சனி, 11 செப்டம்பர், 2021

காஃபி வித் கிட்டு - 126 - Bhப(t)ட் கி (ch)சுர்கானி - பலூன் வியாபாரி - Women Divers - Rare Diseases Crowdfunding - கண்ணன் வரும் வேளை - கஷ்டங்கள் - முகாரி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


PLENTY OF PEOPLE MISS THEIR SHARE OF HAPPINESS, NOT BECAUSE THEY NEVER FOUND IT, BUT BECAUSE THEY DIDN’T STOP TO ENJOY IT.


******



இந்த வாரத்தின் உணவு - Bhப(t)ட் கி (ch)சுர்கானி




Bhப(t)ட் என்பது வேறொன்றுமில்லை - ஒரு வித பருப்பு தான் - அதாவது கருப்பு சோயாபீன்! அதனை வைத்து சப்பாத்திக்கு தொட்டுக்கையாக உத்திராகண்ட் மாநிலத்தில் தயாரிக்கப்படும் ஒரு சப்ஜி தான் இந்த Bhப(t)ட் கி (ch)சுர்கானி!  உத்திராகண்ட் பகுதிகளில் பயணித்தால் இந்த பாரம்பரிய உணவை ருசிப்பதுண்டு.  இங்கேயும் சில உத்திராகண்ட் மாநில நண்பர்கள் வீட்டு விருந்துகளில் சுவைத்ததுண்டு.  வித்தியாசமான தொட்டுக்கையாக இருக்கும்.  செய்முறை தேவையெனில் இணையத்தில் Bhat Ki Churkani என தேடிப் பாருங்கள்! ஹிந்தி மொழி புரிந்தால் சுலபம்.  சில தளங்களில் ஆங்கிலத்திலும்  செய்முறை இருக்கிறது. 


******


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு: பலூன் வியாபாரியும் படகோட்டியும்


2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - பலூன் வியாபாரியும் படகோட்டியும்


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!


ரோஹ்தாஸ் மாவட்டத்தினைச் சேர்ந்த மண்டூ [தமிழில் தப்பாக அர்த்தம் கொள்ள வேண்டாம் நண்பர்களே! அவர் பெயர் MANTOO SINGH] தனது கிராமத்தில்/மாநிலத்தில் சம்பாதிக்க வழியில்லாது கேரளத்தில் வந்து பலூன் விற்றுக் கொண்டிருக்கிறார்.  சபரிமலையிலிருந்து கீழே வரும் சமயத்தில் அவரிடம் இரண்டு மூன்று பலூன்களை வாங்கிக்கொண்டே பேசினேன். அவரது பேச்சிலேயே பீஹார் மாநிலத்தவர் எனத் தெரிந்து “கௌன் ஜில்லா” எனக் கேட்டவுடனேயே அவருக்கு சந்தோஷம்.


ஒரு பலூன் 10 ரூபாய் என விற்கும் இந்த மண்டூ, அவ்வப்போது கேரளா வந்து இப்படி பல பொருட்களை விற்கிறாராம். கேரளத்தின் சிகப்பரிசி சாதமும் உணவும் இவருக்கு அத்தனை ஒத்துக் கொள்வதில்லை/பிடிப்பதில்லை எனக் கூறும் இவர் தங்கியிருப்பது தமிழகத்தின் திருநெல்வேலியில். இங்கே தங்கிக் கொண்டு கேரளத்திற்குச் சென்று சில நாட்கள் தங்கி வியாபாரம் பார்த்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்புவார்களாம் இவரும் இவருடன் தங்கியிருக்கும் இன்னும் சில பீஹார் மாநில நண்பர்களும்.


