செவ்வாய், 7 செப்டம்பர், 2021

கல்லூரி நாட்கள் பகுதி ஒன்பது - டவுன்பஸ் பயணங்கள் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ளும் முயற்சியே கல்வி. அது மகிழ்ச்சியான வாழ்விற்கு வழிகாட்ட வேண்டும்- சத்குரு.


******


கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் இது வரை எட்டு பதிவுகள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பகுதிகளுக்கான சுட்டி கீழே!


கல்லூரி நாட்கள் - முதல் பகுதி 


கல்லூரி நாட்கள் - இரண்டாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - மூன்றாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - நான்காம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஐந்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஆறாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஏழாம் பகுதி


கல்லூரி நாட்கள் - எட்டாம் பகுதி

சென்ற பகுதியில் ஆட்டோமொபைல் வொர்க்‌ஷாப் பற்றியும், அங்கே நாங்கள் கற்றுக் கொண்ட தொழிற்கல்வி பற்றியும், மருதாணி போட்டுக் கொண்ட கதைகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டிருந்தேன். இந்தப் பகுதியில் கல்லூரிக்குச் சென்று வந்த அனுபவங்களைப் பற்றி பார்க்கலாம்.. வாங்க!


நான் என் பள்ளிநாட்களில் தொடங்கி பயின்றது எல்லாமே கோவை அவினாசி சாலையில் தான். ரேஸ்கோர்ஸில் இருந்து பங்களா ரோடு  வழியாக வீட்டிலிருந்து நடந்தே அவினாசி சாலைக்கு சென்று விடுவோம். பேருந்தில் சென்றால் நான்கு நிறுத்தங்கள் வரும்...:)  பங்களா ரோடு என்று நாங்கள் சொல்வதற்கான காரணம் என்னவென்றால் அந்த சாலை முழுவதும் பங்களாக்களாக தான் இருக்கும்...:) கோவையின் பிரபலமான KG தியேட்டர் உரிமையாளரின் பங்களாவும் அங்கு தான் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். மரங்கள் அடர்ந்து காணப்படும் அந்த சாலை எப்போதுமே அமைதியாக தான்  இருக்கும். பள்ளிநாட்களில் அந்த சாலையில் தான் முதன்முதலாக அபார்ட்மெண்ட் ஒன்றைப் பார்த்தேன்..:) Subbu Apartments!


கல்லூரிக்குச் செல்ல அவினாசி சாலைக்கு சென்று அங்கே நான் 6th to 10th வரை பயின்ற RKS பள்ளிக்கு எதிரே Stanes ஸ்கூல் இருக்கும்! அருகில் தினத்தந்தி அலுவலகம்! Stanes பள்ளியின் முன்பு தான் பேருந்து பிடிப்பேன். இந்த Stanes பள்ளிக்குள் ஒருமுறை பாரதியார் கவிதைகள் சொல்லும் போட்டிக்காக சென்றிருக்கிறேன். நான் படித்த பள்ளியிலிருந்து என்னைத் தேர்வு செய்து அழைத்துச் சென்றார்கள். எந்த வகுப்பில் என்று நினைவில்லை..:) அன்று பல்வேறு பள்ளிகளில் இருந்து போட்டிக்கு வந்திருந்தார்கள்..:)


சரி! வாங்க! பேருந்தை பிடிப்போமா! பேரூர் to பாலிடெக்னிக் வழித்தடம் கொண்ட 2ஆம் நம்பர் பேருந்தில் ஏறினால் எங்கள் கல்லூரி வாசலில் இறங்கலாம். இது பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிருந்து கிளம்பி SITRA (South India Textile Research Association) வரைச் செல்லும் பேருந்து. இது வட்டார வழக்கில் எல்லோருக்கும்  'சித்ரா' வாகிப் போனது..:) 


அவினாசி சாலையில் பேருந்தில் ஏறினால் அடுத்து ஜி.டி நாயுடு இன்ஸ்ட்டியூட்,  லஷ்மி மில்ஸ்(கோவையின் பழம்பெரும் நூற்பாலை), நவ இந்தியா, பி.எஸ்.ஜி காலேஜ், ஹோப்ஸ்(இங்கே தான் முன்பு எங்கள் கல்லூரி செயல்பட்டிருக்கிறது. ஆர்தர் ஹோப் பெயரால் ஹோப் காலேஜ், அப்போது ஹோப்ஸ் நிறுத்தம்), CIT(Coimbatore Institute Of Technology), GPT(Government Polytechnic), PSG Arts College, SITRA இப்படித்தான் வழித்தடம் இருக்கும். அப்போதைய பேருந்துக் கட்டணம் 2ரூ.


பொதுவாக 2ஆம் நம்பர் பேருந்து தொடர்ச்சியாக கிடைக்கும். ஆனால் நான் என் டிபார்ட்மெண்ட் தோழியுடன் S19ல் செல்வது தான்  வழக்கம். அவளுடையது போத்தனூர் என்ற இடத்திலிருந்து கல்லூரி வரை செல்லும் பேருந்து. வரும் 2ஆம் நம்பர் பேருந்துகளையெல்லாம் விட்டுவிட்டு அவளுக்காக காத்திருந்து செல்வேன்..:) பேசிக் கொண்டே செல்வதற்காக..:) ஒருமுறை இப்படி காத்திருந்த போது வந்தது ஒரு வில்லங்கம்!!


