என்ன ஞாயிறன்று புகைப்படங்கள் பகிர்வது தானே உங்கள்
வழக்கம்? இன்று என்ன பாடலா – அதுவும் ’கொஞ்சிக்
கொஞ்சி பேசி மதிமயக்கும்” எனும் பழைய பாடலா? என்று கேட்டால்.....
இல்லை நண்பர்களே இன்று நிச்சயம் புகைப்படப் பகிர்வு
தான்... அதுவும் ஒரே ஒரு புகைப்படம்
மட்டுமே. சமீபத்திய பயணத்தின் போது எடுத்த ஒரு புகைப்படம் இன்றைய பகிர்வு.
இந்தப் பறவையின் ஆங்கிலப் பெயர் VULTURINE GUINEA
FOWL. அறிவியல் பெயர் ACRYLLIUM VULTURINUM என்பது. தமிழில்
இந்தப் பறவையை என்ன பெயர் கொண்டு அழைப்பார்கள் என தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது!
கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு மேல் கொஞ்சிக்
கொண்டன. நானும் புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினேன்! என்ன ஒரே கஷ்டம் – அவை
கூண்டுக்குள் – அதனால் முழுமையான தோற்றத்தினை எடுக்க முடியவில்லை!
“ஏண்டா நாங்க காதலிக்கறத இப்படி ஃபோட்டோ எடுக்கறயே,
உனக்கு வெக்கமா இல்லை?” என்று பறவைகள் கேட்டு விடுமோ என பயந்து அங்கிருந்து
விலகினேன் – சிறிது தூரம் சென்று சற்றே கழுத்தினைத் திருப்பி மெல்லப் பார்த்தால்
அவ்விரண்டு பறவைகளும் விலகவே இல்லை!
நான் ரசித்த இந்தப் பறவைகளின் புகைப்படம் இதோ
உங்கள் பார்வைக்காக!
மீண்டும் அடுத்த வாரம் ஞாயிறன்று வேறு சில
புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
அடடா... என்ன அழகு! தொட்டுக்கொள்ளும் அலகும் கழுத்தும் காதல் சின்னமாய் இதய வடிவையல்லவா காட்டுகிறது! ஒட்டிவிரிந்த சிறகுகளின் வரிகள் அற்புத ஒவியம்! பரிமாறும் அன்பின் சுவை அலாதி!
பதிலளிநீக்குஆமாம்... காதலால் கொஞ்சுகிறோம் என மற்றவர்களுக்கும் தெரிவதற்காக, காதல் சின்னத்தினைக் காட்டுகின்றன போலும்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.....
படம் அருமை.
பதிலளிநீக்குகூண்டுக் கம்பிகள் தெரியாதபடி எடுக்கிற விதம் குறித்து பிட்டில் சர்வேசன் பதிந்த ஒரு இடுகை உள்ளது. லிங்க் தேடித் தருகிறேன். அதுபோல் முயன்று சில படங்கள் நன்றாக வந்திருக்கின்றன எனக்கு.
இங்கே பல படங்கள் இப்படித்தான் கூண்டுக் கம்பிகளோடு... லிங்க் கிடைத்தால் பகிருங்கள். அடுத்த முறை படமெடுக்க உதவும்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி .....
அழகான பறவைகள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.....
நீக்குபுகைப்படமும் பகிர்வும் மிக மிக அருமை
பதிலளிநீக்குபகிர்வுக்குமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!.....
நீக்குtha.ma 3
பதிலளிநீக்குதமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குஅடடே, அருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.....
நீக்குகொஞ்ச(சும்) நேரம் தம்மை மறந்தனவோ?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.....
நீக்குதலைப்புக்கு பொருத்தமாகத்தான் படம் போட்டிருக்கீங்க.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர் .....
நீக்குகொத்திக் கொத்திப் பேசி....
பதிலளிநீக்குவாங்க சரவணன்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.....
பாவம்... ப்ரைவசியே இல்லாமல் காதல் செய்கிறதுகள்!