******


இந்த வாரத்தின் காணொளி: Women Divers of Adara Island:


இந்த வாரத்தின் காணொளியாக இந்தோனேஷியாவின் அருகே இருக்கும் ஒரு தீவில் இருக்கும் பெண்கள், எப்படி கடலுக்குள் சென்று மீன் பிடித்து அதனை பதப்படுத்தி விற்பனை செய்கிறார்கள் என்பதைச் சொல்லும் ஒரு காணொளி! சுமார் 16 நிமிடங்கள் உங்களுக்கு இந்தக் காணொளியைக் காண தேவை - அந்தப் பெண்கள் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கடலுக்குள் மூழ்கி எப்படி மீன் பிடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியம் தான்.  நம் ஊரிலும் முத்து எடுக்கும் பெண்கள் இப்படி கடலுக்குள் செல்வதுண்டு என்றாலும் இந்த காணொளியில் இருக்கும் பெண்கள் குறித்தும் நீங்கள் பார்க்கலாம்.  அவர்களது வாழ்க்கை முறையும் எத்தனை கடினமானது என்பது புரியும். கூடவே அற்புதமான இயற்கை எழிலையும் கடலின் வளத்தையும் நீங்கள் காண முடியும் என்பது கூடுதல் நன்மை. காணொளி கீழே!   இங்கேயும் பார்க்கலாம்.

******


இந்த வாரத்தின் தகவல் - Rare Diseases Crowd Funding:


நமக்குத் தெரிந்த பல வியாதிகள் இருக்கின்றன. தெரியாத பல வியாதிகள் - கொடுமையானவையும் இங்கே இருக்கின்றன. சின்னச் சின்னக் குழந்தைகளைக் கூட பாதிக்கும் அரிய சில நோய்கள் உண்டு.  அவற்றுக்கான மருத்துவச் செலவு சாதாரணர்களால் யோசிக்க முடியாத அளவு இருக்கிறது. சமீபத்தில் கூட நீங்கள் படித்திருக்கலாம் - ஒரு நோய்க்கான மருந்து 16 கோடி என்றும், அதற்கான வரி 6 கோடி அளவு என்றும்! மத்திய அரசு 6 கோடி ரூபாய் வரியை தள்ளுபடி செய்தது.  இந்தச் செலவுகளை சமாளிப்பது சாதாரண மனிதர்களால் முடியாதது. அரசாங்கமும் செலவு செய்வதென்பது நடக்கும் காரியமாக இல்லை.  இதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் ஒரு Crowd Funding Platform ஆரம்பித்திருக்கிறது.  அந்த தளம் மூலம் குறிப்பிட்ட ஏதாவது ஒரு நோயாளிக்கு நீங்கள் உங்களால் முடிந்த பண உதவியைச் செய்ய முடியும் என்பது நல்லதொரு விஷயம்.  தளத்தின் முகவரி கீழே! 


Rare Diseases (nhp.gov.in)


******


இந்த வாரத்தின் ரசித்த பாடல் - கண்ணன் வரும் வேளை:


இந்த வாரத்தின் ரசித்த பாடலாக குமாரி சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத் அவர்களின் குரலில் ஒரு பாடல். பாருங்களேன்…


******


இந்த வாரத்தின் வாட்ஸப் நிலைத்தகவல்  - கஷ்டங்கள் :





இந்த வாரத்தின் வாட்ஸப் நிலைத்தகவல் உங்கள் பார்வைக்கு - நண்பர் ஒருவரின் பங்களிப்பாக! 


******


இந்த வாரத்தின் எண்ணங்கள் - முகாரி :


பல சமயங்களில் பிடிக்கிறதோ இல்லையோ, முகாரி ராகம் பாட வேண்டியதாகி விடுகிறது. ஏதேதோ எண்ணங்கள், மனக்கஷ்டங்கள் மனிதர்களுக்கு  இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவற்றை பகிர்ந்து கொள்வதற்கு யாருமே இல்லாத நிலையில் தனக்குள்ளேயே வைத்து மருகி மருகி ஒரு சமயத்தில் முகாரியாக வெளியே வந்து விடுகிறது.  சில சமயங்களில் பகிர்ந்து கொள்ள நல்ல நண்பர்கள் இல்லாமல் இருப்பது ரொம்பவே கொடுமையான விஷயம்.  தனக்கு யாருமே வேண்டாம் என இருப்பவர்கள் அதிகமாக இருக்கும் நாட்கள் இவை - குறிப்பாக அடுக்கு மாடி குடியிருப்புகளில் பலருக்கு அடுத்த வீட்டில் யார் இருக்கிறார் என்பதே தெரியாமல் இருக்கிறார்கள். நண்பர்களும் இல்லாத இவர்கள் தனது கவலைகளை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாமல் கவலையில் மூழ்கி முகாரி பாட வேண்டியது தான் வேறு வழி? சமீபத்தில் இப்படி ஒரு மனிதரை சந்தித்தேன் - பேச்சே இல்லை   வெறும் முகாரி மட்டுமே! பாவம் அவர். 


