செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

கல்லூரி நாட்கள் பகுதி ஒன்று - ஆதி வெங்கட்அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


எதிர்பார்ப்பது தவறில்லை…. எதிர்பார்த்துக் கொண்டே வாழ்வது தான் தவறு. அதிக ஏமாற்றங்களுக்குக் காரணமும் எதிர்பார்ப்புகள் தான்!


******

சிறுவயது முதலே இருந்த  மருத்துவராகும் கனவை குடும்பச் சூழலை கருத்தினில் கொண்டு விட்டுவிட்டேன். பத்தாம் வகுப்பில் தான் மூன்று வருட டிப்ளமோ முடித்து பின்பு பார்ட் டைம் B.E படித்தும் முன்னேறலாம் என்று என் மூன்று மாத டியூஷன் டீச்சர் மூலம் தெரிந்து கொண்டேன். ஆம்! கடைசி மூன்று மாதங்கள் மட்டும் தான் ட்யூஷனுக்குச் சென்றேன். 


டிப்ளமோ தேர்ந்தெடுக்க என் அம்மா வழி உறவில் அக்கா ஒருவர் தான் எனக்கு Inspiration ஆக இருந்தார். கோவை அரசினர் பாலிடெக்னிக்கில் Electronics & Communication Engineering படித்து பின்பு முன்னேறி ISROவில் பணியில் இருந்தார். அப்போதே அக்கா 'பச்சை மை' ஆபீசராக  இருந்தார். அக்காவின் சிரித்த, சாந்தமான முகம் எனக்கு மிகவும் பிடிக்கும்.


பத்தாம் வகுப்பில் 437/500 மதிப்பெண்கள் எடுத்ததும் அரசினர் பாலிடெக்னிக்கிலும், கோவையின் பிரபலமான P.S.G காலேஜிலும் மெரிட்டில் இடம் கிடைத்தது. அப்போது PSG ல் வருடத்துக்கு 3500 ரூ கட்டணம். அதே அரசு பாலிடெக்னிக்கில் செமஸ்டருக்கு 600 ரூ தான்.  கட்டணத்தை மனதில் வைத்துக் கொண்டு அரசு பாலிடெக்னிக்கிலேயே சேர்த்து விட எண்ணினார் அப்பா. 


PSGல் படித்திருந்தால் வேலையோடு தான் வெளியே வந்திருப்பேன். இரண்டு வருடங்கள் வேலைத் தேடும் படலம் இருந்திருக்காது..:) அங்கு படிக்க முடியலையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது..:) ஆனால் அப்பாவுக்கு இதெல்லாம் தெரியலை! 


சரி அரசு பாலிடெக்னிக் கதைக்கு வருவோம். E.C.E (Electronics & Communication Engineering) தான் கேட்டிருந்தேன். ஆனால் என்னை விடக் குறைவான மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு தான் அந்த கோர்ஸ் கிடைத்தது! எனக்கு Civil, Mechanical மற்றும் production engineering தான் இருப்பதாகச் சொன்னார்கள்.


அப்பா PWDல் தான் பணியில் இருந்தார். அது சிவில் லைன் என்பதால் என்னை மெக்கானிக்கல் எடுக்கச் சொன்னார். மெக்கானிக்கல் எவ்வளவு கடினமானது என்றெல்லாம் அப்போது தெரிந்திருக்கவில்லை..:)


எங்கள் டிபார்ட்மெண்ட்டில் மொத்தம் 60 பேர். மூன்றே மூன்று பெண்களும் 57 ஆண்களும்..:) முதல் வருடம் production engineeringல் இருந்த 20 பேரும் எங்களுடனேயே தான் அமர்ந்து படித்தார்கள். அதில் இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஒரே ஒரு பெண். Tanuja mehra. அதே போல் எங்கள் டிபார்ட்மெண்ட்டிலும் அருணாச்சல் பிரதேச Itanagar ஐ சேர்ந்த ஒரு ஆணும் இருந்தான். பெயர் நினைவில்லை..:)


பள்ளி நாட்களில் முதல் பெஞ்ச்சில் அமர்ந்து முந்திரிக் கொட்டை போல் பதில் சொல்ல ஆசைப்படுவேன்...:) ஆனால் உயரத்தின் காரணமாக தரவே மாட்டார்கள். ஆனால்! கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் (எங்கள் கேம்பஸும் காடு போல் பரந்து விரிந்தது தான்) இருந்த கல்லூரி வாழ்வில் கேட்காமலே முதல் பெஞ்ச்..:)) மூன்று பெண்கள். Tanujaவோடு நான்கு!


முதல் வருடம் 11 & 12 ஆம் வகுப்பு பாடங்கள் தான் பெரும்பாலும் இருந்தன. அதுபோக practical ஆக physics lab, Chemistry lab, lathe, Carpentry, Sheet metal, blacksmith ஆகியவை இருந்தன. முதல் வருடம் எல்லாத் துறை மாணவர்களுக்கும் பாடங்கள் ஒன்று தான். 