ஸ்கூட்டரில் வந்த ஒரு ஆசாமி, அவினாசி சாலையில் என் கல்லூரியைத் தாண்டி உள்ள ஒரு எஞ்சினியரிங் காலேஜின் பெயரைச் சொல்லி வழியைக் கேட்க, போகும் வழியைச் சொன்னேன். சரியென்று சொல்லிச் சென்ற அந்த ஆள்..U Turn அடித்து மீண்டும் வந்து அதே முகவரியைக் கேட்டார்! இப்படியே போங்க! தெரிந்து விடும்! என்று சொன்னதும், நீங்க என்னோடு வந்து வழி காட்ட முடியுமா சிஸ்டர்! என்றதும் உஷாரானேன்! என்னடா இது வம்பா போச்சு என்று அப்போது வந்த  2ஆம் நம்பர் பேருந்தை பிடித்து கல்லூரிக்குச் சென்று விட்டேன்..:) அன்றிலிருந்து  தோழிக்காக நிற்காமல் கிடைக்கும் பேருந்தை பிடித்து விடுவேன்..:)


இதுபோன்ற ஆசாமிகள் எங்கும் தான் உள்ளனர்! நாம் தான் மிகக் கவனமாக இருக்க வேண்டும். நான் நடந்து செல்லும் பங்களா ரோட்டிலும் இந்த மாதிரி தொல்லைகள் இருக்கும்...:) ஒருமுறை பின்னாடியே ஒருவர் வர, அப்போது தூரத்தில் சென்ற யாரோ ஒரு போலீஸை நான் உறவுமுறை சொல்லிக் கூப்பிட, பின்னாடியே வந்த ஆசாமி, வந்த வழியே ஓட்டமெடுத்தார்...:)


இந்தப் பகுதியில் என் பேருந்து அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. அந்நாட்களுக்கே சென்று வந்த உணர்வைத் தந்தது..:) இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் இருப்பதால் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்ஆதி வெங்கட்


22 கருத்துகள்:

 1. தொல்லையாளர்களை நீங்கள் சமாளித்த விதம் சூப்பர். நான் என் தங்கைக்கு தொல்லை தந்தவர்களை விதம் விதமாக சமாளித்திருக்கிறேன்! அதைப் பற்றி தளத்தில் கொஞ்சம் எழுதியுமிருக்கிறேன்.​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா சார்! முடியும் போது வாசிக்கிறேன்.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

   நீக்கு
 3. சுவாரஸ்யம் இரண்டாம் எண் பேருந்து இன்றும் சித்ரா வருகிறது சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா சார்! தகவலுக்கு நன்றி.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. இன்றைய காலத்தில் மேலும் கவனமாக இருக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

   நீக்கு
 6. பதில்கள்
  1. முடியும் போது வாசித்துப் பாருங்கள் மாமி.

   தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதா மாமி.

   நீக்கு
 7. பேருந்துப் பயணங்கள்.. ரசனைதான்... உங்கள் ஊர் பகுதியிலிருந்து வந்த பாக்கியராஜின் அந்தக் காலப் படங்களிலேயே இந்த மாதிரித் தொல்லைகளை நிறைய காட்டியிருப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார். ஒரு சில படங்களில் பார்த்திருக்கிறேன்.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

   நீக்கு
 8. மிகவும் ரசனையான பதிவு. பெண்களுக்கு எந்தெந்த நேரம் எப்படி
  சமாளிக்க வேண்டும் என்ற உணர்வு சட்டென்று
  தோன்றும். உங்கள் சாமர்த்தியமான
  செயல்பாடிற்கு வாழ்த்துகள் ஆதி.
  நாங்கள் கோவையிலிருக்கும் போது 7 ஆம் நம்பர்
  பஸ் ரூட் :))))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 7ஆம் நம்பர் மட்டும் தான் எங்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருக்கும். காந்திபுரம் to காந்திபுரம்.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 9. கல்லூரி அனுபவங்களை சொன்ன விதம் அருமை.

  தொல்லைகளை சமாளித்த விதம் அருமை. கூட்டமாக இருந்தால் பயமில்லை. ஒத்தையாக இருந்தால் கஷ்டம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா.ஒத்தையாக இருப்பவர்களிடம் தான் தொல்லையும் கொடுப்பார்கள்.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 10. இனிய கல்லூரி அனுபவங்களுடன் தொல்லைகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்ப்பா..

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

   நீக்கு
 11. இப்படியான ஜென்மங்கள் திருந்துவதே இல்லை.. இப்போதும் சேட்டைகள் வெவ்வேறு விதங்களாகத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன...

  அசாத்திய தைரியம் இருந்தால் மட்டுமே தப்பிக்க முடியும்..

  சாதனைப்ப்பெண் தான் நீங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க சார்.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....