******


நண்பர்களே, இந்த நாளின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...

32 கருத்துகள்:

  1. காணொளி வெகு சுவாரஸ்யம்.  நமக்கு ஆச்சர்யமாய் இருந்தாலும் அவர்களுக்கு பழகிவிட்ட வாழ்க்கைமுறை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். உண்மை தான் - அவர்களுக்கு வாழ்க்கையே அது தான் என்பதால் பழகி இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. முகாரி... நேற்று என் பழைய நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தேன். இதே அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருக்கும் இதே அனுபவம் கிடைத்துக் கொண்டிருக்கிறது தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதிவு சுவாரசியம்.

    கேரள உணவு ஒத்துக்கொள்ளவில்லை என்று நெல்லையில் தங்கியிருப்பவர்... ஹாஹா. நானும் எங்கள் ஆபீஸ் மலையாள நண்பர்கள் சொல்றாங்களே என்று பாலக்காடன் மட்டா சிகப்பரிசி வாங்கிச் சமைத்தேன் (உடலுக்கு நல்லது கலோரி குறைவு என்று எண்ணி). சாதப்பருக்கைகள் ஒவ்வொண்ணையும் கடிச்சு முழுங்க வேண்டியதாகப் போயிற்று. மாமியார் மருமகள் மாதிரி அரிசியும் குழம்பும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவே இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். கேரள மட்டா சிகப்பரிசி - எல்லோருக்கும் பிடித்து விடுவதில்லை. மாமியார் மருமகள் மாதிரி ஒட்டிக் கொள்ளாத அரிசியும் குழம்பும் - ஹாஹா... அதுவே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வயதானவர்களிட் பெரிய பிரச்சனை, குறைகள் வருத்தங்களைப் பற்றியே பேசிக்கொண்டு நம்மையும் நெகடிவ் சிந்தனைக்கு ஆட்படுத்துவது.

    ஒரு வருடம் முன்பு தில்லியில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்குச் சென்றபோது இரண்டு மணி நேரமும் சந்தோஷமாகவும் சிரிப்பாகவும் பேசிக்கொண்டிருந்தார் (வயது 80). நான் கேட்டேன் எப்படி இது முடிகிறது என. அவர் சொன்னார், கஷ்டங்கள், வருத்தங்கள் இல்ஙாத வீடு, குடும்பம் எங்க இருக்கு? அவரவர் கஷ்டங்களை அனுபவித்துத்தான் ஆகணும். எதற்காகப்புலம்பி மற்றவரை வருத்தமடையச் செய்யணும் என்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய கதைகள் பேசுவது அவர்களுக்குப் பிடித்திருந்தாலும், கேட்பவர்களுக்குப் பிடிப்பதில்லை நெல்லைத் தமிழன். தில்லி பெரியம்மாவுடனான உங்கள் அனுபவம் நன்று. பாசிட்டிவ் பெரியம்மா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இனிமையான பாடல்... மற்ற அனைத்து பகுதிகளும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கானொளியும் மற்ற பகுதிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கண்ணன் வரும் வேளை பாடல் மிக அருமை.
    வாட்ஸப் நிலைத்தகவல் உண்மையை பிரதிபலிக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. முகாரி இராக விசயம் உண்மையே...இரு காணொளிகளும் அருமை..வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. காணொளி செம. ஆனால் பாவம் அவர்களின் வாழ்வாதாரம்...எனவே பழகியிருக்கும். தீவு மிக அழகாக இருக்கிறது!

