அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட பயணம் செய்ய ஆசை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
THE BEST THING TO LEARN IN LIFE IS THE HABIT OF COMPROMISE. BECAUSE IT IS ALWAYS BETTER TO BEND A LITTLE THAN TO BREAK A BEAUTIFUL RELATIONSHIP.
******
இந்த வாரத்தின் நிழற்படம் - மொட்டுகள் :
சமீபத்தில் அலைபேசியில் எடுத்த நிழற்படம் ஒன்று உங்கள் பார்வைக்கு.
******
இந்த வாரத்தின் விளம்பரம் - பாராலிம்பிக்ஸ் கேம்ஸ்:
டோக்யோ நகரில் நடக்கும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒரு விளம்பரம் - தம்ப்ஸ் அப் குளிர்பானம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர்களின் விளம்பரம் இது! பாருங்களேன்! சமீபத்தில் வெளியான விளம்பரம் இது!
******
இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு: அந்த இரண்டு பேர்
2010-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - அந்த இரண்டு பேர்
பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!
யாரோ பேசியது முதலில் அவனுக்குக் கேட்டது. இப்போது ஒரு சில குரல்களே கேட்டது. ஒவ்வொருவராக அங்கிருந்து விலகிச் செல்கின்றனர் போலும். ஆனால் யாருக்குமே அவனின் முனகல் சத்தம் கேட்கவில்லையா? “யாருங்க அங்கே, இங்க பாருங்க, என்னைக் காப்பாத்துங்க!” சற்று முயன்று குரலை உயர்த்தி சொல்லிப் பார்த்தான் கோபி.
வெளியேயிருந்து, “சரிடா கிளம்பு, நானும் வீட்டுக்கு போய் அலுவலகத்துக் கிளம்பணும்!” என்று சொல்லும் ஓசை.
”ஏன் நம்ம குரல் கேட்கவில்லை இவர்களுக்கு?” கழுத்தில் கையை வைத்துக்கொண்டு கடைசி முயற்சியாய் “என்னைக் காப்பாத்துங்க!” என்று அலறியபடி சாய்ந்தான்.
"என்னைக் காப்பாத்துங்க!”--குரல் கேட்டு கிளம்பிய இருவரும் நின்றனர். சுற்று முற்றும் பார்த்தால் ஒருவரும் இல்லை. ஒருவேளை பிரமையோ?
******
இந்த வாரத்தின் வாசிப்பு: பா. ராகவன்:
இணையத்தில் பா. ராகவன் அவர்கள் எழுதித் தள்ளுகிறார். நிறைய அளவில் அமேசான் தளத்திலும் அவரது மின்னூல்கள் கிடைக்கின்றன. அவரது எழுத்தில் அதிக அளவு வாசிக்கப்பட்ட நூல் “யதி” என்று அறிகிறேன். அவரது நூல்களில் சிலவற்றை வாசித்ததுண்டு. சமீபத்தில் அவரது நூல் ஒன்றினை கிண்டில் வழி வாசித்தேன். அந்த மின்னூல் ”நீங்கள் என்னிடம் ஜேப்படி செய்தவற்றின் பட்டியல் பின்வருமாறு”. ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் அவர் எழுதியவற்றின் தேர்ந்தெடுத்த குறிப்புகளின் தொகுப்பு இது. சில ஸ்வாரஸ்யமானவை. முடிந்த போது படிக்கலாமே!
******
இந்த வாரத்தின் தகவல் - புதிய மின்புத்தகம்:
தில்லி நண்பர் திரு ஆர். சுப்ரமணியன் அவர்கள் இங்கே எழுதிய “கடந்து வந்த பாதை” இப்போது அமேசான் தளத்தில் மின்புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். அவரது மின்புத்தகத்தினை கீழேயுள்ள சுட்டி வழி தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இங்கே தொடராக வந்த போது அவரது தொடரை வாசித்த, கருத்துரைத்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.
