செவ்வாய், 21 செப்டம்பர், 2021

கல்லூரி நாட்கள் பகுதி பதிமூன்று - மேற்படிப்பு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


காத்திருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்; எல்லாவற்றிற்கும் அவற்றுக்கான உரிய நேரம் என்று ஒன்று உண்டு; அவசரப் படுவதால் நிம்மதி குலையுமே தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை!


******

கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் இது வரை சில பதிவுகள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பகுதிகளுக்கான சுட்டி கீழே!


கல்லூரி நாட்கள் - முதல் பகுதி 


கல்லூரி நாட்கள் - இரண்டாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - மூன்றாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - நான்காம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஐந்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஆறாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஏழாம் பகுதி


கல்லூரி நாட்கள் - எட்டாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஒன்பதாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பத்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதினொன்றாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பன்னிரெண்டாம் பகுதி


சென்ற பகுதியில் கல்லூரிப் படிப்பு  என்றால் எல்லோருக்கும் நினைவில் வரும் விஷயமான அரியர்ஸ் பற்றியும், கல்லூரியில் என் படிப்பு எப்படியிருந்தது என்பது பற்றியும் எழுதியிருந்தேன். ஒருவழியாக மூன்றாண்டு டிப்ளமோ படிப்பும் வெற்றிகரமாக முடித்தாயிற்று. இந்தப் பகுதியிலிருந்து கல்லூரிக்குப் பின் நான் கடந்து வந்த பாதையைப் பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.


நாங்கள் கல்லூரியில் பயின்ற போதே எங்கள் வகுப்புத் தோழர்கள் சிலர் CADD கற்றுக் கொண்டிருந்ததாக கேள்விப்பட்டோம். அதில் எப்படியாவது சேர்ந்து விட்டால் வேலை கிடைக்க உதவியாக இருக்கும் என்று தெரிந்து கொண்டேன். இந்தக் கோர்ஸில் சேர அப்பாவிடம் கேட்க வேண்டும்!


கல்லூரி நாட்கள் முடிந்ததுமே மூவர் இருவராகி விட்டோம். ஒரு தோழியை அதன் பிறகு 12 வருடங்கள் கழித்து தான் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவள் அம்மா வேலை செய்த கியர் தயாரிக்கும் கம்பெனியிலேயே இவளுக்கும் Drafting Engineer ஆக வேலை கிடைக்க அவளின் பாதை மாறி விட்டது...:) அவளுக்கு தான் எங்கள் மூவரில் முதலில் திருமணமும் நடந்தேறியது. 


கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கோவையின் பிரபலமான பி.எஸ்.ஜி காலேஜில் தான் நானும் தோழியும் CADD கோர்ஸ் சேர்ந்தோம். இங்கு டிப்ளமோ சீட் மெரிட்டில் கிடைத்தும் அரசு பாலிடெக்னிக்கில் சேர்ந்த கதையைத் தான் சொல்லியிருந்தேனே! அங்கு படிக்க முடியலையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் இருந்தது. நான் இறுதியாண்டு கல்லூரியில் நுழைந்த நேரம் தான் என் தம்பி பத்தாவது முடித்தான். 


அவனை பி.எஸ்.ஜி க்ரூப்பின் 'சர்வஜனா' பள்ளியில் காமர்ஸ் க்ரூப் எடுத்து சேர்த்து விட்டார் அப்பா. ஒரு மாதம் பள்ளிக்குச் சென்ற பின் பி.எஸ்.ஜி பாலிடெக்னிக்கில் Mechanical engineering சீட் இருப்பதாக சொல்லவே அதில் சேர்ந்து கொண்டான். அம்மாவும், நானும் தான் அவனுக்கு அட்மிஷன் போட சென்றிருந்தோம் என்று நினைவு. நாலு வருட Sandwich Diploma in Mechanical engineering!  Practicals அதிகமாக இருக்கும். வருடத்துக்கு 8000..:) அப்பாவிடம் கேள்வி கேட்க எனக்கு விஷயம் கிடைத்து விட்டது..:)


அப்பாவிடம் எப்போதுமே உரிமையுடன் நான் கேள்வி கேட்பது வழக்கம்..:) அவரின் புகைப்பழக்கம், என் படிப்பு உள்பட மனதுக்கு சரியாகப் படாத எல்லாவற்றுக்கும்  கேள்வி கேட்பேன்...:) அப்பாவும் அதற்கு சந்தோஷமாகவும், பெருமையுடனும் எனக்கு பதில் சொல்வார்..:) 'இல்லடா! நான் ஏன் பண்ணினேன்னா' என்று எதையாவது சொல்லி என்னைத் தாஜாவும் செய்வார்..:)


PSGல் CADD(Computer Aided Designing & Drafting) கோர்ஸ் சேரணும் என்ற என் முடிவுக்கு அப்பா மறுப்பேதும் சொல்லாமல் சம்மதம் சொன்னார். CADD கோர்ஸில் நான்கு level உண்டு. இரண்டிரண்டு லெவல்களாக சேர்ந்து முடிக்கலாம். PSGல் படிக்க விருப்பப்பட்டதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கோர்ஸ் நிறைவுற்றதும் PSGஇலிருந்து ஒரு சான்றிதழும், U.Sல் உள்ள AUTODESK Training Centreஇலிருந்து ஒரு சான்றிதழும் கிடைக்கும். நான்கு லெவல்களை கற்றுக் கொள்வதற்கான அப்போதைய கட்டணம் 6000 ரூ. ஒருவழியாக என் தோழியும் உடன் வர நாங்கள் இருவரும் கோர்ஸில் சேர்ந்து விட்டோம்.


