் நடைபெற்றது. அதில் முதல் நிகழ்வாக திருமதி கீதா இளங்கோவன் இயக்கிய ஆவணப்படமான “மாதவிடாய்திரையிடப்பட்டது. இப்படம் பற்றி இணையத்தில் சில வலைப்பதிவாளர்கள் ஏற்கனவே எழுதிய போது படத்தினை பார்க்க ஆவலாகயிருந்தேன். அது இப்போது நிறைவேறியது.



மாதா மாதம் இரத்தப் போக்கு ஏலாலம்படி ஏலோஎன்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, பெண்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி எல்லோரும் புரிந்துகொள்ள ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். படம் பற்றி சொல்லும்போதே ஆண்களுக்கான பெண்கள் படம்என்று தான் சொல்கிறார்கள்.

தமிழக சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், திலகவதி IPS போன்றவர்களிடம் மாதவிடாய் பிரச்சனைகள் பற்றிய கருத்துகளைக் கேட்பது மட்டுமல்லாது, பள்ளிகள், பேருந்து நிலையங்கள், கல்லூரிகள் போன்று பொதுமக்கள் புழங்குமிடங்களில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் படும் அவஸ்தைகள் பற்றி நமக்குச் சொல்லிப்போகிறது 38 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படம்.

ஒரு கிராமத்தில் இதற்காகவே தனியாக ஒரு அறை கட்டி வைத்திருப்பது – அதில் எந்த விதமான சௌகரியங்களும் – மின்சாரம், கழிப்பறை – போன்ற எந்த விதமான சௌரியங்களும் இல்லாத இடத்தில் தங்க வைப்பது பற்றி படிக்கும்போது எனது அம்மா தனது சின்ன வயதில் இப்படிப் பட்ட இடத்தில் பட்ட கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டது நினைவுக்கு வந்தது.

ஆவணப் படம் பார்த்த பிறகு, பெண்மைஎன்ற தலைப்பில் முனைவர் உமாபாரதி, பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடாஎன்ற தலைப்பில் முனைவர் கே. நாச்சிமுத்து மற்றும் இன்றைய சூழலில் பெண்மைஎன்ற தலைப்பில் பண்பாட்டு அமைச்சகத்தில் பணிபுரியும் திருமதி சத்யா அசோகன் ஆகியோர் பேசினார்கள். பிறகு கலந்துரையாடலும் நடந்தது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மதியம் 03.00 மணிக்கு நடக்கும் தில்லிகை இலக்கியக் கூட்டம் என் போன்ற தில்லிவாசிகளுக்கு நல்ல ஒரு வாய்ப்பு. இந்த மாதக் கூட்டத்தில் பார்த்த ஆவணப்படம் நிச்சயம் எல்லா ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் பார்க்கவேண்டிய ஒன்று.  வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் அனைவரும் பாருங்கள்.
 
இந்த வார முகப்புத்தக இற்றை:

எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலதான். தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும். அருகில் சென்று பாருங்கள் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்.

இந்த வார குறுஞ்செய்தி

THE BEST LESSON OF LIFE – ‘DON’T GET FRUSTRATED DOING CONTINUOUS WORK WITHOUT ANY RESULTS; SOMETIMES THE LAST KEY OF THE BUNCH OPENS THE LOCK’.

ரசித்த புகைப்படம்: 

இந்த மூன்று குழந்தைகளையும் பார்க்கும்போது உங்கள் சிறுவயதில் நீங்கள் செய்த குறும்புகளை நிச்சயம் உங்கள் மனக்கண்ணில் முன்னே நிறுத்தி இருக்குமெனெ நம்புகிறேன். நான் பிடித்துத் தொங்கிய மாமரக் கிளைகள் எனக்கு நினைவுக்கு வந்தது!


  
ரசித்த பாடல்

தீபம் படத்தில் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி குரலில் பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியேஎன்ற பாடல் நான் ரசித்த, ரசிக்கும் பாடல்களில் ஒன்று. இதோ உங்கள் ரசிப்பிற்காய் இங்கே காணொளியாய்....

