ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

Tranquebar எனும் தரங்கம்பாடி - நிழற்பட உலா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


WELL WISHERS ARE LIKE BEAUTIFUL STREET LAMPS, THEY CANNOT MAKE OUR DISTANCE SHORTER; BUT THEY CAN LIGHTEN OUR PATHS AND MAKE THE JOURNEY EASIER. 


******


சமீபத்தில் தமிழகத்திற்கு வர வேண்டிய வேலை இருந்தது - தில்லிக்கு சென்ற ஜூன் மாதம் திரும்பியது - இரண்டு மாதங்களுக்கு மேலாக தமிழகம் வர இயலாத சூழல்.  மாதத்தின் முதல் வாரத்தில், இரண்டு வார விடுமுறையில் தமிழகம் வந்திருந்தேன்.  இதோ இன்றைக்கு மீண்டும் தில்லிக்கு புறப்பட்டாயிற்று! அதே சமயத்தில் திருக்கடையூரில் ஒரு சஷ்டியப்தபூர்த்தி - தில்லி நண்பருக்கு.  தில்லியிலிருந்து நண்பர்கள் குழாமாக வந்திருக்க, 5-6 செப்டம்பர் ஆகிய இரண்டு நாட்களும் திருக்கடையூரில் டேரா! பயணம், பயண அனுபவங்கள், ராஜா காது கழுதை காது என சில விஷயங்கள் தொடர்ந்து பதிவுகளாக வரலாம்! (இது ஒரு முன்னோட்டம் என்று கூட சொல்லலாம்! ஹாஹா…)


முதல் நாள் மாலை நடக்க வேண்டிய நிகழ்வுகள், கோவில் மூடியிருந்ததால் (ஞாயிறு) நடக்கவில்லை. நேரம் வீணாகிக் கொண்டிருந்தது - சரி என்ன செய்யலாம் என நண்பர் கேட்க, பக்கத்திலே தான் Tranquebar எனும் தரங்கம்பாடி - பார்க்க வேண்டிய சில இடங்கள் உண்டு - மாலை ஆகிவிட்டதால் கோட்டை, அகழ்வைப்பகம் (Museum என்பதற்கு இப்படித் தான் தமிழில் தகவல் பலகைகளில் தற்போது எழுதுகிறார்கள்!) போன்றவை மூடியிருந்தாலும், கடலை கதவு கொண்டா மூடிவிட முடியும்?  கடலையாவது பார்த்து வரலாம் என்று நான் சொல்ல, உடனே புறப்பட்டோம்.  அப்போது எடுத்த சில படங்கள் - இதோ நிழற்பட உலாவாக உங்கள் பார்வைக்கு - படங்கள் அனைத்துமே நண்பரின் அலைபேசியில் நான் எடுத்தவை (நான் இருப்பது நண்பர் எடுத்தது !) வாருங்கள் பார்க்கலாம், ரசிக்கலாம்!



டேனிஷ் கோட்டை - பின்புறப் பார்வை






கடல் காற்றில் அரித்துப் போன இரும்புக் கதவு...


















பார்க்கப் பார்க்க அலுக்காத கடல்....



கடலைப் பார்த்து ரசித்தபடி நண்பர்...



கடலுக்கு முன் நான்... 

நண்பர்களே, பதிவின் வழி பகிர்ந்து கொண்ட படங்கள் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன்.  நாளை வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


24 கருத்துகள்:

  1. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்! என்ன அலைபேசி? படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் OnePlus மூலம் நான் எடுத்த படங்கள் ஸ்ரீராம். எனது அலைபேசியில் எடுக்கவில்லை. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அட அண்ணாச்சி (பத்மநாபன்) போட்டோவையும் போட்டுவிட்டீர்கள். 

    படங்கள் அருமை. ஆனாலும் ஏதோ ஒன்று குறைவைது போல் உள்ளது.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படத்தில் இருப்பது பத்மநாபன் அண்ணாச்சி இல்லை ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா. வேறொரு நண்பர்.