எங்கள் கல்லூரியைப் பற்றியும், அங்கே என் படிப்பு எப்படி இருந்தது என்பது பற்றியும் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாமே.. நாளை மீண்டும் வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

 1. நல்ல மார்க் வாங்கியிருந்திருக்கிறீர்கள்.  என் உறவினர் பையன் ஒருவன் டிப்ளமா  முடித்து, பின் பொறியியல் படிப்பில் நேராக இரண்டாவது வருடம் சேர்ந்தான்.  இப்போது நல்ல வேலையில் இருக்கிறான்.  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 20 வருடங்கள் கடந்த பின்னும் என் மதிப்பெண்களை இன்றும் பெருமையாக சொல்லிக் கொள்ளும் படி வாங்கியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. அப்பா பத்தாவது மார்க் என்பது வாழ்வில் முக்கியமானது என்று சொன்னது இன்றும் காதில் ஒலிக்கிறது!

   இந்த கொரோனாவால் எங்கள் மகளுக்கு தன் திறமையை நிருபிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தம்.

   நானும் நேரிடையாக இரண்டாம் ஆண்டு B.E சேரும் எண்ணத்துடன் தான் டிப்ளமோ சேர்ந்தேன்..:)

   தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   நீக்கு
 2. உங்கள் பதிவு நன்று. வாழ்க்கையில் இழந்த வாய்ப்புகளை எனக்கு நினைவுபடுத்துகிறது. அது இழந்த வாய்ப்பா அல்லது காலம் அதனை காம்பன்சேட் செய்துவிட்டதா என்பதை நாம் எப்போதுமே அறிய இயலாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் படிப்பு மற்றும் வேலை விஷயத்தில் நிறைய இழந்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும் சார்.ஒன்றை இழந்தால் தான் மற்றொன்று என்று சொல்வதைப் போல் வாழ்க்கை எனக்கு உணர்த்தியிருக்கிறது.

   தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

   நீக்கு
 3. வாசகம் அருமை.

  ஆதி, கல்லூரி நாட்கள் நினைவுகளை நன்றாக சொல்லி வருகிறீர்கள்.
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 4. ரசனையுன் சொல்லியிருக்கின்றீர்கள்...

  கல்லூரி நாட்கள் தான் அத்தனை எளிதில் மறக்கக் கூடியவையா!..

  வாழ்க நலமுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார். மறக்க முடியாத நினைவுகள்.

   தங்களின் வருகைக்கும், வாசித்து கருத்து தெரிவித்ததற்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

   நீக்கு
 6. நினைவை சுவாரசியமாக எழுதுகிறீர்கள் மேடம்.
  மகளின் திறமை இப்போது என்றாலும் விரைவில் அதற்குரிய நன்மதிப்பை நிச்சயம் பெறும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், வாசித்து கருத்து தெரிவித்ததற்கும் மிக்க நன்றி அர்விந்த் சார்.

   நீக்கு
 7. விரும்பிய படிப்பை படித்திருந்தால் நாம் இப்போது எப்படி இருந்திருப்போம் என்று கற்பனை செய்வது சற்று கடினமே. விரும்பிய படிப்பை படிக்க முடியாமல் போவது வருத்தமானதுதான். பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். ஆனால் இறைவன் நமக்காக வகுத்த பாதை இதுதான் என்று எண்ண ஆரம்பித்தால் கிடைக்காத படிப்பை பற்றிய நினைவுகள் தானாகவே மறைந்துவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்..

   தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

   நீக்கு
 10. ஆதி அருமை.இனிமையான நினைவுகள்.தொடர்ந்து எழுதவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்லூரித் தோழனாக உன்னுடைய பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் கருப்புசாமி. மிக்க நன்றி தொடர்ந்து வாசிக்கவும்.

   நீக்கு
 11. பதில்கள்
  1. பெரும்பாலானோர் அப்படித்தான் போல..

   தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதா மாமி.

   நீக்கு
 12. மருத்துவம் படிக்க எண்ணி கிடைக்கவில்லை, ஒரு மதிப்பெண்ணில் தொலைத்தது! .ஆனால் அது நல்லதற்கே என்று தெரிகிறது. அப்போ ஒரு வருடத்திற்கு வருந்தியது உண்டு. ஆனால், இயற்பியல் பிடித்தே படித்தேன், பணியும் பிடித்தமானது!
  படிப்பில் சிற்சில காம்ப்ரோமைசெஸ் இருந்தாலும் ,பணியை விடவேண்டியச் சூழ்நிலையும் அதன் பின்னான வாழ்க்கையும் என்று மாறித்தான் போனது. வேறு என்ன கிடைத்தாலும்(வலைத்தளமும், உங்களைப் போன்ற நண்பர்களும்), விட்டதை எண்ணி மனம் ஏங்கத்தான் செய்கிறது ஆதி. அதுவும் நாற்பது வயதிற்கு மேல்! அதான் வாழ்க்கை போல :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்ப்பா..உண்மை தான்.

   தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....