வியாழன், 2 செப்டம்பர், 2021

கல்லூரி நாட்கள் பகுதி எட்டு - மெஹந்தி- ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பயணம் செய்ய ஆசை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பிடிக்கவில்லை என விலகிச் செல்பவர்களிடம் காரணம் கேட்காதீர்கள்; காரணங்கள் அவர்களுக்குத் தகுந்தாற்போல் உருவாக்கப்படலாம்.


******


கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் இது வரை ஏழு பதிவுகள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பகுதிகளுக்கான சுட்டி கீழே!


கல்லூரி நாட்கள் - முதல் பகுதி 


கல்லூரி நாட்கள் - இரண்டாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - மூன்றாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - நான்காம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஐந்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஆறாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஏழாம் பகுதி


சென்ற பகுதியில் நாங்கள் மூவரும் வொர்க்‌ஷாப்பில் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தேன் அல்லவா! அந்த அனுபவங்களை  எழுதிய போது மனதுக்கு மிகவும் மகிழ்வாகவும், நிறைவாகவும் இருந்தது. பிடித்து செய்த வேலை என்பதால் என்று நினைக்கிறேன்.


சென்ற பகுதியின் இறுதியில் கல்லூரி இறுதியாண்டில் ஒரு செமஸ்டரில் Elective subjectஆக நாங்கள் எடுத்த பிரிவுக்கும் விவேக் சாரின் காமெடிக்கும் சம்பந்தம் உண்டு என்று சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். அது என்னவென்று யூகித்து விட்டீர்களா??


ஒரு திரைப்படத்தில் விபத்து ஏற்பட்டு லாரியின் கீழே விழும் விவேக் சார், அங்கே மாட்டியிருந்த எலுமிச்சம்பழத்தை பார்த்து, 'இத எதுக்குடா இங்க கட்டி வெச்சிருக்கு' என்று ட்ரைவரிடம் கேட்பார்! அதுக்கு  டிரைவர் 'வண்டி நல்லா ஓடணும்னு ஓனர் கட்டி வெச்சிருக்கார்! என்பார். "உள்ள 750 spare parts இருக்கு! அதுல ஓடாததா! இந்த எலுமிச்சம்பழத்துல ஓடுது!" என்று லாரி டிரைவரிடம் சொல்வாரே!! அதே தான்..:) ஹா..ஹா..ஹா.


சிங்கப்பெண்களான நாங்கள்  மூவரும் special machines தான் முன்பே ஒரு செமஸ்டரில் வந்து அதில் Milling machineஇலும் spur gear செய்தோமே! அதனால் புதிதாக ஏதாவது தெரிந்து கொள்வோம்! என்று தேர்வு செய்தது தான் Automobile technology! லாரியின் எஞ்ஜின் பகுதியை dismantling & Assembling செய்வது தான் எங்கள் வேலை! அதன் உதிரிபாகங்களை பற்றியும், அதன் செயல்பாடு குறித்தும் அந்த வொர்க்‌ஷாப்பில் தெரிந்து கொண்டோம்.


அந்த செமஸ்டரில் தியரியாகவும் ஆட்டோமொபைல் பற்றிய விஷயங்களைத் தான் படித்தோம். எஞ்ஜின், பிஸ்டன், ஸ்ட்ரோக், இக்னிஷியன், ஸ்பார்க் ப்ளக் என்று ஒவ்வொன்றை குறித்தும் விளக்கமாக அதில் இருக்கும்.


வொர்க்‌ஷாப்பில் உள்ள ஆசிரியர்களும் எங்கள் மூவரையும் எதுவும் கடிந்து கொண்டதில்லை. பெண் பிள்ளைகள் இவ்வளவு தூரம் பணிபுரிவதே பெரிய விஷயம் என்று நினைத்திருப்பார்கள் போலும்! ஆனால் நாங்கள் மூவருமே விரும்பித் தான் வொர்க்‌ஷப்பில் பணிபுரிந்தோம். Practicalல் நிறைய மதிப்பெண்களும் எடுத்தோம்.

ஒரு சில நாட்கள் ஆட்டோமொபைல் வொர்க்‌ஷாப்பில் வகுப்புத் தோழர்கள் உள்பட எல்லோரும் அரட்டை அடித்துக் கொண்டு தான் அமர்ந்திருப்போம்...:) அப்படிப்பட்ட ஒருநாளில் நாங்கள் மூவரும் ஒரு வேலையை செய்தோம்! மதிய உணவுக்கு பெண்கள் அறைக்குச் சென்ற நாங்கள், அங்கே சிலர் கைகளில் மருதாணி வைத்துக் கொள்வதை பார்த்துக் கொண்டிருந்தோம்!! 


மருதாணி என்றால் மருதாணி இலைகளைப் பறித்து அரைத்ததல்ல! பவுடரும் அல்ல! கோனும் அல்ல! இது ஏதோ தகர டப்பாவில் சர்க்கரையும், சீரகமும் சேர்த்து கருக்கி தயாரித்தது என்று சொன்னார்கள்!! நிறம் எப்படி வரும் என்பதெல்லாம் தெரியாது..:) குங்குமம் சேர்ப்பார்களோ!!  மெரூன் நிறத்தில் தான் திரவமாக இருக்கும்! அதை குச்சியால் தொட்டு வைத்துக் கொள்ள வேண்டும்!!