 




ரசித்த காணொளி:

தமிழ் சினிமா தெரிந்த எல்லோருக்கும் எல்லிஸ் டங்கனையும் தெரிந்திருக்கும்.  அவர் எடுத்த ஒரு குறும்படம் – சுமார் பதினான்கு நிமிடங்கள் ஓடக்கூடியது – இதோ இன்று உங்கள் பார்வைக்கு....  மதுரை வீரன், ஜல்லிக்கட்டு என பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது இப்படம். சற்றே நேரமெடுத்து ரசியுங்கள் நண்பர்களே.....




படித்ததில் பிடித்தது:

நண்பர் பால கணேஷ் அவர்கள் தனது வலைப்பூவில் எழுதிய சரிதா பதிவுகளைத் தொகுத்து சரிதாயணம் @ சிரிதாயணம்என்ற புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது எழுத்தாளர் பால கணேஷ் தனது கையொப்பமிட்டு சரிதாயணம் புத்தகத்தை எனக்குத் தந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இந்தப் புத்தகம் வாங்கிப் படிப்பவர்கள் நிச்சயம் சிரித்து மகிழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. கூடுதலாக அவரது வரலாற்றுப் புனைவான சிரித்திரபுரமும் இப்புத்தகத்தில் படிக்கக் கிடைக்கும். புத்தகத்தினை வாங்கி தாங்களும் படித்து, தங்களது நண்பர்களுக்கும் பரிசாக வழங்கலாம். புத்தகம் கிடைக்குமிடம் “ழகரம் புத்தகச் லை, 8/36, ஜோதி ராமலிங்கம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33.  புத்தகத்தின் விலை அப்படி ஒன்றும் அதிகமில்லை நண்பர்களே – ரூபாய் 60 மட்டுமே. சிரிப்பதற்கு இவ்வளவு பணம் செலவு செய்வதில் தப்பில்லை!



மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

60 கருத்துகள்:

  1. அந்நாட்களில் பெண்களின் நிலை தனியான அறையில் ஒதுக்கி வைக்கப்பட்ட பரிதாபமானது. இந்நாளிலோ பொது இடங்களில் புழங்குவதால் தர்மசங்கடமானது. விழிப்புணர்வு தரும் குறும்படம் நிச்சயம் வரவேற்க்கத் தக்கதே. அந்தச் சிறுவர்கள்... எனக்கும் சிறுவயது ஞாபகங்களை எழுப்பத் தவறவில்லை. இற்றை வழக்கம் போல் ரசனைக்குத் தீனி. ஏசுதாஸ் அப்போதெல்லாம் ‘கிலியே கிலியே’ என்று பாடினாலும் ரசிக்க, மயங்க வைக்கும் குரலாயிற்றே! என் ‘சரிதாயணம்’ புத்தகத்தை ரசித்து இப்படி‌யொரு அருமையான அறிமுகமும் தந்தமைக்கு மனம் நிறைந்த நன்றி நண்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ’’கிலியே.... கிலியே.... ‘’ :))))) இருந்தாலும் மயங்க வைக்கும் குரல் தான்.... உண்மை..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  3. அருமையான விழிப்புணர்வு ஆவணப் படம் பற்றிய பதிவும்...
    ரசித்த நிழற்படமும் , பிடித்த புத்தகமும் மனதில் நின்றது நண்பரே...
    ஊருக்கு போனதும் முதல் வேலை... சரிதாயணம் வாங்குவது தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  4. அருமையான சமூக பகிர்வு கூடவே ரசமான பதிவுகளும் மனதை அழகாக ஆக்கிரமித்தன அன்பரே........... நன்றி பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை..... மிக்க மகிழ்ச்சி ராஜகோபாலன்.

      நீக்கு
  5. அருமையான சமூக பகிர்வும், கூடவே ரசமான பதிவுகளும் அருமை அன்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றுக்கு இரண்டாய் கருத்துரை.... மகிழ்ச்சி ராஜகோபாலன்....

      நீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.....

      நீக்கு
  8. ஃப்ரூட் சாலட் – 29 – மாதவிடாய் – ஆவணப்படம் - சரிதாயணம்
    தொகுப்பு மிக அருமை. எல்லா ஆண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.நேரமின்மையால் தங்களின் படைப்புகளை படிக்கவில்லை. கூடிய விரைவில் படித்து கருத்துகளை தெரிவிக்கிறேன்.
    நீங்கள் வாழ்க பல்லாண்டு. வளர்க நின் தொண்டு
    அன்புடன்
    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைக்கும்போது மற்ற பதிவுகளையும் படித்து விடுங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜய்ராகவன் ஜி!.....

