ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

கடந்து வந்த பாதை - பகுதி 21 - தொடரின் முடிவு - சுப்ரமணியன்

 


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


YOUR PROBLEMS MIGHT BE AS BIG AS SHIP. BUT GOD WILL GIVE YOU SOLUTION AS WIDE AS OCEAN.


******


தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் படித்திருக்கலாம்!  படிக்காதவர்கள் வசதிக்காக முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!  


கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று


பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு 


பகுதி ஒன்பது  பகுதி பத்து  பகுதி பதினொன்று  


பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு 


பகுதி பதினைந்து பகுதி பதினாறு பகுதி பதினேழு 


பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது பகுதி இருபது


வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்


அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!  


1994 டிசம்பர் 24 மாலை திருச்சிராப்பள்ளியில் (அப்போது என் பெற்றோர் அண்ணனுடன் அங்கே தங்கியிருந்தார்கள்) ஒருவருடைய இல்லத்திற்கு அழைத்துச் செல்ல, “வேறென்ன கண்டேன் சீதையை!”.




உனக்கு (எனக்கு), உமக்கு (என் பெற்றோரைப் பார்த்து) என்ன எதிர்பார்ப்பு? என்ன தேவை? பெண்ணை பிடித்துள்ளதா? - அட இந்தக் கேள்வியை மூன்றாவதாகத் தான் கேட்டனர்!  எனது பதில் - ஆங்கிலப் புலமையை அறிமுகப் படுத்தவேண்டுமே! - Acceptable for me. I don’t want anything! அவ்வளவு தான் - நிச்சயமே முடிந்தது. நேரடி திருமணம் தான். டிசம்பரில் திரும்ப தில்லிவந்தவன், 1995 மார்ச் 10-ஆம் தேதி தமிழகம் செல்ல, 1995 மார்ச் 20-ஆம் தேதி காலை எனது தனியாள்துவம் (Bachelorship) முடித்து வைக்கப்பட்டது - ஆன்றோர், சான்றோர், உற்றார், உறவினர் மற்றும் ஆருயிர் நண்பர்களின் ஆர்ப்பரிப்புடன்.


தமிழ்த் திரைப்பாடல் போல் ”கொட்டியது மேளம்... குவிந்தது கோடி ஆசிகள்… ஆனந்தம் பாடு” என ஆன்றோர் சான்றுரைக்க, மந்திரங்கள் முழங்க, மலர்களின் வாசம் மணக்க, கட்டினேன் தாலியை! கரம் பற்றினேன் மனைவியை! 


என்ன அன்பர்களே! அன்பு நண்பர் வெங்கட்டின் யோசனையை ஏற்று, இது காறும், தங்களுடன் நான் ”கடந்து வந்த பாதை”யை பகிர்ந்து வந்தேன்.  இடையிடையே Blog நண்பர்கள் தந்த மேன்மையான கருத்தூட்டங்களில் மனம் குளிர்ந்து, திக்குமுக்காடிப் போனேன்.  அட நம் எழுத்தையும் ரசிக்க மேன்மையான ரசிகப் பட்டாளமே உள்ளது என்பதை அறிந்து உவகை கொள்கிறேன். கடந்த ஏப்ரல் 30 நாளுடன் பணிமூப்பு அடைந்தேன். இருப்பினும் அதிகாரியின் கண்டிப்பான (அன்பான!) அழைப்பில் பணியில் ஓரிரு மாதங்கள் வரை தொடர்கிறேன்.  மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது, மீண்டும் எழுத ஆசை உண்டு.  


எனது வரைவுரையை படித்து, கருத்தூட்டமிட்ட அனைத்து மேன்மையான நல்லுள்ளங்களையும் பார்த்து, நெக்குருகி, “நெஞ்சாங்கூட்டில் நீரே நிற்கிறீர்!” எனக் கூறி தாழ்மையுடன், இரு கரம் கூப்பி விடைபெறுகிறேன்.  எவரையும் புண்படுத்தவோ/தாழ்த்தவோ விரும்பாதவன் என உறுதி கூறி அனைத்தும், நேரில் பார்த்த சம்பவங்களின் நினைவூட்டலாகக் கருதும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 


வாழ்க்கை இனிது… பயணம் இனிது… எனவே வாழலாம்! பயணிக்கலாம்! பயனடையலாம்!  முடிந்த போது நண்பரின் இந்த வலைப்பூ வழி சந்திக்கிறேன்.  வரும் சில மாதங்களில் தலைநகரை மொத்தமாக விட்டு விலகி தமிழகம் வந்து விடலாம்! அப்படி வந்து விட்டாலும், அவ்வப்போது உங்களுடன் இந்த வலைப்பூ வழி தொடர்பில் இருப்பேன்!  மீண்டும் சந்திப்போம் நண்பர்களே!


மீண்டும் ஒரு முறை தீநுண்மியை மனதில் வைத்து, முகக் கவசம் கட்டாயமாக அணிவோம். சுத்தமாக இருப்போம். சுகமாக இருப்போம்! 


