அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால், நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும் - புத்தர்.
******
சமீபத்திய தமிழகப் பயணத்தில் பெரியம்மா/பெரியப்பா அவர்களின் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வர வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் சில வேலைகள் எனக்காகவே காத்திருக்கும்! அப்படியான வேலைகளிலேயே அதிக நேரம் சென்று விடுகிறது. இந்த முறையும் அப்படி நிறைய வேலைகள் - அதில் ஒன்று குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வர வேண்டிய வேலை. அந்தப் பயணம் குறித்து பிறிதொரு சமயம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஞாயிறில் சில நிழற்படங்கள் மட்டும் இங்கே ஒரு உலாவாக. வாருங்கள் பார்க்கலாம், ரசிக்கலாம்!
நண்பர்களே, பதிவின் வழி பகிர்ந்து கொண்ட படங்கள் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன். நாளை வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து...
அனைத்துப் படங்களும் மிக அருமை. குதிரைகளுக்கு நடையே பழக்கமில்லை போல! கல்லணைக்குப் பக்கத்தில் கரிகாலன் சிலையை வைக்காமல் ராஜராஜன் சிலையை வைத்திருக்கிறார்கள்!
பதிலளிநீக்குகரிகாலன் சிலையும் ஒரு பக்கத்தில் இருக்கிறது ஸ்ரீராம். வேறு சிலைகளும் உண்டு. முன்பே ஒரு பதிவில் வெளியிட்ட நினைவு. பிறிதொரு சமயம் எல்லா படங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் அருமை... அழகு...
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் அழகு
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அழகான படங்கள் விளக்கங்களும் நன்று ஜி.
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையானக் கல்லணைக்காட்சிகள்.
பதிலளிநீக்குஓடும் குதிரைகள்.
தெய்வ அலங்காரங்கள்.
வெட்டாதே என்று கை குவிக்கும் மரம்,
எல்லாமே நன்று அன்பு வெங்கட்.
பதிவின் வழி வெளியிட்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான படங்கள். கல்லணை மிக அழகாக உள்ளது.
பதிலளிநீக்குகல்லணை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. பதிவும் அருமை. கல்லணை காட்சிகள் நன்றாக உள்ளது. எருக்கம்பூ மொட்டு அழகாக உள்ளது. பிள்ளையார் படமும், நேமம் அம்மன் படமும் தரிசித்துக் கொண்டேன். எருக்கம் மலர் பிள்ளையாருக்கு உகந்தது. ரசித்து வடை தின்னும் பெரியவர் நீங்கள் புகைப்படமெடுப்பதை உணரவில்லை போலும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகமும் பதிவின் வழி வெளியிட்ட படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் அத்தனையும் அழகாக இருக்கின்றன வெங்கட்ஜி. ரசித்தேன். புத்தரின் வாசகம் உண்மையாக இல்லாமல் இருக்குமா! நல்ல வாசகம்
பதிலளிநீக்குதுளசிதரன்
படங்களும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
புத்தரின் வாசகம் ரொம்ப யதார்த்தம். நேற்று மகனோடு பேசிக் கொண்டிருந்த போது இதை ஒட்டிய பேச்சுதான் கொஞ்சம் ஓடியது. இன்று இங்கு வந்தால் புத்தரின் வாசகம்.
பதிலளிநீக்குகல்லணை புதுப்பிக்கப்பட்டு பளிச்சென்று இருக்கிறதே..ஆனால் என்னவோ பராமரிப்பு என்ற அடிப்படையில் இப்படிப் பெயின்ட் பூச்சுகள் ஏனோ மனதிற்கு இதமாக இல்லை.
கீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குபராமரிப்பிற்காக பெயிண்ட் பூச்சுகள் - சரியில்லை தான். பராமரிப்பே இல்லாமல் இருக்கும் பல இடங்கள் நினைவுக்கு வ்ருகின்றன.
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அழகான படங்கள்.
பதிலளிநீக்குநேமம் அன்னை படம் அழகு.
முன்பு கல்லணையில் இராச ராச சோழன் சிலை கிடையாது, இப்போது புதிதாக வைத்து இருக்கிறார்கள் போலூம்.
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குஒரு பக்கம் கரிகாலன் சிலை இருந்தது. இராச ராச சோழன் சிலை புதியதா என்று தெரியவில்லை.
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அழகிய காட்சிகள் ...
பதிலளிநீக்குகாட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.