பதிலளிநீக்குஆமாம்... இதில் கேமிராக் கண் கொண்டு அலைபவர்களின் தொல்லை! ம்ம்ம்ம்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அழகோ அழகு சிறைபடுத்தாமல் சுதந்திரமாக பறக்க விட்டு ரசித்தால் இன்னும் அழகாக இருக்கும்.
பதிலளிநீக்குசுதந்திரமாக விட்டிருந்தால் நன்றாகத் தான் இருக்கும்.... ஆனால் அப்படி விடாதிருக்கக் காரணம் இருக்கலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.
அப்படி என்ன தான் பேசிக்குமோ இரண்டும். படத்தில் ரொமான்ஸ் ரொம்ப அழகு. பறவைகள் போஸ் கொடுத்தமாதிரி நிற்கின்றனவே. ஹனிமூனுக்கு எங்க போகலாம்னு பேசிக்குமோ. வாழ்த்துகள் வெங்கட்.
பதிலளிநீக்குரொம்ப நேரமா அப்படியே நின்னுட்டு இருந்தது வல்லிம்மா.... எப்படியும் யாரும் இல்லாத இடத்துக்குப் போகணும்னு பேசிண்டுதோ என்னமோ!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....
அழகான காதல்ப் பறவைகள்...
பதிலளிநீக்குகொஞ்சிக் கொஞ்சி மகிழ்கின்றன...
நடக்கட்டும்... நடக்கட்டும்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.
நீக்குஇணைந்திருக்கும் விதமே காதல் சின்னம்..
பதிலளிநீக்குஆமாம்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
பறவைகளின் காதல் படம் அருமை. உலகம் எங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி, என்று வாய் மூடி பேசுகிறதோ!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....
நீக்குஅருமையான புகைப்படம் .
பதிலளிநீக்குபறவைகளின் tender moments அழகாக படம் எடுத்திருக்கிறீர்கள்.
பகிர்விற்கு நன்றி.
ராஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி.....
நீக்குகொஞ்சும் பறவைகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.
நீக்குபுகைப்படம் அருமை! கம்பிகள் அதன் முழு அழகை மறைத்து விட்டது!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.....
நீக்குகம்பிகளுக்குப் பின்னால் சப்ஜெக்ட்டில் ஃபோகஸ் பாயிண்ட் வர்ற மாதிரி ஃபோகஸ் செஞ்சுட்டு க்ளிக்குங்க. கம்பிகள் அவுட்டாஃப் ஃபோகஸுக்குப் போயிரும். கம்பிகளுக்குப் பின் இருக்கும் சப்ஜெக்ட் தெளிவாகி படம் இன்னும் அட்டகாசமா வரும்.
பதிலளிநீக்குஅடுத்த முறை முயற்சித்துப் பார்க்கிறேன்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.....
வயிற்று பகுதியில் உள்ள நீல நிறம் மட்டும் இல்லையெனில் கிண்ணி கோழியை போல இருக்கிறது .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.
நீக்குஅழகான ஒரு ஜோடியை அற்புதமாக படமாக்கியுள்ளீர்கள். ;)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்கு//இந்தப் பறவையின் ஆங்கிலப் பெயர் VULTURINE GUINEA FOWL. அறிவியல் பெயர் ACRYLLIUM VULTURINUM என்பது. தமிழில் இந்தப் பறவையை என்ன பெயர் கொண்டு அழைப்பார்கள் என தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது!//
பதிலளிநீக்குகழுகின காட்டுக் கோழி - மைய ஆஃப்ரிக்காவை தாயகமாக கொண்டது. பகிர்வுக்கும் பதிவுக்கும் வாழ்த்துக்கள் !
கழுகின காட்டுக் கோழி.... நல்ல பெயர் தான்...
நீக்குதங்களது வருகைக்கும் மேலதிகத் தகவலுக்கும் மிக்க நன்றி திரு ஜெயராஜன் அவர்களே..... தொடர்ந்து சந்திப்போம்!