கடந்து வந்த பாதை (Tamil Edition) eBook : Subramanian, R, Nagaraj, Venkat: Amazon.in: Kindle Store
******
இந்த வாரத்தின் கலகலப்பு - உங்க பையன் ஒரே ரகளை:
சில நாட்கள் முன்னர் தமிழகத்திலிருக்கும் ஒரு நண்பரிடமிருந்து அழைப்பு. எடுத்த உடன் அவர் சொன்னது - “வெங்கட், உங்க பையன் இங்கே ஒரே ரகளை செய்துட்டு இருக்கான்!” ஒரு நொடி அதிர்ந்து, சமாளித்துக் கொண்டு, “என்னது என் பையன் ரகளை செய்யறானா? ஹாஹா… நான் என்ன செய்ய முடியும்? ஏன்னா எனக்கு பையனே இல்லையே!” என்றேன். இந்த முறை சுதாரிக்க வேண்டியது அழைத்த நண்பரின் வேலையாக இருந்தது - “அடடா நீங்க தில்லில இருக்க வெங்கட்டா? சாரி மேல் வீட்டுல இருக்க வெங்கட்-னு நினைச்சு உங்களுக்கு Call பண்ணிட்டேன் போல!” என்று சொன்னார். சில நிமிடங்கள் கலகலப்பாகப் போனது நேரம்.
******
இந்த வாரத்தின் வாட்ஸப் நிலைத்தகவல் - Let it go! :
இந்த வாரத்தின் நிலைத்தகவல் - நான் ரசித்தது நீங்களும் ரசிக்க!
******
நண்பர்களே, இந்த நாளின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து...
அருமை
பதிலளிநீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
யதியை பொறுமையாகப் படிக்க முடிந்ததா? கடந்து வந்த பாதை மின்னூலுக்கு வாழ்த்துகள். நிலைத்தகவலையும், விளம்பரத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குயதி படித்ததாக எழுதவில்லையே ஸ்ரீராம். யதி அதிக அளவு வாசிக்கப்பட்ட நூல் எனத் தெரிகிறது என்றே எழுதி இருக்கிறேன்.
நீக்குபதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
புகைப்படம் அழகு வழக்கம்போல் கதம்பம் அருமை.
பதிலளிநீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மின்னூலுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதவறான பெயருக்கு போன் அழைப்பு... ஹாஹா
பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பல்வகைச் செய்திகள். சிறப்பு.
பதிலளிநீக்குபதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கலகலப்பான நிகழ்வு உட்பட கதம்பம் அருமை...
பதிலளிநீக்குபதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வெங்கட் vs வெங்கட் - ஹாஹாஹாஹா இப்படித்தான் ஒரே பெயரில் இருப்பவருக்கு மாற்றிப் போய் ..சுவாரசியம்..
பதிலளிநீக்குபுகைப்படம் மொட்டி செம.
சுப்ரமணியம் அவர்களின் மின்னூலுக்கு வாழ்த்துகள்!
வாட்சப் நிலைத்தகவல் மற்றும் விளம்பரம் ரசித்தேன் ஜி..
கீதா
வெங்கட் Vs வெங்கட் - ஹாஹா... கஷ்டம்!
நீக்குபதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாட்ஸ் ஆப் தகவல் மிக ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குஉங்கள் வெங்கட் வெங்கட் செய்தி நல்ல கலகலப்பு.
நானும் ஸ்ரீராம் ஸ்ரீ நாத் இருவருக்கும் சிலசமயம் செய்திகளை ஃபார்வர்ட்
செய்து விடுவேன்.
பாவம் இருவரும் இந்த அம்மாவுக்கு என்ன வந்தது என்று விழிப்பார்கள்:)
இல்லாத பையனை நீங்கள் எங்கு சென்று தேடுவீர்கள்:))))))
பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
திரு சுப்ரமணியனின் மின்னூலுக்கு அனேக வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇன்னும் நிறைய எழுத வேண்டும்.
நண்பர் சுப்ரமணியன் மேலும் எழுதுவார் - எழுத வேண்டும் எனச் சொல்லி இருக்கிறேன் வல்லிம்மா. வாழ்த்தியமைக்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கோபி அவர்களைக் காப்பாற்றிய அந்த இருவருக்கு நன்றி. மிக நல்ல பதிவு அன்பு வெங்கட்.
பதிலளிநீக்குஅந்த இருவருக்கு நன்றி - மகிழ்ச்சி வல்லிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய காப்பி வித் கிட்டு எப்போதும் போல் அருமை. மொட்டுகள் சேர்ந்திருக்கும் படம் அழகாக உள்ளது. மற்ற செய்திகளும் சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் நண்பரின் கடந்து வந்த பாதை மின்னூலாக வெளி வருவதற்கு வாழ்த்துகள். வாட்சப் நிலை தகவல் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குகாஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபதிவு அருமை.அலைபேசி படம் நன்றாக இருக்கிறது.
வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
நீக்கு