அன்றாடம் காலேஜூக்கு செல்வதைப் போலவே அதே அவினாசி ரோடு, பேருந்துப் பயணம், லஞ்ச் பாக்ஸ் மாலை வரை வகுப்பு என்று எங்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.  2Dல் இயந்திரங்களின் பாகங்களை டிசைன் செய்து அதை 3D ல் மாற்றிப் பார்க்க மிகவும் பிடித்திருந்தது. முதன்முதலில் ஆன்லைன் எக்ஸாம் அட்டெண்ட் செய்ததும் CADD வகுப்பில் தான்.


எங்கள் கல்லூரியில் வெளிமாநில மாணாக்கர்கள் பலர் படித்தார்கள் என்றால் இங்கே வெளிநாட்டு மாணாக்கர்களும் படித்துக் கொண்டிருந்தார்கள். எங்களுடன் CADD கோர்ஸில் 'நீக்ரோ' ஒருவர் கூட படித்தார். ஏழடிக்கும் குறையாத உயரம், அவரின் நிறம், முடிச்சு முடிச்சாக தோன்றிய தலைமுடி, அவரிடமிருந்து வந்த ஒருவித வித்தியாசமான வாடை என்று அவரை வியந்து பார்த்துக் கொண்டிருந்தோம்..:)


முதல் இரண்டு லெவல்களை வெற்றிகரமாக முடித்து சான்றிதழும் பெற்றோம். அடுத்த இரண்டு லெவல்களை சேர்வதற்குள் சற்றே இடைவெளியாகி விட்டது. அதற்கான பணத்தை அப்பா ஏற்பாடு செய்ய வேண்டுமே!!! கோர்ஸ் நிறைவடைந்த அன்று முதன்முதலாக ஒரு உணவை சாப்பிட்ட கதை என்று  மீதிக்கதைகளை அடுத்த பகுதியில் சொல்கிறேனே!


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி மற்றும் எல்லோருக்கும்

  இன்றைய பொன்மொழி வரிகள் மிக மிக மிக அருமை. கதை ஒன்றில் இந்த வரிகளை எழுதியுள்ளேன் ஆனால் இன்னும் கதை முடிக்கப்படவில்லை!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! கதையில் எழுதியுள்ளீர்களா!!

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

   நீக்கு
 3. ஆதி நீங்கள் எந்த வருடம் பி எஸ் ஜி யில் CADD செய்தீர்கள்? நாங்கள் பி எஸ் ஜி க்வார்ட்டர்ஸில் தான் மூன்று வருடம் இருந்தோம். ஆமாம் பி எஸ் ஜி யில் ஆஃப்ரிக்கன் மாணாக்கர்கள் படித்தார்கள்.

  நீங்கள் முதன் முதலாக ஒரு உணவைச் சாப்பிட்ட கதை என்றதும் அந்த அவினாசி ரோடில் பிஎஸ்ஜி கல்லூரியின் எதிர்ப்புற வரிசையில் லக்ஷ்மி மில் போகும் டைரக்ஷனில், பழமுதிர் நிலையம் தாண்டி ஒரு 5 நிமிடம்? நடந்தால் புதியதாக ஒரு சிறிய உணவகம் வந்திருந்தது. பெயர் மறந்துவிட்டது. அங்கு சான்ட்விச் பிசா, பர்கர் போன்ற உணவு வகைகள். பர்கர் பற்றி அப்போது தெரிந்திருந்தாலும் முதன் முதலில் வெளியில் சுவைத்தது அந்த உணவகத்தில்தான்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் 2000 ஆம் வருடம் தான் CADD பயின்றேன். நீங்கள் அப்போது அங்கிருந்தீர்களா??

   ஏறக்குறைய கண்டுபிடித்து விட்டீர்கள்..அடுத்த பகுதியில் என்னவென்று சொல்லி விடுகிறேன்.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

   நீக்கு
  2. ஓ! ஆதி! 2000 ம்ல் நாங்கள் சென்னையில்!!!...மிஸ்ட் யு!!

   கீதா

   நீக்கு
 4. ஆதி உங்களின் நினைவுகளை நன்றாகப் பதிகின்றீர்கள். பாராட்டுகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

   நீக்கு
 5. அப்போதே தேவையான சரியான கோர்ஸைத் தேர்ந்தெடுத்துப் படித்திருக்கிறீர்கள். அது எப்படி வேலைக்கு உதவியது எனத் தெரிந்துகொள்ளக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் தேர்ந்தெடுத்து படித்தது என் வாழ்க்கையில் எந்த விதத்தில் உதவுகிறது என்று அடுத்தடுத்த பகுதிகளில் பகிர்ந்து கொள்கிறேன் சார்.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

   நீக்கு
 6. வாசகம் மிக அருமை.
  Cadd படிப்பு மிகவும் பயன்பட்டிருக்கும்.
  இப்போது சென்னை ஐ.ஐ.டியில் 3 டி பிரிண்ட்டிங் மூலம் குறைந்த காலத்தில் வீடு கட்டும் அளவு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
  அவற்றை படிக்க மக்கள் தங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கலாம்.
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேலதிகத் தகவலுக்கு நன்றி சார்.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

   நீக்கு
 9. வாசகம் அருமை.

  படித்த காலங்களை நினைவு படுத்தி அழகாய் சொன்னீர்கள் ஆதி.
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 10. அருமையான அனுபவங்களைச் சிறப்பாக
  எழுதுகிறீர்கள் ஆதி.

  இத்தனை கல்வி அறிவையும்
  உபயோகப் படுத்தினதையும் சொல்லுங்கள்.
  மிக உயர்ந்த படிப்பு ரோஷ்ணிக்கும் பயன் படும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இத்தனை கல்வி அறிவும் உபயோகப்படுவதை பற்றி அடுத்தடுத்த பகுதிகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....