      நீக்கு
  9. நிறைவான ருசியுடன் இருக்குது ஃப்ரூட் சாலட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.....

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.....

      நீக்கு
  11. மாதவிடாய் குறித்த சமூகப் பார்வை, நண்பரின் புத்தகம் குறித்த அறிவிப்பு என கலக்கலான சாலட். உன்னதமான மகிழ்வைப் பதிவிட்ட புகைப்படத்தை என் முக நூலில் பகிர்ந்துகொண்டேன் .உங்களின் பதிவையும்....நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.....

      நீக்கு
  12. சுவையான தகவல்கள். ஆவணப்படத்தை பார்க்க வேண்டும்.

    //சிரிப்பதற்கு இவ்வளவு பணம் செலவு செய்வதில் தப்பில்லை!// ஆம் வெங்கட். வாய் விட்டு சிரித்தால் நேய்விட்டுப் போகும் என்பார்களே!!.அடுத்த முறை சென்னைக்கு செல்லும் பொழுது வாங்கி படித்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.....

      நீக்கு
  13. உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது.
    விழிப்புணர்வு படம், சிறுவர்களின் அட்டகாசம் தென்னிந்திய கிராம வாழ்க்கைப் பற்றிய படம் என்று சுவையான பஞ்சாமிர்தம் சாப்பிட்ட திருப்தி கிடைத்தது.
    நன்றி,

    ராஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களே.....

      நீக்கு
  14. பேசாப்பொருளாக இருந்ததல்லவா மாதவிடாய்... அறிதல் அவசியமாகிறது அனைவருக்கும். வெள்ளி தோறும் உங்க சாலட் மனதை நிறைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.....

      நீக்கு
  15. சரிதாயணம் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்குமா?

    இளங்கன்று பயமறியாது என்பதை நிரூபிக்கிறது சிறுவனின் சிரிப்பு. அவனிடத்தில் உங்களைக் கற்பனித்து புன்முருவலிக்கிறது மனசு.

    'கடைசி சாவி' தளரும் நம்பிக்கையை தூக்கி நிறுத்துமாறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிஸ்கவரி புக் பேலஸ் (ஸ்டால 43, 44) மற்றும் மயிலவன் பதிப்பகம் (ஸ்டால் 295. 22996) ஆகியவற்றில் என் ‘சரிதாயணம்’ கிடைக்கும் நட்பே.

      நீக்கு
    2. இளங்கன்று பயமறியாது.... :) உண்மை....

      புத்தகம் கிடைக்கும் இடம் நண்பர் கணேஷ் மேலே சொல்லி இருக்கிறார்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.....

      நீக்கு
    3. கணேஷ் அண்ணே தகவல் சேர்க்காது விட்டு விட்டேனோ? தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றி....

      நீக்கு
  16. Nice Quote!
    THE BEST LESSON OF LIFE – ‘DON’T GET FRUSTRATED DOING CONTINUOUS WORK WITHOUT ANY RESULTS; SOMETIMES THE LAST KEY OF THE BUNCH OPENS THE LOCK’.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.....

      நீக்கு
  17. தில்லிகைக்கு அழைத்துச் சென்று ஆவணப்படம் காண வாய்ப்பளித்ததற்கு நன்றி.

    அந்தப் படத்தில் ஒரு பதின்வயது சிறுமி, அந்த தனியறையைப் பற்றிக் கூறும் போது, “அந்த தனியறையே தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இங்குள்ள பெரியவர்கள் அந்த அறைக்கு மேலும் நல்ல வசதிகள் அதாவது கழிப்பறை கட்டுதல், மின் இணைப்பு கொடுத்தல் என்று பேசி இந்த தனியறை வழக்கத்தை நிலை நிறுத்த வழிகோலுகிறார்கள” என்று தெளிவாக கூறுகிறாள். அந்தத் தெளிவு அந்த ஊர் (கூவலபுரமா?) பெரியவர்களுக்கு இல்லையோ!

