திங்கள், 13 செப்டம்பர், 2021

வாசிப்பனுபவம் - நம்மில் சிலர் - கற்பகாம்பாள் கண்ணதாசன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


மௌனமாக இருந்து பார்; பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மகிழ்ச்சியாக இருந்து பார்; பல பிரச்சனைகள் காணாமல் போகும்.


******




சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் கற்பகாம்பாள் கண்ணதாசன் அவர்கள் எழுதிய “நம்மில் சிலர்” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வகை: சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 80

விலை: ரூபாய் 50/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


நம்மில் சிலர் : ( சிறுகதைத் தொகுப்பு ) (Tamil Edition) eBook : KANNATHASAN, KARPAGAMBAL


******* 


நம்மில் சிலர் - தலைப்பிலேயே சொல்லி இருப்பது போல, நம்மில் சிலரை கதை மாந்தர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எட்டு சிறுகதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு.  முதல் கதையே அசத்தலாக ஆரம்பித்து இருக்கிறார். பரபரப்பான ஒரு ரயில் நிலையம். அங்கே சற்று வித்தியாசமான ஒரு சிறுவனும் அவன் தாயும். நிலையத்தில் இருக்கும் மற்றவர்களெல்லாம் அச்சிறுவனை கவனித்து நகர, ஒரு பெண்மணி மட்டும் அவனிடம் அவன் அம்மாவிடம் பேசுகிறார். ஆட்டிசம் குறைபாடு உள்ள அந்தச் சிறுவனின் தாய் உடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு தனக்கான ரயில் வந்ததும் புறப்படுகிறார். இந்த நிகழ்வினை வைத்து முதல் கதை..


எனக்கென நீ உனக்கென நான்.... இந்த தலைப்பிட்ட இரண்டாவது கதை மிகவும் சுவாரஸ்யம். அழகான குடும்பம் அன்பான மனைவி குழந்தைகள் என சென்றுகொண்டிருந்த கதையில் வரும் திருப்பம் சுவாரசியம்.


மூன்றாவது கதையான பிச்சை மனதை அப்படியே ஆட்டி போட்டுவிட்டது... தன்னை வெறுத்த தனது கணவனுக்காக இப்படியும் ஒருத்தி தியாகம் செய்ய முடியுமா என்று எண்ணும் அளவுக்கு ஒரு விஷயம் செய்கிறார் அந்தப் பெண். மனதைத் தொட்ட கதை. 



இப்படி தொகுப்பில் இருக்கும் அனைத்து கதைகளுமே நன்றாகவே இருக்கிறது.  ஒரு கதையை வட்டார வழக்கிலும் முயன்றிருப்பதோடு அந்தக் கதையையும் சிறப்பான விதத்தில் கொண்டு சென்று முடித்து இருக்கிறார் நூலாசிரியர்.  


எட்டே எட்டு சிறு கதைகள், எண்பதே பக்கங்கள் என இருக்கும் இந்த சிறுகதைத் தொகுப்பினை அமேசான் கிண்டிலிலிருந்து தரவிறக்கம் செய்து வாசிக்கலாமே!  தொகுப்பினை வெளியிட்டு இருக்கும் நூலாசிரியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.  தொடரட்டும் உங்கள் மின்னூல் வெளியீடுகள்.


******


எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...


இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...

26 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    வெகு நாட்களுக்குப் பிறகு இங்கு முதலில்? வந்திருக்கிறேன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ஜி.

      இரண்டாவது! :) ஸ்ரீராம் உங்களை முந்திக் கொண்டார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வாசகம் மிக அருமை!

    எந்தத் தருணத்திலும் மகிழ்ச்சியாக இருப்பது என்பது ஒரு வரம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நல்ல அறிமுகம் வெங்கட்ஜி!

    ஓரிரு வரிகளில் அழகான விமர்சனம். கிண்டிலில் தரவிறக்கம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக வாசிப்பேன் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. முடிந்த போது வாசித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நல்லதொரு நூல் அறிமுகம் சார்.
    நூலை தரவிறக்கம் செய்துவிட்டேன்.
    விரைவில் வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். முடிந்த போது வாசித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. எட்டு கதைகள் அடங்கிய நூல் விமர்சனமும் அருமையாக உள்ளது. கதைகளை அருமையாக எழுதிய நூலாசியருக்கும், சிறப்பாக விமர்சித்த தங்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் விமர்சனமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நறுக், சுருக் விமர்சனம் சிறப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. ரொம்ப நாள் கழித்து உங்க வாசிப்பனுபவம் மடிக்கறேன் சகோ அப்படியே யூடியூப்லயும் பயண அனுபவம் போடுங்க நா அதை பாக்கறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யூவில் பயண அனுபவம் - முடிந்த போது பகிர்ந்து கொள்வேன் அகிலா வைகுந்தம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. நல்லதொரு நூல் அறிமுகம்

    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. நல்ல வாசகம் அருமை.

    விமர்சனம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் விமர்சனமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....