புதன், 22 செப்டம்பர், 2021

கதம்பம் - பீட்ஸா சீடை - கோகுலாஷ்டமி - Back to School - சதுர்த்தி - மாலை உலா - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உன்னை உண்மையாக நம்பும் ஒருவனை நீ ஏமாற்றினால், உன்னை ஒருவன் இருமடங்காக ஏமாற்றுவான்… தீதும் நன்றும் பிறர் தர வாரா...


******


பீட்சா சீடை - சிறுகதை - சஹானா இணைய இதழில்: 


கோகுலாஷ்டமி என்றால் எப்போதும் அம்மாவின் நினைவு தான். இன்றும் அம்மாவை நினைத்துக் கொண்டே தான் பட்சணங்களை பண்ணிக் கொண்டிருக்கிறேன். 


சஹானாவில் என்னுடைய கன்னி முயற்சி சிறுகதை. பகிர்ந்து கொண்ட தோழிக்கு நன்றி.  பகிர்வினை படிக்க, கீழே உள்ள சுட்டியைச் சுட்டலாமே!


பீட்சா - சீடை - சிறுகதை


******


கோகுலாஷ்டமி - 30 ஆகஸ்ட் 2021:








ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்!


தன் பிஞ்சு பாதத்தால் தத்தி தத்தி வந்தான்!


முள்ளு தேன்குழல், காரசாரமாக தட்டை, தேங்காய் பர்ஃபி மற்றும் அவல் பாயசத்துடன் பரம சந்தோஷம் என்றான்.


******


Back to School - 2 செப்டம்பர் 2021:


ஐந்து மாதங்களுக்குப் பிறகு மகள் இன்று பள்ளிக்கு சிட்டாய் பறந்தாள்! தொடர்ந்து பள்ளிக்கு தடையில்லாமல் சென்று வரும் சூழல் அமைய வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.


எந்த லஞ்ச் பாக்ஸ்ல கண்ணா குடுப்பேன்??


அன்னிக்கு ஃப்ரிட்ஜில கறிவேப்பிலை போட்டு வெச்சிருந்தியேம்மா! அதுல தான்!


எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டியா கண்ணா!


அம்மா! எத்தன தடவ தான் சொல்லுவ!!


நிதானமா போயிட்டு வரணும்! கணேஷாவ பிரார்த்தனை பண்ணிக்கோ!


Social distancing கொரோனாவுக்கு மட்டும் இல்ல! எல்லாத்துக்குமே நல்லது!


ஏன் அப்படி சொல்ற??


பேனுக்கு கூட..🙂


என்ன????


இல்ல கண்ணா! அத விரட்டறதுக்குள்ள போறும் போறும்னு ஆயிடறது..🙂


ஏம்மா உன் புத்தி இப்படி போறது??


என் கஷ்டம் எனக்கு தான கண்ணா தெரியும்! உன் தலைமுடி வேற நீளம்! வாரி எடுக்கறதுக்குள்ள சிடுக்காயிடும்! அப்புறம் நீ கத்துவ!!


ஹா..ஹா..ஹா..


******


பிள்ளையார் சதுர்த்தி - 10 செப்டம்பர் 2021:





இம்முறை என்னவர் பூஜை செய்ய திருப்திகரமாக பிள்ளையார் சதுர்த்தி நடந்தது.


******


ஒரு மாலை உலா - 10 செப்டம்பர் 2021:


இரண்டு வருடம் கழித்து இன்று திருச்சியின் பிரபலமான N.S.B ரோட்டிற்கு சென்று வந்தோம். மக்கள் வெள்ளம் வழக்கம் போல் தான்..பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்தே வந்திருந்தனர். சுற்றி வந்து எங்களுக்கு தேவையானவற்றை மட்டும் வாங்கி வந்தோம்.

தள்ளு வண்டியில் வைத்திருந்த பழங்களில் முள்ளு முள்ளாக இருந்த பழத்தின் பெயரைக் கேட்டால்..ரம்ட்டான்! என்றார் கடைக்காரர். மகள் கொரோனா ஃப்ரூட் என்றாள்!  


எடை பார்க்கும் இயந்திரத்தை எங்கு பார்த்தாலும், "இளைச்சு போயிட்டீங்களே" என்று சில நாட்களுக்கு முன் சொன்ன முகங்கள் நினைவுக்கு வர,  கொஞ்சம் குறைந்திருக்க மாட்டோமா!! என்ற நப்பாசையில் பார்க்க...ம்ம்ஹூம்ம்..:)) என்னவர் கலாட்டா செய்து கொண்டு டிஸ்பிளேயை மறைக்க.. அவர் கைகளை நாங்கள் பிடித்துக் கொள்ள.. 'கூட்டமா நிற்காதீங்க' என்று சொல்லப் போறது  பாருங்கோ. 🙂 என்று கலகலப்பான தருணமாக சென்றது...🙂


ஜிகிர்தண்டா குடித்தால் நன்றாக இருக்குமே! என்று மனதில் நினைத்த தருணம்! ஜிகிர்தண்டா என்றார்..🙂 ஆஹா! ருசியோ ருசி..🙂


St.Joseph கல்லூரி அருகே ஆட்டோவுக்காக நின்று கொண்டிருந்தோம்.  சில வருடங்களுக்கு முன் இதே இடத்தில் பேருந்து பிடிக்கும் போது நான் முன்பக்கம் ஏறி விட, பின்பக்கம் கணவரும் மகளும் ஏறணும்! ஆனால் மகள் ஏறுவதற்குள் பேருந்தை எடுத்து விட..!!  அந்த சம்பவத்தை பற்றி இப்போது மகள் சொல்லிக் கொண்டிருந்தாள். 


