புதன், 15 செப்டம்பர், 2021

வாடகை வீடு - குறும்படம் - காணொளி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உலகில் நம்மை உயிராய் நேசிக்கும் ஒருவர் இருந்தால் கூட வாழும் வாழ்க்கை அழகாகிவிடும்.


******

வாடகை வீடு - தனது மகன் வீட்டில் வசித்துக் கொண்டிருக்கும் தந்தை - தான் வாடகை வீட்டில் வசிப்பது போன்ற உணர்வு தான் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு பரிதாபமான நிலை!  அந்த நிலையை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள் குறும்படத்தில். அவரது வீட்டில் குடியிருக்கும் பெண்ணிடம் தன் நிலையைச் சொல்லும் போது அவர் முகத்தில் தெரியும் வேதனை.  பிரபல ஹிந்தி நடிகர் ராகேஷ் Bபே(dh)தி அவர்கள் நல்லதொரு நடிகர் என்பதை இந்தக் குறும்படத்திலும் நிரூபித்து இருக்கிறார்.  ஹிந்தி மொழி படம் என்றாலும் ஆங்கிலத்தில் சப்டைட்டில் உண்டு என்பதால் பார்த்து புரிந்து கொள்ளலாம்.  பாருங்களேன்.


மேலே உள்ள காணொளி வழி பார்க்க முடியவில்லை என்றால் கீழே உள்ள இணைப்பு வழி நீங்கள் குறும்படத்தினை கண்டு ரசிக்கலாம். 


Rent | Loving Your Parents | Ft. Rakesh Bedi | Hindi Short Film | Six Sigma Films - YouTube


நண்பர்களே இன்றைய குறும்படம்/காணொளி குறித்த உங்கள் கருத்துரைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...

20 கருத்துகள்:

 1. அன்பின் வெங்கட் ,
  இனிய காலை வணக்கம்.
  இந்தப் பதிவை சில நாட்கள் முன் தான்
  பார்த்தேன்.
  முன்பு யே ஜோ ஹை Zindagi யில் வருவார் இல்லையா,.
  மிக மென்மையான படம்.

  நெகிழ வைத்ததும் கூட.
  மிக மிக நன்றி மா. நலமுடன் இருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. எதிர்காலத்தில் நமக்கும் இப்படியாகுமோ என்கிற பயம், எச்சரிக்கை எனக்கும் உண்டு!  ம்ம்ம்...   இந்த மகள் மாறிவிட்டாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. அருமையான பொன்மொழி, வெங்கட்ஜி!!! உண்மைதான், அன்பு தானே உலகையே அழகாக்குகிறது!
  இனிய காலை வணக்கம் ஜி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஓ வெங்கட்ஜி ஸ்ரீரங்கம் வந்திருக்கீங்களா! இன்றுதான் கவனித்தேன்...

  குறும்படம் பார்க்கிறேன் பார்த்துவிட்டு வருகிறேன் ஜி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு வாரம் திருவரங்கம்.... தற்போது மீண்டும் தில்லி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 5. குறும்படம் மனதை மிகவும் நெகிழ்த்திவிட்டது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. //உலகில் நம்மை உயிராய் நேசிக்கும் ஒருவர் இருந்தால் கூட வாழும் வாழ்க்கை அழகாகிவிடும்.//

  அருமை.

  குறும்படம் மிகவும் அருமை.

  அன்பான பேச்சுக்கு ஏங்கும் பெற்றோர்கள் நிறைய இந்த உலகில்.
  அதை கொடுத்தால் போதும் பிள்ளைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....