      நீக்கு
  3. படங்கள் அத்தனையும் அட்டகாசம் வெங்கட்ஜி!

    மிகமிக ரசித்தேன் ஆமாம் கடல் அலுக்குமா என்ன!!!

    கீதா

    இப்ப மீண்டும் தில்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி. கடல் அலுக்காத விஷயங்களில் ஒன்று தான்.

      19-ஆம் தேதி அன்று தில்லி திரும்பி விட்டேன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. படங்கள் அருமை.
    கூகிள் விளக்க நிரல்கள் மூலமாக புரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை நீங்களும் அறிந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. தரங்கம்பாடி படங்கள் எல்லாம் அருமை.
    நாங்கள் அடிக்கடி சென்று வரும் இடம். நிறைய பதிவுகள் போட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவுகளில் தரங்கம்பாடி குறித்த பதிவுகள் படித்த நினைவிருக்கிறது கோமதிம்மா. மயிலாடுதுறை சென்றபோது உங்களையும் சாரையும் நினைத்துக் கொண்டேன். ஒரே ஒரு முறை அங்கே வந்தது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. நாற்பது வருடங்களுக்கு முன் சென்றிருக்கின்றேன்.. கடற்கரையில் அலை அரிப்பிற்குள் சிவன் கோயில் ஒன்று சிதிலம் அடைந்திருந்தது.. இப்போது அந்தக் கோயிலின் நிலை என்னவென்று தெரியவில்லை..

    தென்னகத்தின் முதல் அச்சுக்கூடம் இங்குதான்...

    ஆனாலும் இங்கு ஏனோ மனம் லயிப்பதில்லை...

    ஆயினும் தங்களது பதிவு அழகு..

    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாற்பது வருடங்களுக்கு முன்னர்! இப்போதும் அந்த சிவன் கோயில் சிதிலமடைந்தே இருக்கிறது. பதிவில் போட்டிருக்கும் துரு பிடித்த இரும்புக் கதவின் படம் அந்தக் கோவில் அருகே எடுக்கப்பட்டதே துரை செல்வராஜூ ஐயா.

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. எல்லோருக்கும் எல்லா இடங்களும் மனதில் லயிப்பதில்லை என்பது உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அடடே தரங்கம்பாடி வந்து விட்டதே!!!
    அலைகளும் கடலும் என்றும் அலுக்காது.

    இங்கே பாறைகள் போடப்பட்ட கடற்கரையோ?
    மணல் இருந்தால் அலைகளில் நின்றே
    அனுபவிக்கலாம்.

    மாலை நேரக் கடல் பல வண்ணங்களைக் காட்டும்.
    கிழக்குக் கடற்கரை என்பதால் சூரிய அஸ்தமனம்
    இல்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லிம்மா - தரங்கம்பாடி வந்து விட்டது பதிவில் - இப்போதைக்கு படங்கள் மட்டும்! இன்னும் சில விஷயங்களும், காணொளிகளும் வரும் பதிவுகளில் வரலாம்!

      மணல் இருக்கும் கடற்கரையும் இருக்கிறது. அங்கேயும் அதிக நேரம் இருக்க விடுவதில்லை.

      சூரிய அஸ்தமனம் இல்லை - காரணம் நீங்கள் சொன்னதாகவே இருக்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. திருக்கடையூர் என்பதால் அபிராமி அம்மன்
    கோயிலும் வரும் என்று நம்புகிறேன்/.
    அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.
    உங்கள் விடுமுறை ஸ்ரீரங்க அனுபவங்களையும் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்கடையூர் பற்றியும் சில பதிவுகள் வரலாம்! :) ஸ்ரீரங்க அனுபவங்களும் தான் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. தரங்கம்பாடி மிக அழகாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தரங்கம்பாடி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. டேனிஷ் கோட்டை அழகு. அலுக்காத கடலும் அலை மோதும் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....