ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

சர்வதேச யானைகள் தினம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


THE MORE BALANCED YOU ARE WITH YOURSELF, THE MORE DIFFICULT FOR OTHERS TO DISTURB YOU.


******


சர்வதேசயானைகள்தினம் (12 ஆகஸ்ட்):பார்க்க அலுக்காதவற்றில் கடல், குழந்தை, ரயில் அதோடு யானையும் அடங்கும். பார்க்க பிரம்மாண்டமாக இருந்தாலும் யானை சாத்வீகமானது. இன்று சர்வதேச யானைகள் தினமாம். யானையோடு தொடர்புடைய பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.


சிறுவயது முதலே பெரிய கோவில்களுக்குச் செல்லும் போது  யானையிடம் ஆசி வாங்கிக் கொள்ள அப்பா எப்போதுமே என்னைக் கூப்பிடுவார். நான் தான் பயந்தாங்கொள்ளி ஆச்சே!! 'போப்பா நா வரமாட்டேன்'! என்று சொல்லி விடுவேன்.


கோவையில் எங்கள் குடியிருப்பிலும் ஒவ்வொரு வியாழன் அன்றும் யானை ஒன்று வரும். அழகாக காலில் ஷூ அணிந்திருக்கும்! சிறுவயது குழந்தைகளை அவர்கள் பெற்றோர் யானையின் மீது அமர வைக்கும் படி பாகனிடம் கேட்பர். அவரும் குழந்தைகளை யானையின் மீது அமர வைத்து முன்னாடி இரண்டு அடி, பின்னாடி இரண்டு அடி என்று அழைத்துச் செல்வார்..:) பெரும்பாலான குழந்தைகள் என்னைப் போல் மிரண்டு தான் அழுவார்கள்..:) இறக்கிவிடும் சமயம் யானை தன் துதிக்கையை நீட்ட அதில் குங்குமம் இருக்கும். அதை குழந்தைக்கு வைத்து விட்டு இறக்குவார் பாகன்.


அம்மா எப்போதும் மண்ட வெல்லம், அரிசி, வாழைப்பழம் போன்றவற்றை சின்ன பித்தளை தாம்பாளத்தில் வைத்து தருவார். அதை பாகன் யானையின் வாயில் போடுவதையும், யானை அதை சாப்பிடுவதையும் எட்ட இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன். தேங்காய் என்றால் காலில் ஒரே மிதி.. ஓடு தனியாக போய்விடும்!


இங்கே திருவரங்கத்திலும் எனக்கு அக்காவாக ஆண்டாள் இருக்கிறாள். கொலுசு அணிந்து தாயார் ரங்கநாயகிக்கு வெண்சாமரம் வீசுவாள். மவுத் ஆர்கன் வாசிப்பாள். குளித்து முடித்ததும் தன் துதிக்கை மணற்பரப்பில் படாமல் மடித்துக் கொண்டு அழகாகச் செல்வாள்..:)


யானை காட்டில் உள்ள இலை தழைகளை மட்டுமே உண்பதால் அதன் கழிவு மூலம் காடுகள் உருவாகின்றனவாம். அதன் பாதையில் கட்டிடங்கள் கட்டி விடுவதால, அது குழம்பி  மனிதர்களை தாக்குகிறது. ஆங்காங்கே யானைகளும் மடிகின்றன. 


பூமியில் இருக்கும் வரை எந்தவொரு ஜீவராசிகளையும்  துன்புறுத்தாமல் உன்னத வாழ்வு வாழ்வோம்.


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்ஆதி வெங்கட்


16 கருத்துகள்:

 1. யானைகள் எப்போதுமே சுவாரஸ்யம்.  நம் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் போல, நமக்குத் பிடித்தமான குழந்தை போல, இஷ்ட தெய்வம் போல...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் சார்.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   நீக்கு
 2. PETA வந்ததுக்கு அப்புறம் இங்கு கேரளத்தில் யானைகள் வளர்ப்பு, மற்றும் உபயோகம் முற்றிலும் அழித்துவிட்டது. கோவில்களில்  எழுன்னுள்ளிப்பு மற்றும்  பறையெடுப்பு நெற்றிப்பட்டம் கட்டிய யானைகள் மேல் திடம்புகள் வைத்து வீதி உலா வரும் வழக்கம் அறவே  ஒழிந்து விட்டது. குருவாயூரில் மாத்திரம் யானைகளை இப்போதும் பராமரிக்கிறார்கள்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா! குருவாயூர் கோவிலில் பராமரிப்பது நல்ல விஷயம்.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   நீக்கு
 3. யானை குழந்தைகளுக்கு அதிசயமான விசயமே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார்.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

   நீக்கு
 5. சர்வதேச யானைகள் தினத்தில் தங்கள் அனுபவப் பகிர்வு சுவாரஸ்யம். பல யானைகளைப் பலமுறைகள் படமாக்கியிருக்கிறேன் என்றாலும், அவற்றின் அருகில் செல்ல எப்போதுமே எனக்குக் கிலிதான்:).

  வன யானைகள் துன்பறுத்தப் படாமல் இருக்கவும், கோயில் யானைகள் நன்கு பராமரிக்கப்படவும் பிராத்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு கிலியா!!!

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ராமலஷ்மி ஜி.

   நீக்கு
 6. யானைகள் என்றாலே நமதுநாடும் ஞாபகத்துக்கு வரும். யானை சரணாலயங்களும் இருக்கின்றன.

  இவற்றை மனிதர்கள் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா!அருமை..

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

   நீக்கு
 7. ஆனைகள் எப்பொழுதும் அழகு.
  ஸ்ரீரங்கம் ஆண்டாள் பேசக் கூடச் செய்வாள்
  என்று கேள்வி. அழகி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியாம்மா..புதிய தகவல்.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 8. பதில்கள்
  1. ஆமாம் ஐயா.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....