"அம்மாகிட்ட பர்ஸ் இருக்கா! செல்ஃபோன் வெச்சிருக்காளா! என்று கேட்டுக் கொண்டே பதறியபடி மகளையும் கூட்டிக் கொண்டு பின்னாடியே ஓடி வந்தாராம்!! ஆனா அம்மா நீ பயப்படவே இல்ல! அடுத்த ஸ்டாப்பிங்ல கெத்தா வந்து  இறங்கினியே..🙂 என்றாள்...🙂


அதேபோல் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தை பார்த்துக் கொண்டே, 'இந்த ஊர்ல பஸ்ஸோட சைடிலோ, பின்னாடியோ பார்த்துட்டு ஏறக்கூடாது கண்ணா! அப்பாவும், நானும் ஒருமுறை வெளியே போயிருந்த போது ஒரு பஸ்ல பின்னாடி ஸ்ரீரங்கம்னு போட்டிருந்ததை பார்த்துட்டு ஏறப் போனேன். 'புவனா! இப்ப சமயபுரம் போகப் போறியா!'ன்னு கேட்டா!!..🙂 எங்க ஊர்ல எல்லாம் எவ்வளவு தெளிவா போட்டிருக்கும் தெரியுமா!! என்னவர் சிரிப்புடன் என்னைப் பார்த்தார்..🙂


இப்படியாக இன்றைய மாலை இனிமையாகச் சென்றது.


******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான சம்பவங்கள்.  கிருஷ்ணஜெயந்தி கோலமும் பட்சணமும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  4. அனைத்தையும் ரசித்தேன். நெடுநாள்களுக்கு பின்னர் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது சற்றே வித்தியாசமான அனுபவம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா. தொடர்ந்து தடையில்லாமல் பள்ளிகள் செயல்படணும்..

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. இனிமையான மாலை அன்று இல்லையா வெங்கட்ஜி ஸ்ரீரங்கத்தில் இருந்த சமயம்!!

    கோலம் அழகாக இருக்கு ஆதி.

    உரையாடல்களை ரசித்தேன்.

    பள்ளி திறந்தது நல்ல விஷயம். அப்படியே தொற்றும் மறைந்துவிட வேண்டும். எல்லாம் நல்லபடியாக இயங்க வேண்டும்.

    பெண் குழந்தைகள் பள்ளி சென்று வந்தால் இணை பிரியா ஒட்டுண்ணித் தோழியாய் பேனும் கூடவே தான்!! ஆண் பிள்ளைகளுக்கும் கூட வருவதுண்டுதான். அதை விரட்டுவதற்குள்!! போதும் போதுமென்றாகிவிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் நல்லபடியாக இருக்க வேண்டும்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. பதிவு சுவாரஸ்யம். உங்களிடம் இருப்பதுபோல ரங்கநாதன் படம் ஒன்று ஸ்ரீரங்கத்துக்கு வரும்போது வாங்க நினைத்திருக்கிறேன்.

    பிள்ளையார் சதுர்த்திப் படத்தில் கொழுக்கட்டையைக் காணோமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரங்கநாதர் படம் ரிஷபன் சாரின் அன்பளிப்பு. கிருஷ்ணர் படம் கீதா மாமியின் அன்பளிப்பு..இருவரும் வீடு கிரஹப்பிரவேசத்திற்கு பிறகு முதன்முதலாக வீட்டிற்கு வந்த போது தந்தது.

      பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணிய பிறகு எடுத்துவிட்டோம். அதன் பிறகு எடுத்த புகைப்படம் இது.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  8. பதிவு நன்றாக இருக்கிறது. நீங்கள் எழுதிய கதையையும் வாசித்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் பாராட்டுகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை பாராட்டியதற்கு மிக்க நன்றி சார்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. பதிவும், அருமையாக உள்ளது கோகுலாஷ்டமி கோலங்கள், படசணங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. உங்கள் கதைப் பகிர்வை யும் சென்று வாசித்தேன். அருமையாக உள்ளது. வாழ்த்துகள்..

    நெடு நாட்கள் கழித்து பள்ளி திறந்து சென்று வந்த தங்கள் பெண்ணிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்கள் கவலையும் நியாயமானதே..!

    இனிமையாக பழைய நினைவுகளோடு கழிந்த மாலை நேர உலா நினைவுகளையும் பகிர்ந்தது சுவாரஸ்யமாக இருந்தது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் அனைத்துப் பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி கமலாஜி.

      நீக்கு
  12. வாசகம் அருமை.
    //முள்ளு தேன்குழல், காரசாரமாக தட்டை, தேங்காய் பர்ஃபி மற்றும் அவல் பாயசத்துடன் பரம சந்தோஷம் என்றான்.//
    பிரசாதங்கள் அருமை.

    கதம்ப பதிவு மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....