திங்கள், 6 செப்டம்பர், 2021

வாசிப்பனுபவம் - எனக்கும் எனக்கும் - ரம்யா சரவணன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சர்வதேச யானைகள் தினம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


NEVER LET A BAD SITUATION BRING OUT THE WORST IN YOU.  BE STRONG AND CHOOSE TO BE POSITIVE.


******
சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் ரம்யா சரவணன் அவர்கள் எழுதிய “எனக்கும் எனக்கும்” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 94

விலை: ரூபாய் 49/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


எனக்கும் எனக்கும் - Enakkum Enakkum (Tamil Edition) eBook : Raa , Raa , Saravanan, Ramya , DI, Aravindan******* 


அர்ஜூன் என்கிற பிரதான கதாபாத்திரமே பேசுவதாக ஒரு கதை.  கூடவே அவருடன் பிறந்தவராக அரு - இருவருக்குமான உரையாடல்களில், சொல்ல வரும் விஷயங்களையும், கதையையும் நகர்த்துகிறார். குழந்தையாக இருந்ததிலிருந்தே தனது தந்தை “சின்னத் தொழிலோ, பெரிய தொழிலோ நாமே ராஜா, நாமே மந்திரி, நாமே சேவகனாக இருக்க வேண்டும்” என்று சொல்வதைக் கேட்டுக் கேட்டு அர்ஜூனின் மனதிலும் அந்த ஆசை இருக்கிறது.  தனது தந்தை தோல்வி அடைந்ததால் தன்னையும் தனது ஆசைகளையும் வேறு வழியின்றி துறக்க வேண்டியிருக்கிறது.  அர்ஜூன் என்ற கதாபாத்திரத்தின் சிறு வயதிலிருந்து, படிப்பு, கல்லூரி, காதல், திருமணம், தொழில், அதில் ஏற்பட்ட தோல்வி, பிறகு அடைந்த வெற்றி எல்லா நிகழ்வுகளையும் பிரதான கதாபாத்திரம் மூலமே பேச வைத்திருப்பது நன்று.  இரட்டையரான அரு, அர்ஜூன் செய்யும் செயல்களையும் அதில் உள்ள சாதக-பாதக விஷயங்களைச், சுட்டிக் காட்டுவது சிறப்பு.  


94 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்த நூல் வழி ஆழ்மனதின் எண்ணங்களையும் அவ்வப்போது சொல்லிக் கொண்டே வருகிறார்.  ஆங்காங்கே ஹாஷ்டேக் செய்து வருவதும் பார்க்க முடிகிறது.  சிறு வயதில் கிடைத்த காதல் தோல்வி, நினைத்தது கிடைக்காவிட்டால், கிடைத்ததை நேசிப்பது, அம்மாவின் ஆசைகள், அப்பாவின் தோல்வி, காதல் திருமணம் என ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வந்து கதையை முடித்திருக்கிறார்.  கடைசி பகுதியில் அர்ஜூனின் வார்த்தைகளில் சில பத்திகள் பிடித்திருந்தன.  உதாரணத்திற்கு ஒன்று...


“நான் வாழ்க்கையைப் பல கோணங்களில் பார்க்க விரும்புகிறவன். எப்படிப் பார்த்தாலும் வாழ்க்கை எனும் பயணம் தரும் அனுபவங்கள் அனைத்தும் நமக்குப் பாடங்களாகவே அமைகின்றன” என்று சொல்வது எத்தனை உண்மை.  


கதாபாத்திரத்திமே தனது கதையைச் சொல்லும் விதமாக அமைந்த இந்த நாவல் நன்றாகவே இருக்கிறது.  வழக்கம் போல குறை என்று சொல்ல ஒன்று உண்டு - அது எழுத்துப் பிழைகள்!  நிறைய இடங்களில் இருக்கின்றது.  இதையே எல்லா மின்னூல்களிலும் பார்க்க முடிவது கொஞ்சம் சோர்வையே தருகிறது.  இவ்வளவு கஷ்டப்பட்டு தட்டச்சு செய்யும் நூலாசிரியர்கள், தாங்கள் தட்டச்சு செய்ததை, ஒவ்வொரு பகுதியாக, வாணி போன்ற இணைய தளங்கள் மூலம் திருத்திக் கொள்ளலாம்.  அதற்கு ஆகும் நேரம் ஒன்றும் அதிகமில்லை.  தட்டச்சு செய்யும் போது வரும் சின்னச் சின்னப் பிழைகளை மட்டுமாவது நீக்க இந்த இணைய தளங்கள் உதவும்.  ஒற்றுப் பிழை, இலக்கணப் பிழை போன்றவற்றைத் திருத்த முடியாவிட்டாலும், தட்டச்சுப் பிழைகளையாவது திருத்தலாமே! 


******


எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...


இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வாணி பற்றி பலருக்கும் தெரியவில்லை - உண்மை தான் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. நல்லதொரு நூல் அறிமுகம் சார்.
  விரைவில் வாசிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். முடிந்த போது வாசியுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. நல்ல மதிப்புரை. குறையைச் சுட்டிக்காட்டிய விதம் சிறப்பு. இக்குறையை பலர் செய்வதைப் பார்த்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலரும் செய்கிற குறை - உண்மை தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. தட்டச்சுப் பிழைகளைக் கூட பலர் சரிசெய்வதில்லை - மீண்டும் படித்துப் பார்க்காததும் ஒரு காரணம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. அருமையான விமர்சனம்.
  வாணி மூலம் திருத்தி கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வாணி பயன்படுத்தினால் நல்லதும்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. வாசகமும் விமர்சனமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....