    தில்லிகை கலந்துரையாடல் நல்ல சூடாக இருந்தது. அன்றைய தலைப்புக்கு ஏற்ப பெண்கள் கை ஓங்கியிருந்தது. (ஆண்களை எங்கே பேச விட்டாங்க)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூவலபுரம் என்று தான் எனக்கும் நினைவு.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

      நீக்கு
  18. ஆவணப்படம் பார்க்க ஆவலாக உள்ளது!!
    ப்ரூட் சலாட் எப்பொதும் போல அருமை!!

    சரிதாயணம் நாளை தான் சென்று வாங்கவேண்டும்!!
    குறும்படம் மிக அருமை!! இப்போது தான் முதல் முறையாக பார்கிறேன்.
    மதுரை வீரன் - நாடகம் பாடலாக வெகு அழகு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை வீரன் பாடல் மிகவும் பிடித்திருந்தது சகோ.... அதனால் தான் பார்த்த உடனே பகிர்ந்து கொண்டேன்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சமீரா.....

      நீக்கு
  19. சமூக விழிப்புணர்வு சிந்தனையுடன் கொடுக்கப்பட்ட பதிவு.
    காணோளியும் அருமை.
    அனைத்தும் அருமையாக உள்ளது நாகராஜ் ஐயா.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.....

      நீக்கு
  20. ஒவ்வொரு மாதமும் நான் பயந்து நடுங்கியது இன்னும் நினைவிருக்கிறது!
    இந்த ஆவணப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்.

    எல்லோரும் நம்புவது தான் அந்தக் கடைசி சாவி!
    காணொளி எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    மின்னல் வரிகள் திரு பாலகணேஷ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

    பழக்கலவையை ரசித்து சுவைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருக்கு அந்த நாட்கள் பயமும் தொல்லையும் தான்... ஆவணப் படம் இணையத்தில் இல்லை. அதனால் முடியும் போது பாருங்கள். கிடைக்கும் இடம் தெரிந்தவுடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

      நீக்கு
  21. என் தாய் மாமாவும், என் அப்பாவும் எங்கள் குடும்பத்தில் புரட்சி செய்தவர்கள். தனியாக இருப்பதை தவிர்த்தவர்கள். தாய் மாமா டாக்டர் என்பதால் என் பாட்டியிடம் சொல்லி அவர்களை தனியாக வைப்பதை தவிர்த்தார். என் அப்பா என் அம்மாவை அது இயற்கை இந்த சமயத்தில் ஓய்வு தேவை என்று அப்படி சொல்லி இருப்பார்கள் குளித்து விட்டு ஓய்வு எடுத்துக் கொள் என்று வரம் கொடுத்த கடவுள்.
    அதனால் நாங்களும் எந்த கஷ்டமும் அனுபவிக்க வில்லை.
    பள்ளி பொது இடங்களில் வசதி செய்து கொடுக்க வேண்டும். நானும் ஆவண படத்தில் உள்ள அனைத்து விஷ்யங்களையும் படித்தேன்.
    பெண்ணின் வலியை, வேதனையை புரிந்து கொண்டு அதை பற்றி பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.
    எல்லிஸ் டங்கன் எடுத்த குறும்படப் பகிர்வும் அருமை.
    குழந்தைகளின் கொண்டாட்டம் அருமை.
    எழுத்தாளர் பாலகணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அவர் புத்தக அறிமுகத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  22. அத்தனை பகிர்வும் நன்று. ஆவணப்படம் குறித்து மற்றபலர் பகிர்ந்தவற்றையும் வாசித்திருந்தேன். சிறப்பான முயற்சி. தில்லிகை கூட்டங்கள் மகிழ்ச்சி தருகிறது. சரிதாயணம் வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி......

      நீக்கு
  23. ஆவணப்படத் தகவல் சிறப்பு. முகநூல் படம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  24. ஆவணப் படம் பற்றி கேள்விப்பட்ட நாள் முதலாய் இணையத்தில் தேடி வருகிறேன் கிடைக்கவில்லை. குழந்தைகள் இருக்கும் படங்கள் அற்புதம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவணப் படம் இணையத்தில் இல்லை சீனு. தகடு கிடைக்கும் இடம் பற்றி விசாரித்து பகிர்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  25. ப்ரூட் சாலட்டில் பரிமாறப்பட்டவை அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  26. பதில்கள்
    1. இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை.... மகிழ்ச்சி மோகன்.

      நீக்கு
  27. மிக மிக அருமையாக இருந்தது தங்களின் பதிவு! பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  28. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....