    கண்ணன் வரும் நேரம் நானும் கேட்டிருக்கிறேன் வெங்கட்ஜி! ரசித்தேன் மீண்டும். இவர் பாடியிருக்கும் வேறு சில பாடல்களும் கேட்பதுண்டு.

    முகாரி - பாவம் அவரவர் கஷ்டம் அவரவர்க்கு. சிலரால் மட்டுமே எத்தனைக் கஷ்டங்கள் இருந்தாலும் சிரித்துப் பேசி உற்சாகப்படுத்த முடிகிறது. ஒரு சிலரால் முடிவதில்லை.

    Bhat Ki Churkani ஒரே ஒரு முறை சுவைத்ததுண்டு. தில்லியில். பிடித்திருந்தது. க்ரீம் நிறம், வெள்ளை, மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் சோயாபீன் விட இது ஒரு சில பிரச்சனைகளுக்கு நல்லது என்றும் அறிந்தேன்.
    சென்னையில் தேடிய போது கிடைக்கவில்லை....ஆனால் ரேட் அதிகம் என்று தெரிந்தது.

    எல்லாமே ரசித்தென் ஜி!

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதிவு அருமை.'காணொளி அருமை.
    பாடல் பிடித்த பாடல் நானும் பகிர்ந்து இருந்தேன் இந்த பாடலை.
    முகாரி பாடக் கூடாது என்று நினைத்தாலும் சில நினைவுகள் வந்து பாடி விடுவார்கள் . கேட்டும் காதுகள், புன்னகை பூக்கும் முகங்கள் கிடைக்காதா என்று ஏங்கி இருப்பார் போலும்,அதுதான் உங்களிடம் பாடி விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா - நீங்களும் இந்தப் பாடலை பகிர்ந்து இருந்தீர்கள். வல்லிம்மாவும் பகிர்ந்து இருந்தார்கள்.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. இந்தோனேசியா தீவுகளின் , மீன் பிடிக்கும் பெண்களின் வாழ்வு
    மிக அற்புத அழகு. எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவில
    அவர்கள் பாடுவதும் சிரிப்பதும்
    மனதை நெகிழ்விக்கிறது. அருமையான
    குறும்படம் நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. கேரளாவில் வாழும் உ பி சகோதரரைப்
    பார்த்துப்பேசியதும் அருமை.
    மக்களின் வாழ்வாதாரங்கள் அவர்கள் எங்கெல்லாம் கொண்டு
    வந்து சேர்க்கிறது!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களின் வாழ்வாதாரங்கள் அவர்களை பல இடங்களுக்கும் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது - உண்மை தான் வல்லிம்மா. சமீப வருடங்களில் இப்படி புலம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகி விட்டது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. நானே பழைய கதைகளைப் புலம்பி
    நண்பர்களை வறுத்தி இருக்கிறேன் என்ற சுமை என்னை அழுத்துகிறது.
    நல்ல மனமும், நல்ல வாக்கும் ,நல்ல செய்கையும்
    எப்பொழுதும் வேண்டும். நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய கதைகள் பேசுவதில் தவறில்லை வல்லிம்மா. எப்போதும் நல்லதே பேசுவோம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. குறும்படம் மனதைத் தொட்டது அவர்கள் வாழ்க்கை சிரமங்களை கண்டு கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் பகிர்ந்த குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. இந்தப் பெண் இப்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறார் போல! நன்றாய்ப் பாடுகிறார். எங்கள் உறவுமுறைப் பெண்ணான மாதங்கியும் (பேத்தி முறை) அருமையாகப் பாடுகிறாள். இன்னிக்கு "பொம்ம பொம்ம" அவள் பாடிக் கேட்டேன். முன்னெல்லாம் ரமணி அம்மாள் கச்சேரிகளில் கேட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவரது பாடல்கள் முன்னரும் கேட்டதுண்டு கீதாம்மா. உங்கள் உறவினர் மாதங்கி பாடல்கள் யூவில் தேடிப் பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....