எங்களுக்கும் அதன் மீது ஆசை வரவே,  மூவரும் ஒரு கையில் மருதாணி வைத்துக் கொண்டு, அதை ஓவர்கோட்டின் பாக்கெட்டில் ஒளித்துக் கொண்டு வொர்க்‌ஷாப்புக்குச் சென்று விட்டோம்...:) வகுப்புத் தோழர்களிடமும் சொல்லாமல்  இடைவேளை வரை சமாளித்தோம்..:) இடைவேளைக்கு வெளியே சென்ற நாங்கள் நேரே பெண்கள் அறைக்குத் தான் வேகமாக சென்றோம்! எதற்கு??


பெண்கள் அறையில் உள்ள பாத்ரூமுக்குச் சென்று மருதாணி இட்ட கைகளை சுத்தப்படுத்த என்று நீங்கள் நினைத்தால் அது தவறு..:)) காலியாக இருந்த இன்னொரு கையிலும் மருதாணி வைத்துக் கொள்ள என்று நான் சொன்னால்..:)) ஹா..ஹா..ஹா.. ஆமாம்! அப்போதும் யாரோ வைத்துக் கொண்டு தான் இருந்தார்கள்..:) நாங்களும் அதில் ஐக்கியமானோம்..:)


இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்ட திருப்தியுடன் வொர்க்‌ஷாப்புக்குச் சென்றோம். வகுப்புத் தோழர்களிடம் சொல்லி பெருமைபட்டுக் கொண்டோம்..:) அப்போதைய எங்கள் தைரியத்தை இப்போது  நினைத்தாலும் ஆச்சர்யம் தான்!


அதேபோல் சிறுவயது முதல் இதுவரை நான் காஃபி குடித்ததே இல்லை!  அப்பா, அம்மா, தம்பி என  மூவரும் காஃபி பிரியர்கள். இவர்களுக்கு மத்தியில் தப்பி பிழைத்த ஜீவன்!  வீட்டிலுள்ளோருக்கும், விருந்தினர்களுக்கும் நிறத்தையும், அவர்களின் டேஸ்ட்டை பொறுத்து தான் கலந்து தருவேன்..:) 


முதன்முறையாக கல்லூரியில் தான் தேநீர் குடிக்கவே பழகினேன். வாரத்தில் இரண்டு நாட்கள் வொர்க்‌ஷாப் இருக்கும் என்று சொன்னது நினைவிருக்கிறதா! பணி முடிந்து வெளியே வரும் போது இயந்திரங்களின் இரைச்சலால் தலைவலியாக இருக்கும். அப்போதெல்லாம் மூவரும் கல்லூரி கேண்டீனுக்குச் சென்று தேநீர் பருகுவோம். அப்போது தேநீரின் விலை ரூ 1:50 என்று நினைவு.


வொர்க்‌ஷாப் பற்றி பலதரப்பட்ட விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. கல்லூரிக்குச் சென்று வந்த கதை, எங்கள் வாழ்க்கை முறை என்று இன்னும் பகிர்ந்து கொள்ள விஷயங்கள் இருப்பதால் அடுத்த பகுதியில் சொல்கிறேனே..:)


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்ஆதி வெங்கட்


18 கருத்துகள்:

 1. இளமைக் காலத்தைப் பற்றி நினைப்பதே சுகம்.  அதிலும் இது மாதிரி விவரங்கள் சுவாரஸ்யம்.  நீங்கள் ஒரு லாரி எஞ்சினை பார்ட் பார்ட்டாகக் அகழற்றி போட்டு அசெம்பிள் செய்யுமளவு தேர்ச்சி உள்ளவர் என்பது தெரிந்து கொண்டேன்.  ஆச்சர்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார். மறக்க முடியாத பசுமையான நினைவுகள் இவை.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க துரை செல்வராஜு சார்.

   நீக்கு
 5. இளமைக்கால நினைவுகள்.... நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

   நீக்கு
 6. அன்பின் ஆதி தொடர்ந்து வியப்பளித்து வருகிறீர்கள்.

  நீங்கள் ஆட்டோமொபைல் விஷயத்தில் இவ்வளவு தேர்ச்சி பெற்றவர் என்று தெரிந்தால் சிங்கம் அவ்வளவு சந்தோஷப் படுவார்.
  நீங்கள் கல்லூரியில் கற்றதை
  நான் அனுபவத்தில் கற்றேன். அஸ்ஸிஸ்டண்ட் மெக்கானிக்காக.

  மிக மிகக் கஷ்டமான வேலையை இத்தனை சுலபமாகச் செய்யக் கற்று இருக்கிறீர்கள்.
  மனம் நிறைந்த பாராட்டுகள்
  அம்மா.
  மெஹந்தி மிக அழகு. டீத்தூள் வைத்து
  மெஹந்தி போடுவதை யூடியூபில் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சிம்மா. பன்முகத்திறமை கொண்ட சிங்கம் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விட்டதில் வருத்தமாக உள்ளதும்மா. நீங்கள் அவரிடமிருந்து கற்றுக் கொண்டீர்களா!! அருமைம்மா. மிகக் கடினமான வேலை..அதில் ஒரு புள்ளியை நாங்கள் அப்போது கற்றுக் கொண்டோம். இப்போது நினைவிருக்குமா என்பது தெரியலை..:)

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 7. /"உள்ள 750 spare parts இருக்கு! அதுல ஓடாததா! இந்த எலுமிச்சம்பழத்துல ஓடுது!" என்று லாரி டிரைவரிடம் சொல்வாரே!! அதே தான்..:) ஹா..ஹா..ஹா.//

  நான் ஊகித்து சொன்னது சரியாகி விட்டது.

  மருதாணி வைத்துக் கொண்ட நினைவுகள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்மா..நீங்கள் சரியாக ஊகித்து விட்டீர்கள்.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....