திங்கள், 16 ஆகஸ்ட், 2021

வாசிப்பனுபவம் - காதலெனும் தேரினிலே - சுபாஷிணி பாலகிருஷ்ணன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


EVERYBODY SAYS MISTAKE IS THE FIRST STEP OF SUCCESS; BUT THE REAL FACT IS CORRECTION OF THE MISTAKE IS THE FIRST STEP OF SUCCESS.


******

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் சுபாஷிணி பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “காதலெனும் தேரினிலே” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வகை: குறுநாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 21

விலை: ரூபாய் 49/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


காதலெனும் தேரினிலே (Tamil Edition) eBook: பாலகிருஷ்ணன், சுபாஷினி


******


காதெலெனும் தேரினிலே - ஆஹா… என்னவொரு கவித்துவமான தலைப்பு!  ஆசிரியர் சுபாஷிணி பாலகிருஷ்ணன் அவர்களின் எழுத்தில் ஒரு குறுநாவல் - A Feel Good Story என்பதால் இன்னும் ஈடுபாட்டுடன் படிக்கலாம். பஞ்சாபிலிருந்து ஷிம்லா செல்லும் வழியில் இருக்கும் சோலன் மாவட்டத்தில் இருக்கும் ஒரு இடம் Bப(dh)த்தி!  அங்கே இருக்கும் ஒரு மருந்து நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் இளைஞன் கார்த்திக்.  வயது முப்பதைக் கடந்திருந்தாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாது இருப்பவன்.  பெற்றோர்கள் கேட்கும்போதெல்லாம் தட்டிக் கழித்து விடுவதே வழக்கமாகக் கொண்டவன்.  


மைதிலி - பஞ்சாபின் தலைநகர் சண்டிகடில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்.  மைதிலிக்கும் திருமண வயது கடந்து விட்டாலும் ஏனோ திருமணம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கும் பெண் - சென்னையில் இருக்கும் பெற்றோர் தமிழகத்திற்கே வந்து விடச் சொல்லி பல முறை கேட்டாலும், அங்கே சென்றால் திருமணம் குறித்த கேள்விகள் நிறைய வரும் என்பதால் சண்டிகடிலேயே ஒரு ஹாஸ்டலில் தங்கி மருத்துவராக பணிபுரிபவர்.  


கார்த்திக் மற்றும் மைதிலி இருவரும் திருமணம் புரிந்து கொள்ளாமல் இருக்கக் காரணம் என்ன?  இருவருக்கும் என்ன சம்பந்தம் என்பதை இந்த குறுநாவல் வழி மிக அழகாகச் சொல்லி இருக்கிறார் கதாசிரியர்.  நாவலின் வழி அவர்கள் இருவருக்கும் இருக்கும் சம்பந்தத்தினை அழகாய்ச் சொன்னதோடு, அவர்கள் இருவரும் படிப்பு காரணமாக பிரிந்து சென்றுவிட்டதைச் சொல்கிறார்.  என்னதான் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மீது இருக்கும் காதலைச் சொல்லாமல் இருந்தாலும், ஏனோ ஒருவரை ஒருவர் மறக்க முடியவில்லை; அதனால் தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லியதோடு, அவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்தார்களா என்பதையும் சுவைபடச் சொல்லி இருக்கிறார்.  


குறுநாவல் - மிகக் குறைந்த பக்கங்கள் (21 மட்டுமே) என்பதால் விரைவாக படித்து விட முடியும்.  முதல் வரியில் சொன்னபடி இது ஒரு Feel-good Story! என்பதால் உங்களுக்கும் பிடிக்கலாம்!  படித்துப் பாருங்களேன். ******


எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...


இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


12 கருத்துகள்:

 1. காதல் கதைகள் என்றுமே சுகம்தான். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. ஆவலைத்தூண்டும் விமர்சனம் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. குறு நாவல் விமர்சனம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஆர்வமூட்டும் விமர்சனம் சார்.
  நூலை தரவிறக்கம் செய்துவிட்டேன். விரைவில் வாசிக்கிறேன்.
  இன்றைய வாசகமும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். முடிந்த போது வாசித்துப் பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....