என்றென்றும் நட்புடனும் அன்புடனும்…


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன். கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் இதுவரை எழுதி வந்த இந்தத் தொடர் இந்தப் பகுதியுடன் முடிவடைகிறது. முசாஃபாபரூரில் ஆரம்பித்த அவரது பாதை பல இடங்களுக்குப் பயணித்து, தலைநகர் தில்லியில் வந்து சேர்ந்தது வரை, அவர் திருமணம் வரை இந்தத் தொடர் வழி சொல்லி இருக்கிறார். இன்னும் நிறைய ஸ்வாரஸ்ய விஷயங்கள், எனக்குத் தெரிந்த விஷயங்கள் உண்டு என்றாலும், எல்லாவற்றையும் இங்கே எழுதிட முடியாதல்லவா?  முடிந்தவரை அவர் எழுதி அனுப்பி இருக்கிறார்.  அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி.  எல்லா பகுதிகளையும் படித்து கருத்துரைத்த நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி - அவர் சார்பிலும், என் சார்பிலும்.  அவர் தொடர்ந்து இங்கே எழுத வேண்டும் என உங்கள் சார்பிலும் நண்பரிடம் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


24 கருத்துகள்:

  1. சட்டென முடிந்து விட்டது போல தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டென முடிந்து விட்டது - எனக்கும் அப்படித் தோன்றியது ஸ்ரீராம். இப்போதைக்கு இந்தத் தொடர் முடிந்திருக்கிறது. மீண்டும் எழுதச் சொல்லி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதிவு அருமை...

    தீநுண்மியைத் தொலைப்பதற்கு முகக் கவசம் அணிவோம். சுத்தமாக இருப்போம். சுகமாக இருப்போம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      சுத்தமாக இருப்போம் - சுகமாக இருப்போம் - அது தான் இன்றைய தேவையும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. //தமிழ்த் திரைப்பாடல் போல் ”கொட்டியது மேளம்... குவிந்தது கோடி ஆசிகள்… ஆனந்தம் பாடு” என ஆன்றோர் சான்றுரைக்க, மந்திரங்கள் முழங்க, மலர்களின் வாசம் மணக்க, கட்டினேன் தாலியை! கரம் பற்றினேன் மனைவியை! //

    அருமையான பாடலும் கைத்தலம் பற்றிய விவரத்துடன் இனிதாக நிறைவு செய்து இருக்கிறார்.

    அருமையாக கடந்து வந்த பாதையை சொல்லி வந்தது மகிழ்ச்சி.

    ஓய்வு காலம் இனிதாக இருக்க வாழ்த்துக்கள். தமிழகம் வந்த பின் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்து வந்த பாதை பதிவுகளின் வழி நண்பர் சொன்ன விஷயங்கள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.

      பதிவுகள் தொடர வேண்டும் என்று கேட்டிருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. கடந்து வந்த பாதை சுருக்கமாக இருந்தாலும் மனம் நிறைவு... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன நிறைவு தந்த தொடர் என்பதில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நண்பரது விடயங்கள் அனைத்தும் வெகு சுவாரஸ்யமாக இருந்தது.
    மீண்டும் அவரது மற்ற அனுபவங்களை பகிரட்டும். வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற அனுபவங்கள் பகிர்ந்து கொள்ள சொல்லி இருக்கிறேன் கில்லர்ஜி. முடிந்த போது தொடருவார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. என்னது... கடந்து வந்த பாதையை சட்னு முடித்துவிட்டார்?

    பேச்சலராக இருந்தபோது நிறைய நிகழ்வுகள் இருந்திருக்கலாம்... திருமணம் முடிந்த பிறகு செட்டில் ஆனதையும் (ரொம்ப பெர்சனல் சைடுக்குள் போகாமல்) எழுதியிருக்கலாம்.

    நம் பெற்றோர் எந்தப் பின்னணியிலிருந்து இந்த நிலைமைக்கு வந்தார் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் தெரிந்திருக்கவேண்டும். From readers point of view, இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டென்று முடிந்து விட்டது! :) இன்னும் நிறைய எழுதி இருக்கலாம்! எழுதுவார் - சொல்லி இருக்கிறேன் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கடந்து வந்த பாதை சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் உடனிருந்து பார்த்ததை போலவும் இருந்தது. மீண்டும் அடுத்த பதிவிற்க்காக காத்திருக்கிறோம்.🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நிர்மலா ரங்கராஜன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கடந்து வந்த பாதையை சுவையாக எழுதியுள்ளீர்கள்.
    ரசித்தோம்.
    திருமணத்திற்கு பின்பான அணுபவங்களையும் தொடரும் பட்சத்தில் மேலும் சுவாரசியமாக இருந்திருக்கும்.
    மேலும் பதிவுகளை எழுதுங்கள்.
    மேகங்களின் ஆலையம் புத்தகத்தையும் படித்து மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமணத்திற்கு பின்னான அனுபவங்கள் - பார்க்கலாம் - முடிந்த போது எழுதச் சொல்லி இருக்கிறேன் அரவிந்த்.

      மேகங்களின் ஆலயம் மின்னூலை படித்தமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. கடந்து வந்த பாதையை அருமையாக பதிவு செய்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்து வந்த பாதை பதிவுகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அன்பின் வெங்கட்,
    திரு சுப்ரமணியனின் தொடர் சட்னு முடிகிறதே.
    வேலை சுமை சற்று விலகும்போது
    மீண்டும் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
    நல்லதொரு இல்வாழ்க்கையும் சுவைதானே.

    மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகளை தொடர்ந்து எழுதச் சொல்லி இருக்கிறேன் வல்லிம்மா. தொடர்ந்து எழுதுவார் என நம்பிக்கை உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. சுவாரசியமாக தொடர்ந்தது விரைவில் முடிந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. தொடர்ந்து படிக்கலை. பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது படியுங்கள் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....